காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 4,986,219 மொத்த வருகைகள்

மீள்பிரசுரம்: இலங்கைச் சுங்கத் திணைக்களத்துக்கு சுங்க உதவி அத்தியட்சகர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான பொதுப் போட்டிப்பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன (வர்த்தமானி அறிவித்தல் இணைப்பு)

Posted by Kattankudi Web Community (KWC) on 01/02/2011

விண்ணப்ப முடிவுத் திகதிக்கு இன்னும் ஆறு நாட்களே உள்ளன. அவற்றில் மூன்று விடுமுறை நாட்களாகும்.

சுங்க உத்தியோகத்தர் (Customs Officer) என அறியப்படுகின்ற சுங்க உதவி அத்தியட்சகர் (Assistant Superintendent of Customs – ASC)  பதவியின் ஆரம்பத் தரமான IIம் தரத்துக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான பொதுப் போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் 07.01.2011 திகதிய அரச வர்த்தமானியில் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்பதாரிகளுக்கு தேவையான தகைமைகள் வருமாறு:

  • விண்ணப்ப முடிவுத் திகதியான 07.02.2011 அன்று 22 வயதுக்குக் குறையாதவராகவும், 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும் (அண்மையில் திருத்தப்பட்ட சேவைப் பிரமாணக் குறிப்பின் படி இவ்வயதெல்லை ஏற்கெனவே அரச சேவையிலுள்ள விண்ணப்பதாரிகளுக்கும் விதிக்கப்பட்டுள்ளது என்பதைக் கவனிக்கவும்)
  • உடற்தகைமைகள்: ஆண்கள்: உயரம் 5 அடி 5 அங்குலத்துக்குக் குறையாமலும், மார்புச் சுற்றளவு (விரிந்த அல்லது உட்சுவாச நிலையில 33 அங்குலங்களுக்குக் குறையாமலும் இருக்க வேண்டும். பெண்கள்: உயரம் 5 அடி 3 அங்குலத்துக்கு குறையாமல் இருக்க வேண்டும்.
  • கல்வித் தகைமைகள்: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டமொன்றைப் பெற்றிருத்தல் அத்துடன் க. பொ. த. (சா. த.) பரீட்சையில் ஆங்கில மொழியில் (விருப்பத்துக்குரிய ஆங்கிலப் பாடத்தில் அல்ல) குறைந்தது திறமைச் சித்தியை அல்லது க. பொ. த (உ. த.) பரீட்சையில் ஆங்கில மொழியில் சாதாரண சித்தியைப் பெற்றிருத்தல் வேண்டும் (பட்டப் பரீட்சையின் பெறுபேற்றிற்காகக் காத்திருப்போர் விண்ணப்பிக்க முடியாது என்பதைக் கவனிக்கவும். பட்டப் பரீட்சையில் சித்தியடைந்திருக்கும் ஒருவர் அதை உறுதிப்படுத்தும் பல்கலைக்கழகப் பதிவாளரின் கடிதம் ஒன்றைச் சமர்ப்பிக்குமிடத்து பரீட்சைக்கு அனுமதிக்கப்படலாம்)

நியமனம் மற்றும் போட்டிப்பரீட்சை தொடர்பான மேலதிக விபரங்களுக்கு இணைக்கப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலைப் பார்க்கவும்.

Sorry, the comment form is closed at this time.