காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 4,986,219 மொத்த வருகைகள்

நேர்காணல் 03: மாகாண சபை உறுப்பினர் U. L. M. N. முபீன் அவர்களுடனான நேர்காணல்

Posted by Kattankudi Web Community (KWC) on 24/11/2010

அஸ்ஸலாமு அலைக்கும்,

எமது இணையத்தளத்தினால் நடத்தப்பட்டு வருகின்ற நேர்காணல் தொடரில் அடுத்த நேர்காணலுக்காக விடுக்கப்பட்ட கோரிக்கையை கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் அதியுயர் பீட உறுப்பினரும், காத்தான்குடி நகரசபையின் முன்னால் தவிசாளருமான ULMN. முபீன் (B.A) அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார் என்பதை வாசகர்களுக்கு மகிழ்ச்சியுடன் அறிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.

இந்நேர்காணலுக்கான வாசகர்களின் கேள்விகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை – 28.11.2010 நள்ளிரவு 12:00 மணிவரை ஏற்றுக்கொள்ளப்படும். கேள்விகளை அனுப்பும் வாசகர்கள் பின்வரும் நிபந்தனைகளைக் கவனத்திற்கொள்ளவும்.

கேள்வி கேட்கும் வாசகர் தனது முழுப்பெயர், முகவரி மற்றும் தொலைபேசி இலக்கம் ஆகியவற்றை சேர்த்து அனுப்பி வைக்க வேண்டும்.

கேள்விகளை தேர்வு செய்வதற்கு அல்லது நிராகரிப்பதற்கு இணையத்தள நிர்வாகத்திற்கு உள்ள உரிமையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நேர்காணல் முடிந்து பதிப்பிக்கப்பட்ட பின்னர் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் பெற்றுத்தரும் எந்த உத்தரவாதமும் இணையத்தள நிர்வாகத்தினால் வழங்கப்படவில்லை என்பதைக் கவனிக்கவும்.

கேள்விகள் அனைத்தும் எமது மின்னஞ்சல் முகவரியான kattankudi@yahoo.com க்கு  Interview என்று தலைப்பிட்டு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

வஸ்ஸலாம்.

KWC முகாமைத்துவம்.

16 Responses to “நேர்காணல் 03: மாகாண சபை உறுப்பினர் U. L. M. N. முபீன் அவர்களுடனான நேர்காணல்”

  1. REMAAMM said

    DEAR KATTANKUDI INFO
    SO V CAN ASK ABOUT HIS OFFICIAL ACTION …………………….?

  2. sanasamana said

    dear kattankudi info,
    pls try to ask queation frank and importent mater

    • kattankudi said

      Dear Reader,

      Why don’t you come up with questions on frank and important matters? There is still time.

      It would be constructive rather than criticising after the interview.

      WebAdmin

  3. அஸ்ஸலாமு அழைக்கும்.

    “கேள்விகள் அனைத்தும் எமது மின்னஞ்சல் முகவரியான kattankudi@yahoo.com க்கு Interview என்று தலைப்பிட்டு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.”

    BUT…..BUT…..BUT…..BUT…..BUT…..BUT…..BUT…..BUT…..

    “நேர்காணல் முடிந்து பதிப்பிக்கப்பட்ட பின்னர் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் பெற்றுத்தரும் எந்த உத்தரவாதமும் இணையத்தள நிர்வாகத்தினால் வழங்கப்படவில்லை என்பதைக் கவனிக்கவும்.” “நிராகரிப்பதற்கு இணையத்தள நிர்வாகத்திற்கு உள்ள உரிமையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.”

    SO….SO….SO….SO….SO….SO….SO….SO….SO….SO….

    அப்போ எதற்கு நாங்க கேள்வி கேட்கணும்…. அதான் உங்க நிருவாகிகள் நாசுக்காகவே கேட்ப்பாங்கலாமே கேள்வி…. போதும்யா உங்க சித்த விளையாட்டு.

    இதற்கு நீங்க….
    இதை மட்டருத்தால்… நாங்கள் இனி உங்களுடைய இன்போவில் இருந்து ஒதுங்குவோம் / ஒதுக்குவோம். பிரசுரித்தால் கேள்விகளும் உங்கள் தவறும் இனி தொடரும்….
    (எங்கள் பொன் நேரத்தினை உங்கள் இணைமனையில் செலவிடுவதால் நிராகரிப்பதற்கு இணையத்தள வாசகர்களுக்கு உள்ள உரிமையை இணையத்தள காப்புரிமை சட்டத்துக்கமைய்ய இணையத்தள நிர்வாகத்திற்கு உள்ளோர் ஏற்றுக்கொள்ள வேண்டும்)

    “ஒரு சுன்னாவினை உயிர் வாழ வைப்பவன் ஒரு சமுதாயத்தினை வாழ வைத்தவன் போன்றாவான்.”
    அல்லாஹ் போதுமானவன்.
    உங்களுடன்…
    பௌமி-கட்டார்.
    shaththiyams.tk

    • kattankudi said

      அஸ்ஸலாமு அலைக்கும்,

      சகோதரர் பௌமி,

      உங்கள் கருத்து குழம்பிய நிலையில் எழுதப்பட்டுள்ளதோ, அல்லது அதைப் புரிந்துகொள்ளுமளவுக்கு எங்களுக்கு அறிவில்லையோ தெரியவில்லை.

