சம்மேளனம் மற்றும் அதன் கல்விக் குழு இணைந்து மத்திய கல்லூரி அதிபர் முபாரக் அவர்களைக் கௌரவித்தனர் (படம் இணைப்பு)
Posted by Kattankudi Web Community (KWC) on 09/05/2011
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் அதன் கல்விக் குழு என்பன காத்தான்குடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) அதிபர் அவர்களை கௌரவித்துள்ளன.
சம்மேளன தலைவர் எஸ்.எச்.எம். இஸ்மாயில் தலைமையில் 08.05.2011 ஞாயிற்றுக்கிழமை சம்மேளன மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சம்மேளன உதவிச் செயலாளர் ஏ.எல்.இசெட். பஹ்மி, கல்வி அபிவிருத்தி சபையின் தலைவர் ஏ.எம். ஹிழுறு ஆகியோர் மத்திய கல்லூரியின் ஆரம்பம் அங்கு அதிபர்களாக கடமையாற்றியவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் தற்போதைய கல்லூரியின் செயற்பாடுகளைப் பற்றி உரையாற்றினர்.
இங்கு காத்தான்குடி மத்திய கல்லூரியின் அதிபர் யூ.எல்.எம். முபாரக் உரையாற்றுகையில் என்னை மத்திய கல்லூரிக்கு அதிபராக வரும்படி றஊப் ஹாஜியார் கேட்டார் அவ்வாறு நான் வந்து கட்சி சாயம் பூசப்பட்டவனாக நான் செயற்பட விரும்பவில்லை. வந்தவர்களிடம் சம்மேளனம் கூப்பிட்டால் வருவேன் என கூறினேன். அதன்பின் அல்லாஹ்வின் உதவியால் பரீட்சையில் சித்திபெற்று போதுமான தகைமையுடன் வந்துள்ளேன். நான் இங்கு வருவதற்கு சிலர் பின்னணியாகவும் இருந்திருக்கலாம் அது எனக்கு தெரியாது.
காத்தான்குடியின் கல்வி நிலையைப் பற்றி பேசுவதானால் மத்திய கல்லூரியை விட்டுவிட்டு பேசமுடியாது. பல மாற்றங்களை செய்துள்ளோம். மாணவர்கள் ஆசிரியர்கள் பாடசாலை நேரங்களில் வெளியில் ஹோட்டல்களுக்கு செல்வதை தடுத்துள்ளோம். ஆசிரியர்கள் பாடசாலைக்கு வந்தால் உடன் வகுப்புக்களுக்கு சென்றுவிட வேண்டும். தற்போது அதிகமான ஆசிரியர்கள் விடுமுறையில் செல்கின்றனர் அவர்களுடன் அன்பாக பேசி தீர்வு காணமுடியும்.
எனது குவாட்டஸ் ஜன்னல் உடைத்து நொருக்கப்பட்டன, பூட்டுகளுக்கு சுப்பர் குளுவினை இட்டனர். கட்டிடகங்களில் சின்னங்களை எழுதினார்கள். சவால்களை எதிர்கொளள்ளும் தைரியம் கொண்ட எனக்கு கம்மேளனம் ஒத்துழைத்தால் இப்பாடசாலையினை சிறந்த பாடசாலையாக மாற்றித்தருவேன்.
புதிய நியமனம் பெற்ற பட்டதாரிகளையும், கல்விக் கல்லூரியில் வெளியாகியவர்களையும் கொண்டு ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் கல்முனையில் இருந்து மட்டக்களப்பு கிண்ணியா பிரதேச பாடசாலைகளுக்கு அனுப்பவுள்ளனர். இவர்கள் மாகாண பாடசாலைக்கே நியமிக்கப்படுவர். தேசிய பாடசாலை மத்திய அரசிடம் காணப்படுவதால் புதியவர்களை நியமிக்கும் விடயத்தில் சம்மேளனம் நடவடிக்கை எடுக்கவேண்டும்
இந்த வருடத்தில் மேலதிக வகுப்புக்களை பாடசாலையிலேயே நடாத்த உள்ளோம். ஏனெனில் 12மணிக்கு பின்னர் வெளியே செல்லவேண்டும் என்கின்றனர். பெற்றோர்களும் தொலைபேசியில் பிள்ளைகளை விடும்படி சொல்கின்றனர். சிலர் பயமுறுத்தியும் சொல்கின்றனர். டியூசன் சென்டர்களில் பாடசாலை கல்வியைப்பற்றி பிழையாக மாணவர்கள் வழிநடாத்தப்படுகின்றனர்.
இவ் ஆண்டில் சாதாரண பரீட்சையில் 20 பேர் 9 A சித்தி பெற திட்டமிட்டு கல்வி நடவடிக்கைகளைச் செய்துவருவதாகவும் அதிபர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் பாடசாலைகளில் முதலாம் இடத்திலும் மாவட்டத்தில் மூன்றாம் இடத்திலும் மத்திய கல்லூரி இருப்பதாகவும் கல்லூரி அதிபர் யூ.எல்.எம். முபாரக் தெரிவித்தார்.
This slideshow requires JavaScript.








The Last Student said
காத்தான்குடி மத்திய கல்லூரி இல் இது வரை உ/த பிரிவில் இணைந்தகணித பாடத்துக்கு ஒரு நிரந்தர ஆசிரியர் இல்லை
இதை பற்றி சற்று கவனம் எடுக்குமாறு Kattankudi.info i கேட்டுக்கொள்கிறேன்
Nifras Mohammed said
we warmly welcome sir
Eastern Eagles said
Weldone
good job Mr Mubarak
congrats