சுங்கப் பரிசோதகர் (Inspector of Customs) பதவிக்கு ஆட்சேர்ப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
Posted by Kattankudi Web Community (KWC) on 24/11/2010
விண்ணப்ப முடிவுத் திகதியான 15.12.2010 அன்று 18 வயதுக்கும் 24 வயதுக்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும்
உடற் தகமை: ஆண்கள்: உயரம் 5 அடி 5 அங்குலம் மற்றும் மார்புச் சுற்றளவு (விரிவடைந்த நிலையில்) 33 அங்குலங்களுக்கு குறையாமலும் இருக்க வேண்டும். பெண்கள்: உயரம் 5 அடி 3 அங்குலம் (தமிழ் வர்த்தமானியில் 4 அடி 3 அங்குலம் எனத் தவறுதலாகக் குறிப்பிடப்பட்டுள்ளது)
உயர்தரப் பரீட்சையில் ