O/L பரீட்சையில் 9A சித்தி பெற்ற மாணவர்களும் பெற்றோரும் சம்மேளனத்தால் கௌரவிக்கப்பட்டனர். (காணொளி இணைப்பு)
Posted by kattankudi web site on 01/04/2011
இன்று காத்தான்குடி கோட்டத்தில் க.பொ.த. சாதாரண தரத்தில் 2010 ம் ஆண்டு 9A சித்திகளைப் பெற்று சாதனை படைத்தவர்களை காத்தான்குடிபள்ளி வாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் பாராட்டி கெளரவித்தது.
இந்த நிகழ்வு காத்தான்குடி முகிதின் பெரிய ஜும்ஆ பள்ளி வாயலில் இடம் பெற்றது.
சம்மேளனத்தின் கல்விக்குழு தலைவர் ஓய்வு பெற்ற அதிபர் ஹிழுறு அவர்கள் தலைமையில் நூறானியா வித்தியாலய அதிபர் MACM.ஸத்தார் அவர்கள் நெறியாள்கையில் இது இடம் பெற்றது.
பரிசில்களை சங்கைச்குரிய சேகுல்பலாஹ் அப்துல்லாஹ் றஹ்மானி அவர்கள் வழங்கி வைத்தார்கள் .
பெண் பிள்ளைகளுக்கான பரிசில்களை அவர்களின் பெற்றோர்கள் பெற்றுக்கொண்டார்கள்.
நிகழ்வில் சம்மேளனத்தின் இந்த கௌரவிப்பு முறையை அறிமுகப்படுத்திய சட்டத்தரணி ALA.ஜவாத் அவர்களையும் சம்மேளன தற்போதைய தலைவர் இஸ்மாயில் ஹாஜியார் மற்றும் சம்மேளன கல்விக் குழு செயலாளர் MACM.ஜலீஸ் மற்றும் ஏனைய அதன் உறுப்பினர்களையும் காணக்கூடியதாக இருந்தது.








Dr M L Najimudeen said
இது மிகவும் மகிழ்ச்சியான விடயமாகும். பாராட்டத்தக்க முயற்சியாகும். நம்முடைய மாணவர்கள் கல்வியில் நன்கு முன்னேற வேண்டும். அவர்களுக்குச் சான்றோர்கள் ஊன்றுகோலாக இருக்கவேண்டும். எல்லோருக்கும் அல்லாஹ் நல்லருள் பாலிப்பானாக.
டாக்டர் எம். எல். நஜிமுதீன்
அபு றிழா said
உங்கள் ஊக்கமே என்றென்றும் இவர்களின் சிறந்த ஆக்கத்திற்கு துணையாய் அமையும்.
உங்கள் அனைருக்கும் எனது பாராட்டுக்கள்.விசேஷமாக காங்கேயனோடை மாணவிக்கு….
Muzzammil said
சேவை எள்றும் தொடரும்
man kind said
Why only doctors and engineers are doing the service to the nation? Why did the secretary wish all of them to become doctors amd engineers???