பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் நிவாரண நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கத் தீர்மானம் – நிதி உதவி செய்ய விருப்பமுள்ளோருக்கு வேண்டுகோள்
Posted by Kattankudi Web Community (KWC) on 12/01/2011
அன்பின் வாசகர்கள் அனைவருக்கும்,
11.01.2011 செவ்வாய்க்கிழமை காலை காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தில் வெள்ள நிவாரண நடவடிக்கைகள் தொடர்பான அவசரக் கூட்டம் ஒன்று கூட்டப்பட்டது.
அதில் நிவாரண நடவடிக்கைகள் பற்றிய விடயங்கள் ஆலோசிக்கப்பட்டன. ஏற்கெனவே சம்மேளனம் எடுத்த தீர்மானங்களின் பிரகாரம் பள்ளிவாயல்களின் நிர்வாக சபையினரால் இடம்பெற்று வரும் சமைத்த உணவு விநியோகம் அதிக பிரதேசங்களில் இடம்பெற்று வருகிறது. வெள்ள நிலவரம் ஒரளவுக்கு சீரடையும் வரை இதை இயன்றளவு இப்போதுள்ளது போன்றே தொடர்வது எனத் தீர்மானிக்கப்பட்டது.
எனினும் ஊரின் சில பகுதிகளிலும், காங்கேயனோடை, ஒல்லிக்குளம், அறபா நகர் (கர்பலா) போன்ற மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் பள்ளிவாயல் நிர்வாகங்களிடம் போதுமான நிதி வசதி, நிதி திரட்டும் வாய்ப்புகள் அதிகம் இல்லாத சுற்றயல் முஸ்லிம் கிராமங்களிலும் செய்யப்பட வேண்டிய நிவாரண நடவடிக்கைகளை அதிகம் இலக்கு வைத்து நிவாரண வேலைத்திட்டத்தை சம்மேளனம் ஒருங்கிணைத்து மேற்பார்வை செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது.
ஏற்கெனவே வெளிநாடுகளில் வசிக்கும் எமதூர் சகோதரர்களின் பெருமனது கொண்ட நிதியுதவியுடன் சேர்த்து எமது இணையத்தள நிர்வாகத்தினரின் பங்களிப்புடன் எடுக்கப்பட்ட நிவாரண முன்னெடுப்புகள் தொடர்பில் நாங்கள் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டிருந்த போது, வெளிநாடுகளிலுள்ள வாசகர்கள் பலர் தாங்களும் இதில் பங்கெடுக்க வேண்டும் என்றும் பொதுவாக உதவி கோரும் நடவடிக்கைகளை இன்போ மேற்கொள்ள வேண்டும் என்றும் கருத்துகளைத் தெரிவித்ததோடு, மின்னஞ்சல்களையும் அனுப்பியிருந்தனர்.
வெளிநாடுகளில் உள்ள வாசகர்கள் தமது உதவிகளைச் செய்வதில் மிகவும் ஆர்வமாக உள்ளனர் என்பதை நாங்கள் அறிந்தே இருக்கிறோம் எனினும் நேரடியாக இதில் ஈடுபடுவதற்கான பல நடைமுறைச் சிக்கல்கள் எங்களுக்கு இருக்கின்றன.
வாசகர்களை நாங்கள் ஒதுக்குவதாகவோ அல்லது நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடத் தயங்குவதாகவோ தயவு செய்து யாரும் அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது.
வாசகர்களின் கோரிக்கைகளை நாங்கள் உடனடியாக சம்மேளனத்தின் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தோம். இன்னும் பல தரப்புகளும் சம்மேளனத்துக்கு இதே போன்ற கோரிக்கைகளை அனுப்பி வைத்திருந்தனர்.
இன்று இடம்பெற்ற கூட்டத்தில் இது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. வெள்ள நிவாரணத்துக்கு நிதியுதவி செய்ய விரும்புவோரின் பங்களிப்புகளை ஏற்றுக்கொள்வதென்றும் நிதியுதவி கோரி வேண்டுகோள் விடுப்பதென்றும் சம்மேளனம் தீர்மானித்தது.
