நேர்காணல் 04: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் நேர்காணல் விரைவில்
Posted by Kattankudi Web Community (KWC) on 09/01/2011
அஸ்ஸலாமு அலைக்கும்,
எமது இணையத்தளம் வெளியிட்டு வரும் நேர்காணல் தொடரின் அடுத்த நேர்காணலுக்காக விடுக்கப்பட்ட கோரிக்கையை சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் அலுவல்கள் பிரதியமைச்சர் M L A M. ஹிஸ்புல்லாஹ் (M.A) அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார் என்பதை வாசகர்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.
தற்போது சூடு பிடித்திருக்கும் அரசியல் களத்தின் நிலைமைக்கு மிகப்பொருத்தமாக இந் நேர்காணல் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வழமை போன்றே இப்பிரத்தியேக நேர்காணலுக்காக வாசகர்களின் கேள்விகளும் உள்ளடக்கப்படவுள்ளன.
இந்நேர்காணலுக்கான வாசகர்களின் கேள்விகள் எதிர்வரும் 19.01.2011 (புதன்கிழமை) இலங்கை நேரப்படி நள்ளிரவு 12:00 மணிவரை ஏற்றுக்கொள்ளப்படும். கேள்விகளை அனுப்பும் வாசகர்கள் பின்வரும் நிபந்தனைகளைக் கவனத்திற்கொள்ளவும்.
கேள்வி கேட்கும் வாசகர் தனது முழுப்பெயர், முகவரி மற்றும் தொலைபேசி இலக்கம் ஆகியவற்றை சேர்த்து அனுப்பி வைக்க வேண்டும்.
கேள்விகளை தேர்வு செய்வதற்கு அல்லது நிராகரிப்பதற்கு இணையத்தள நிர்வாகத்திற்கு உள்ள உரிமையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நேர்காணல் முடிந்து பதிப்பிக்கப்பட்ட பின்னர் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் பெற்றுத்தரும் எந்த உத்தரவாதமும் இணையத்தள நிர்வாகத்தினால் வழங்கப்படவில்லை என்பதைக் கவனிக்கவும்.
கேள்விகள் அனைத்தும் எமது மின்னஞ்சல் முகவரியான kattankudi@yahoo.com க்கு Interview 04 என்று தலைப்பிட்டு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
வஸ்ஸலாம்.
KWC முகாமைத்துவம்.








rizwan said
இவவளவு காலமும் இல்லாமல் தேர்தல் காலத்தில் ஹிஸ்புல்லாவுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவது ஏன்?
kattankudi said
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதர றிஸ்வான்,
பிரதியமைச்சரின் நேர்காணலுக்காக நேரம் பெறப்பட்ட போது உண்மையாக தேர்தல் அறிவிப்பு வந்திருக்கவில்லை. அறிவித்தல் சற்று தாமதமாக வெளியிடப்பட்டுள்ளது.
அப்படித்தான் வைத்துக் கொண்டாலும் ஊரின் அரசியலில் முக்கியமான ஒருவரை பேட்டி காண தேர்தல் நேரம் பொருத்தமானதுதானே?
எம்மிடம் உள்ள வளங்கள் மற்றும் பிரபலங்களின் நேர ஒதுக்கீடு அடிப்படையிலேயே நேர்காணல்கள் செய்யப்படுகினறன
இவரை ஏன் இப்போது பேட்டி காணுகிறீர்கள்? இவரை ஏன் முதலில் காணவில்லை என்பன போன்ற கேள்விகள் பொருத்தமற்றவை.
வஸ்ஸலாம்
WebAdmin
whats up said
u r right
rafi said
ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருக்கும் மேடைகளிலே சொல்கின்ற பல்லவிதான் இப்பவும் வரும்
Mohammed Hiraz said
சகோதரர் முபீனுடைய குற்றசாட்டுகளுக்கு சகோதரர் ஹிஸ்புல்லஹ் தேர்தலுக்கு முன் பதில் அளிக்க கூடிய சந்தர்பத்தை KWC ஏட்படுத்தி இருப்பது ஊடக நடு நிலமை தன்மையின் உன்னத தன்மையே இதே போன்று KWC தேர்தலில் போட்டியிடும் அனைது கட்சிகள், சுயேட்சைகுழுக்களின் செவ்விகளையும் தேர்தல் நடைபெற முன்னறே நேயர்களுக்கு விருந்தாக்கும் என ஆதரவு வைப்போமாக
saya QAT said
Singam…… Latea vanthalum Latesta varumle….
கணிப்பு said
பனங்காட்டு நரி -பயம் அறியாதது எப்ப வேண்டுமானாலும் வேட்டையாடும்