காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 4,986,219 மொத்த வருகைகள்

ஊர்க்குருவி: சமுர்த்தி முத்திரைக்கான அரிசி விநியோகத்தில் குளறுபடி

Posted by Kattankudi Web Community (KWC) on 15/12/2010

காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் சமுர்த்தி முத்திரைக்கான அரிசி விநியோகத்தில் பல்வேறு குளறுபடிகள் இடம்பெறுவதாக சமுர்த்தி பயனாளிகள் தெரிவிக்கின்றனர்.

இன்று புதன்கிழமை (15.12.2010) காத்தான்குடி பலநோக்கு கூட்டுறவுச் சங்க 2, 7, 9 ஆம் கிளைகளில் வழங்கப்பட்ட அரிசி மோசமானது என சமுர்த்தி பயனாளிகளினால் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினை அடுத்து சமுர்த்தி முகாமையாளர் ஏ.எல்.எம்.சுல்மி, சமுர்த்தி உத்தியோகத்தர் எம்.அன்சார் ஆகியோர்  மேற்குறித்த கிளைகளுக்கு சென்று பரிசோதித்த போது மக்களின் புகார் உண்மை என கண்டறியப்பட்டுள்ளது.

காத்தான்குடி பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தால் சமுர்த்தி முகாமையாளர்களுக்கு கேள்வி கோரலின் போது நல்ல ரக அரிசி காட்டப்பட்டதாகவும் இவ்வாறு காட்டப்பட்ட நாட்டு அரிசி 51ரூபாவுக்கு கொள்முதல் செய்யப்பட்டு 57.50 சதத்திற்கு ஏழை மக்களுக்கு வழங்குவதாக குறிப்பிட்டுவிட்டு மிகக் குறைந்த விலையிலுள்ள பச்சை அரிசியை இம் மக்களுக்கு வழங்கியுள்ளதும் இவர்களால் இங்கு அவதானிக்கப்பட்டுள்ளது.

Riceஇதுவிடயமாக உடனடியாக பிரதேச செயலாளருக்கு அறிவிக்கப்பட்டு மேற்படி கிளைகளில் வழங்கப்பட்ட அரிசி விநியோகம் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

இவ்விடயம்  கூட்டுறவு ஆணையாளர் மற்றும் அரச அதிபர் ஆகியோருக்கு எழுத்து மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறியக்கிடைக்கின்றது.

இந்த நிலை தொடர்ந்து இடம்பெறுவதாகவும் நிறுவையிலும் குறைவு காணப்படுவதாகவும் இதனை கேட்டால் அரிசியை எலிகள் சாப்பிடுவதாலும், அரிசி கீழே சிந்துவதாலும் ஏற்படும் நஷ்டத்தினை ஈடுசெய்ய வேண்டியுள்ளதால் இவ்வாறு செய்யவேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுவதாகவும்  பாதிக்கப்பட்ட சமுர்த்தி பயனாளிகள் தெரிவிக்கின்றனர்.

11 Responses to “ஊர்க்குருவி: சமுர்த்தி முத்திரைக்கான அரிசி விநியோகத்தில் குளறுபடி”

  1. dadi said

    எனவே, அநியாயம் செய்து கொண்டிருப்போருக்கு, அவர்களுடைய தோழர்களுக்கு வேதனையிலிருந்து ஒரு பங்கு இருந்தது போல், ஒரு பங்கு நிச்சயமாக உண்டு ஆகவே, (தண்டனைக்காக) அவர்கள் என்னை அவசரப்படுத்த வேண்டாம் (அல் குர்ஆன் 51:59)

  2. Play Boy said

    இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ……….?

  3. சமுர்த்தி என்பதே ஹராம் அதில் நல்ல அரிசி என்ன புளுங்கல் அரிசி என்ன

    • எவனோ ஒருவன் said

      யார் ஃபத்வா கொடுத்தது சமுர்த்தி ஹராம் என்று? ஆதாரம் ஏதும் உண்டோ?

      • சமுர்த்தி ஹராம் என்பதற்கு ஏராளமான ஆதாரம் இருக்கு ஹ்லால் என்பதற்கு உங்களிடம் ஒரு ஆதாரம் இருக்கா சகோதரறே

    • mohamed said

      dont say haram / halal here. Where is an Islamic rule at Sri Lanka? if u say samurthi haram. what is call all banks, why kattankudy muslims dealing with banks.

  4. adiyaan said

    “பல நோக்கு கூட்டுறவுச் சங்கம்” இச்சங்கத்தின் பல நோக்கங்களில் களவும் ஒன்று! ஆகவே அதைப்பற்றி யாரும் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை!

  5. boots said

    you are right mohamed niyas samurthi is a haram its not good for our muslim people

  6. nizarmsm said

    take it easy in our mpcs

  7. remaamm said

    இன்று நேற்றல்ல எப்போதுமே கூப்பன்,சமுர்த்தி நிவாரனம்,வெள்ள நிவாரனம் என எந்த ஒரு நிவாரனமும் கூட்டுரவு சங்கங்கள் ஊடாக பொது பக்களுக்கு பகிரப்படுமிடத்து காலா காலமாக இப்படி தரமில்லாத பொருக்கள் பலதடவை வினியோகம் செய்யப்பட்டே இருகிறது… எனவே இதுகு முடிவாக நிவாரன வினியோகங்களுக்கு மோசடி செய்யபட முடியாத உறுதியான மாற்று வழி முறையை ஏட்படுத்தி ஏழைகளின் கொடுபனவுகளில் மோசடி செய்வோருக்கு ஒரு முடிவு கட்டுவது வருமை ஒழிப்புக்காய் பாடுபடும் நெஞ்சங்கள் யாவரினதும் பொறுப்பாகும்.

  8. ottrumaivirumpi said

    if samurthy haram ,all government officers getting salary is haram. government give salary to servant by using taxes.(>70% income coming from interest, cigarette and drinks).

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s