காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 4,986,219 மொத்த வருகைகள்

வதந்திகளை நம்பாதீர்கள் – சுயேட்சை குழு 6 (வாள்)

Posted by Kattankudi Web Community (KWC) on 15/03/2011

swordrumorsசுயேட்சை குழு 6 – வாள் சின்னத்தில் போட்டி இடுகின்ற நாங்கள் மக்கள் மத்தியில் ஒரு முக்கிய விடயத்தினை விளக்க கடமைப்பட்டுள்ளோம்.

நேற்று இடம்பெற்ற இறுதி தேர்தல் பிரச்சாரத்தின்  பின்னர், ஒரு சில விசமிகள் எம்மை பற்றி ஓர் அபாண்டமான பொய் பிரச்சாரத்தை மேற்கொள்கின்றனர்.
அதாவது நாங்கள் தொப்பி சின்னத்தில் போட்டி இடுகின்ற சுயேற்சை குழு 1 க்கு மறைமுகமாக ஆதரவு வழங்குவதாகவும், மேலும் நாங்கள் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் கட்சியை எதிர்த்து, அவர்களின் வாக்கு பலத்தை உடைப்பதற்காக இரகசிய ரீதியாக அக்குறித்த சுயேற்சை குழுவினால் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பொய் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் வருங்காலங்களில் வேறு சில அரசியல் கட்சிகளும், சுயேட்சை குழுக்களும் இவ்வாறான பொய் பிரச்சாரங்களை எங்களுக்கெதிராக  மேற்கொள்ளலாம் எனவும் எமது புத்தி ஜீவிகளால் அனுமானிக்கப் படுகின்றது.

இதன் அடிப்படையில் நாங்கள் மக்கள் மத்தியில் எண்களின் அடிப்படை கொள்கையை மீண்டும் ஒருமுறை ஞாபகப்படுத்த விரும்புகின்றோம்.

நாங்கள் அல்லாஹ்வுக்கு மட்டும் பயந்தவர்கள். நாங்கள் இத்தேர்தலில் அல்லாஹ்வை மட்டும் நம்பியே களம் இறங்கியுள்ளோம். அவனது அருளும், அவனுக்கு அடிபணிந்த அடியார்களின் ஆதரவும் எங்களுக்கு முற்றிலும் போதுமானது.

எனவே வாக்காளர்களாகிய நீங்கள் தயவு செய்து இவ்வாறான எந்தவொரு பொய் பிரச்சாரத்தையும் நம்ப வேண்டாம் எனவும், இனிமேல் இவ்வாறான கருத்துக்கள் வெளிப்ப்படுமிடத்து அதற்கு நாங்கள் எவ்வகையிலும் பொறுப்பாளிகள் அல்ல எனவும் கேட்டுகொள்கின்றோம்.

மீண்டும் எமது மண்ணில் இஸ்லாமிய அகீதாவை நிலைநாட்டுவோம் !
الله أكبر

M.S.M நசார்
முதன்மை வேட்பாளர்
சுயேட்சை குழு 6
0774591650

4 Responses to “வதந்திகளை நம்பாதீர்கள் – சுயேட்சை குழு 6 (வாள்)”

  1. Mohammed Hiraz said

    என்னப்பா இது ஆளாளுகு 30 வருட பழய பல்ல்விய பாடுறிக

  2. Aasiyaniyas said

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் நஸார் அவர்களே!உங்கள் மீது இந்த ஊர் மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.நீங்கள் கவலைப்பட வேண்டாம்.இந்த ஊரின் சில சமூக விரோதிகள் உங்கள் பேருக்கு களங்கம் ஏற்படுத்த நினைக்கிறார்கள்.நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களோடு இருக்கிறான்.இந்த ஊரின் மார்க்கப் பிரச்சினையை உளமாரப் புரிந்து கொண்ட ஒரேஒரு அரசியல்வாதி இந்த ஊரில் நீங்கள் ஒருவர் மாத்திரமே.அல்லாஹ்வின் உதவி உங்களுக்கு எப்போதும் இருக்கும்.சில நூறு கள்ள வாக்குகளுக்காக மார்க்கத்தை அடகு வைக்கும் நமதூர் மூத்த அரசியல் வாதிகளுக்கு முன்னிலையில் அல்லாஹ் நிச்சயம் உங்களை கௌரவிப்பான்

  3. aysha said

    insha allah allah will help you

  4. kaavalan said

    நிச்சயம் இந்த வாழ் உன்மயை பாதுகாக்கும்……அனீதிக்கு எதிராக போராடும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s