      ஆயினும் நிர்வாகம் என்ற வகையில் வாசகர் கேள்விகளுக்கு இயன்றளவுக்கு பதிலளிக்க வேண்டிய கடமையிலிருந்து நாங்கள் பின்வாங்குவதில்லை. அதிலும் சொந்தப் பெயரில் தைரியமாக எழுதும் உங்களைப் போன்ற சில வாசகர்களே இருக்கிறார்கள்.

      கேள்விகளை தேர்வு செய்யும் போது, குறிப்பாக அதிக கேள்விகள் வருமிடத்து சில கேள்விகளை தவிர்க்க வேண்டி ஏற்படுகின்றது. வேண்டுமென்றே கேள்விகள் தவிர்க்கப்பட்டதாக வாசகர்கள் எண்ணக்கூடும் என்பதாலேயே, கேள்விகளை நிராகரிக்க எமக்கு உரிமையுண்டு என்ற நிபந்தனை வைக்கப்பட்டுள்ளது.

      நேர்காணல் முடிந்த பின்னர் வரும் கேள்விகள் தொடர்பான பிச்சினை கடந்த நேர்காணலின் பின்னர் உங்களது கொள்கை சார் சகோதரர்களாலேயே உருவாக்கப்பட்டு பெருப்பிக்கப்பட்டது. இது தொடர்பான எமது இறுதி நிலைப்பாடு அறிவிக்கப்பட்டு விட்டது. எமது நேர்காணல்கள் நேரடி (Live) முறையில் இடம்பெறுபவை அல்ல. எனவே முன்னதாக அனுப்பப்பட்டு தெரிவு செய்யப்பட கேள்விகளுக்கான பதில்கள் பதிப்பிக்கப்பட்ட பின்னர் வரும் கேள்விகளை நாங்கள் பொறுப்பேற்க முடியாது. அவ்வாறு நாங்கள் உருதியளித்திருக்கவில்லை என்பதை முன்கூட்டியே இப்போது ஞாபகப்படுத்தியிருப்பதும் அதற்காகவே.

      உங்களுக்கு நிபந்தனைகளில் உடன்பாடில்லாவிட்டால், நீங்கள் கேள்வி கேட்கத் தேவையில்லை. கேள்வி கேட்கும்படி யாரையும் யாரும் கட்டாயப்படுத்தவுமில்லை.

      எந்த வாசகரையும் எமது இணையத்தளத்தை பொன்னான நேரத்தை செலவழித்து வந்து பார்க்குமாறு நாங்கள் வலிந்து அழைக்கவில்லை. நீங்கள் எதைப் பார்ப்பது அல்லது விடுவது என்பது உங்கள் உரிமை.

      இவ்விடத்தில் நீங்கள் அடிக்கடி பார்க்கும் சில இணையத்தளங்கள் வாசகர் கருத்தையே வசதியாக நீக்கிவிட்டு, “தேவை என்றால் பாருங்கள் கருத்து சொல்லவோ கேள்வி கேட்கவோ முடியாது” என்ற ஜனநாயகமற்ற முறையில் இயங்குவதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

      வெளியே இருந்து பேசுவது இலகு, உள்ளே இருந்து செய்து பார்த்தால், இவ்வாறான நேர்காணல்கள் கண்டு வெளியிடுவதிலுள்ள சிரமங்கள் புரியும்.

      நேர்காணலுக்குப் பின்னர் உங்கள் கேள்விகளுக்கு விடை வேண்டும் என்றால், நீங்கள் நேர்காணலில் கலந்து கொண்டவரை நேரடியாகத் தொடர்பு கொண்டு கேட்பதைத் தவிர வேறு வழியில்லை.

      உங்களது சந்தேகங்கள், கருத்துகள், ஆலோசனைகள் மற்றும் விமர்சனங்கள் எப்போதும் வரவேற்கப்படுகின்றன.

      வஸ்ஸலாம்.

      WebAdmin
      on behalf of
      KWC Management

      • Mohd said

        “மலையும் பெய்ரதான் மோக்கயும் கத்துரதான்”
        There are many people they don’t know what they’re doing and what they have to do (…… வேளையும் இல்லயாம் நடக்க நேரமும் இல்லயாம்)
        @ Kky info : you’re doing very good job and its much appreciated. Plz continue with same flow.

