கத்தார் நிதி சேகரிப்பு சிக்கலில்: காத்தான்குடி வெள்ள நிவாரண நிதி உரியவர்களிடமே மீளளிப்பு
Posted by Kattankudi Web Community (KWC) on 17/01/2011
கத்தாரில் வசிக்கும் எமதூர் சகோதரர்களால் வெள்ள நிவாரண நிதி திரட்டும் பணி ஒன்று ஆரம்பிக்கப்பட்டு பெருமளவு நிதி திரட்டப்பட்டதை வாசகர்கள் அறிவீர்கள். எமது இணையத்தளம் தொடர்ச்சியாக செய்திகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டு வந்தது.
இன்று கிடைக்கப்பெற்ற இந்நிதி திரட்டிய அமைப்பின் உத்தியோகபூர்வ அறிவித்தலின் படி, இந்நிதி சேகரிப்பு உரியவர்களிடம் மீளளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது:
அவ்வறிவித்தல் வருமாறு:
அண்மைய வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப் பட்ட நமது பிரதேசத்தில் உள்ள மக்களுக்காக, கட்டாறில் உள்ள சகோதரகள் பெருமளவு நிதியை உவந்தளித்தரிந்தனர்.
இந்நிதியை பகிர்ந்தளிப்பது தொடர்பாக செயற் குழுவால் ஏகமனதாக எடுக்கப்பட்ட முடிவை காத்தான்குடியில் நடைமுறைப் படுத்துவதில் நடைமுறைச் சிக்கல்கள் எதிர் கொள்ளப் படுகின்றன.
எனவே இன்றிரவு கூடிய நிருவாக சபை இந்நிதியை உரியவர்களிடமே மீழளித்து விடுவதென ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது. இந்நிதியை ஈந்தளித்தவர்களுக்கும் இதனைப் பெற இருந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இது தொடர்பாக எங்களது மன வேதனையைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நிதி பகிர்ந்தளிப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானம் என்ன என்பதோ அதில் ஏற்பட்ட சிக்கல்கள் எவை என்பதோ விரிவாக எமக்குத் தெரிவிக்கப்படவில்லை.
இவ்விபரங்களைப் பெற்|று வெளியிட முயற்சி மேற்கொள்ளப்படும்.







IMANA_KKY said
ஆஹா ஆசை காட்டி மோசம் பன்னிட்டாங்களேப்பா!
பௌமி said
“ஆதமுடைய மகனே நீ (கொடு) செலவிடு! உனக்கு நான் செலவிடுகிறேன் (கொடுக்கிறேன்) என்று அல்லாஹ் சொல்வதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.”
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி),நூல்: புகாரீ (5352)
KAFRA – QATAR யினான் சேகரிக்கப்பட்ட நிதி பாதிக்கப் பட்ட மக்களை சென்றடையாமல் மீண்டும் நம்மிடமே மீள்வதினால் எங்களின் நேரம் காலம் வீணடிக்கப்பட்டதினையே உணர்கின்றோம்.
அல்லாஹ்வின் உதவியால் கத்தார் வாழ் நம்மூர் கொள்கைச் சகோதரர்களால் நிச்சயம் நிதி திரட்டப்படும். திரட்டப்படும் நிதி நிச்சயம் நம்மூர் பாதிக்கப் பட்ட மக்களை வந்தடையும். பிரார்த்திப்போம்… அல்லாஹ்வின் உதவியால் மக்களை வந்து சேரும்….
“ஒரு சுன்னாவினை உயிர் வாழ வைப்பவன் ஒரு சமுதாயத்தினை வாழ வைத்தவன் போன்றாவான்.”
அல்லாஹ் போதுமானவன்.
உங்களுடன்…
பௌமி-கட்டார்.
http://www.shaththiyams.tk
Azeem said
NO..NO..mosam poyviduvom enru thavirnthu kondaarhal.
