வெள்ள அனர்த்தத்தின் பின்னரான செயற்பாடுகளை ஒழுங்கு படுத்துகிறது காத்தான்குடி சம்மேளனம்
Posted by Kattankudi Web Community (KWC) on 14/01/2011
நமது பிரதேசத்தில் ஏற்பட்ட பாரிய வெள்ளப் பெருக்கு காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு சமைத்த உணவுகள் மிகச் சிறப்பாக வழங்கப்பட்டதை தாங்கள் அறிவீர்கள்.
சம்மேளனத்தின் வேண்டுகோளின் பேரில் நமதூர் மற்றும் வெளியூர் பிரதேச தனவந்தர்கள், பொது நிறுவனங்கள் மற்றும் பள்ளிவாயல் நிருவாகிகள் இப்பனிக்கு மிகக் காத்திரமான பங்களிப்புகளை வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் பங்குபற்றிய அனைத்து சகோதரர்களுக்கும் சம்மேளனம் தனது மனமாரந்த நன்றிதழ்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.
வெள்ளத்தின் பின்னரான சகல நடவடிக்கைகளையும் ஒழுங்கு படுத்தி நடைமுறைப்படுத்துவற்கு சம்மேளனம் தயாராகி வருகின்றது.
எனவே, இதற்காக பங்களிப்பு வழங்குபவர்கள் சம்மேளனத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் தனிநபர்கள் இவ்விடயத்தை கையாள்வதில் இருந்து தவிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டிக் கொள்வதாக சம்மேளனத்தின் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். ஸபீல் நளீமி தெரிவித்தார்.
வாரண நடவடிக்கைகளுக்கு உதவ விரும்பும் வாசகர்கள் யாரும் தங்களது பங்களிப்பை நேரடியாக சம்மேளனத்தின் வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைக்கலாம், கணக்கு விபரங்கள்:
பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம், காத்தான்குடி
இலங்கை வங்கி – காத்தான்குடி
கணக்கு இல: 2960241
மேலதிக தகவல்களுக்கு சம்மேளனச் செயலாளரை அல்லது உதவிச் செயலாளரை பின்வரும் தொலைபேசி இலக்கங்களினூடாகத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். செயலாளர்: 077 386 4498 உதவிச் செயலாளர்: 077 906 0090.








Aslam Saja-KSA said
Thanks a lot for your too late response.
xpmgg said
நீங்க டுபாயில கூலா ஏசியில இருந்துக்கிட்டு இதுவும் அடிப்பீங்க {comment}இன்னமும் அடிப்பீங்க. சம்மேளனம் என்றால் யாரு அதற்குள்ள யாரு யாரு
உள்வாங்கப்ப்ட்டிருக்கிறார்கள் என்று எல்லாம் தெரியுமா உங்களுக்கு. சும்மா போங்க சார்.
mohamed said
i think you are late dear brother
vimarsanam said
நன்றி
ramees said
எல்லாம் சரி .. அனர்த்தத்த பாக்க பெண்கள் போக வேண்டாம் என்று அறிவித்தல் கொடுக்கிறாங்களே.. ஏன் பெண்களுக்கு அந்த காட்சிகள் ஹறாமா? அது அவர்களுக்கும் ஏனைய மக்களுக்கு உதவும் எண்ணத்தை உண்டாக்காதா? இக்காட்சிகள் பெண்கள் மனதிலும் அல்லாஹ்வின் ஞாபகத்தை து|ண்டாதா?அது அவர்களுக்கும் படிப்பினையாக அமையக் கூடாதா? அல்லது பெண்களை வீட்டிற்குள் முடக்கிவைக்கும் எண்ணமா? தெரிந்தவர்கள் கொஞ்சம் சொல்லுங்களே
கணிப்பு said
நல்ல கேள்விகள்
IMANA_KKY said
வாவ் சபாஷ்டா கண்ணு! என்னா நுனுக்கமான கேள்வி! அப்படியே தினறிட்டேன் உங்க கொமன்ட்டைப் பார்த்து உங்க கேள்விக்கு பதில் நேற்றைய ஜும்மா பிரசங்கத்தை கேளுங்க உங்களுக்கு எல்லாம் தானா புரியும்.
பெண்கள் தனியா போனா யாரும் தடை சொல்லப்போறதில்லையே? அவங்க கணவர்மாருடன் மோட்டார் பைக்கிள்ல ஒவ்வொரு ரோட்டா சுத்து சுத்தேன்று சுத்தி (பாலமுனை வேனுமா காங்கேனொடை வேனுமா) வெள்ளத்தில அந்த மாதிரி நின்று போஸ்செல்லாம் கொடுத்து போட்டோ வேனுமா அல்ல வீடியோ வேனுமா என இஷ்டத்துக்கு எடுத்தா என்ன பன்னுவாங்க அறிவித்தல் மட்டும் கொடுத்தாங்க என்று பெருமைப்படுங்க மாறாக அடி உதை கொடுத்திருந்தா என்ன ஆயிருக்கும்??? அல்லாஹ்வுக்காக இந்தமாதிரி செய்யவேனாம் என்றுதான் அறிவித்தல் கொடுத்தாப்போல.
First you & hear below bayan immediately.
(முழு பயானும் கேட்க கஷ்டமா இருந்தால் 32 நிமிடத்தில் இருந்து கேளுங்கோ)
இடம்: மீரா ஜும்ஆ மஸ்ஜித், காத்தான்குடி – 01,
நிகழ்த்துபவர்: மௌலவி. எம். ஐ. ஏ. கபூர் (மதனி)
http://kattankudi.info/2011/01/14/16355/
ana85 said
எல்லாம் சரி பெண்களுக்கு வெள்ள அனர்த்தத்தை பார்ப்பது ஹராம் இல்லை ஆனால் சிலர் அதனை பொழுதுபோக்குக்கு பார்த்துச்செல்வது மனவேதனையாக இருக்கிறது தங்களால் முடிந்த உதவியை செய்தால் அல்லாஹ் அவர்களுக்கும் அருள்புரிவான்
Person said
காத்தான்குடி மஸ்ஜிதுர் ரஹ்மா பள்ளிவாயலில் PMGG உறுப்பினர்கள் Shakthi Media and Reporter Noordeen உடன் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டார்கள். (About an hour ago). அவர்களது சுய ரூபத்தை மக்களுக்கு எடுத்துக் காட்ட உதவுமாறும், பக்க சார்பில்லாமல் செயட்படுமாரும் Kattankudi.info விடம் கேட்டுக் கொள்கிறோம்.