சல்மா ஹம்ஸா: ஒரு தொடக்கப் புள்ளி!
Posted by Kattankudi Web Community (KWC) on 28/03/2011
தமிழ் மிரர் இணையத்தில் பிரசுரிக்கப்பட்ட நேர்காணலை நன்றியுடன் மீள் பிரசுரம் செய்கின்றோம்
கிழக்கு மாகாணத்தில் முதன் முறையாக முஸ்லிம் பெண்ணொருவர் உள்ளூராட்சி மன்றமொன்றின் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவர் – திருமதி சல்மா அமீர் ஹம்ஸா! இவருக்கு முன்னர் கிழக்கிலிருந்து முஸ்லிம் பெண் எவரும் அரசியல் சபையொன்றுக்குத் தெரிவு செய்யப்பட்டதில்லை.
திருமதி சல்மா ஓர் ஆசிரியை. இயல்பான பெண். பட்டப்படிப்பு, பட்டப் பின்படிப்புகளைப் பூர்த்தி செய்துள்ள இவர் – தற்போது கலாநிதிப் பட்டத்துக்கான படிப்பினை மேற்கொண்டு வருகின்றார்.
நடைபெற்று முடிந்த தேர்தலில் – காத்தான்குடி நகரசபைக்கு முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தெரிவு செய்யப்பட்ட ஒரேயொரு உறுப்பினர் திருமதி சல்மாதான்! இவருக்கு அரசியல் புதிதில்லை. இவர் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் தங்கை. சல்மாவின் மாமனார் (கணவரின் தந்தை) காத்தான்குடியின் தவிசாளராகப் பதவி வகித்தவர். சேர்மன் இப்றாகிம் எனும் பெயரால் பிரபல்யமானவர்.
இதேவேளை, காத்தான்குடியைத் தளமாகக் கொண்டியங்கும் ‘பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின்’ பணிப்பாளராகவும் இவர் கடமையாற்றி வருகின்றார்.
சல்மாவின் கணவர் அமீர் ஹம்ஸா. இனிய மனிதர். வெகு இயல்பாகப் பேசுகின்றார். ஹம்ஸாவின் சகோதரியொருவரைத்தான் மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலான திருமணம் செய்துள்ளார்.
சல்மா – ஹம்ஸா ஆகியோருக்கு ஒரேயொரு பெண் பிள்ளை. அவர் வெளிநாடொன்றிலே மருத்துவத்துறையில் கற்றுவருகின்றார்.
சல்மா மற்றும் அவருடைய கணவர் ஹம்ஸா ஆகியோரை – ஒரு நேர்காணலுக்காக அவர்களுடைய காத்தான்குடி ‘வைற் ஹவ்ஸ்’ வீட்டில் ஒரு காலைப் பொழுதில் சந்தித்துப் பேசினோம்.
அதன்போது நாம் பதிவு செய்தவை:
சல்மாவிடம் கேள்வி: அரசியலுக்குள் நீங்கள் நுழைந்தபோது உங்கள் கணவரின் மனநிலை எவ்வாறு இருந்தது?
சல்மா: என்னை அரசியலுக்குள் கொண்டு வந்ததே எனது கணவர்தான். என் வெற்றிக்காக அவர்தான் உழைத்துக் கொண்டிக்கின்றார்.
கேள்வி: கிழக்கு மாகாணத்தின் முதலாவது முஸ்லிம் உள்ளூராட்சி பெண் உறுப்பினர் நீங்கள்தான் என்று – தெரிவானபோது அறிந்திருந்தீர்களா?
சல்மா: இல்லை. ஆனால் பிறகு தெரிந்து கொண்டேன்.
கேள்வி: நமது சமூகக் கட்டமைப்பில் பெண்களின் கருத்துகள் முதன்மைப் படுத்தப்படுவதில்லை, பத்து ஆண்களுக்கு மத்தியில் ஒரு பெண் இருப்பதென்பதே சங்கடமான விடயமாகப் பார்க்கப்பட்டு வருகிறது. இவ்வாறான அசௌகரியங்களையெல்லாம் நீங்கள் எவ்வாறு மீறினீர்கள்?