நிவாரண விடயங்களைக் கையாள்வதற்காக சம்மேளனத்தின் பிரதித் தலைவர் சட்டத்தரணி அப்துல் ஜவாத் அவர்களின் தலைமையில், தலைவர் இஸ்மாயில் ஹாஜியார் மற்றும் செயலாளர் சபீல் நளீமி ஆகியோரைக் கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
எமது வாசகர்கள் பலர் நிவாரண நடவடிக்கைகளில் ஆர்வமாயுள்ளதால், எமது இணையத்தளம் ஊடாகவும் நிவாரண உதவிக்கான வேண்டுகோள் இத்தால் விடுக்கப்படுகிறது.
நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவ விரும்பும் வாசகர்கள் யாரும் தங்களது பங்களிப்பை நேரடியாக சம்மேளனத்தின் வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைக்கலாம், கணக்கு விபரங்கள்:
பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம், காத்தான்குடி
இலங்கை வங்கி – காத்தான்குடி
கணக்கு இல: 2960241
நிவாரண உதவிகளை எமது இணையத்தளத்தின் ஊடாக ஒருங்கிணைக்க விரும்பும் வாசகர்கள் உதவி விபரங்களை எமது மின்னஞ்சல் முகவரியான kattankudi@yahoo.com க்கு அனுப்பி வைக்கவும்.
நிதியுதவிக்குரிய பற்றுச்சீட்டுகளை வழங்குவதென்றும், நிவாரண நடவடிக்கைகள் முடிந்த பின்னர் கணக்கு விபரங்களை பின்னர் வெளியிடுவதென்றும் சம்மேளனம் எமக்கு உறுதியளித்துள்ளது.
எனவே விருப்பமுள்ள வாசகர்கள் அனைவரும் இவ்விடயத்தில் பங்கெடுக்குமாறு இணையச் சமூகம் கேட்டுக் கொள்கிறது.
அல்லாஹ் எம் அனைவரினதும் நல்ல செயல்களைப் பொருந்திக்கொண்டு அதற்குரிய நற்கூலிகளை வழங்குவானாக.








Mazaa said
ALHAMDHULILAH..
Mazaa said
Pls, Mention the AC Details – In English Also – It is better for Abroad Sender.
M FAIROS said
Federation of Kattankudy Mosques and Muslim Institutions
A/C 2960241
BOC Kattankudy Branch
Abu Arham said
Dear KKY Brothers in KSA-Riayda,
If any one want to contribute and send fund to Federation of Kattankudy Mosques and Muslims Institution for the current accumulated and displaced people KKY and its sarounded area muslims from KSA-Riyadh, it suggest you can send directly to above A/C or gether at Sri Lanka resturant at Batha after 06pm today Wednesday,Thursday & Friday.
– Be First for the Grace of “Allah” -
Thanks.
muzaffir ismail said
This is my kind request for KWC management
If you can make the arrangement to get the donation fund through credit cards
I hope it will be easier for our brothers who live in abroad to remit the money
So please concentrate regard this matter as soon as possible
Best regards
kapilan said
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உதவிட வேண்டும். புலம்பெயர்ந்து வாழும் மக்கள் உதவுவதற்கு தயாராகவே உள்ளனர். தனித்து முஸ்லிம் மக்களுக்கு மட்டுமல்லாது பாதிக்கப்பட்ட எல்லா மக்களுக்கும் உதவிடவேண்டும்.
நன்றி
Mazaa said
அன்புள்ள கபிலன் ஐயா,
எமது சமூகம் – அவசர உதவி என்று வரும்போது, அங்கே மத, இன, ஊர் வேற்றுமை பார்க்காது. இதனை நீங்கள் பாதிக்கப்பட்டுள்ள எம்மைச் சுற்றியுள்ள தங்களது உறவினர்களிடம் நேரடியாக தொடர்புகொள்ள வாய்ப்பு கிடைத்தால் அறிந்து கொள்ளலாம்.
காத்தான்குடியையும் சுற்றியுள்ள முஸ்லிம் பிரதேசங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி – நாம் பிரதான செய்திகளை வெளியிட்டுவருவதையிட்டு – ஏனைய மக்களுக்கான உதவிகளை நாம் செய்யவில்லை என தவறாக அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டாம்.
