ஊர்குருவி – இப்படியும் நடக்கின்றது
Posted by Kattankudi Web Community (KWC) on 01/04/2011
அன்மையில் இடம்பெற்ற காத்தான்குடி நகரசபைக்கான தேர்தல் முடிவுற்ற நிலையில் பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றன.
நடைபெற்று முடிந்த தேர்தலில் பலரும் பல்வேறு கட்சிகளுக்கும், சுயோட்சை குழுக்களுக்கும் வாக்களித்து தாம் விரும்பிய வேட்பாளர்களை தெரிவுசெய்து அவர்களில் சிலர் சத்தியப்பிரமாணம் செய்தும், இன்றும் பலர் செய்யவுள்ள நிலையில் வென்றவர்கள் மக்களிடம் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கிடையில் இவர்களுக்கு வாக்களித்த சிலர் தாம் ஏனைய கட்சி, சுயோட்சை குழுக்களின் ஆதரவாளர்களிடம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகின்றனர்.
காத்தான்குடி தள வைத்தியசாலையில் கடமையாற்றும் இரு உத்தியோகத்தர்களுக்கிடையில் தேர்தல் தொடர்பாக ஒரு சபதம் ஏற்பட்டுள்ளது.
அதாவது, தேர்தலில் யார் வெற்றிபெறுவார் என்ற போட்டியில் அதி தீவிர தஹ்வா பணிசெய்யும் அமைப்பின் அங்கத்தவர் ஒருவர் காத்தான்குடி நகரசபையினை சுயோட்சை குழுவே கைப்பற்றும் என்றும் வெற்றி பெறாவிட்டால் தான் நீன்ட காலமாக வளர்த்துவரும் தாடியினை எடுத்துவிடுவதாக ஐ.ம.சு.முன்னணி ஆதரவாளரான சக உத்தியோகத்தரிடம் சபதம் செய்திருந்தார்.
இதன்படி தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பின் சுயோட்சை குழு ஆதரவாளரான அவர் தனது தாடியினை ஒட்ட கத்தரித்து தனது சபதத்தை நிறைவேற்றி விட்டதாக ஐ.ம.சு.முன்னணி ஆதரவாளரான சக உத்தியோகத்தரிடம் காட்டியபோதும, அவர் அதை ஏற்றுக்கொள்ளாமல் தாடியினை முழுமையாக எடுத்துவிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கினங்க இவர் தாடியை முழுமையாக சவரம் செய்து விட்டார்.
அற்ப அரசியலுக்காக நபிகளாரின் ஒரு புனிதமான சுன்னத்தை இவர்கள் அடகு வைத்து சபதம் செய்தது மிகவும் வேதனையான விடயம்
அதி தீவிர தஹ்வா பணிசெய்யும் அமைப்பின் அங்கத்தவரான அவர் தற்போது தனது தாடியினை முழுமையாக இழந்து விட்டாலும் தான் வழங்கிய வாக்குறுதியினை நிறைவேற்றிய திருப்தியில் வலம்வருவதை காணலாம்.







out of kky said
why this people are become crazy? ya Allah please show to him right way……
abu jahs said
ஒரு நாள் கூத்துக்கு மீசைய (சொறி) தாடிய வழிச்ச கத நல்ல சபதம்
Mohamed Fashan said
என்ன கொடும சார் இது?????? இப்படியெல்லாம் நடக்குதா??? வர வர இந்தியா மாதிரி ஆக்கிடுவாங்க போல கிடக்கு.
ottrumai virumpi said
dear mohamed
not like india, now kattankudy like small india both population and………
mohammed niyas said
ரொம்ப அவசியம்தான்
Shukry said
Crazy………….
commenter said
இது போன்றவை முட்டாள்தனமானவை. இந்த செய்தியை கேள்விப்படும் அயல் சமூகம் எம் ஊரைப் பற்றி என்ன நினைக்கும்!
saadiq said
நல்லவேல உத்தியோகத்த ராஜினாம பன்றதா வாக்கு கொடுக்கல
குடும்பம் நடுத்தெருவுக்கல்லவா வந்திருக்கும்