சல்மா: பாடசாலைக் காலத்தில் மாணவத் தலைவியாக இருந்துள்ளேன். சகோதரர் ஹிஸ்புல்லா பிரசாரக் கூட்டங்களுக்குச் செல்லும் போது – அவரின் மேடைப் பேச்சுக்கள் தொடர்பில் கருத்துக் கூறுவேன். அதேபோன்று எமது பெண்கள் அமைப்பில் பணிப்பாளர் பதவிநிலையை வகித்து வருகின்றேன். இதனால், நீங்கள் கூறும் அசௌகரியங்களை பெரிதாக நான் முகம்கொண்டதுமில்லை, அவை என்னைப் பாதித்ததுமில்லை.
கேள்வி: கட்சிக்குள் நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள்?
சல்மா: இதுவரை எதுவித பதவி நிலைகளும் வழங்கப்படவில்லை. கட்சியின் பெண்கள் தரப்பினை பொறுப்பெடுத்துச் செய்யுமாறு வாய்மொழி மூலமாகக் கூறப்பட்டது. இப்போது அரசியல் அதிகார சபையொன்றுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளதால் – கட்சி அதுபற்றி கவனம் செலுத்தும் என நம்புகிறேன்.
கேள்வி: உங்கள் சகோதரர் ஹிஸ்புல்லாவோடு இணைந்து ஏன் உங்களால் அரசியலை மேற்கொள்ள முடியாமல் போயிற்று?
சல்மா: ஆரம்ப காலத்தில் அவரோடுதான் இருந்தேன். ஆனால் அவர் 2005ஆம் ஆண்டு யாருக்கும் சொல்லாமல் பொதுஜன முன்னணியிலிருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கமாக மாறியபோது, அவரோடு இணைந்து எங்களாலும் மாற முடியவில்லை. அவ்வாறு மாறுவது எங்களுக்குச் சங்கடமாக இருந்தது. அதனால், அவருக்கு எதிரணியிலிருந்து செயற்பட வேண்டியேற்பட்டது.
கேள்வி: நீங்கள் என்னதான் சொன்னாலும் ‘ஹிஸ்புல்லாவின் தங்கை’ எனும் அடையாளம்தான் அரசியலில் உங்களுக்கான அங்கீகாரத்தைப் பெற உதவியிருக்கிறது என்று நான் சொல்கிறேன்…
சல்மா: அதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அப்படியென்றால், எத்தனையோ அமைச்சர்களின் சகோதரிகள் இருக்கின்றார்கள். அவர்களின் பெயர் என்னவென்றே நமக்குத் தெரியாது. சமூக அமைப்புகளில் நான் வகிக்கும் பொறுப்புக்களினூடாகத்தான் எனக்கான அடையாளம் கிடைத்தது. ஆனாலும், ‘ஹிஸ்புல்லாவின் தங்கை என்கிற அடையாளம்’ தவிர்க்க முடியாமல் என்னைத் தொடர்கிறது. ஆனால் எனக்கான அங்கீகாரம் அந்த அடையாளத்தினூடாகக் கிடைக்கவில்லை. இது தவிர, எனது அரசியலில் ஹிஸ்புல்லாவின் ஆசீர்வாதமோ, அங்கீகாரமோ, ஆதரவோ எனக்கு இதுவரை கிடைக்கவேயில்லை!
(குறிப்பு: மூத்த சகோதரரை முஸ்லிம்களில் சிலர் ‘காக்கா’ என்று அழைப்பார்கள். இந்த நேர்காணல் முழுக்க – ஹிஸ்புல்லாவை ‘காக்கா’ என்றுதான் சல்மா கூறினார். வாசிப்போர் விளங்கிக் கொள்வதற்காக – அவர் ‘காக்கா’ எனக் கூறிய இடங்களில் ஹிஸ்புல்லா எனும் பெயரை நாம் பயன்படுத்தியிருக்கின்றோம்)
கணவர் ஹம்ஸாவிடம் கேள்வி: உங்கள் மனைவி அரசியல்வாதியாக மாறியபோது, பிரபலம் பெறும் போதெல்லாம் – உங்களுக்குள் சங்கடங்களோ, தாழ்வுச் சிக்கல்களோ தோன்றவில்லையா?