அதேநேரம் – சில பிரபலமான மீடியாக்கள் கூட எங்களது செய்திகளைக் கண்டுகொள்ளத் தவறுவதால் – நாங்களே அவைகளை முன்னிலைப்படுத்தி பிரஸ்தாபிக்க வேண்டி இருக்கின்றதையும் தாங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
தங்களது – சமூகம் தொடர்பான அக்கறையினை நாம் வரவேற்கின்றோம்..
நன்றிகள்.
M FAIROS said
சில பிரபலமான மீடியாக்கள் கூட எங்களது செய்திகளைக் கண்டுகொள்ளத் தவறுவதால் – நாங்களே அவைகளை முன்னிலைப்படுத்தி பிரஸ்தாபிக்க வேண்டி இருக்கின்றதையும் தாங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
it is true
rizwan said
நமது ஊரிலுள்ள சில அமைப்புக்கள் தமிழ் மக்களுக்கு தினமும் உதவி வருவதாக அறிகிறோம். அதுபற்றி செய்திகளையும் படங்களையும் இன்போ வெளியிட்டால் சகோதரர் கபிலன் போன்றவர்களுக்கு தெளிவு கிடைக்கும்..
இதன் மூலம் இன நல்லுறவும் புரிந்துணர்வும் ஏற்படவும் வழிவகுக்கலாம்
Mohd said
உங்களை மிகவும் அன்புடன் வரவேற்கின்றேன்.
ஆம் நாங்கள் தமிழ் மக்கள் முஸ்லிம் மக்கள் என்று வேறுபாடு பார்த்து வேளை செய்யும் தருனம் இதுவள்ள.
நாங்கள் தற்போது வேளை செய்யும் இடங்கள் ஆவன காத்தான்குடியும் காத்தான்குடியை அன்னடிய பிரதேசங்களுமும் ஆகும். இதில் பல சிறிய கிராமங்களும் உள்ளடங்கியுல்லது என்பதை உங்களுக்கு மிகவும் அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
தற்போது தேவைப்பட்டதில் மிகமுக்கியமானது பணம், பணம், பணம். சுமார் தற்போதைய சுழ்நிலையில் என்னை பொருத்தவரை ஒரு நாளைக்கு சுமார் 2,500,000.00 ரூபாய் தேவைப்படும் என்று நினைக்கின்றேன். கலத்தில் நின்று மீற்பு வேளை செய்வதற்கு/செய்து கொண்டு அதிகமானவர்கள் உள்ளனர் ஆனால் அவர்களடத்தில் போதிய நிதியின்மைமுக்கிய காரணம்.
தற்போது நடைபெற்றுக்கொண்டு இருக்கும் பணி அவர் அவர் சொந்தப்பணங்களிலேயே நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது என்பது மட்டும் உண்மை.
அரசாங்கத்தினால் நிதியுதவி கிடைக்கும் ஆனால் அது உடனடியாக கிடைக்கும் என்பது சந்தேகமே.
உங்களாலும் பங்களிப்புச் செய்ய இயலுமாக இருந்தால் உண்மையில் வரவேற்கத்தக்கதும் எங்களுடை சமூக ஒற்றுமைக்கு மிகவும் வரவேற்கத்தக்கதுமாக இருக்கும் சகேதரரே.
zana said
அல்ஹம்துலில்லாஹ்.. நல்ல முயற்சி..
காத்தான்குடி என்பதாக பெயர் காணப்பட்டாலும் – அதனைச் சுற்றியுள்ள காங்கயனோடை, பாலமுனை, கீச்சம்பள்ளம், பூநொச்சிமுனை, மன்முனை போன்ற பிரதேசங்கள் உள்ளடங்கலாக நடவடிக்கைகளை முகாமைத்துவ குழு நெறிப்படுத்துவதோடு –
அயல் பிரதேசங்களான ஆரையம்பதி, நாவட்குடா போன்றவைகளுக்கான சமூக நல்லுறவை வழுப்படுத்தக்கூடிய மனிதாபிமான அவசர உதவிகளையும் நாம் இதன் மூலம் செய்ய வேண்டும்.
