பார்வை இழந்த ஒரு பாவலர் பக்கவாதத்தால் பீடிக்கப்பட்டு படுக்கையில்!
Posted by Kattankudi Web Community (KWC) on 10/02/2011
- கவிமணி மௌலவி எம்.எச்.எம். புஹாரி (பலாஹீ)-
காத்தான்குடிக் கவிஞர் கலாபூஷணம் மௌலவி சுபைர் (பலாஹீ) ஏற்கனவே பார்வை இழந்தவர். தற்போது பக்கவாதத்தால் பீடிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருக்கிறார். வாய் பேசவில்லை, வலது பக்கக் கைகளும் கால்களும் இயங்கவில்லை.
காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹில் ஷரீஆக் கல்வி கற்கும் போதே கவிதை எழுதத் தொடங்கியவர். குறுகிய காலத்தில் பிரபலம் பெற்றவர். தேசிய இதழ்களில் தித்திக்கும் கவிதைகளை எழுதியவர்.
சில வருடங்களுக்கு முன்னர் பார்வை இழந்து போனார். இருட்டில் நடமாடினாலும் கவிதைகள், பாடல்கள் எழுதுவதை நிறுத்தவில்லை. இவரது கவிதைகள் சிலவற்றைத் தொகுத்து காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் பழைய மாணவர் மன்றம் ஒரு நூலை வெளியிட்டது. அதற்குக் கவிஞரே ‘அஸ்தமனம்’ என்று பெயரிட்டார். பார்வை இழந்ததால் தனது வாழ்வே அஸ்தமித்து விட்டது என்று உணர்ந்தாரோ என்னவோ சோகமான பெயரை அவர் சூட்டினார்.
எனினும் அவரது கவிதா உணர்வு அஸ்தமித்துவிடவில்லை, தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தார். கண் தெரியாத நிலையிலும் கைகளால் எழுதினார். அவரது மனைவி சீரமைத்து எழுதிக் கொடுத்தார்.அக்கவிதைகள் பத்திரிகைகளில் பிரசுரமாயின, பாடல்கள் மேடைகளில் ஒலித்தன.
பிரபல எழுத்தாளர் ஓ.கே. குணநாதனின் பெருமுயற்சியால் கவிஞர் சுபைர் பலாஹீயின் மற்றுமொரு கவிதைத் தொகுதி வெளியிடப்பட்டது. இருட்டில் சஞ்சரித்த அவர் அந்த இருட்டில் அழகைக் கண்டார் போலும். அந்த நூலுக்கு ‘அழகான இருட்டு’ என்று அவரே பெயர் வைத்தார்.
அண்மையில் ‘கலாபூஷணம்’ விருதும் அவருக்குக் கிடைத்தது. இந்நிலையில் சுமார் ஒரு மாதத்துக்கு முன்னர் அவருக்குப் பக்கவாத நோய் ஏற்பட்டது. வாய் பேசவில்லை. வலது பக்கக் கைகளும், கால்களும் இயங்கவில்லை, தற்போது படுக்கையில்தான். எழுந்திருக்கக்கூட இயலவில்லை, மிகவும் பரிதாப நிலை.
அவரது நண்பர்களும், இலக்கியவாதிகளும் அவரது கவிதைத் தொகுதியொன்றை வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ‘இருட்டின் நிறம் கறுப்பல்ல‘ என்பது அதன் பெயர். இத்தலைப்பில் அவர் எழுதிய கவிதையும் இதில் இடம்பெறவுள்ளதால் இப்பெயர் சூட்டப்படவுள்ளது. முன்னைய இரு நூல்களின் பெயர்களைப் போல இப் பெயரும் அவரது நிலையை உணர்த்தும் சோகமான பெயர்தான். இருட்டில் வாழும் அவர் அதன் நிறத்தைக் கறுப்பாகக் காணவில்லை.
