41 சதவீதமான வாக்குகள் 12.30 மணிவரை அளிக்கப்பட்டுள்ளன.
Posted by kattankudi web site on 17/03/2011
இடம் பெற்றுக் கொண்டிருக்கின்ற உள்ளுராட்சி தேர்தலில் நண்பகல் 12.30 வரை 41 சதவீதமான வாக்குகள் அளிக்கப்பட்டு விட்டதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் திரு சுந்தரம் அருமை நாயகம் தெரிவித்ததாக எமது விசேட தேர்தல் செய்தியாளர் தெரிவித்தார்.
மாவட்டத்தில் இதுவரை எதுவிதமான அசம்பாவித சம்பவங்களும் இடம் பெறவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கிடையில் காலையில் நூறானியா வித்தியாலயத்தில் வாக்காளர் ஆள் மாறாட்டத்தில் இருவர் ஈடுபட்டு அவர்கள் தடுத்து வைக்கப்பட்டதாக தேர்தல் கண்காணிப்பு குழுவான கபேயின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.







