காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 4,986,219 மொத்த வருகைகள்

எம்மோடு இணையுங்கள்! உதவிக்கரம் நீட்டுவோம்!

Posted by Kattankudi Web Community (KWC) on 14/01/2011

- “காத்தான்குடி வெள்ள நிவாரண நிதி” அமைப்பின் சார்பாக கத்தாரில் இருந்து றியாஸ் முகைதீன் -

அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்பின் இணைய வாசகர்களுக்கு,

எமதூரில் நேற்றுமுதல் மாறிவரும் காலநிலை நீடிக்க எல்லாம் வல்ல அல்லாஹ்வை வேண்டியவனாக,

ஒரு வகையாக சூரியனை வெகு நாட்களின் பின் கண்ட சந்தோசத்தில் எமது உறவுகளின் மனங்கள் சாந்தமடைந்திருக்கும் நிலையில், தொடரும் அவலங்களும் அங்கலாய்ப்புகளும் அவர்களைப் பீடித்திருக்கின்றன. தொற்று நோய்கள் பரவலாம் என்ற அபாய நிலைமையும் காணப்படுகின்றதாக எமக்குச் செய்திகள் கிடைக்கின்றன. வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருப்பதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவிக்கின்றது. அத்தோடிணைந்து மேலும் பற்பல பிரச்சினைகள் புதிதாக உருவெடுக்கும் வாய்ப்புகளும் நிலவுகின்றன.

தனித்தனிக் குழுக்களாக நமதூரில் செயற்பட்டு, பற்பல இடர்களுக்கும் இன்னல்களுக்கும் மத்தியில் எமதூர் சொந்தங்களுக்கு உதவிவரும் பல்வேறு பிரிவினரும் எம்மோடு ஒன்றிணைந்து சில இனங்காணப்பட்ட சேவைகளை எம்மக்களுக்குச் செய்ய முன்வந்திருப்பது எமக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகக் கருதுகின்றோம். சமைத்த சாப்பாட்டை ஐந்து நாட்களுக்காவது உடனடியாக வழங்குவோம் என்ற எங்களது கருப்பொருள் உருமாறி அதையும் தாண்டி பல்வேறு தேவைகளை நிவர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்திற்குள் நாம் உள்வாங்கப்பட்டுள்ளோம். ஓரிரு தினங்களுக்குள் நாம் இதனைச் செய்து முடிக்கவேண்டியும் உள்ளது.

இதனடிப்படையில் நேற்று (13.1.2011) எங்களது மூன்றாவது ஒன்றுகூடல் கத்தாரில் இடம்பெற்றது. மேலும் பல எமதூர் நண்பர்களும் அத்தோடு சில வெளியூர் நண்பர்களும் எம்மோடு இணைந்து கொண்டார்கள். ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து கொண்டார்கள். தற்போதைய எமதூரின் நிலைமை பற்றி விரிவாகவும் ஆழமாகவும் அலசப்பட்டது. நேரடியாக சேவையில் ஈடுபட்டிருக்கும் எமதூர் தலைவர்கள் பலரது பதிவு செய்யப்பட்ட நேரடி தொலைபேசிக் கருத்துக்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது. மிக முக்கிய தேவைகள் பலவற்றையும் அவர்களது தற்போதைய நிலவரம் பற்றியும் அவர்கள் கூறியிருந்தார்கள்.

எமது முதலாம் கட்ட நிதியுதவியை ஓரிரு தினங்களுக்குள் அவசரமாக வழக்குவது தொடர்பாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. சகல தரப்பினரையும் உள்வாங்கியதாக ஒரு வெளிப்படையான குழுவினை ஊரில் அமைத்து அவர்களால் அடையாளம் காணப்படும் தேவைகளை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. தேவை ஏற்படுமிடத்து எமது நிறைவேற்றுக் குழு சார்பாக சிலர் கத்தாரில் இருந்து எமதூருக்குச் சென்று இச்செயற் திட்டத்தை முன்னெடுப்பதாவும் உறுதி அளிக்கப்பட்டது. தொடர்ந்து இன்று இணைந்து கொண்ட மேலும் பல சகோதரர்களிடம் இருந்து நிதியுதவி பெற்றுக் கொள்ளப்பட்டது. அதற்கமைய மேலும் ஒருதொகை நிதி தேவையாகவும் உள்ளது.

இன்ஸா அல்லாஹ், இன்று (14.01.2011) பரவலான முறையில் கத்தாரின் பற்பல இடங்களிலும் பரந்து வாழும் நமதூர் நெஞ்சங்களை இனங்கண்டு அவர்களை ஒன்றுசேர்க்கும் பணி நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதனடிப்படையில் ஒவ்வொரு பிரதேசத்திற்கும் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். உங்களை அவர்கள் தொடர்பு கொள்வார்கள். அல்லது அவர்களை நீங்கள் தொடர்பு கொண்டு உங்களது பங்களிப்பை மேற்கொள்ளுங்கள். அவர்களின் விபரம் பின்வருமாறு:.,

Industrial Area

Ashik – 7713 0451

Arafath – 7795 0910

Ashik – 3398 7449

Firthous – 7743 2991

Najma – Mansoora

Mubarack – 5554 5278

Jauhar – 6601 3831

Ahsan – 6696 6719

Mathar Katheem – Muhlina

Ashad – 7740 0746

Haaris – 7740 5066

Bin Mahmood

Faizer – 5510 7329

இன்ஷா அல்லாஹ் அவசர அவசரமாக இவ்வேலைத் திட்டத்தினை செய்துமுடிக்கவேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் உங்கள் பங்களிப்பை எவ்வளவு முடியுமோ அவ்வளவு அவசரமாக செய்யுமாறு கத்தார் வாழ் காத்தான்குடி சகோதரர்கள் அனைவரையும் அன்பாகக் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் குறுகிய கால எமது அழைப்பை ஏற்று எம்மோடு இணைந்து கொண்ட சகோதரர்கள் அனைவருக்கும் எமது நண்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். எமதூரின் தேவை உணர்ந்து அவர்களுக்கு எமது ஒன்றிணைந்த உதவியைச் செய்ய நாம் கொண்டுள்ள முயற்சியை அல்லாஹ் முழுமையாக்கி வைப்பானாக, ஆமீன்.

One Response to “எம்மோடு இணையுங்கள்! உதவிக்கரம் நீட்டுவோம்!”

  1. Mazaa said

    தங்களது நல்ல முயற்சிகளை – அல்லாஹ் ஏற்றுக் கொள்வானாக.. ஆமீன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s