கவிஞருக்கு ஊன்றுகோலாக இருந்து எப்போதும் உதவிக் கொண்டிருப்பவர் பாடகர் கமர்தீன். அவர்தான் இந்நூலை வெளிக் கொணர்வதில் முன்னணியில் நிற்கிறார். வேறு சிலரும் இப்பணிக்குத் துணையாக இருக்கின்றனர். இந் நூலை வெளியிடுவதன் மூலம் கவிஞர் சுபைர் மௌலவிக்கு உதவி நல்குவதே அவர்களது நோக்கம்.
சுபைர் ஒரு மௌலவி, சிறந்த கவிஞர், பார்வை இழந்தவர், பக்கவாதத்தின் தாக்கத்தால் படுக்கையில் கிடப்பவர். இப்பரிதாப நிலையில் அவருக்கு உதவுவது கடமை. இந்நூலை வெளியிட உதவலாம். நூல் வெளிவந்த பின் அதனை வாங்கி உதவலாம், வேறு வகைகளிலும் உதவலாம். இது சமுதாயத்தின் கடமையாகும்.
குறிப்பு: இது தொடர்பான மேலதிக விபரங்களைத் தெரிந்து கொள்ள விரும்புவோர் சகோதரர் கமர்தீன் அவர்களை தொடர்பு கொள்ள முடியும். தொ.இல: 0776014617








mohamed sajee said
ALLAH AVARUKKU SARIRA SUHATTAI VALANKA ANAIVARUM PIRATIPPOMAHA
FROM
MSM.SAJEE
adiyaan said
பார்வை இழந்த பாவலரை பலரும் பயன்படுத்தினர்; பரிதாபம்; பக்க வாதத்தால் படுத்துக் கிடக்கும் போது பார்ப்பதற்குக் கூட யாருமில்லை!. இத்தகவலை இனிய தமிழில்; இணையத்தள இதயங்களோடு பகிர்ந்து கொண்ட கவிமனிக்கு கோடிப்புண்ணியம்!
kky said
namma oor thanavantharhal Allah vukkaha uthavi seiungal – people of kky
Mazaa.. said
அல்லாஹ் அவருக்கு சுகத்தை வழங்க – பிரார்திப்போம்..
Nirfan said
I will definitely buy this new book. Dear Readers I hope you also will buy this book. Info management can give more publicity once this book released with the help Mr. Kamardeen. Awaiting for your information
Abdullah said
Allah avarukku eerulahilum vetriyai koduppanaha..
சிபான் பாரூக் said
இலைமறைகாய்களாக இருக்கின்ற திரமையாளர்களை வெளிஉலகுக்கு கொண்டு வந்து அவர்களின் மூலம் சமூகம் பல பயன்களை அடைந்து கொள்ள வைப்பபதென்பது மிகவும் வரவேற்கக்கதும் இறைவனிடத்தில் அதிக நற்கூழிகளை பெற்றுத்தருகின்ற ஒரு அம்சமுமாகும். இந்த வகையில் மதிப்பிற்குறிய அறிஞர், நாடரிந்த பேச்சாளர் மௌலவி புஹாரி பலாஹி அவர்களுக்கு இம்மகத்தான பனியில் அளப்பெரிய பங்கு இருக்கின்றது. அதிலும் குறிப்பாக இவ்வாரான கண்பார்வையற்ற புத்திஞீவிகளை,கவிஞர்களை சமூகத்தின் முன்கொண்டு வந்து அவ்வாரோனோரை தங்களது உளரீதியான கவலைகளை மறக்கவைத்து அவர்களை மகிழ்ச்சியுரச்செய்வதென்பது நமது சமூகத்தில் காணாமல் போன நபிவழிகளில் ஒன்றாகும். இவ்வாரானோர்களை கவனிக்கின்ற விடயத்தில் சற்று அலட்சியம் செய்வதைக்கூட படைத்த