காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 4,986,219 மொத்த வருகைகள்

காத்தான்குடி வெள்ள நிவாரணத்திற்கான கட்டார் ஒன்று கூடல் (படம் இணைப்பு)

Posted by Kattankudi Web Community (KWC) on 12/01/2011

நேற்று அறிவித்திருந்ததன்படி , காத்தான்குடி வெள்ள நிவாரணம் தொடர்பான கலந்துரையாடல்கூட்டம் இரவு 8 மணிக்கு ஆரம்பமானது. மிகக்குறுகிய அழைப்பாக இருந்தும் சிரமம் பாராமல் சுமார் 35 சகோதரர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி எம்.ஐ.இர்ஷாட் (BCAS) அவர்களின் அறிமுக உரையுடன் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து பொறியியலாளர் எம்.எம்.பளுலுல் ஹக் அவர்கள் வெள்ள அனர்த்தம் தொடர்பாகவும் ஊரில் இடம் பெற்றுக் கொண்டிருக்கும் தொடர்ச்சியான நிவாரண முன்னெடுப்புக்கள் தொடர்பாகவும் விளக்கங்களை ஒலிப்பதிவு மற்றும் ஒளிப்படங்களின் உதவியுடன்  தொளிவு படுத்தினார். அதனைத் தொடர்ந்து கலந்துரையாடல் விரிவாக இடம் பெற்றது.

இக்கலந்துரையாடலில் பல விடயங்கள் ஆராயப் பட்டன. எவ்வளவு தொகையை திரட்டுவது என்றும், இதற்கான ஒரு முகாமைத்துவ குழுவை தெரிவு செய்வதா என்றும், அவை எவ்வாறான நிவாரணப் பணிகளுக்குப் பயன்படுத்தப் பட வேண்டும் என்றும் பல் வேறு கருத்துக்கள்  முன்வைக்கப் பட்டன. இறுதியாக,ஏகமனதாக பின்வரும் முடிவுகள் எய்தப்பட்டன.

  • இந்த நிவாரணப் பணியினை முன்னெடுக்குமுகமாக ஒரு ஒழுங்கமைக்கப் பட்ட அமைப்பினூடாக செய்வதெனவும்அவ்வமைப்பினை ‘காத்தான்குடி வெள்ள நிவாரண உதவி நிதி’ KATTANKUDY FLOOD RELIEF AID (KAFRA), QATAR எனவும் பெயரிடப்பட்டது.
  • இதற்கான நிருவாகக் குழுவினர் தெரிவு இதனைத் தொடர்ந்து இடம் பெற்றது. தலைவர்: முகம்மது றாபி (QS) செயலாளர்: எம்.ஏ.எம்.அன்வர் (Salamath Lanka Restaurant) பொருலாளர் : ஏ.எல்.எம். இஷ்ஹாக் (Colombo Restaurent) அத்துடன் 10 நிருவாகக் குழு உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
  • இரண்டு லட்சம் கட்டாறி றியால் (QR 200,000 – ஏறத்தாள 60 லட்சம் ரூபாய்) வரையான நிதியினைத் திரட்டுவதாக ஏகமனதாகத்தீர்மானிக்கப் பட்டது.

இதனைத் தொடர்ந்து சகோதரர் றாபி அவர்களின் தலைம உரையினை அடுத்து , பொருளாளர் சகோதரர் இஷ்ஹாக் அவர்கள் நிதியைத் திரட்டுவதற்கான செயற்பாடு பற்றி விளக்கமளித்ததுடன்  மேற்படி கூட்டத்திற்கு சமூகமளித்திருந்த சகோதரர்கழுக்கு மத்தியில் பங்களிப்புக்களை வழி நடாத்திச் சென்றார். மாஷா அல்லாஹ், உடனடியாக கட்டாறி றியால் QR 56,400 (இலங்கை மதிப்பு கிட்டத்தட்ட பதினேழு லட்சம் ரூபாய்) ஐ மனமுவந்து வழங்க முன்வந்தனர்.

இவ்வாறான அதிக பட்ச மனிதாபிமான உதவி தேவைப்படும் சந்தர்ப்பங்களில் எமதூர்மக்கள் ஆர்வத்துடன் முன் வந்து அல்லலுறும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்ற ஆதங்கத்துடன் காணப்பட்டனர்.

இக்கூட்டதிற்கு மிகச்சிலரே வந்திருந்தபடியால், இன்றும் (புதன்கிழமை – 12/01/2011) தொடர்ச்சியான நிதிப்பங்களிப்பை ஆர்வமூட்டுவதற்காக மற்ருமொருகலந்துரையாடலை ஏற்பாடு செய்வதாக தீர்மானிக்கப் பட்டது.

அது தொடர்பான அறிவித்தல் வேறாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

இறுதியாக செயலாளர் அன்வர் அவர்களின் நன்றியுரையுடன் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.

This slideshow requires JavaScript.

12 Responses to “காத்தான்குடி வெள்ள நிவாரணத்திற்கான கட்டார் ஒன்று கூடல் (படம் இணைப்பு)”

  1. M.Rafee said

    Thanks to info Admin. I appreciate your timely help to meet most of our homeland brother in Zinaya (Industrial Area).

