முதலாவது மணித்தியாலத்தில் சுமுகமான வாக்களிப்பு
Posted by Kattankudi Web Community (KWC) on 17/03/2011
- எமது தேர்தல் கள செய்தியாளர்கள் -
இன்று காலை ஏழு மணிக்கு ஆரம்பமான உள்ளூராட்சித் தேர்தல் வாக்களிப்பு சுமுகமான முறையில் இடம்பெற்று வருகின்றது.
மாவட்டத்தில் மூன்று இடங்களில் மாத்திரம் தேர்தல் இடம்பெறுவதால் அதிகளவிலான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
வாக்களிப்பு நிலையைப் பாதுகாப்பில் வழமையாக வழங்கப்படும் பொலீஸ் பாதுகாப்புக்கு மேலதிகமாக இராணுவத்தினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கு மேலதிகமாக பொலீஸ் மற்றும் விஷேட அதிரடிப்படையினரின் ரோந்துக் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
CaFFE மற்றும் PAFFEREL ஆகியவற்றின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு வெளியிலும் நடமாடும் குழுக்களாகவும் கடமையில் ஈடுபட்டுள்ளான.






