காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 4,986,219 மொத்த வருகைகள்

ஊர்க்குருவி – இப்படியும் நடக்கின்றது

Posted by Kattankudi Web Community (KWC) on 29/04/2011

-அபூ றப்தான்-

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் கல்முனையைச் சேர்ந்த ஒரு குழுவினர் உம்றா கடமைக்காகச் சவூதி அரேபியா சென்றிருந்தனர்.

புத்து நாட்களின் பின்னரே திரும்பி வருவோம் எனக் கூறிச் சென்றிருந்த அவர் ஏழு நாட்களிலேயே திரும்பி வந்துவிட்டனர்.

ஆசை ஆசையாக அமல் செய்யச் சென்று இடையிலேயே திரும்பி வந்த கதையை அழாக் குறையாக தற்போது அவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த குழுவினரை அழைத்து சென்ற உம்றா ஏஜன்டான மௌலவியானவர் 10 நாட்கள் உம்றா கடமையில் ஈடுபட முடியும் என்று வாக்குறுதியளித்தே யாத்திரிகர்களிடமிருந்து பணத்தைச் சுளையாக பெற்றமை குறிப்பிடத்தக்கது.

ஆனால் இலங்கையிலிருந்து புறப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் மாபோளை பள்ளியில் வைத்தே 7 நாட்களில் அங்கிருந்து திரும்பி வந்துவிட வேண்டும் என்றும் அதற்கேற்பவே விமான டிக்கற் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பொறுப்பற்ற விதமாக சொல்லியுள்ளார் குறித்த மௌலவி.

சரி. அப்படியானால் 7 நாட்களுக்குமுரிய பணத்தை மாத்திரம் எடுத்துக் கொண்டு மீதிப் பணத்தைத் தாருங்கள் எனக் கேட்டதற்கு ‘அதெல்லாம் முடியாது எனக்கு அதிகம் செலவாகிவிட்டது. மீதிப் பணத்தை வைத்துத்தான் செலவைக் ஈடுசெய்ய வேண்டும்’ என்றாராம் அந்த மௌலவியார். இதைத்தான் உம்றா பிஸ்னஸ் என்பார்களோ?

-நன்றி: விடி வெள்ளி-

2 Responses to “ஊர்க்குருவி – இப்படியும் நடக்கின்றது”

  1. S.H. Fawzer said

    அமல் செய்வதிலும் அநியாய வியாபாரமா?????.. வாழ்க வளர்க……
    இறையன்பன்- Swiss

  2. பிஷ்ருள் ஹனான் said

    இனியும் காலம் காலமாக மார்க்கத்தை விற்று பிழைப்பு நடத்தும் உலமாக்களை மக்கள் இனம்கண்டு, தெளிவான குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் வாழ மக்கள் முன்வருவார்களா?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s