காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 4,986,219 மொத்த வருகைகள்

ஊர்குருவி – உள்வீட்டு தேர்தல் வன்முறை

Posted by Kattankudi Web Community (KWC) on 28/03/2011

கடந்த உள்ளூராட்சி சபைத்தேர்தலில் குடும்பத் தலைவி ஒருவர் ஒரு குறிப்பிட்ட இயக்கத்திற்கு வாக்களித்ததன் விளைவாக தனது கணவனுடன் ஏற்பட்ட தகராறு  வன்முறையாக மாறி மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று காத்தான்குடி பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக குறிப்பிட்ட குடும்பத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கையில், மனைவியை ஒரு குறிப்பிட்ட பெரும் கட்சியின் ஒரு குறிப்பிட்ட இலக்கத்திற்கு வாக்களிக்குமாறு அவரது கணவன் வற்புறுத்தி வந்த நிலையில் மனைவியோ  தான் ஒரு குறிப்பிட்ட இயக்கத்திற்கே வாக்களிக்கப் போவதாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து ஆத்திரமுற்ற கணவன் மனைவியை எச்சரித்து விட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

பின்னர், தேர்தல் நடைபெற்று 10 நாட்களுக்கு பின் இன்னும் மூன்று நபர்களோடு வீட்டுக்கு வந்த கணவன் வீட்டில் உள்ளவர்களையும் மனைவியையும் கடுமையாக தாக்கி வீட்டில் உள்ள பொருட்களுக்கும் சேதம் விளைவித்துள்ளார்.

இது தொடர்பாக பொலிசாரின் கவனத்திற்கு இந்த விடயம் கொண்டு வரப்பட்டபோது, போலீசார் அந்த காயமுற்ற மனைவியை வைத்தியசாலையில் அனுமதித்ததோடு குறிப்பிட்ட நபர்களையும் கைது செய்து  இருந்தனர்.

எனினும் ஒரு குறித்த அதிகாரமிக்க புதிய அரசியல்வாதி கைது செய்யப்பட்ட நபர்களில் மூவரை விடுவிப்பதற்கு  உதவி செய்ததோடு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மனைவியை உடனடியாக வீட்டுக்கு அனுப்புவதினூடாக குறித்த கணவனையும் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அந்த பாதிக்கப்பட்ட குடும்பத்தில் இருந்து வரும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தை காத்தான்குடி இன்போ வன்மையாக கண்டிப்பதோடு அந்த குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறது.

32 Responses to “ஊர்குருவி – உள்வீட்டு தேர்தல் வன்முறை”

  1. Ramzeen said

    வாக்குரிமை என்பது அரசு ஒவ்வொரு தனிமனிதனுக்கும் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமையாகும் இந்த உரிமையைகூட அனுபவிக்க விடாத இப்படி கட்டுமிராண்டத்தனமான மனிதர்கள் இன்னும் காத்தான்குடி மண் சுமந்துகொன்டுதானே இருக்கிறது. இவனுக்கு அனுசரயண வழங்கும் அரசியல்வாதியும் கட்டாயமாக ஒரு………………….யாகத்தான் இருப்பார்.

  2. IMANA_KKY said

    “அதிகாரமிக்க புதிய அரசியல்வாதி” யின் சில்லறைத்தனமான செயற்பாடுகளினால்தான் எமது உம்மத்துகள் இன்று இவ்வாறான கேவலமான நிலைக்கு இட்டுச்செல்கின்றன இதனை நானும் இன்போவுடன் சேர்ந்து வண்மையாகக் கண்டிக்கின்றேன் மேலும் நாட்டில் சட்டம் நீதியினை அமுல்படுத்துவதற்கு அரசியல்வாதிகள் இடையூறு விளைவிப்பதனை முற்றாக தவிர்ந்து கொள்ளவேண்டும்.

  3. Thalhan said

    Dear info pls publish the name taht silly politician!

  4. Raleen said

    ……………….நனா ரெம்பா நல்லவான்!

