புதிய மாணவர் பிரவேசப் பரீட்சை – 2011, ஜாமிஆ நளீமிய்யா கலாபீடம் – பேருவளை
Posted by Kattankudi Web Community (KWC) on 24/03/2011
2011ம் ஆண்டிற்கான புதிய மாணவர்கள் (முஸ்லிம்-ஆண்) ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்திற்குச் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். இதற்கான நேர்முக மற்றும் எழுத்துப் பரீட்சைகள் ஏப்ரல் மாதம் 4ஆம், 5ஆம், 6ஆம் திகதிகளில் காலை 08.30 மணி முதல் ஜாமிஆ நளீமிய்யா வளாகத்தில் நடைபெறவுள்ளன. எழுத்துப் பரீட்சையில் மாணவரின் மொழித்திறன், பொது அறிவு, விவேகம் என்பன பரீட்சிக்கப்படும்.
ஜாமிஆ நளீமிய்யா சர்வதேச இஸ்லாமிய உலகின் பல்கலைக்கழகங்களது சம்மேளனத்தில் (FUIW) அங்கத்துவத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதன் பட்டச்சான்றிதழ் சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகங்களினால் அங்கீகரிக் கப்பட்டதாகும்.
ஏக காலத்தில் பின்வரும் கற்கைநெறிகளில் மாணவர்கள் பயிற்றுவிக்கப்படுவர்.
1. இஸ்லாமிய கற்கைநெறியில் சிறப்புத் தேர்ச்சி
2. பட்டப்படிப்பு
3. தகவல் தொழில்நுட்ப டிப்ளோமா பாடநெறி
தகைமைகள்:
• கல்வி:
க.பொ.த(சா.த) பரீட்சையில் சித்தியடைந்து, க.பொ.த(உ.த) பரீட்சைக்குத் தோற்றுவதற்கான குறைந்த பட்ச தகைமைகளை பெற்றிருத்தல் (இஸ்லாம், கணிதம், தமிழ் ஆகிய பாடங்களில் சித்தியடைந்திருத்தல்)
• வயது:
31.01.2011 இல் 17 வயதுக்கு மேற்படாதிருத்தல்.
பரீட்சிக்கப்படும் ஆவணங்கள்:
1. பிறப்புச் சாட்சிப்பத்திரம் (மூலப்பிரதி)
2. க.பொ.த(சா.த) பரீட்சைப் பெறுபேறு (மூலப்பிரதி)
3. அங்கீகரிக்கப்பட்ட ஆள் அடையாள அட்டை
4. தேக ஆரோக்கியமுள்ளவர் என்பதை நிரூபிப்பதற்கான மருத்துவச் சான்றிதழ்
5. ஏனைய ஆவணங்கள், புலமைச் சான்றிதழ்கள்
நேர்முக, எழுத்துப் பரீட்சைகள்:
வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு 04.04.2011ஆந் திகதி திங்கட்கிழமையும்,
தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு 05.04.2011ஆந் திகதி செவ்வாய்க்கிழமையும்,
மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு 06.04.2011ஆந் திகதி புதன்கிழமையும் நடைபெறும்.
மேலதிக விபரங்களை இம்மாதம் 25,27ஆம் திகதிகளில் வெளிவரும் தினகரன் பத்திரிகையிலும் பார்த்துக்ககொள்ள முடியும்.
தொடர்புகளுக்கு: +94342276338, +94342277112
தகவல் - சுக்ரி முகம்மத்







Shukry said
Thank u Kattankudi.info………………………..