காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 4,986,219 மொத்த வருகைகள்

பூநொச்சிமுனை ஜும்ஆ பள்ளி உருவாக பாடுபட்டவரில் ஒருவரும் மூத்த பிரஜையுமான யஹ்யா காலமானார், ஜனாஸா நல்லடக்கம் இன்று (படம் மற்றும் காணொளி இணைப்பு)

Posted by kattankudi web site on 12/05/2011

-அபு ஜுரைப்-

பூநொச்சிமுனையின் மூத்த பிரஜையும் பூநொச்சிமுனை ஜும்ஆ பள்ளி உருவாக பாடுபட்டவரில் ஒருவருமான யஹ்யா நேற்று காலமானார்கள் இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜியுன்.

82 வருட காலம் பூநொச்சிமுனையில் வாழ்ந்த இவர் பூநொச்சிமனையின் இருப்புக்கு பாடுபட்டதோடு தமிழ் முஸ்லிம் உறவையும் பேணி நடந்தவர்.

இன்று பகல் 10 மணியளவில் இவரது ஜனாஸா பூநொச்சிமுனை ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஜனாஸாத்தொழுகையின் பின் இரங்கலுரை நிகழ்த்தப்பட்டது. இரங்கலுரையை பூநொச்சிமுனை இக்ராஹ் வித்தியாலய அதிபர் ABA.றசூல் JP நிகழ்த்தினார்.

யஹ்யா அவர்கள் பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் ஆதம் மற்றும் தேசிய வீடமைப்பு அதிகார சபை உத்தியோகத்தர் அலியார் ஆகியோர்களின் தந்தையுமாவார்.

அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனம் கிடைக்க எமது இணையச் சமுகமும் பிரார்த்திக்கிறது.

This slideshow requires JavaScript.

6 Responses to “பூநொச்சிமுனை ஜும்ஆ பள்ளி உருவாக பாடுபட்டவரில் ஒருவரும் மூத்த பிரஜையுமான யஹ்யா காலமானார், ஜனாஸா நல்லடக்கம் இன்று (படம் மற்றும் காணொளி இணைப்பு)”

  1. Irham Segu Dawood said

    ‘இன்போ’ நிருவாகத்தினருக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…)
    இந்த செய்தியின் தலைப்பு உட்பட ஆங்காங்கே எழுத்துப்பிழைகளை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இது தங்களது ஊடகத்தின் சிறப்புத்தன்மையை பாதிக்கின்றதொரு விடயமாகும். இன்ஷா அல்லாஹ், எதிர்காலத்தில் இத்தகைய பிழைகள் இடம்பெறாமல் செய்திகளை வெளியிட முயற்சி செய்யுங்கள். தங்களின் அர்ப்பணிப்புடனான சேவைக்கு வாழ்த்துக்கள்!!

  2. jabeer said

    இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜியுன்.

  3. atheef said

    இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜியுன்.

  4. Sadique said

    இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜியுன்

  5. sabry acm said

    pls put his photo

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s