Rifdy said
யாரும் ஆசை காட்டவுமில்லை மோசம் பண்ணவுமில்லை. நீங்கள் தலையும் தெரியாமல் வாலும் தெரியாமல் கொமன்ட்ஸ் அடிக்கவேண்டாம். …………………………………………………….. நிறுவனம் என்று சொல்லிக்கொண்டு அவர்கள் மக்களுக்கு இளைத்த அநீதியை அல்லாஹ் ஒருபோதும் மண்ணிக்கப்போவதில்லை. இது மாபெரிய சமூகத்துரோகமாகும். கனிசமானளவு தொகைப்பணம் மக்களுக்கு வருவதை தடுத்திருக்கும் இவர்களைக் கேட்பதற்கு யாருமில்லையா??? இவ்வாறான மிகக் கேவலமான நிகழவுகள் ஒவ்வொரு அனர்த்தங்களின்போதும் நிகழகின்றதே. இதுதான் எங்களது தலைவிதியா??? ஏன் இவர்களுக்குப் பதிலாக காத்தான்குடியில் யாருமில்லையா???
IMANA_KKY said
My dear Rifdy
தலையும் வாலும் தெரிந்த நீங்களே கேள்வி மேல் கேட்கிறீங்களே அப்ப உங்களுக்கு என்னதான் தெரியும்????? ஏன் காத்தான்குடியில் சம்மேளனம் ஒன்று இருக்கிறதே அது உங்கள் கன்னுக்கு தெரியவில்லையோ?? சேர்க்கிற நிதியினை கொடுங்க அவங்களிடம் ……………………. மக்களுக்கு கொடுக்கட்டும்.
“ஏன் இவர்களுக்குப் பதிலாக காத்தான்குடியில் யாருமில்லையா???” அப்போ நீங்க எதற்கு ஹபீபி இருக்கிறீங்க எல்லாம் அவங்கதான் செய்யனுமென்று என்ன எழுதப்படாத சட்டமா!அவங்களுக்கு பதிலா அத்திட்டத்தினை முன்னேடுக்கலாமில்ல!!! தேவையென்றால் நானும் உங்க கூடவருவேனே! இங்கே உட்கார்ந்து சும்மா வெட்டியா கமென்ட் அடிச்சுட்டு இருக்கிறதுக்கு பதிலா சமூக சேவையாவது செய்யலாமில்ல!
Rifdy said
இன்போ நிருவாகத்தினரே! நீங்கள் கொமண்ட்சை எடிட் செய்யும்போது கொமண்ட் இனுடைய நோக்கமே இல்லாது எடிட் செய்யப்படுகிறது. யாருடைய மனதையும் புண்படுத்தாமல் போடப்படும் கொமண்ட்ஸ் முழுமையாக பிரசுக்க வேண்டுமென உங்களை மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன். எனவேதான் மக்கள் யார் பொதுவேலை செய்பவர்கள்இ யார் சமூகத்துரோகிகள் எனபதனை அறிந்து கொள்ள முடியும்
Kattankudi Web Community (KWC) said
We have the right to edit comments. We are trying to avoid comments which make unnecessary conflict between the people.
ana85 said
yar atu pls sollunge
AC said
Nangalthan ooril padithawarkal endu solli thirium oru silar.
Mohamed said
கத்தார் சகோதரர்கள் என்ன சிக்கல் என்பதை சரியாக மக்களுக்கு விளக்க வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு இவர்களின் சுயரூபம் தெரியவரும்.
விரைவில் உங்கள் பதிலை எதிர்பார்த்கிறோம்
nowfer (Qatar) said
இப்பணியில் இரவுபகலாகப் பாடு பட்ட சகோதரர்கள் அனைவருக்கும் அவர்களது உழைப்பு,மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் என்பனவற்றுக்கு நற்கூலி வழங்க வல்ல அல்லாஹ்வே போதுமானவன்!!.
person said
qatarla meeting potu collection panna ungaluku atha pahirnthu koduka mudiyamaya poitu.ennanga solringa……….
unga pammathuku alave illaya?????????????
AC said
nanparhal pammathu katta villai(allah awarkaluku nat kooli kodukka wendum but kafra committee la ulla sila padithawarkalin muttalthanama sinthanaiyal antha nithi namathu makkalai wanthu sera willai.
nalanvipumpi said
p…g ya mosam panniyathu?
Rifdy said
Dear Moderator! I have totally agreed with your reply but this is an unfortunate that the kattankudy people who affected by Flooding disaster they lost the big amount of money from Qatar only because of A GROUP who planned and stopped the fund to distribute to a nutrel body. So we must peel off their face screen who are they? What they are doing??
