காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 4,986,219 மொத்த வருகைகள்

உறவுகளை எண்ணி ஏங்கித் தவிக்கும் தூரத்து நெஞ்சங்கள்

Posted by Kattankudi Web Community (KWC) on 13/01/2011

கத்தாரில் இருந்து காத்தான்குடி நண்பர்கள் சார்பாக றியாஸ் முகைதீன்

அன்பான உறவுகளே!

அஸ்ஸலாமு அலைக்கும்

நீங்கள் படும் துயரங்கள் எங்கள் மனக்கண்முன் மிகத்தெளிவாகத் தெரிகின்றன. மிகக் குளிரான வெள்ளத்துக்கும் சுவாசத்திற்கும் மத்தியில் உங்களது மூச்சுக்காற்றை எங்களால் உணர முடிகிறது. பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருக்கும் உங்கள் உடன்பிறப்புக்களான எங்களால் இந்தத் தருணத்தில் உங்களுக்கு என்ன உதவி செய்ய முடியும்? என அங்கலாய்க்கும் எங்களது மனக்குமுறல்களை உங்களால் உணர முடிகின்றதா?

பாவப்பட்ட ஜென்மங்கள் நாங்கள். தத்தமது குடும்ப நிலை காரணமாக அனைத்து சந்தேசங்களையும் துறந்தவர்களாக இங்கு வந்து வாழும் எங்களுக்கு, இது வாழ்வில் மறக்கமுடியாத காலப்பகுதி. உங்களுடன் சேர்ந்து இந்த வெள்ள அனர்த்தத்தில் எங்களாலும் பங்குகொள்ள முடியாமல் போனது உண்மையில் எங்களது துரதிர்ஷ்டம். ஒரு சோற்றுப் பிடியையாவது உங்களுக்காக சமைத்துப் போடக் கூட எங்களால் முடியவில்லை. உண்மையாகச் சொல்லப்போனால் நாங்கள் கையாலாகாதவர்கள்.

எங்களுக்கு என்ன வழி? தூய மனதுடன் சற்றுச் சிந்தித்தோம். இங்கு நாங்கள் அனைவரும் ஒன்றுதிரண்டோம். அனைத்து கத்தார் வாழ் காத்தான்குடி நண்பர்களை ஒன்றுதிரட்டும் பணியில் தொடர்ந்தும் செயற்படுகின்றோம். எங்களது கணிப்புப் படி முழுக் காத்தான்குடி வாழ் சகோதர சகோதரிகளுக்கும் குறைந்தது ஐந்து நாட்களுக்காவது சமைத்துப் போடும் செலவை வழங்கும் அளவிற்கு நிதியினை வசூலிக்கும் பணியினை 11.01.2011 அன்று ஆரம்பித்தோம். அதற்குப் பொறுப்பாக எமது சகோதரர்களைக் கொண்ட ஒரு குழுவை ஆரம்பித்தோம். இந்த முதற்கட்டப்பணிக்கான மொத்தச் செலவீனத் தொகையாக நாங்கள் நிர்ணயித்த தொகையில் மூன்றிலொரு பங்கினை முதல் நாளே வசூலித்தோம். அல்லாஹ் மிகப் பெரியவன்.

நேற்றும் (12.1.2011) நாங்கள் மீண்டும் சந்தித்தோம். மேலும் பல புதிய சகோதரர்களும் எங்களுடன் இணைந்து கொண்டனர். இன்றைய சந்திப்பின்போது மேலும் பல கத்தார் வாழ் சகோதரர்களின் தொடர்புகளை விரிபுபடுத்த எண்ணியுள்ளோம். அதனடிப்படையில் இன்று மாலை (13.01.2011 – மாலை 8.30 மணி தொடக்கம்) ஒரு முக்கியமான சந்திப்பு நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளோம். இச்சந்திப்பு உண்மையில் ஒரு வரலாற்று நிகழ்வாக அமைய வேண்டும் என்பதே எங்கள் ஆசை.

கடினமான மனக்குமுறல்களோடு உதவி செய்ய ஓரளவு வசதியிருந்தும், இருக்கும் சிறிய தொகையைக் கொண்டு நேரடியாக உதவ முடியாமல் தவிக்கும் அனைத்து கத்தார் வாழ் காத்தான்குடி உடன்பிறப்புக்களும் (13.01.2011) வியாழக்கிழமை ஒன்றுசேருங்கள். இந்த நாள் உங்கள் பலருக்கு விடுமுறையாக இருப்பதால் உங்களுக்கு சிறப்பான நாளாக அமையும் என எண்ணுகிறோம்.