  5. Raleen said

    யார் ………. அரரசியல் வாதி?

  6. Abdullah said

    Hello புதிய அரசியல் வாதி! இனியாவது ஆரு இன்ஷ்ல ரொஅட் போடுவிங்ல தலைவா?

  7. ottrumai virumpi said

    no one protect our community from these type of political Robbers and theirs gang till awake our community from sleep.

  8. dum said

    ahaaaaaaaa well done J…………

  9. Raaz said

    யாரு அந்த ‘புதிய’?? புதிரப் போட்டுச் சொல்லாதேயுங்கடா மன… சொல்றத்துக்கு கொஞ்சமாவது க்ளு கொடுக்கனும்.. இல்லாட்டி புதிய எங்கறது யார குறிக்கிது என்டு அவனவன் சம்பந்தமில்லாத கொமென்ட அடிப்பாக… ….??

    • muhammed said

      ஹிராஸ் இதுவரைக்கும் எக்கருத்தும் பதியவில்லை எனும் போது அவ்வரசியல்வாதியை அவருக்கு தெரிந்திருக்குமோ?

      • Mohammed Hiraz said

        இது ஒரு பொது விடயம் அல்ல! ஒரு குடும்ப விடயம் எக்காரணத்தாலும் குடும்பங்கள் பிரிவைதை அடியேனும் விரும்ப வில்லை! எமை படைத்த அல்லாஹ்வும் பெறுபோடு விருப்பமில்லாமல் ஆகுமாகி இருக்கிறான்! மூன்றாம் மனிதர்களாகிய நாம் அந்த தம்பதிகளில் ஒருவருக்கு சார்பெடுப்பது சில வேளை அந்த குடும்பம் பிரிவதட்கு ஏதோ ஒரு வழியில் துணை புறிய கூடும் ஆகையால் அல்லாஹ் விரும்பாத குடும்பத்தை பிரிக்கும் விடயத்தில் நாங்கள் கருத்து சொல்ல்லுவதில் எங்களுக்கோ அந்த தம்பதிகளுக்கோ பயன் யாது??? நீங்கள் கொடுக்கும் ஊக்க கருத்துகள் இன்னும் இன்னும் அந்த பாதிகபட்ட பெண்ணுக்கு தைறியத்தையும் , ஊக்கதையும் கொடுத்து தான் அவரில்லாமலும் வாழ முடியும் என்ற நிலைபாட்டுக்கு துணை புறியுமே அந்த கணவன் மணைவிக்கிடையில் அன்பையும்,பசத்தையும், பசுமை நிறைந்த நாட்களையும் மீட்டு மீண்டும் சேர்ந்து அன்புடன் வாழ வேண்டும் என்ற என்னங்களை கிஞ்சித்தும் வழங்கி உதவி பிறியாது!!!

      • பிஷ்ருள் ஹனான் said

        ஹிராஸ் இதுக்கெல்லாம் வரமாட்டார். நல்லாட்சிய உன்னிப்பா பார்த்துகிட்டிருக்கிரவங்களுக்கு இதெல்லாம் விளங்கவா போகுது?

      • aliyar said

        அவரு??? ஊர் இரண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டமாம்…..

  10. SUKRY said

    Dearest Info Admin
    இப்படிப்பட்ட நிகழ்வுகளின் பொது சம்பந்தப்படவர்களின் பெயர் விபரங்களை தெரியப்படுத்தினால் இனி செய்பவர்களுக்கும் ஒரு பயம், இருக்கும் அல்லவா ? இவர்களை மறைப்பதால் நமக்கு என்ன பயன் ?? இவர்கள் சமுதாயத்திற்கு அடையாளம் காட்டப்படவேண்டியவர்கள்

  11. KKY Innocent People said

    Hi Admin,
    It’s not a matter to keep that political party as a secret. We are the innocent people in Kattankudy, unless if you don’t publish we can’t recognize who is doing right or wrong to our society. As we believe kattankudi.info is a significant media in our land for our society and taking a huge responsibility to bring down revolution. Please….. Please….Please…. help us identify to away from notorious political party.
    Jazakallah

  12. bassha said

    namma t……………….. than antha puthiya arasiyalwaathi

  13. Shukry said

    not only this we can see more coming day’s…how this People is going 2 save our KATTANKUDY name they have six members that what??????