கணவர் ஹம்ஸா: இவரை அரசியலுக்குள் கொண்டு வந்ததே நான்தான்! இந்தத் தேர்தலில் இவரை அழைத்துக் கொண்டு 06 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளுக்கு பிரசார நடவடிக்கைகளுக்காகச் சென்றிருக்கின்றேன். அப்போது இவர் களைப்படைவார். அந்த வேளைகளில் இவரை உற்சாகப்படுத்துவேன். நீங்கள் சொல்வது போல் தாழ்வுச் சிக்கல்கள் எனக்குள்ளிருந்தால் இவைகளை நான் செய்திருப்பேனா? இந்த வெற்றியை ஹிஸ்புல்லாவுக்கானதொரு சவாலாகவே பெற்றோம்!
கேள்வி: அது என்ன சவால்?
கணவர் ஹம்ஸா: சுமார் 18 வருடங்களாக ஹிஸ்புல்லாவின் செயலாளராக, இணைப்பாளராக, தேர்தல் நடத்துபவராக என்று அவருடன் நான் நெருக்கமாக இருந்தேன். அந்தவகையில், ஹிஸ்புல்லா- மு.காங்கிரஸிலிருந்து இரண்டாவது தடவையாகவும் ஐ.ம.சு.முன்னணியின் பக்கமாக மாறுவதற்கு முயற்சித்த போது, அவ்வாறு மாட வேண்டாம் என நான் கூறினேன். எனது எதிர்ப்பை வெளியிட்டேன். ஆனால், ‘மாறவேண்டாம் எனக் கூறுவதற்கு நீங்கள் யார்?’ என்று – பலரின் முன்னிலையில் என்னிடம் ஹிஸ்புல்லா கேட்டார். உடனடியாக அந்த இடத்திலிருந்து நான் கிளம்பி விட்டேன். அப்போது, ‘நீங்கள் போவதென்றால் போங்கள் உங்களிடம் இரண்டு வாக்குகள்தானே இருக்கின்றன’ என்றார் ஹிஸ்புல்லா. இரண்டு வாக்குகள் என்று அவர் கூறியது என்னுடையதும், எனது மனைவியின் வாக்கினையும்தான்.
அன்று நான் தீர்மானித்தேன். ஹிஸ்புல்லாவுக்கு நாம் யார் என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்று! அதை என் மூலமாக நிரூபிப்பதை விடவும், அவரின் தங்கை மூலமாக நிரூபித்தால் அது அவருக்கு இன்னும் உறைக்கும் என்று நினைத்தேன். அதற்கான அத்தனை முயற்சிகளையும் செய்தேன். அந்த வகையில் 2006ஆம் ஆண்டு இடம்பெற்ற பிரதேச சபைத் தேர்தலில் எனது மனைவியைக் களமிறக்கினேன். 35 வாக்கு வித்தியாசத்தில் எமக்கான வெற்றி நழுவிப் போயிற்று.
ஆனாலும், இந்தமுறை எமக்கு வெற்றி கிட்டியிருக்கிறது. எம்மிடம் இரண்டு வாக்குகளல்லளூ ஆயிரக்கணக்கான வாக்குகள் உள்ளன என்பதை என் மனைவியின் வெற்றி மூலம் ஹிஸ்புல்லாவுக்கு நாம் தெரியப்படுத்தியிருக்கின்றோம். நான் மனதுக்குள் ஏற்றுக் கொண்ட சவாலில் வெற்றி கண்டுள்ளேன்.
சல்மாவிடம் கேள்வி: இம்முறை நீங்கள் தேர்தலில் போட்டியிட்டபோது உங்கள் சகோதரர் ஹிஸ்புல்லா அரசியல் ரீதியாக உங்களை எதிர்த்தாரா?
சல்மா: ஆம், மிகக்கடுமையாக எதிர்த்தார். வீடு வீடாகச் சென்று எனக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கூறினார். கடைசியாக இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு சகோரதர் ஹிஸ்புல்லா பேசியபோது, எனக்கு வாக்களிக்க வேண்டாம் எனக் கூறியதை நான் கேட்டேன்.
கேள்வி: ஹிஸ்புல்லா – சல்மா இருவருக்குமிடையில் உங்கள் தாயார் எங்கு நிற்கிறார்?
சல்மா: உம்மாவுக்கு இப்போது 80 வயதாகிறது. அவருடைய முழுமையான ஆதரவை எனக்கு இம்முறை வெளியிட்டார். இந்தத் தேர்தலில் நான் வெற்றிபெற வேண்டும் என்பதே அவரின் விருப்பமாக இருந்தது. தங்கச்சி தேர்தலில் போட்டியிடுகிறார், இந்தத் தேர்தலில் நீ போட்டியிடவில்லைதானே. எனவே, எந்தவிதமான அநியாயங்களையும் உன் சகோதரிக்கு நீ செய்து விடக்கூடாது. அவ்வாறு செய்தால் – எனது முகத்தை நீ பார்க்கக் கூடாது என்று தாயார் சொல்லி விட்டார். அதனால், அவரின் நேரடித் தாக்குதல்கள் கொஞ்சம் குறைவாக இருந்தது.
