காத்தான்குடிப் பிரதேச கோட்டக் கல்வி அதிகாரி நியமிப்பதில் ஏன் இன்னும் தாமதம்.?
Posted by kattankudi web site on 24/04/2011
–நமது நிருபர்-
காத்தான்குடிப் பிரதேசம் சுமார் 29 பாடசாலைகளைக் கொண்ட மட்டக்களப்பு மத்தி வலயத்தின் அதிகூடிய பாடசாலைகளைக் கொண்ட கோட்டமாகும்.
ஏறாவூர் மற்றும் ஓட்டமாவடி பிரதேசங்கள் தலா 15 ஐ விட குறைவான பாடசாலைகளையே கொண்டுள்ளன.
காத்தான்குடிப் பிரதேசத்தின் தேவைகளே மட்டக்களப்பு மத்தி வலயத்தை பொறுத்தவரை மிக அதிகமாக இருப்பது மேற்படி தரவில் இருந்து யாரும் இலகுவாக புரிந்து கொள்ளலாம்.
நிலமை இவ்வாறிருக்க காத்தான்குடி பிரதேசத்திற்கு கோட்டக்கல்வி அதிகாரியாக கடமையாற்றிய U.L மஹ்றூப் அவர்களின் ஓய்வை தொடர்ந்து சுமார் ஒரு வருட காலமாக இன்னும் ஒரு கோட்டக்கல்வி அதிகாரி நியமிக்காமல் இருப்பது இங்குள்ள மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் கல்விச் செயற்பாட்டிற்கு ஒரு பெரும் தடையாக இருப்பதை பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.
கோட்டக் கல்வி அதிகாரி நியமிப்பதில் தடையாக இருப்பது அரசியல் தரப்பு என்று ஒரு சிலரும் இல்லை அதிகாரிகள் தரப்பு என வேறு சிலரும் பேசுவதை காத்தான்குடிப் பிரதேசத்தில் தற்போது அடிக்கடி கேட்கக் கூடியதாக இருக்கிறது.
எனவே தயவு செய்து மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை கருத்திற் கொண்டும் அதிகூடிய எண்ணிக்கை கொண்ட காத்தான்குடி பிரதேச ஆசிரியர்களும் அதிபர்களும் தினசரி கோட்டக்கல்வி அதிகாரியின் ஒரு சிறு கையெழுத்துக்காக தினசரி ஏறாவூருக்கு அலைகின்ற பரிதாபத்தை கருத்திற் கொண்டும் உடனடியாக கோட்டக்கல்வி அதிகாரி நியமிப்பதில் கரிசனை செலுத்துமாறு சம்பந்தப்பட்டவர்களை காத்தான்குடி கல்விச் சமுகம் வேண்டி நிற்கின்றது.