  2. Mohd said

    Thanks to Kattankudy.info to put this news. and we are expecting more from our brothers.

  3. Mazaa said

    அல்ஹம்துலில்லாஹ்.. நல்ல முயற்சி..

    காத்தான்குடி என்பதாக பெயர் காணப்பட்டாலும் – அதனைச் சுற்றியுள்ள காங்கயனோடை, பாலமுனை, கீச்சம்பள்ளம், பூநொச்சிமுனை, மன்முனை போன்ற பிரதேசங்கள் உள்ளடங்கலாக நடவடிக்கைகளை முகாமைத்துவ குழு நெறிப்படுத்துவதோடு –

    அயல் பிரதேசங்களான ஆரையம்பதி, நாவட்குடா போன்றவைகளுக்கான சமூக நல்லுறவை வழுப்படுத்தக்கூடிய மனிதாபிமான அவசர உதவிகளையும் நாம் இதன் மூலம் செய்ய வேண்டும்.

    அரசாங்க மற்றும் வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களின் – உதவிகள் வந்தடையும் வரை – நம்மால் இயன்றதை முடியுமானவரை நிறுவன ரீதியிலோ அல்லது தனிப்பட்ட ரீதியிலோ மெக்ஸிமம் செய்வோம்.

    பங்களிப்புச் செய்த, செய்து கொண்டிருக்கும், செய்ய இருக்கும் – அனைத்து சகோதரர்களுக்கும் அல்லாஹ் அருள்புரிவானாக..

  4. uk boys said

    mashaallah thanks 4 this commity and their decisions and do that help through the kky sammelenam.becauz without any politicz reason.we hope it will be the best way 2 do so.

    • M.Rafee said

      Dear UK Boys and other brothers,

      Now we brought all of our homeland brothers in one umbrella to collect the required aid. Once we do so we can ask/ request all the distributing channels to bring under one control unit as you said it might be federation.

  5. rizwan said

    படித்தவர்களின் கையில் தலைமைத்துவம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதற்கு இந்த சகோதரர்கள் நல்ல உதாரணம்..சிலர் இதனை ஒரு அரசியல் பின்னணி கொண்டதாகவே பார்த்தார்கள்..கட்டாரில் வாழும் சகோதரர்களும் அபபடிப்பாரத்திருந்தால் இநதக் கூட்டத்திற்குச் சென்றிருக்கவோ அல்லது இவ்வளவு பணத்தை அள்ளிக் கொடுக்கவோ முன்வந்திருக்கமாட்டார்கள்…ஏற்பாட்டுக் குழுவினர் மீது கொண்ட நம்பிக்கையின் பலனாகத்தான் இந்த முயற்சி வெற்றி பெற்றுள்ளது…

    அல்லாஹ் அனைவரதும் துய முயற்சிகளை வெற்றி பெறச் செய்வானாக

  6. zana said

    பங்களிப்புச் செய்த, செய்து கொண்டிருக்கும், செய்ய இருக்கும் – அனைத்து சகோதரர்களுக்கும் அல்லாஹ் அருள்புரிவானாக..

  7. salman wazeem said

    அஸ்ஸலாமு அலைக்கும்.இப்படியான ஒரு இயற்கை அனர்த்தம் அல்லாஹ்வினால் நடக்கும் போது இப்படியான சூழலில்லும் நாம் அரசியலை உட்படுத்தாமல் இருப்பது நல்லது. ஏன் என்றால் எல்லாம் முடிந்த்த அப்புரம் நான் அப்படி செய்தேன் இப்படி செய்தேன் என்றும், இதன் பிற்பாடு யாராலும் சொல்லமுடியாத ஒன்றைத்தான் நேற்று நாங்கள் கட்டாரில் செய்த கூட்டத்தில் முதலில் பேசி முன்வந்தோம்.
    தயவு செய்து பெசிக்கொண்டிரிக்காமல் நம் மக்களுக்கு எப்படியாவது உதவுவதக்கு எல்லோரும் ஒன்றிணைந்து செயற்படுங்கள்.அல்லாஹ் உங்களுக்கு உதவுவான்.இப்படியான வேலைகள் எல்லாம் ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிம் கஷ்டத்தில் இருக்கிறான் என்றால் நான் அவனுக்கு உதவி செய்யணும் எண்டு அல்லாஹ் சொல்லுகிறான்.
    கட்டார் மட்டும் அல்லாமல் மற்ற நாடுகளிலும் இருந்தும் நம் மக்களுக்கு உதவி செயுங்கள் என்று தெரிவித்துக் கொல்ஹின்றேன்.

    Mohamed Salman Wazeem Akram
    Draughtsman
    Doha – Qatar

  8. jassakkallahu hair for qatar team

  9. rahman said

    Im so proud of this committee nd their members for helping our mother town…nd we even look forward for more help…

    from:rahman (industrialarea)

  10. பங்களிப்புச் செய்த, செய்து கொண்டிருக்கும், செய்ய இருக்கும் – அனைத்து சகோதரர்களுக்கும் அல்லாஹ் அருள்புரிவானாக.

    jazakallahu hairen

  11. mmsa said

    May Allah Accept all your intentions very grate job please do as much as possible and be united

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s