கேள்வி: இப்போது நீங்கள் ஓர் அரசியல் அதிகாரத்தைப் பெற்றுள்ளீர்கள். இனி உங்கள் குரலுக்கு ஓர் அங்கீகாரமிருக்கிறது. இதனூடாக எதைப் பிரதானமாகச் செய்ய வேண்டுமென நினைக்கின்றீர்கள்?
சல்மா: பெண்கள் விடயத்தில் கூடிய கவனமெடுக்க விரும்புகின்றேன். அதிலும் குறிப்பாக பெண்களின் வாழ்வாதாரம், மற்றும் கல்வி தொடர்பில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். சில இடங்களில் தமது கிராம சேவகர் யார் என்பதே சில பெண்களுக்குத் தெரியாது. இவ்வாறான நிலைமைகளை மாற்ற வேண்டும்.
கணவர் ஹம்ஸாவிடம் கேள்வி: உங்கள் மனைவி இப்போது முழுமையானதொரு அரசியல்வாதி ஆகிவிட்டார். இனி அவர் பரபரப்பான பெண்மணி! இதனால், ஒரு மனைவியிடமிருந்து கிடைக்க வேண்டிய சில விடயங்கள் உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம். ஒரு மனைவின் வகிபாகத்தை உங்கள் மனைவியால் சில வேளைகளில் நிறைவேற்ற முடியாமல் போகலாம். இதை நீங்கள் எவ்வாறான மனநிலையோடு அணுகப் போகின்றீர்கள்?
கணவர் ஹம்ஸா: எனது மனைவியை இந்த நிலைக்குக் கொண்டு வருவதற்கான காலங்களில் நான் பல விடயங்களைச் சமாளித்துள்ளேன். இனி புதிதாக எனக்கு எதுவும் நேர்ந்து விடப்போவதில்லை. அது தவிர, இந்த அரசியலை விடவும் – அரச சார்பற்ற அமைப்புக்களில் எனது மனைவி இயங்கத் தொடங்கிய காலங்கள் இன்னும் பரபரப்பானது. அதனோடு ஒப்பிடுகையில் அரசியல் பரவாயில்லை. இன்னுமொன்று, வாழ்வில் ஒரு சவாலை அடைய வேண்டுமென்றால், ஏதாவதொன்றை இழந்தே ஆக வேண்டும். ஒன்றை இழக்காமல் இன்னொன்றை அடைய முடியாது!
நேர்காணல்: மப்றூக்
.jpg)







Mohammed Hiraz said
அப்ப ஊறில் தொடக்க புள்ளி வெச்சிட்டாங்க இனி அனேகமா நல்லாட்சிகாரங்க தொடர …………… வைபாங்களா? ஸூரா சபையில 40 பேரும் ஆண்களாமே அப்ப பெண்களுக்கு சம் உரிமையெல்லாம் கிடையாதாமா? சல்மா டீச்சர் உங்கட முதல்பணி அரசில கட்சிகளில் பெண்களுக்கு சம வாய்பளிப்பதட்கு குரல் கொடுப்பதா???
பிஷ்ருள் ஹனான் said
டீச்சர் வெற்றிபெற்றுவிட்டா. முதல்ல வாழ்த்துக்கள்..
நல்லாட்சிகாரங்க தொடர….. அதுக்கு முதல் அவங்கள அதிகமா தொடரவிடாம தடுத்தது யாரெண்டு டீச்சரே அவங்கட பேட்டியில சொல்லிட்டாங்க. அவங்களால முதல் டீச்சர் தப்பனும்.அப்புறம் சில்லறை..
Ahamed said
Teacher ‘iththakullah’
Abdullah said
சகோதரர் ஹிராஸ் அவர்களே!
காத்தான்குடி இன்போ நிருவாகமும் அதன் வாசகர்களும்
…………………. என்று எண்ணி விட வேண்டாம்.
உங்களைப் பற்றி எப்போதோ எங்கள் மக்கள் அறிந்து வைத்து விட்டார்கள்.