Fayz - Qatar said
அஸ்ஸலாமு அலைக்கும், நிவாரண நிதியாக கட்டாரில் சேகரிக்கப்பட்ட நிதி உரியவர்களிடம் மீளளிக்கப்படும் என்ற செய்தி பார்த்து உறைந்து போனேன்!
இது மிகவும் அவசரப்பட்டு எடுத்த முடிவாகவே நான் கருதுகிறேன், அல்லாஹ்வுக்காக தயவுடன் அனைவரையும் ஒன்றினைத்து மீண்டும் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யும்படி அனைத்து உள்ளங்கள் சார்பாகவும் இந்த நிதியை கையாள அமைக்கப்பட்ட 16 பேர்கொண்ட நிருவாகத்திற்கு வேண்டுகோள் விடுக்கிறேன். இந்த நிதி எமது மக்களுக்கு கிடைக்கவேண்டும் என்ற தூய நோக்கத்தில்தான் நாம் இந்த நிதியை வழங்கியிருந்தோம். தயவுடன் எமது கருத்துகளுக்கும் முக்கியத்துவம் அளிக்குமாறு பணிவாய் வேண்டுகிறேன். நீங்கள் ஒரு நடைமுறை சிக்கலை எதிர்கொள்வதாக நாங்கள் உணர்கிறோம், உங்களுக்கு அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
Digital.Graphics. Deen Road said
Qattar sahothararhalin Theermanaththin Moolam Kattankudyin Samooha Thondu niruvanankal Ethuvumea Nampikkai Illathu Enru Makkal Ninaithu vida Koodathu. Samoohaththukkaha Vilamparminri Seyatpdum Niruvanankalum Kattankudiil Undu.
Azeem said
They proved that they can collect such a huge amount but it is unclear what was the intention of returning this fund.
However they returned to contributories not in to their pockets.!
kathan said
meeting pottu collection panniya groupukku ethum avasara panasikkal pola.athan collection panniya kasil rotation pannividdu thiruppi koduthiddanga pola. hallo meeting commity ….. ponra thirudarhalai vaithu panam collection panninal ippadithan nadakkum.
thaas kky said
nadanthathu enna.ean asai katti mosan pannanum.kidaitha kasa pahira theriyatti ennathukku ippadi oru amaippu. ada pongappa…….
meera kky5 said
qattar brothers!very caraful no more money collection to same group
if would u like help to kattankudy people direct to sent SAMMELANAM THISS MESSAGE FOR all of out of kattankudy brothers.
Rifdy said
Please Stop this. They are people who stopped this distribution.
ashraf said
யாரவது சொல்லுங்களன் இது மிகவும் மன வேதனைக்கு உரிய விடயம் இங்கு நபர் முக்கியமில்ல காரணம்தான் முக்கியம் அல்லா உரியவர்களை பார்த்துக் கொல்லுவான்
atheef said
atheef said
pls,collect panniya panaththai pathikkappatte makkalukku anuppi vaiyunkal; arasiyal vathihalukku payanthu allathu iyakkaththukku payanthu anuppamal vittu vide vendam,,pls,naankal manam uvanthu thanthe panam ,commetee,pls sinthikkavum,3 days meeting vanthu night 1 time varaiyum naankal unkaludan irunthu kky makkalappaththi kavalappattu,,enne pirayosanam,leader avarhal enne karanam pnam thiruppe tharuheerhal,pls call me ……………………,,yarukkahe payappadevendum ,allahvukkahe seyyunkal,,
Nirfan said
It is very to read this news. Our community unity has been exposed to other community which should not have happend.
I was much delighted when they were able to collect such a huge amount within a short notice while experiencing the Mechanical life in abroad. Whatever Happend we have appreciate the effore the committee headed by Mr. Rafee. The reason to return the money, might be undue influence by the stakeholders (only committee people knows??) on the committee about the way how the collected fund to be spent. Only the committee know what actually happend to this pathetic situation. Kindly Mr. Rafee as he is the committe leader may (not must)explain what went wrong and Mr. Riyas Mohammed who was writing more interesting and encouraging articles from Qatar also may write fact finding report on this incident.
Finally, Whatever happend in returning fund is a very bad example and lessons to be learnt by All.