எனவே, நண்பர்களே உங்கள் நண்பர்களுக்கும் இச்செய்தியை எத்திவையுங்கள். முடியுமானவர்களை அழைத்து வாருங்கள். ஒன்றுசேருங்கள்! எம்மால் முடிந்த இப்பணிக்கு கைகொடுங்கள்!

தொடர்ந்தும் நாங்கள் இணைந்திருப்போம். கட்சி பேதம் மறந்திருப்போம். சிறந்த இஸ்லாமியர்களாக வாழ்ந்து காட்டுவோம். அல்லாஹு அக்பர்.

மேலதிக தொடர்புகளுக்கும் மற்றும் விபரங்களுக்கும் பின்வரும் சகோதரர்களைத் தொடர்பு கொள்ளுங்கள்:

சகோதரர் றாபி 5597 0945
சகோதரர் இஸ்ஹாக் 5594 8455
சகோதரர் இர்ஸாத் 6696 7237
சகோதரர் மபாஸ் 6617 3219

தொடர்ந்தும் அல்லாஹ் எமக்குத் துணை நிற்பானாக! ஆமீன்!

7 Responses to “உறவுகளை எண்ணி ஏங்கித் தவிக்கும் தூரத்து நெஞ்சங்கள்”

  1. ashar said

    அன்புக்குரிய காத்தான்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள மக்களுக்கு,
    தங்களின் இந்த இக்கட்டான சூழ்நிலையில் நானும் எனது நண்பர்களும் இந்த நாட்டில் இல்லாததை எண்ணி மிகவும் வேதனை அடைகிறேன்.
    எனினும் எங்களால் முடிந்த அளவு உங்களுக்கான உதவிகளை வழங்குகிறோம் இருந்தும் எங்களின் சரீர உதவிகளை உங்களுக்கு செய்ய முடியாதை நினைக்கும் பொழுது நாங்கள் உண்மையில் கண்ணீர் வடிக்கிறோம். முடிந்தவரை எங்களால் இயன்ற துஆக்களை உங்களுக்காக கேட்டவண்ணம் இருக்கிறோம்.. விடியும் பொழுது எல்லோருக்கும் விடியளைக்கொடுக்கும் பொழுதாக விடிய வல்ல இறைவனை பிராத்திக்கிறோம்.
    பிரித்தானியா மற்றும் கட்டார் வாழ் காத்தான்குடி குடிமக்கள் சார்பாக…..

  2. Mazaa said

    அன்புள்ள றியாஸ், தங்களது எழுத்துக்களை வாசிக்கும்போது – கண்ணீர் வருகின்றது.

    இருப்பினும், எங்களால் இத்தகைய நேரத்தில் தூரத்தில் இருந்து – நெருக்கமாக இருப்பதைப் போல எதையும் செய்யமுடியாதுள்ளதே என்ற அதிகபட்ச மன உளைச்சலால் தங்களது கட்டுரையில் – ‘பாவப்பட்ட ஜென்மங்கள் நாங்கள்’ – ‘எங்களது துரதிர்ஷ்டம்’ – ‘நாங்கள் கையாலாகாதவர்கள்’ போன்ற வசனங்களைப் பயன்படுத்தி இருந்தீர்கள்.

    உண்மையில் – இந்தநேரத்தில்தான் நாம் ரொம்ப உறுதியாக இருந்து, தெளிவாகச் சிந்தித்து தூரத்தில் இருந்தாலும் எம்மால் இயன்ற வழிகாட்டல்களை வழங்கி, பங்களிப்புக்களைச் செய்ய வேண்டும். ஏனெனில் – ஊரில் உள்ள அமளிதுமளி யில் அவர்களால் தெளிவாகச் சிந்தித்து செயலாற்றக் கூடிய மனோநிலை இல்லாமல் இருக்கும்.

    பாவப்பட்ட ஜென்மங்கள் – என்று யாருமில்லை. எம்மைப் போன்ற ஒரு சிலராவது வெளியில் இருக்கப் போய்தான் – குடும்பத்துக்காக தியாகம் செய்ய வந்த நாங்கள். ஊருக்காகவும் பங்களிப்புக்களைச் செய்ய – அல்லாஹ் ஒரு அருமையான வாய்ப்பினை ஏற்படுத்தி இருக்கின்றான்.