உங்கள் எதிரி சல்மாவோ, ஹிஸ்புல்லாவோ, pmgg இல்லை.
உங்கள் எதிரி ” காத்தான்குடி” .
உங்கள் இலக்கு “காத்தான்குடி” .
எங்கள் மக்கள் எங்கள் ஊருக்காக பாடு படுபவர்கள்.
ஊருக்கு ஒன்று என்று வரும்போது ஓடி ஒழியாமல் தங்களது கருத்தை
ஆணித்தரமாக சொல்பவர்கள்.
ஊரிலிருந்து விரட்டி அடிக்கப் பட்ட தங்களைப் போன்றவர்களின்
விஸ்பரூபங்கள், தற்போது
இணையங்களின் வாயிலாக இவ்வாறாக வெளிப் பட்டுக் கொண்டிருக்கின்றது.
எங்களிடையே கருத்துப் பிழைகள் இருக்கும்.
அதை எப்படி அணுக வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும்.
ஊரிலிருந்து வெளிவருகின்ற செய்திக்காக
வெளியூர்களில் தஞ்சம் புகுந்து, காத்துக் கிடந்தது
விஷக் கருத்துக்களுக்கு தூபமிட்டு எங்களுக்குள்
பிளவுகளை ஏற்படுத்த முனையும் ………….. போன்ற
……………….. கருத்துக்களில் வாசகர்களும், இன்போவும்
அவதானமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
bassha said
namma oor nallaa warakoadathentru ninaikum pala pear naattil undu brother
IMANA_KKY said
Absolutely you are right br.Abdullah
குட்டையக் குழப்பி அதில் குளிர்காயும் விஷமிகளின் விஷமத்தனமான கருத்துக்களை தயவுசெய்து யாரும் கணக்கில் எடுக்கவேண்டாம்.
Mohammed Hiraz said
ஊரில் இருந்து நாங்க விரட்டபட நாங்க என்ன பாவம் செய்தோம்??? நாங்க என்ன அனாதை குடும்பமா? ஊரிலேயே மிக பெரிய குடும்ப உரவுகள் எங்களுடையது எவனுகு துணிவுவரும் எங்களுடன் மோத????
Mohammed Hiraz said
இப்படியெல்லாம் வக்கிரமாக சிண்டு முடிஞ்சி எழுதினா முஹம்மத் ஹிராஸ் என்பது யார் என்று தெறியவரும் என்றா இப்படி இல்லாத பொல்லாத பழியை சுமத்தி எழுதுகிறிங்க ???? ஏன் இவ்வளவு சிறமம்? இன்போவிடம் விசாரத்தால் யார் என்று சொல்லுவார்களே??? அவ்வளவு தூரம் உங்கட ஆக்கள் கருத்துக்களால் ஆடம் கண்டுள்ளனறா?
Abdullah said
சகோதரரே !
தான் சொல்கின்ற கருத்து சம்பந்தப் பட்டவர்களை சிந்திக்க வைக்க வேண்டும்.
அதுதான் உயிருள்ள, பிரயோசனமான விமர்சனமாக இருக்க முடியும்.
அது கோபப் படுத்துவதாகவோ, கிண்டி விடுவதாகவோ,
(ஊரின் பாணியில் சொல்லப் போனால்) மூட்டி விடுவதாகவோ
இருக்கக் கூடாது.
சகோதரி அவர்களது உரையாடலை வாசித்தால், உண்மையான, புத்தியுள்ள வாசகன் தனக்குத் தெரிந்த
நல்லது கெட்டவைகளை சுட்டிக் காட்டி இருக்க வேண்டும்.
தங்களின் கருத்துக்கள் அபாயகரமானவை என்று எல்லாருக்கும் தெரியும்.
சகோதரரே!
நான் இதற்கு முன் எந்த விமர்சனமும் செய்தது இல்லை.
தங்களின் வித்தகச் செருக்கினை நான் சொல்லி வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
சகோதரரே!
கமெண்ட் பண்ணாமல் இருக்கும் சகோதரர்கள் முட்டாள்கள்,
அல்லது தங்களின் எழுத்தில் ஆட்டம் கண்டவர்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தால்
தயவு செய்து அதை மாற்றிக் கொள்ள கொஞ்சம் சிந்தியுங்கள்.
அவர்கள்..,
ஆட்டம் காணவில்லை.