Why doesnot Federation appoint directly one authorized person to collect this fund after this incident which may help to the actual contributors who can directly donate the money to the needed people via federation?
atheef said
pirachchinai enpathatkahe kastappadum makkalukku panaththai anuppi vaikkamal enkalidam thiruppi tahruhireerhal? im very sad,,even sandai pidiththalum namakkuenne? naam arasiyal sinthanai ullavarhal illai,,,makkalin sinthanai ullavarhal,,,ivvaru nadia petrtra inthe sampavaththal meendum oru murai meeting vendam, enkalin manathai punpaduththa vendam,,,pls, mr rafee ,,pls call me ,tell me what the reason
ana85 said
நானும் இச்செய்தி கேள்விப்பட்டு மனவேதனையடைந்தேன் உண்மையில் இவ்வானதொரு முயற்சி எடுக்கப்பட்ட போது சந்தோசமாக இருந்தது அனைவரும் வர இருக்கும் தேர்தலை மையப்படுத்தியே செயல்படுகிறார்கள் என்பது இதிலிருந்தே வெளிச்சமாகிறது உண்மையில் ஊருக்கு சென்று பார்த்தால் தான் விளங்கும் எத்தனையோ வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது அல்லாஹ்வுக்காக இஹ்லாஸூடன் வேலை செய்ய எத்தனையோ இளைஞர்கள் தயாராய் உள்ளனர் அதே போல் ஊருக்கு தேவையான அடிப்படைத்தேவைகள் பெரும்பாலும் நிறைவேற்றப்படடுள்ளது ஆகவே இந்த நிதியை அவசரப்படாமல் சற்று காலம் தாழ்ந்தாலும் இந்த தேர்தலின் பிற்பாடு உரிய முறையில் பகிர்ந்தளிக்க முடியும்
Mohamed said
This is what I raised the question about these croo……….prior to the start of collection. Everybody criticized.
Hope most of them would have realised now about this group.
Mazaa said
எல்லா அமைப்பினரையும் உள்வாங்கியதாக – அவ் அமைப்பின் நடவடிக்கைகள் இருந்தபோதிலும், ஒரு சில சகோதரர்களை மையமாக வைத்து – அவ் அமைப்பின் தூய நோக்கங்களுக்கு சேறு பூசவும் கெடுத்துவிடவும் சிலர் – சம்பந்தமில்லாத செய்திகளுடன் அவர்களைக் கோர்த்துவிட்டு விமர்சனம் செய்து இருந்ததை கடந்த சில நாட்களில் அவதானிக்க முடிந்தது.
எல்லாத் தரப்பினருக்கும் – பாரபட்சமின்றி அவ்வுதவி கிடைக்கவேண்டுமென்ற அவர்களது நல்லெண்ணத்தையும் அவர்கள் எடுத்துக் கொண்ட சிரமங்களையும் – அவர்களுடைய கூட்டங்களுக்கு சென்றவர்களும் – அல்லாஹ்வும் நன்கறிவான்.
எது எப்படியோ – நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட சகோதரர்கள் இது தொடர்பான தெளிவினை மக்களுக்கு வழங்குவதும் தங்களது முடிவை மீள்பரிசீலனை செய்வதும் – காலத்தின் தேவையாகும்.
meera kky5 said
u r right mazza!
Azeem said
You are right my dear…!!!
sms said
இந்த தொகையை எப்படி கையாள்வது என்று தெரியாத இவர்களுக்கு ஏன் இந்த வேலை சும்மா பம்மாத்துக்கா
Kky_RS said
அஸ்ஸலாமு அலைக்கும்.
உண்மை என்ன என்று தெரியாம யாரும் யாரைப்பத்தியும் தப்பா பேச வேண்டாம் சகோதரேர்களே.
பொய் சாட்டு சொல்லி யாரும் பாவம் தேடாதிர்கள்.
அல்லாஹ் உங்களை மண்ணிக்க மாட்டான்.
எல்லாத் தரப்பினருக்கும் – பாரபட்சமின்றி அவ்வுதவி கிடைக்கவேண்டுமென்ற அவர்களது நல்லெண்ணத்தையும் அவர்கள் எடுத்துக் கொண்ட சிரமங்களையும் – அவர்களுடைய கூட்டங்களுக்கு சென்றவர்களும் – அல்லாஹ்வும் நன்கறிவான்.