    இந்நேரம் ஊரிலிருந்தால் – ஒருவாய் சோற்றினையாவது சமைத்துப் போடலாம்தான். ஆனால் – இங்கிருப்பதனால், ஊருக்கே 5 நாட்கள் சமைத்துப் போடுவதற்கான ஒழுங்குகளை ஏற்படுத்த அல்லாஹ்வின் உதவியால் – ஆதரவுக்கரம் நீட்டக்கூடியதாக இருக்கின்றது.

    எனவே – எம்மால் இங்கிருந்து எது முடியுமோ அதை மெக்ஸிமம் செய்வோம். நிதிப்பங்களிப்புடன் மாத்திரம் நிறுத்திக் கொள்ளாது – எமது குடும்ப உறவுகளை ஒவ்வொருவராக தொடர்பு கொண்டு, அவர்களுக்கு தேவைப்படும் ஆலோசனைகளை, அவசர மற்றும் மருத்துவ உதவி தொடர்பாக அழைக்கவேண்டிய தொலைபேசி இலக்கங்கள் போன்ற விபரங்களை வழங்கி உதவலாம்.

    மேலும், ஊரிலுள்ள நண்பர்களைத் தொடர்பு கொண்டு – எமது குடும்பத்தார் தங்கியிருக்கும் இடங்கள், அவர்களது தற்போதைய நிலமை பற்றி விளங்கப்படுத்தி – அவர்களுக்கான சாப்பாட்டு வசதிகள் தவறாமல் கிடைப்பதற்கு வசதி செய்யலாம் – இது போன்று நிறைய யோசியுங்கள் நண்பர்களே..

    அல்லாஹ் – எமது பிரச்சனைகளை சீக்கிரமே முடித்து, குடும்பத்தாருடன் நெருக்கமாகவும் நிரந்தரமாகவும் இருக்கக் கூடிய அந்த சந்தர்ப்பத்தை சீக்கிரமே தரவேண்டும் – இன்ஷா அல்லாஹ்..

    யா அல்லாஹ் – எங்கள் உறவுகள் மீது கருணை காட்டி – மழையின் அகோரத்தை தணித்துவிடுவாயாக.. ஆமீன்.

  3. buhary said

    Dear Bro. Rafi

    Please publish the meeting place.

    • Mohd said

      Dear Mr.Buhary : இடம் : மதரசதுல் தய்யிபா, ஐன் காலித் (சல்வா வீதி ஜவஹர் ரெஸ்டாரன்ட் க்கு பின்னல் உள்ள வீதியில் / ஐன் காலித் பச்சை பள்ளிக்கு அருகாமையில்)
      நேரம்: இரவு 8.30 மணி
      திகதி: வியாழக்கிழமை 13/01/2011
      வாகன வசதிகள்:
      டோகா: லக்பிம, சலாமத் லங்கா,
      சினய்யா: கொழும்பு றெஸ்டுறண்ட்
      தொடர்புகளுக்கு: 5594 8455, 5575 7684, 6665 1773

      போக்கு வரத்து வசதிகளும் இரவு உணவு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
      மேலதிக விபரங்களுக்கும், போக்கு வரத்து ஏற்பாடுகளுக்கும் சகோதரர். மபாஸ் முஹைதீன் – 66173219 இல் தொடர்பு கொள்ளவும்

      if you can please inform to your all the friends and give your full support to kky socity.

      if you need more information plz let us know.

      thanks.

  4. rifkhan said

    உண்மையில் எங்கள் ஒவ்வருவறது நெஞ்சங்களிலும் உள்ள மனக்குமுறலை சஹோதரர் ரியாஸ் வெளிக்காட்டி உள்ளார் அணைத்து சஹாதரர்களும் ஒன்றுதிரள்வோம் இப்பணிக்கு எம்மால் இயன்ற உதவிகளை வழங்குவோம்,எமது மக்களுக்காக பிரார்த்திப்போம் , அல்லாஹ் போதுமானவன்

  5. mohamed said

    Dear brothers,
    we protect our people lets get up we will cooprate insah allah
    thanks all contributing brothers & info

    • Mohd said

      dear MR.Mohamed, we are already in the track. please come and joint with us and if can please inform to our all the friends. please do it how much you can.
      thanks.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s