காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 4,986,219 மொத்த வருகைகள்

மஸ்ஜிதுல் குபா மீள் கட்டுமான பணிக்காக நிர்வாகம் விடுத்துள்ள உதவிக் கோரிக்கை

Posted by Kattankudi Web Community (KWC) on 14/01/2011

எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ் – காத்தான்குடி செய்தியாளர்

காத்தான்குடி வாவியின் அருகிலுள்ள மஸஜிதுல் குபா பள்ளிவாயல் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதை ஏற்கனவே காத்தான்குடி இன்போ செய்தி மற்றும் புகைப்படம் அதன் வீடியோ காட்சிகளை வெளியிட்டிருந்தது.

தற்போது காத்தான்குடி மஸ்ஜிதுல் குபா நிர்வாகத்தினரால் பள்ளிவாயலை மீள் கட்டுமானம் செய்வதற்காக விடுக்கப்பட்ட கோரிக்கையை எமது இணையத்தள வாசகர்களின் கவனத்திற்காக இங்கே பிரசுரிக்கப்படுகின்றது.

அத்தோடு பள்ளிவாயலின் தற்போதய நிலைமையை விபரிக்கும் படங்களும் இணைக்கப்பட்டுள்ளது.

 

This slideshow requires JavaScript.

 

7 Responses to “மஸ்ஜிதுல் குபா மீள் கட்டுமான பணிக்காக நிர்வாகம் விடுத்துள்ள உதவிக் கோரிக்கை”

  1. Mohamed said

    அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும்.

    மஸ்ஜிதுல் குபா நிர்வாகிகளுக்கு பணிவான அறிவித்தல்.

    நமது காத்தான்குடி நகரில் சுமார் கிட்டத்தட்ட 70 பள்ளிவாயல்களுக்கு மேல் இருக்கின்றன. அவைகளில் சில வெளிநாட்டு உதவிகளினாலும், அரசாங்க உதவியினாலும் நிர்மாணிக்கப்பட்டிருந்தாலும் அநேகமான பள்ளிவாயல்கள் ஊர் மக்களின் பங்களிப்பைக் கொண்டே கட்டப்பட்டுள்ளன.

    தற்போதைய வெள்ள அனர்த்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியவசிய தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்ய வேண்டும் என்று அனைவரும் சிந்திக்கும் இவ்வேளையில் நீங்கள் பள்ளிவாயல் நிர்மாணப்பணிக்கு உதவி கோருவது சற்று வேடிக்கையாக இருக்கின்றது. பள்ளிவாயல் மீள்கட்டுமானப்பணி வரவேற்கத்தக்க விடயமாக இருந்தாலும் தற்போதைய ஊர் மக்களின் அத்தியவசிய தேவைகளை சீர்செய்வதே அனைவரினதும் அவசர கடமையாகும். கடல்கடந்த நாடுகளில் வசிக்கும் எங்களைப் போன்றவர்கள் ஊர் நிலையைக் கருத்திற்கொண்டு உதவிகள் செய்ய முன்வரும் போது நீங்கள் மேற்கொண்டுள்ள இவ்விடயம் தற்போதைய சூழ்நிலைக்கு அவசியம்தானா?

    நீங்கள் விடுத்துள்ள தலைப்பின்படி “மஸ்ஜிதுல் குபா மீள் கட்டுமான பணிக்காக நிர்வாகம் விடுத்துள்ள உதவிக் கோரிக்கை” என்பது தற்போதைய ஊர் நிலமையை சீர்செய்யப் போவதில்லை. ஆகவே ஊர் மக்களின் நலனைக் கருதி பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நடவடிக்கைகளில் உடனடியாக உங்கள் நிர்வாகம் செயல்பட வேண்டும் என்பதே எங்கள் அவா. அதன் பின்னர் பள்ளிவாயல் கட்டுமானப்பணிக்காக அனைவரும் ஒன்றினைந்து செயல்படலாம்.

  2. Nallavan said

    may allah the almighty save all the people in East .