அரசாங்க மற்றும் வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களின் – உதவிகள் வந்தடையும் வரை – நம்மால் இயன்றதை முடியுமானவரை நிறுவன ரீதியிலோ அல்லது தனிப்பட்ட ரீதியிலோ மெக்ஸிமம் செய்வோம்.
பங்களிப்புச் செய்த, செய்து கொண்டிருக்கும், செய்ய இருக்கும் – அனைத்து சகோதரர்களுக்கும் அல்லாஹ் அருள்புரிவானாக..
Fairoos said
We are really apreciate of KWC social service. but we really fedup about the fedaration of Kattankudy Mosques and Muslim Institutions activity . Insha allah we hope every thing will be ok.Use social fund to community.
AM.Sathique said
வெள்ள அனர்த்தம் காரணமாக பலநிறுவனங்கள் இன வேறுபாடுகளுக்கு அப்பால் ‘மனிதநேயப்பணி’ என்ற அடிப்படையில் நிறையவே உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. இன்று காலை காங்கேயனோடையை அண்மித்த அரயம்பதி ஆற்றங்கரை அண்மித்த வீடுகளுக்கு சம்மேளனத்தால் பார்வையிடச் சென்றிருந்தோம்.மிகவுமே கஷ்டமான சூழலில் அவர்கள் இருக்கிறார்கள். எங்களிடம் “நீங்களாவது வந்து பார்க்கிறீர்கள் ஐயா! எங்களது சமூகத்தில்இப்படியான இக்கட்டான வேளையில் கூட பார்ப்பதற்கு யாருமில்லை ஐயா” எனக்கூறி முறைப்பட்டனர். பின்னர் நாங்கள் அவர்களிடம் இன்று பகல் வேளைக்கு சமைத்த உணவு தருகிறோம் எனக்கூறி அப்பகுதியில் வசிப்போரைக் கணக்கெடுத்துச் சென்று 550 பேருக்கு சம்மேளனத்தால் சமைத்த உணவுகளை வழங்கினோம்.அதேபோன்று இன்று மாலை நமதூரில் சலூன் கடை வைத்திருக்கும் சகோதரர் ஒருவர் எங்களோடு தொடர்புகொண்டு தாளங்குடாவில் ஒரு பாடசாலையில் 150 பேர் இருக்கின்றோம் சாப்பாட்டுக்கான எந்த ஏற்பாடுகளும் இல்லை. உங்களால் உதவ முடியுமா எனக்கேட்டபோது இதன் பிறகு ஏற்பாடு செய்வது சிரமம் இருந்தாலும் முயற்சி செய்கிறோம் எனக்கூறினோம்.IFCEC சகோதரர்களுடன் தொடர்பு கொண்டு அதன் பின் சமைத்து இரவு 9.30 மணிக்கு தாளங்குடாவுக்கு அவர்களுக்கான உணவைக் கொண்டுபோய்க் கொடுத்துவிட்டு வந்திருக்கிறோம்.இதை ஏன் சொல்கிறேன் என்றால். இவ்வாறான மனித நேய உதவிகளைச் செய்வதற்கு முஸ்லிம்களுக்கு யாரும் சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை.காரணம் அவர்கள் ஏற்றிருக்கும் மார்க்கத்தின் உயர்ந்த பண்பாடுகள் இவைகள்.இவைகளை விளம்பரப்படுத்திக் கொண்டு எமது சமூகம் செய்யவில்லை. இயல்பாகவே அவர்கள் செய்கிறார்கள்.சகோதரர் kapilan அவர்கள் கூறியதற்காக இவைகளைக் கூறுகிறேன்.இவைகளின் போது ஒரு photo வேனும் நாங்கள் எடுக்கவில்லை என்பதை தகவலுக்காக kapilan போன்றவர்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறேன்.
Avathani said
நிச்சயமாக தானதர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; இன்னும் அல்லாஹ்வுக்கு அழகான கடனாகக் கடன் கொடுத்தார்களே அவர்களும் – அவர்களுக்கு (அதன் பலன்) இரு மடங்காக்கப்படும் -(அன்றியும்) அவர்களுக்கு (அல்லாஹ்விடம்) கண்ணியமான நற்கூலியும் இருக்கிறது
(Al-Quran 57:18)