Mazaa said
சகோதரர்களே –
“அல்லாஹ் உங்களை மண்ணிக்க மாட்டான்..” – இதுபோன்ற வசனங்களை – நண்பர்கள் சிலர் அண்மைக் காலமாக, உணர்ச்சிவசப்பட்டு அதன் அர்த்தம் தெரியாமல் கூறிவிடுகின்றார்கள்.
உண்மையில் – அல்லாஹ் ஒருவரை மன்னிக்க வேண்டுமா..? இல்லையா என்பது அவனது விருப்பம் சார்ந்தது. அல்லாஹ்வுடைய விடயத்தில் தலையிட யாருக்கும் அதிகாரம் கிடையாது. அவன் தான் நாடியோரை (என்னதான் பாவம் செய்திருந்தாலும் – ஒரு சில காரணங்களுக்காக) மன்னிக்க கூடியவன்.
எனவே, அடுத்தவரை – இதுபோன்ற வாசகங்களால் குறிப்பிட்டு – நாம் பாவியாகிவிடாமல் இருப்போமாக..
கணிப்பு said
ஒரு சமுகத்தின் நலனுகாகவேண்டிசேவை செய்ய வந்தவர்களிடம் ஏற்பட்ட அரசியல் சுயநல,நயவஞ்சக முரண்பாடுகளுமே இப்படியான ஒரு நல்ல சேவையை
தடுத்திரிக்கிறது .வெளிநாட்டில் வாழும் அருமை சகோதரர்கள் தங்களின் இரத்த உறவுகளை பிரிந்து வாழ்வது மட்டுமல்லாமல் ,தங்கள் சமுகத்துக்கு ஏதாவது எதிர்பாராத வண்ணம் அனர்த்தங்கள் நிகழும் வேளைகளிலும் துடி துடித்துக்கொண்டு நேரம் காலம் பார்க்காது செய்த இப்படியான ஒரு நல்ல சேவைக்கு அல்லாஹ் நிறைந்த கூலியை வழங்கிடுவானாக.இதை தடுத்து விட்டோமே என்று பாதிக்கப்பட்ட எமது உறவுகளின் நெருப்பில் குளிர்க்காயபவர்களை அல்லாஹ் நேரான வழியில் வாழ துணை புரியட்டும்
Rasmin said
பாதிக்கப்பட்ட மக்களுக்காக கொடுத்த இந்தப்பணம் உரிய மக்களுக்கு கிடைக்காமல் போனதற்கு யார் யாரெல்லாம் காரணமாக அமைந்தார்களோ அவர்களுக்கு நிச்சயம் அழிவுண்டு…
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு குடிப்பதற்குக்கூட எமது ஊரில் கஷ்டப்பட்ட மக்களின் நிலமை இன்னும் எம்மனதை விட்டு அகலவில்லை.
சொல்வதற்கும் நாக்கூசுகின்றது…… அத்தியாவசியத் தேவைகளான காலைக்கடன்களை முடிப்பதற்கும், நேரத்திற்கு பத்தியமாக சாப்பிடவும் வசதியின்றி மக்கள கஷ்டப்பட்ட காட்சிகளை கண்ட மனச்சாட்சியுள்ளவர்கள் மறக்கமாட்டார்கள்.
பலரது வேண்டு கோளுக்கிணங்க வெளிநாடுகளில் வாழும் அன்புள்ளம் கொண்டவர்கள் இவ்வனர்த்த நேரத்தில் தாமும் இல்லையே என்ற அங்கலாய்ப்போடு அவர்களுக்கு ஏதாவது எவ்விதத்திலாவது உதவி செய்ய வெண்டுமென்று தான் அவர்கள் அவ்வளவு கஷ்டத்தின் மத்தியில் இந்த உதவி செய்ய முன்வந்தார்கள்.
இனால் இந்த விசயத்தில் அரசியல் சாக்கடையை நுழைத்து பெயர் வாங்க வேண்டும்மென்ற நோக்கோடு இந்த விசயத்தில் மண் அள்ளிப்போட்ட அனைத்து நன்றி கெட்ட சகோதர்களும் அந்த ஏழைகளின் பதுவாவுக்கு நிச்சயம் ஆளாகுவர்.
தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என் வாதிடும் குறுகிய மனப்பான்மை வாதிகள் என்றுமே வெற்றி பெறமுடியாது…..