  14. Mohammed Hiraz said

    aliyar :

    அவரு??? ஊர் இரண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டமாம்…..

    கீழே உள்ளைவை புனித ஸஹீஹுல் புஹாரியில் வரும் ரிவாயத்துக்கள் ஆகும்!!!!

    984. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
    உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான்.
    என ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார்.15
    Volume :6 Book :78
    5985. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
    தம் வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதும் வாழ்நாள் நீட்டிக்கப்படுவதும் யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் தம் உறவைப் பேணி வாழட்டும்.16
    என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
    Volume :6 Book :78
    5986. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
    தம் வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதையும் வாழ்நாள் நீட்டிக்கப்படுவதையும் விரும்புகிறவர் தம் உறவைப் பேணி வாழட்டும்.
    என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
    Volume :6 Book :78
    5987. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
    அல்லாஹ் படைப்பினங்களை படைத்து முடித்தபோது உறவானது (எழுந்து இறைவனின் அரியாசனத்தின் கால்களைப் பற்றிக்கொண்டு) ‘உறவுகளைத் துண்டிப்பதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோரியே இப்படி நிற்கிறேன்’ என்று கூறி(மன்றாடி)யது.
    அல்லாஹ், ‘ஆம். உன்னை (உறவை)ப் பேணி நடந்து கொள்பவனுடன் நானும் நல்ல முறையில் நடந்துகெள;வேன் என்பதும், உன்னைத் துண்டித்துவிடுபவனை நானும் துண்டித்துவிடுவேன் என்பதும் உனக்குத் திருப்தியளிக்கவில்லையா?’ என்று கேட்டான். அதற்கு உறவு, ‘ஆம் (திருப்தியே) என் இறைவா!’ என்று கூறியது. அல்லாஹ், ‘இது உனக்காக நடக்கும்’ என்று சொன்னான்.
    இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘நீங்கள் விரும்பினால் ‘(நயவஞ்சகர்களே!) நீங்கள் (போருக்கு வராமல்) பின்வாங்கிக் கொண்டு பூமியில் குழப்பம் விளைவிக்கவும் உங்கள் உறவுகளைத் துண்டித்துவிடவும் முனைகிறீர்களா?’ எனும் (திருக்குர்ஆன் 47:22 வது) வசனத்தை ஓதிக்கொள்ளுங்கள்’ என்று கூறினார்கள்.
    என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.17
    Volume :6 Book :78
    5988. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
    உறவு (ரஹிம்) என்பது, அளவிலா அருளாளன் (ரஹ்மான்) இடமிருந்து வந்த (அருட்கொடை) கிளையாகும்.18 எனவே, இறைவன் (உறவை நோக்கி) ‘உன்னோடு ஒட்டி வாழ்பவனுடன் நானும் உறவுபாராட்டுவேன். உன்னை முறித்துக் கொள்பவனை நானும் முறித்துக்கொள்வேன்’ என்று கூறினான்.
    என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
    Volume :6 Book :78
    5989. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
    உறவு (இறையருளின்) ஒரு கிளையாகும். எனவே, ‘அதனுடன் ஒட்டி வாழ்வோருடன் நானும் உறவு பாராட்டுவேன். அதை முறித்துக் கொள்கிறவரை நானும் முறித்துக் கொள்வேன்’ (என்று உறவைப் படைத்தபோது இறைவன் சொன்னான்).
    என்று நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
    Volume :6 Book :78

    • Aliyar said

      Copy பண்ணி Paste பண்றது லோசான வேலதான்….