  3. Mohamed said

    காத்தான்குடி இன்போ!
    இன்று அதிகாலை மஸ்ஜிதுல் குபா பள்ளிவாயலின் நிர்வாகிகளுக்கு தற்போதைய ஊர் நிலையை கருத்திற்கொண்டு ஒரு அறிவித்தல் பதிந்திருந்தேன். தற்போது என்னால் பதியப்பட்ட கருத்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. நடுநிலையாக செய்திகளை பறிமாறும் நீங்கள் இதனை நீக்கம் செய்தது எனக்கு வேடிக்கையாக இருக்கிறது. எனது கருத்தை மீள் பிரசுரம் செய்யவேண்டும் என்பதை வேண்டிக்கொண்டு என் கருத்து நீக்கப்பட்டதற்கான காரணத்தை அறிய விருப்பிகிறேன்.

    • அஸ்ஸலாமு அலைக்கும்,

      சகோதரர் முஹம்மத்.

      காலையில் நீங்கள் எழுதிய கருத்து பிரசுரிக்கப்படவேயில்லை என்பதைக் கவனிக்கவும் நீங்கள் கருத்தை எழுதி அனுப்பியதும், எழுதியவருக்கு அக்கருத்தின் பிரசுர வடிவம் திரையில் தென்படும் ஆயினும் ‘Your comment is awaiting moderation’ என்ற வசனம் சிறிய எழுத்துகளில் காண்பிக்கப்படும். அதாவது இணைய நிர்வாகி ஒருவர் மட்டறுப்புச் செய்த பினனரே அக்கருத்து பிரசுரிக்கப்படும்.

      நிறையப் பேர் இதை கருத்து பிரசுரிக்கப்பட்டு விட்டதாக தப்பர்த்தம் செய்துவிடுகின்றனர்.

      எந்த இணையத்தனத்திலும் கருத்து எழுதும் எவரும் அவற்றை திருத்தி வெளியிடவோ அல்லது வெளியிடாமல் விடவோ நிர்வாகத்துக்குள்ள உரிமையை ஏற்றுக் கொள்ள வேண்டும். இதை நாங்கள் பலதடவை வலியுறுத்தியிருக்கிறோம்.ஏன் போடவில்லை? எதற்கு நீக்கினீர்கள்? போன்ற கேள்விகளுக்கு ஒவ்வொரு தடவையும் பதிலளிக்க முடியாது என்பதை வாசகர்கள் கவனிக்கவும்.

      சில கருத்துகள் எங்கள் நிர்வாகிகள் அனைவரும் பார்ப்பதற்காக சில வேளைகளில் வைத்திருக்கப்படுவதுண்டு. உங்களது கருத்து அவ்வாறே வைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக அதிகளவு செய்திகள் வெளியிடப்பட்டு வருவதால், உடனடியாக வெளியிடப்பட முடியாத கருத்துகள் தொடர்பில் முடிவு செய்ய தாமதம் ஏற்படக் கூடும்.

      நீங்கள் கருத்துகள் எழுதும் போது வித்தியாசமான மின்னஞ்சல் முகவரிகளை குறிப்பிட்டிருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. இதில் கவனம் செலுத்தவும். சிலவேளை முரண்பாடான தகவல்களை வழங்குவது சில வேளை தடைசெய்யப்படுவதற்கு இட்டுச்செல்கிறது.

      WebAdmin

  4. Mohamed said

    @Kattankudi Web Community (KWC),
    உங்கள் கருத்தை நான் ஏற்றுக்கொள்கின்றேன். ஆனால் காலம் தாமதிக்காது நீங்கள் என் கருத்தை பரிசீலனை செய்து வெளியிட வேண்டும் என்பதே என் கோரிக்க்கை. ஆறிய கஞ்சி பழங்கஞ்சியாக மாறிவிடும். காத்திருக்கிறேன்.

  5. Yasir said

    Dear Kuba Mosque Committee, In future do the Rebuilding work properly

  6. Mohammed Hiraz said

    Dear KWC I show the letter. this letterpad is not mention register details. why dint mention registor details and the total mahallah family figer is wrong. kindly request pls publish true details only while for public collection in international community by webside

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s