FaizerAman said
கட்டாரில் சேகரிக்கப்பட்ட சுணாமி நிதி சரியாக பகிர்ந்தளிக்கப்பட்டு கணக்குகள் சரியாக குறிப்பிட்ட கா-குடி நிறுவனத்தினால் கொடுக்கப்பட்டிருந்தால் இந்த அவல நிலை ஏற்பட்டிருக்காது. (ஒரு முஸ்லிம் ஒரே பொந்துக்குள் இரண்டு முறை தீண்டப்பட மாட்டான் நபி மொழி) அந்த வகையில் இம்முறையும் நிதி சேகரித்தவர்களை இந்த நிரிபந்தத்திற்கு தூண்டிய காரணி என்ன என்பதை இனங்கண்ட பிறகு உங்கள் விமர்சனங்கள் தொடரட்டும். அல்லாஹூ அக்பர்.
MSM.Fayz said
i agreed with this comment
Mohamed Silmy said
WE KNOW FROM THE BEGINING WHAT WILL HAPPEN FINALLY?
P…G WANTS TO ISSUE THE FUNDS WITH THEIR T-SHIRT THATS WHY ALL POOR PEOPLE LOST THEIR RELIEF FROM QATAR. ANOTHER POLITICAL DRAMA FROM EDUCATED PERSONS.
MOHAMED SILMY
DOHA, QATAR
fatheela said
O, qutar people please don’t stop you charity work.That is for the innocent people.We have to do from our bottom of the hard allah will knows that.Don’t listen any critisizing please.
Mymza said
அஸ்ஸலாமு அழைக்கும்
இதில் யாரும் வருத்தப்பட வேண்டிய அவசியமில்லை.அவ்வாறு யாருக்கெல்லாம் உதவி செய்யனும் என தோன்றுதோ அவர்கள் உங்களின் உறவினர்களுக்கு அனுப்புங்க நம் உறவினர்கள் யாரும் இப்படி அநியாயமாகவோ அல்லது வீனோ செய்யமாட்டார்கள்.நாம் கடல் கடந்து கஷ்டப்பட்டது அது பிரயோசனமாகவும் அல்லாஹ்வுக்கு பொறுத்தமாநதாகவும் போய் சேரனும் அதில்தான் நம்மளுக்கும் சந்தோஷம்.ஊருக்கும் பேருக்கும் இல்லாமல் Foto காண்பிக்காமல் வலது கை செய்ததை இடது கை அறியாமல் செய்யனும்.சகோதரர்களே இந்த முறைப்படி செய்து பாருங்கள் அதில் உங்களுக்கும் திருப்தி கிடைக்கும் உங்களை பெற்றவர்களுக்கும் சந்தோஷம் இருக்கும் கஷ்டப்பட்ட மக்களும் அதில் பிரயோசனம் அடைவார்கள்.நண்பர்களே உங்களின் பணங்களை 2,3 பேராக சேர்ந்து.
கஷ்ட்டப்பட்டு தங்களின் பொருட்களை இழந்து நிற்கும் நம் சகோதரர்களுக்கு பொருட்களாகவோ,அல்லது உங்களின் திருப்தி எப்படியோ அவ்வாறு செய்க.
அதில் நிச்சயம் உங்களின் மனம் நிறைவு கானும்.ஏன் இன்னும் அவர் இவர்களை நம்பிக்கொண்டே இருக்கிங்க?
எதிலும் நாமாகவே செய்தால் அதில் ஒரு திருப்திதான் நண்பர்களே.
வஸ்ஸலாம்
mymza
Moment of Truth said
Assalamu Alaikkum….
இது எல்லோருக்கும் கவலை தரக் கூடிய ஒரு விடயம்.
ஆரம்பிக்கும் பொது மாத்திரம் எமக்கு அனைத்து தகவல்களையும் தந்த நண்பர்கள், எதற்காக இடை நிறுத்தியதற்கான காரணத்தை மக்களுக்கு கூறாது மறைக்கிறார்கள்?
இப்படி பின் வாங்குவதாக இருந்தால் எதையும் மக்களுக்கு தெரியப் படுத்தி இருக்கக் கூடாது.
ஒரு விடயத்தை மறைத்து வைப்பதால் தான் மக்களின் எண்ணங்கள் வேறுபட்டு, வதந்திகள் பரவுகின்றன.