      அதோட மேல இந்த ஹதீஸூகள நல்லா வாசிச்சு திருந்த வேண்டியவக H……. மாதிரி ஆக்கள்தான் ராசா…… குழம்புன குட்டையில மீன் பிடிக்கிற எவகளுக்கும் நீங்க சொன்ன இந்த அமுத மொழிகள் பொருந்தும் மன….. புரிஞ்சிக்கிட்டா சரிதான்…….

      • Mohammed Hiraz said

        உங்களை போன்ற மாஹான்கள் மாமேதைகளுக்கு அல்லாஹ்வின் தூதரின் விடயங்களை கொப்பி பேஸ்ட் பன்னுவது அவ்வளவு எளிதாக இருக்கலாம் ! ஆனால் எங்களை போன்ற சாமான்யர்களுக்கு அல்லாஹ்வின் தூதரின் போதனைகளை நன்கு படித்து உணர்ந்து அதன் பால் நடந்து அதன் பால் மட்டுமே அனுதினமும் கவன்ம் செழுத்தினால் தானுங்க இப்படி சந்தர்பத்துக்கு ஏற்ற அல்லாஹ்வின் தூதரின் ஹதீதுகளை சமர்பிக்க முடியும் . அல்லாஹ்வின் தூதரின் ரிவாயத்துக்கள் ஒரு இலட்சத்துக்கும் மேல் இருக்க அதை அவ்வளவு இலகுவில் கை நுனியில் வைத்திருக்க நாங்க உங்களை போன்ற மாமெதை இல்லை மஹான் அவர்களே!!!

    • Aliyar said

      தம்பி ஹிராஸூ.. நீங்க ஒரு முற இத வாசிச்சுப் பார்த்தீங்களா? பன்றது லேசான வேலதான். இருந்தாலும் அதயும் வாசிச்சுப் பாத்துகறது நல்லந்தானே…

      ஏன்னா நீங்க மேல சொன்ன விசயங்கள் கண்டிப்பா நீங்க விளங்கிக்கனும். உங்களுக்கு நீங்க சொன்ன மாதிரிதான் அது இருக்கு. அதுக்காகத்தான்……

    • SUKRY said

      உங்கள மார்க்கம் பேசவேண்டாம் என்று சொன்னல்லவா ” சகோதரன் என்று அழைப்பதை கூட விரும்பாத நிங்களா இந்த ஹதீத் சொல்றீங்க உங்களுக்கே இது கொஞ்சம் ஓவரா தெரியலையா ????

      • Mohammed Hiraz said

        நீங்க சொன்னா நாங்க கேகனுமா? உங்கட பேச்சிக்கி அடிபனிய எங்குலுக்கு என்ன தலை எழுத்து?

  15. superstar said

    hiras, ungalukum villan irukkan dont forget this

    • Mohammed Hiraz said

      வில்லனா? வின்னனா? அப்படி எல்லாம் இருந்தாதான் உலகம் நடக்கும்! கீரை கடைக்கும் எதிர் கடை வேனுமில்ல! உரப்பு ,உப்பு ,காரம்,புளி,மதுரம்,கைய்பு என அறு சுவை உண்டிடையும் உண்டாதாங்க வாழ்க ருசிக்கும்!!!

  16. superstar said

    hiras, alhamthulillah

  17. ihsan said

    hiras, naam ellorum insha allah slmc katchiyai valarpom. adhuvay namakaha ulla oray arasiyal iyakkam. hiras, onru paduwom ok.

    • Mohammed Hiraz said

      எல்லாரையும் ஒத்தும படுத்திட்டு கடைசியாக என்னை அழைத்தால் நானும் உங்க கூட வாரனுங்க ஒகேயா???

  18. KKY BC said

    ஹிராஸ் இதல்லாம் இவங்களுக்கு எங்க புரியபோகிறது

    • Mohammed Hiraz said

      அப்ப உங்களுக்கு புறிந்து விட்டதா? ரொம்ப நன்றிங்க!

  19. mohammed uk said

    i just wondering why not kkyinfo never moderated mr hiraz undecent comments ???

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s