      • Fayz said

        very good answer….

  4. Ashad said

    பௌமி..
    உங்கள் அடி மனதை தொட்டு சொல்லுங்கள்.நானும் நீங்களும் கட்டார் இல்தான் இருகிறோம் kattankudi.info பார்த்தால் சொந்த மண்ணில் வசிப்பது போல ஒரு சந்தோசம் இல்லையா நம்மை சந்தோஷ படுத்தனும் என்று kattankudi.info என்ன தேவை .இதற்கு நானோ நீங்களோ ரியால் அனுபவும். இல்லை எந்த பங்களிப்பும் செய்யவும் இல்லை .உங்களுகு தேவை என்றால் பாருங்கள் இல்லாட்டி உங்க பொன் நேரத்தினை வேற எதுகும் செலவு செய்யலாம் அது உங்களுகும் நல்லது மத்தவங்களுகும் நல்லது

    Ahamed Ashad
    Doha-Qatar

  5. pothumahan said

    சகோ. பௌமிக்கு,

    சமூக சேவையை நோக்காக கொண்டு செயற்படும் ஒரு ஊடகம் இவ்வாறான நேர்காணல்களை சிரத்தையுடன் மேற்கொள்வது பாராட்ட பட வேண்டிய விடயம்.
    நடுநிலையான ஊடகமாக் செயற்படுவது என்பது எவ்வளவு சவாலான விடயம் என்பது களத்தில் இருப்பவர்களுக்குதான் தெரியும். காத்தான்குடி யாஹு குழுமத்தை தொடங்கிய காலத்திலேயே பல சவால்களை இன்போ முகாமைத்துவம் சந்தித்தது என்பது ஆரம்பகாலங்களில் இனைந்திருத்தவர்களுக்கு தெரிந்திருக்கும்.

    எல்லோருடைய‌ விருப்பங்களையும் நிறைவு செய்வது என்பது எந்த ஊடகத்திற்கும் சாத்தியமில்லை ஆனால் சாத்தியமான அனைத்து வழிகளிலும் தன் சேவையை தர இன்போ முயற்சிக்கிறது என்பதை நாம் எல்லோரும் ஏற்றுக்க் கொள்ள வேண்டும். இன்போ இரும்புக் கதவுகளுக்கு பின்னால் செய்ற்படும் ஊடகமோ சில்லறை லாபங்களுக்காக யாருக்கும் காக்கா பிடிக்கும் குழுவோ அல்ல. முடிந்த வரை நேயர்களின் கருத்துக்களையும் விமர்சனங்களையும் உள்வாங்கி செய்ற்படும் தனித்துவமான ஊடகம்.

    இன்போவின் விதிமுறைகளில் உங்களுக்கு உடன் பாடில்லாவிட்டால் நீங்களே ஒரு ஊடகத்தை நடாத்துவது சிறந்தது. அதை விட்டு விட்டு ஏதோ ஒட்டு மொத்த நேயர்களின் பிரதிநிதி மாதிரி “இன்போவில் இருந்து ஒதுங்குவோம் / ஒதுக்குவோம்.” என்றெல்லாம் கோஷம் போடுவது எந்த வகையிலும் நியாயமில்லை.

  6. Play Boy said

    “ஒரு சுன்னாவினை உயிர் வாழ வைப்பவன் ஒரு சமுதாயத்தினை வாழ வைத்தவன் போன்றாவான்.”
    இப்படித்தான் சமுதாயத்தினை வாழவைப்பதோ? இவரு அவருதானே?

  7. mohammed aswin said

    எங்கள் நெஞசங்களை ஊர்தகவள்களை உடன் தந்து குளிர்விக்கும் என்ரும் நேசிக்கும் காதான்குடி இன்போவிட்கு,
    தாள்மையான நேயர் சார் வேண்டுகோள்,
    தங்களின் பணி அயலகத்தில் அள்ளுரும் என் போன்ற கஹ்தானிகளின் உள்ளங்களை மகிழ்வின் உச்சிக்கு கொண்டு செல்லும் மகத்தான பணி. முதட்கன் அதட்கு நன்றிகள் கோடி…….
    தாங்கள் ஊர் பெருந்தகைகளை செவ்வி கண்டு நேயர்களை குளிர்விப்பது போற்ற தக்கதே,,,,,,,, ஆனால்,,, அரசியலாளர்களை தவிர்கலாமே……

    அரசியல் செய்வோர் குணா அம்சம் எப்போதும் அரசியல் தட்ப வெப்பங்கலுக்கு ஏட்ப மாறகூடியது அதிலும் நம் நாட்டு அரசியல் வாதிகள் நேற்று ஒரு கொள்கை இன்றொறு கொள்கை என தங்கள் தங்கள் கொள்கைகளையே மாற்ற கூடியவர்கள்,

    இப்படி பட்டவர்களின் கூட்டதில் உள்ள நம் ஊர் காரங்களை கன்டிப்பாக நேயர்களுக்காக செவ்வி கண்டு வெளி இடதான் வேண்டுமா?