சிக்கலில் உள்ளது என்ற தகவலை வெளிப்படுத்தியதோடு மட்டும் நிறுத்தி இருக்காமல், அந்த சிக்கல் என்ன? என்பதையும் சேர்த்து வெளியிட்டிருந்தால் இவ்வளவு கதையும் மக்களிடமிருந்து கேட்டிருக்க வேண்டியதில்லை.
ஆகவே, நடந்தது என்ன? என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டிய கட்டாயம் KAFRA இற்கு உள்ளது.
நீங்கள் தெளிவு படுத்துவதற்கு தயங்கினால், பிறிதொரு சந்தர்ப்பத்தில் மற்றுமொரு சமூக சேவையை செய்ய எத்தணிக்கும் போது, உங்களை நம்புவதற்கு யாரும் தயாராக இருக்க மாட்டார்கள்.
சிந்திக்க தெரிந்த அதிகமான உறுப்பினர்கள் உங்கள் அமைப்பில் இருக்கிறார்கள் என்று நம்புகிறேன்.
பதில் கூற வேண்டியது உங்கள் கடமை அல்லவா???
Mahir said
ஒரு காலத்துல UK என்டாலும் அவகதான், கட்டார் என்டாலும் அவகதான் என்ன நன்மை நடந்தாலும் நாங்கதான் என கொக்கரிக்கும் அ… உள்ள ம…ள் இப்பவும் கட்டார்ல KAFRA நிறுவனத்தை உருவாக்கிய பின்னரும் கூட அதனூடாக கிடைக்கும் பணத்தை தமது அரசியல் ஆதாயத்துக்கு செலவு செய்யலாம் என்று எண்ணி படமெல்லாம் போட்டுக் காட்டி காசு சேர்த்தா ஊருல பொது நிறுவனத்துக்குகிட்ட கொடுக்கனும் என்டு பணம் கொடுத் நம்முட தம்பிமார் சொன்னவுடன் தன்ட செலவுக்கென KAFRA வை பயன்படுத்தி சேர்த்த பணத்தை நாங்கள் பயன்படுத்தாவிட்டால் ஊரில் வேறு யார் மூலமும் அதை செலவளிக்க விடமாட்டோம் என்று அறிவாளர்களான …………………… முடிவெடுத்து விட்டார்கள். இந்த உள்நோக்கத்தை விளங்கிக் கொள்ளாத KAFRA வில் உள்ள அவர்களின் மாமேதைகளைத் தவிர மற்றவர்களும் இந்த முடிவுக்குச் சென்றது மாபெரும் வருத்தத்தை தருகிறது. இதுதான் வைக்கல் …………………….வேலை என்று பழையவர்கள் சொல்கிறார்கள்.
Rifdy said
அன்புச்சகோதரர்களே..!
உண்மை என்ன என்பதை சரியான முறையில் அறிந்து கொள்ளாமல் கொமணட்ஸ் கணைகளை அள்ளி வீசிய உங்களுக்கு, கத்தார் நாட்டில் காத்தான்குடி சகோதரர்கள் உவந்தளித்த பணத்தொகை ஏன் மீளளிக்கப்பட்டது என்கின்ற உண்மை கீழ்க்காணும் இணைய முகவரியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தெளிவு பெற விரும்புபவர்கள் பார்வையிடலாம்.
…………………
Rifdy said
Dear Moderator,
I dont understand your policy. Could you explain please???? you are publishing silly comments but not putting a solution or truth for such comments. why? I am really sorry that I am not blaming you, dont miunderstand.
aboo said
உண்மையில் கப்றா என்று அமைக்கப்பட்ட அமைப்பில் …… சூறா சபை உறுப்பினர்களே முன்னின்று நடாத்தியதாக புகைப்படம் மூலம் அறிந்தோம். ஆனால் தற்போது உமதூரில் உள்ள நிலமையில் இவர்கள் நேரடியாக அரசியல் காரணமாக ஈடுபட முடியாமல் தவிப்பது போல் தொகிறது இந்த பின்வாங்கல். உண்மையான பொது நோக்கம் கொண்டவர்களாக இருந்தால் இந்நிதியை காத்தான்குடியில் உள்ள பொது அமைப்புக்கள் ஊடாக வழங்கலாம். ஆனால் போட்டோ பிடிpத்து, டீ சேர்ட் போட்டு செய்ய முடியாது. பரிசு வழங்காமல் உதவி வழங்குங்கள் சகோதரர்களே.