ரப்புல் ஆலமீன் விரும்புவதில்லை. இதனால்தான் எந்த நபிமாருக்கும் வழங்கப்படாத பல சிரப்பம்சங்கள் வழங்கப்பட்ட, இறைவனால் கூட பெயர் கூறி அழைக்கப்படாத நபிகளார் அவர்களையே கண்பார்வையற்றிருந்த அப்துழ்ழாஹ் பின் உம்மி மக்தூம் ரழி அவர்கள் விடயத்தில் சற்று பராமுகமகமாக இருந்ததால் தனியான அத்தியாயத்தையே இரக்கி இறைவன் கண்டிக்கின்றான். இருதி நாள்வரைக்கும் அவ்அத்தியாயம் அல்குர்ஆனில் இருப்பதே கண்பார்வையற்ற (நல்லோர்)களின் சிறப்புக்கு மிகப்பெரிய சான்றாகும். இதனால்தான் இன்றைக்கும் இஸ்லாமிய அரபு நாடுகளில் இப்படியான கண்பார்வையற்ற அறிஞர்களை மிகப்பெரிய ஸ்தானங்களில் அழ்ழாஹ் அமர வைத்துள்ளான். சஊதி அரேபியாவின் பத்வா கமிட்டி, மற்றும் ஜாமிஆ இஸ்லாமியாவின் தலைவராகத்திகழ்ழந்த மதிப்பிற்குறிய அறிஞர் இப்னு பாஸ் (ரஹ்), மற்றும் மற்றும் ஆலுஷ;nஷய்ஹ் முஹம்மத் இப்னு இப்ராஹீம் (ரஹ்), எகிப்து அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் விரிவுரைளராக கடமை புரியும் கலாநிதி, அஷ; nஷய்ஹ் ஸஈத் ஸவாபீ போன்ற மார்க்க மேதைகள் (இவர்கள் அனைவரும் கண்பார்வையற்றோர்கள்) இதற்கு மிகப்பெரிய சான்றுகளாகும். நம் நாட்டைப்பொருத்தவரைக்கும் இவ்வாரானோரை தட்டி எழுப்புகின்ற உயர்ந்த பணியைச்செய்து வருகின்ற விரல் விட்டு என்னக்கூடிய நல்உள்ளம் படைத்தோர்களில் எனது மதிப்பிற்குறிய ஆசான் புஹாரி மௌலவி அவர்கள் மிக முக்கிய ஒருவராவார். இவர்களாலும் ஏனைய சிலர்களாலும் இச்சமூகத்துக்கு அடையாளப்படுத்தப்பட்ட ஒருவர்தான் மரியாதைக்குரிய மௌலவி சுபைர் பலாஹி அவர்கள். அவர்களது உடல் நலத்திற்காக நாம் அனைவரும் இறைவனிடத்தில் பிரார்த்திப்போம். வல்ல ரப்புல் ஆலமீன் எமக்கு ஏற்படும் சோதனைகளை சுவர்க்கத்துப் பூஞ்சோலைகளாக மாற்றியருள் புரிவானாக. வஸ்ஸலாம்
மௌலவி சிபான் (பலாஹி)
Muzammil said
It’s better to mention his brother bank acc no since easy for our brother’s who’s living in abroad in case they want to help..
Rameena said
“Alhamthulillah ” Allha avarukku Theha suhaththai kodukkattum
Moulavi Nashmel said
நபிகளார் காலத்தில் அன்னலாரையும் , தூய இஸ்லாத்தையும் தூற்றி கவியூடாக போர் தொடுத்தவர்களுக்கு ஹஸ்ஸான் பின் தாபித் (றழி) அவர்கள் நபிகளாரின் பிரார்த்தனையோடு கவியிலேயே பதிலழித்து வாயடைக்கச் செய்தாரகள். கடந்த காலங்களில் பாவலர் சுபைர் பலாஹி அவர்களின் கவிகளிலே நிறையவே தஃவாவின் வரிகள் நிறைந்திருந்தன. அல்லாஹ் கூலிகளை நிரப்பமாக வழங்குவானாக
jusly said
allahthan avarukku nalla suhathaik kodukka vendum