காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 4,986,219 மொத்த வருகைகள்

ரத்தத்தை தூய்மையாக்கும் வாழைத்தண்டு!

Posted by Kattankudi Web Community (KWC) on 05/04/2011

சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்களால் துன்பப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உடலில் உள்ள கழிவுகள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றது. சிறுநீரைக் கட்டுப்படுத்துவதாலோ அல்லது நோய் பாதிப்புகளாலோ சிறுநீர் சரிவர உடலை விட்டு வெளியேறாமல் இருக்குமானால், அது பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும்.

சிறுநீரகத்தில் கல் உருவாவது இன்று மிக பரவலாகக் காணப்படும் நோய். அதிக காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம், அதிக தூரம் வாகனம் ஓட்டிச் செல்வது, கடின உடல் உழைப்பு, வீரியமான மருந்துகளை உட்கொள்ளுதல், அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தடைபட்டு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றது.

சிறுநீரக கற்கள் உடலில் தோன்றும் போது வாந்தி, காய்ச்சல், பசியின்மை, இடுப்புப் பகுதியில் தாங்க முடியாத வலி, சிறுநீரில் ஒரு வித துர்நாற்றம், சிறுநீர் கழிக்கும் பொழுது வலி, சிறுநீரக கற்கள் சிறுநீர்ப்பையில் உராயும் பொழுது சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் போன்றவை உருவாகும்.

சிறுநீரக கற்களை வெளியேற்ற மருந்துகளும், மருத்துவ முறைகளும் இருந்தாலும் நாம் உட்கொள்ளும் உணவு மூலமும் சிறுநீரக கற்களை வெளியேற்றலாம். வாழைத்தண்டுக்கு சிறுநீரக கற்களை வெளியேற்றும் தன்மை உண்டு. வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால், ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

வாழைத்தண்டு நார்ச்சத்து மிக்க உணவாதலால் அதிக உடல் எடையால் அவதிப்படுகிறவர்கள், நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த மருந்து. இது ரத்தத்தை தூய்மை செய்யும் இயல்புடையது. உடலைக் குளிர்ச்சியடையவைக்கும் தன்மையிருப்பதால் கோடை காலத்திற்கு மிகவும் ஏற்றது.

வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும் சக்தி இருக்கிறது. மாதவிடாய் காலத்தில் இதை உணவில் சேர்த்தால் பெண்களின் உடல் பலமடையும். மாதவிடாய் கோளாறுகளால் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, நோய்க்கு சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது. உடல் எடை குறைய உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்பவர்கள் வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

8 Responses to “ரத்தத்தை தூய்மையாக்கும் வாழைத்தண்டு!”

  1. Faris said

    Very Important Message… Thanks Kattankudy.info….

  2. very use ful meessege

  3. Sajahan Farook said

    use full information

  4. mohammed said

    Dear admin, if you are publishing this kind of articles, the author should mention the source where he get this knowledge. because nowadays there are a lot of false messages misleading the people and ultimately it will end up with disaster. So please ensure the author and the source before you publishing medical related articles.

    • Niyas Mohamed said

      வாழைத்தண்டு என்று டைப் செய்து கூகிளில் search செய்து பாருங்களேன் உங்கள் சந்தேகம் தீரும்.

      • mohammed said

        info vil eluthuvathaip poal yarum google ilum update seythirupparhal, athayellam aatharamaha edukka mudiyaathu, any proffessionals should be authorized, or you have to recall the reliable source

  5. vasheem said

    thaks for your infomation

  6. Niyas Mohamed said

    mohammed :

    info vil eluthuvathaip poal yarum google ilum update seythirupparhal, athayellam aatharamaha edukka mudiyaathu, any proffessionals should be authorized, or you have to recall the reliable source

    சந்தேகப்படுபவர்கள் ஆதாரத்தோடு ஏதாவது மூளிகைவைத்தியர் கூறியிருந்தால் கூட குறிப்பிட்ட நபர் மூளிகைவத்தியர் என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்பார்கள். அதனால் ………போட்டு குழப்பாது உங்களுக்கு தெரிந்த வைத்தியரையோ,அல்லது சுகாதார பரிசோதகரையோ ஆலோசிப்பது நல்லது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s