Rifdy said
Mr. Aboo;
………..குறுகிய மனப்பாண்மை கொண்டவர்கள் (Narrow Minded Personality) இருக்கும் போது இந்த சமூகம் திருந்தப்போவதில்லை. இவ்வாறனவர்கள்தான் ஈற்றில் சமூகத்தை பிளவுபடுத்தக்கூடியவர்களாகவும் மாறிக்கொண்டிருக்கின்றார்கள். இவர்கள்தான் கட்டாரிலிருந்து அனுப்பவிருந்த பெரும்தொகைப்பணத்தை தங்களின் சொந்த விறுப்பு வெறுப்புகளுக்காக பாதிக்கப்பட்ட மக்களிடம் கிடைக்கப்பெறாமல் தடுத்து நிறுத்தியிருக்கின்றார்கள். இதன் உண்மைத்தன்மையை விளங்கிக்கொள்ளாது கொமண்ட்ஸ் அடிக்கும் …………போன்றவர்களைத் திருத்தவும் முடியாது……….திருந்தும் வரையில் என்பதை ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள் இன்ஷா அல்லாஹ் சகோதரரே
IMANA_KKY said
Be coooooooooooooool man.
God knows everything.
Don’t get much hot its not good 4 ur health.
“கேட்ட தெல்லாம் நம்பாதே? நம்பிந்தெல்லாம் சொல்லாதே?”
Azeem said
The truth and the justice will never die.! will come in to light soon.
Riyas Mohideen said
அனைத்து இணைய நண்பர்களுக்கும்
ஒருவகையில் கத்தார் நிதி சேகரிப்பு சம்பந்தமாக எழுதி வந்தவன் என்றவகையில் எனது தரப்பில் நான் அவதானித்து உள்வாங்கிக் கொண்ட விடயங்களை உரிய முறையில் ஒரு கட்டுரையைத் தயாரித்து வருகின்றேன். வெகு விரைவில் இன்போ ஊடாக அதனை வெளியிட எண்ணியுள்ளேன். இது தொடர்பில் சம்மேளனம் விடுக்கவுள்ள அறிக்கைக்காக காத்திருக்கிறேன். எனது ஆக்கத்தை விரைவில் எதிர்பாருங்கள்.
Kattankudi Web Community (KWC) said
Dear Riyas,
Your article will be posted after proper verification only. Anyway, send it once you have completed.
WebAdmin
Mohammed Hiraz said
Dear KWC I was send my last comment against for this article. I was send by mistake to ur “நாளொன்றுக்கான மற்றும் மாதமொன்றுக்கான அதிகூடிய வருகைகள் அடங்கலாக kattankudi.info வுக்கான மொத்த வருகைகள் ஒன்பது இலட்சங்களைத் தாண்டின article knidly delete from the comment and if u wish pls publish my comment against this article my comment is bellow. bcos my comment is not match for that headline
thank u in advance
எண்ணி துணிய கருமம் துணிந்தபின் எண்ணுவதிழுக்கு
இனிமேலாவது காரியத்தை முடிக்க தெறிந்தவர்கள் காரியத்தை தொடங்குவதட்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும்
Rifdy said
Mr. Hiraz,
சம்பந்தமே இல்லாமல் கூக்குரலிடுவதை விட்டும், குறுகிய வட்டத்தில் இருந்து கொண்டு கொமண்ட்ஸ் அடிப்பதை விட்டும் தவிர்ந்து களத்தில் இறங்கிப்பாருங்கள் அதனுடைய சுமை எவ்வாறிருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்வீர்கள். கருத்து யாருக்கும் சொல்ல முடியும். களமிறங்குவதற்குத் துணிவு வேண்டும்.
Mohammed Hiraz said
ரிப்தி நாங்க களத்தில இருந்து காரியம் செஞ்சிட்டுதான் கொம்மான்டும் அடிக்கிறம்
அது சரி அல்லாஹ்வுக்கு மட்டுந்தான் யார் எங்க என்ன செய்து கொண்டிருக்கிறாங்க என்பது ஒரே பார்வையில எல்லா இடங்களை பற்றியும் அறிய முடியும்
எங்கேயோ இருக்கிற உங்களுக்கு நாங்க இங்க என்ன செய்ரமெண்ட அறிவு ………………கிடைத்தது?