அன்வர் வித்தியாலய ஆசிரியை பரீதா அஸீஸ் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் இன்று
Posted by Kattankudi Web Community (KWC) on 22/01/2011
நேற்று இரவு மரணமான அன்வர் வித்தியாலய ஆசிரியை பரீதா அஸீஸ் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (22.01.2011) காலை 9.00 மணியளவில் இடம்பெற்றது.
கல்விப் பகுதியைச் சேர்ந்த பெருந்திரளானோர் நல்லடக்கத்தில் பங்கு கொண்டனர். தக்வாப் பள்ளியில் நடந்த ஜனாஸாத் தொழுகையின் போது இரங்கல் உரையும் நிகழ்த்தப்பட்து.
இரங்கலுரையை அன்வர் வித்தியாலய அதிபர் சார்பாக அவரது கணவர் ஆசிரியர் SMM. முஸ்தபா மௌலவி அவர்கள் நெறிப்படுத்தினார். ஓல்லிக்குளம் அன்வர் வித்தியாலய அதிபர் அன்ஸார் மௌலவி, ஆசிரியர் AL. முனீர் அஹமட், ஆகியோருடன் மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப் பணிப்பாளர் M.ஸெய்னுதீன் (SLAS) அவர்களும் உரையாற்றினர். குடும்பத்தினர் சார்பாக ஆசிரியர் SL. பதுறுதீன் நளீமி நன்றியுரை வழங்கினார்.
மரணித்த ஆசிரியை அவர்கள் மாணவர்களின் விளையாட்டுத்துறை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை போன்றவை முன்னேற பாடுபட்டதாக உரையாற்றியவர்கள் கூறினார்கள்.
நல்லடக்கம் ஜாமியுள்ளாபிரீன் மையவாடியில் உயர்மணற் பகுதியில் நடந்தது.
ஈரலில் ஏற்பட்ட சுகவீனம் காரணமாக கொழும்பில் சிகிச்கை பெற்று சிகிச்கை பலனளிக்காமல் போனதே ஆசிரியையின் மரணத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.
இவரது இழப்பினால் துயருறும் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதிலும் இவருக்காக பிரார்த்திப்பதிலும் எமது இணையச் சமூகமும் கைகோர்த்துக்கொள்கிறது.
ஆசிரயைக்கு ஜன்னதுல் பிர்தௌஸ் உயர் சுவனம் கிடைக்க பிரார்த்திப்போமாக.
This slideshow requires JavaScript.








mafas said
innaliallahhi vaninalilaike rajun.
Ya Allah please forgive her sins and give to her jainnathul prithous please keep away from the hell
IMANA_KKY said
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவுன்….
அல்லாஹ் இவர்களுடைய பாவத்தை நீக்கி மறுமையில் உயர்ந்த சொர்க்கத்தை தருவானாக !
Mohamed Fashan said
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவுன்
அள்ளாஹ் அவருடைய அனைத்துப் பாவங்களையும் மன்னித்து அவர்களுக்கு உயர்ந்த சுவனத்தை வழங்குவதுடன் இவர்களின் இழப்பை தாங்கிக் கொள்வதற்கு அவரின் குடும்பங்களுக்கு தைரியத்தையும் கொடுப்பானாக
ajwar/dubai said
inna lillahi vainna ilaihi rajiuon
SMA said
அள்ளாஹ் !!!
“இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவுன்….”
rasool_Qatar said
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவுன்….
அல்லாஹ் இவர்களுடைய பாவத்தை நீக்கி மறுமையில் உயர்ந்த சொர்க்கத்தை தருவானாக
hidhaya said
innaliallahhi vaninalilaike rajun.
Ya Allah please forgive her sins and give to her jainnathul prithous please keep away from the hell
shamil said
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவுன்
Ruwaiz New Zealand said
Inna lillahi va inna ilaihi rajun