கமெண்ட் – பண்ணவில்லை.
அவ்வளவுதான்.
bassha said
waalthukal teacher
Mohammed Hiraz said
அவளை நினைத்து உரலை இடிப்பது என்பது இதுதானா? கட்பனைகள் பலவிதம் அதில் உங்கட கட்பனை இப்படி ஒரு விதமா? அனியாயமாக பயில்வானிய சிந்தனையில் என்னை சேர்த்து நீங்கள் நரகத்தை தயார் பன்னுகிறீர்கள். என்மேல் சுமத்தபடும் அபாண்டத்திட்கு உங்களை இம்மை, மறுமை ஈருலகிலும் நான் மன்னிக்க போவதில்லை
star kky said
thanks teacher
rifka said
I dont believe this Drama,Deputy has strong connection with Salma teacher.
Deputy hard worked to Salma teacher to be elected in last the LG election.
சல்மாவிடம் கேள்வி: இம்முறை நீங்கள் தேர்தலில் போட்டியிட்டபோது உங்கள் சகோதரர் ஹிஸ்புல்லா அரசியல் ரீதியாக உங்களை எதிர்த்தாரா?
சல்மா: ஆம், மிகக்கடுமையாக எதிர்த்தார். வீடு வீடாகச் சென்று எனக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கூறினார். கடைசியாக இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு சகோரதர் ஹிஸ்புல்லா பேசியபோது, எனக்கு வாக்களிக்க வேண்டாம் எனக் கூறியதை நான் கேட்டேன்.
naqeer from uk said
hisbullah nana salma thangai intha arasiyalil iranki rattha pasam kooda poyvittathu………………
Aliyar said
Mohammed Hiraz said
இதே போதனைய உங்களுக்கு நீங்க செய்திருந்தா ரொம்ப பிரயோசனமாக இருந்திருக்கும்! அவளை நினைத்து உரலை இடித்து பாடு படும் உங்களுக்கு உண்மைகள் விரும்பிமாதிறி இறுக்க வேண்டும் என அவா கொள்ளுவது ரொம்ப ஓவருங்க! கசப்பானாலும் உண்மைகள் ஒத்து கொள்ளபட்டே ஆக வேண்டும்! தனக்கு தனக்கென்றா சுலகு படக்கு படக்கு என்று அடிக்குமாம்! ஒய்யார கொண்டையாம் உள்ளுக்க ஈரும் பேனுமாம்! உங்க கதையும் அப்படித்டான் இருக்கு! யார் தூற்றினும் யார் போற்றினும் உண்மைகள் தொடரும்…..
சூரியனை கைகளால் மறைதிடலாமோ என்னவோ உண்மைகளை ,யதார்தங்களை எவராலும் மரைத்திட முடியாது நிறந்தரமாக! அவரவர் செய்யும் காரியம் அவரவர் மனங்களில் நியாயமாக தெறிவதாலேயே நல்லதும் கெட்டதும் நடக்கிறது, ஆனால் நியாயம் தானா என்ற அந்த வெளிச்சத்தில் உரசிபார்க வேண்டும் என்று ஆர்வம் கொண்டு அதட்கு முயட்சித்தாலே தங்கள் செயல்கள் என்ன பெறுமானம் உடையவை என அறிந்து பச்சாதாவபடுவர்! வாழ்கையும் ஒரு முறைதான் அதில் பயனிப்பதும் ஒரு முறைதான் அதனால் உங்களின் கண்ணாடியை களற்றி விட்டு அந்த நியாயமெனும் வெளிச்சத்தில் இதுவரை நாம் எழுதிய கருத்துக்களை அலசி ஆராயுங்கள் அதில் எதாவது, பொய்,மோசடி,அநீதமான நிலைபாடு,போலித்தனம் இருந்தால் அந்த கருத்தை ஆதார பூர்வமாக ஏன் எப்படி எந்தலவு என துள்ளியமாக விளக்குங்கள் அப்படி செய்யும் ஆற்றல் பெற்று தாங்கள் எமது கருத்து கொடியது என ஆதார பூர்வமாக நிறூபித்தால் இங்கே மட்டும் அல்ல எதிலுமே எழுதுவதை நிறுத்திவிட நாம் தயார்!!!
irfan said
intha hiras da comments kku iwwalawu mukkiyatthuwam kodukkaththaan weynumaa endu info widam keytkireyn.