    …. இதில் நடுநிலமை பேனப்போனால் ஊரில் ஊள்ள 50 அரசியல் கட்சி சார் நபர்களையும் செவ்வி கான வேண்டி இருக்குமே

    இதில் ஒரு சிலரை செவ்வி கண்டு சிலரை புரகனிப்பின் அவர்களின் எடுபிடிகு நெருக்குதல்கட்கு எதிர்காலத்தில் முஹம் கொடுக்க வேண்டி வருமே

    தயவு செய்து குளிக போய் சேற்றை பூசிய கதையாகுமுன்………………………………….

    ஊரில் உள்ளா எத்தனையோ பெரியார்கள்,மூத்த மனிதர்கள்,தங்கள் அந்திம காலதை கடந்து கொண்டிருக்கும் சென்ற தலைமுறை தலைவர்கள்,முன்னால் பாட சாலை அதிபர்கள்,முன்னால் ஆசிரியர்கள்,ஓய்வு பெற்ற சகல துறைகளிலும் பணியாற்றியவர்கள்,மஸ்ஜிதுகளின் இமாம்கள்,பாடசாலை அதிபர்கள்,ஆசிரியர்கள்,குர் ஆன் மதரசா முஅல்லிம்கள், ஊரில் வதியும் மிக வயது முதிர்ந்தோர்,கடட்தொலில் சார்ந்தோர்,பஸாரில் தொழில் புரிவோர்,கலை துறை சார்ந்தோர்,சாதனை படைத்தோர், என நாளா துறைனரையும் செவ்விகண்டு தாங்கள் வெளி இட முயட்சித்தால் உடல் உயிர் அயலகமும், உள்ளமது ஊர் நாபகமுமய் சஞ்சலதுடன் நாட்களை கழிக்கும் என் போன்ற அபலைகலுக்கு பசுமை நிறைந்த நாபவங்களையும், கற்றூ தந்த ,வழி காட்டிய, ஆலோசனைகள் தந்த ,உதவிகள், புறிந்த, அந்த மூத்தோறை, வாழும் போதே வாழ்த்திடவும் ,

    நன்றி பாரட்டிடவும்,புகழ்ந்திடவும், போற்றிடவும்,எங்கள் சிறு பருவ தவருகட்கு,மன்னிப்பு கேட்டுடவும், எங்களை உயர்திவிட எங்கள் அரும்பு பருவதை நட்சித்திரமாய் வளர்தெடுது, எங்களை இவ்வலவு வளமான வாழ்வில் வாழ்,துணை புரிந்த,அந்த ஆசான்களை,அதிபர்களை,மேன்மை தங்கியோரை, செவ்வி கான்டால், எவ்வளவு இனிமையாய் இருக்கும்,உலகெங்கும் வாழும் அந்த பெருந்தகைகளின் மாணாகரின் உயர்வு கண்டு மகிழ்து மனமார திருப்தி அடைவார்களே

    தயவு செய்து இபடி ஒரு பசுமை நிறைந்த நாட்களை நாபகமூடும், சமுதாய பெருந்தகைகளை செவ்வி கான தங்கள், பொன்னான நேரங்களை செலவிடுமாரு தள்மையுடனும் பணிவிடனும் நேயர்கள் சார்பாக தங்களிடம் விண்ணப்பிக்கிறேன்.
    தவருகட்கு மன்னித்தருள்க

    • sam said

      Yes Aswin, you’re correct

    • Mohd said

      Yes that is also good option.

      But, we can’t say all politicians are 100% good or 100% not good. There’re also doing something for our society in mean time we should not miss anybody in the same field to interview.

      We have to appreciate whoever doing something good for our society. It’s small or big.

      My opinion when we are interviewing time, we can ask about his view, future plan, past experience and how he enter to his field etc.. But we should not ask about his competitor.

      Note : this is my opinion only.

      Thanks.

    • kattankudi said

      அஸ்ஸலாமு அலைக்கும்,

      சகோதரர் அஸ்வின்

      தங்களது கருத்து சிறந்த ஒன்றாகும், நன்றிகள். இன்ஷா அல்லாஹ் அரசியல் தொடர்பற்ற முக்கியஸ்தர்களைச் சந்தித்து அவர்களுடனான உரையாடல்களை நடத்தவும் உங்களின் கருத்தைத் தொடர்ந்து கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

      வஸ்ஸலாம்
      WebAdmin

  8. vedil said

    kethiyathan poduggalan pappam………………………..

  9. myson said

    ………………………., dear kattankudi.info leave these kind of people

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s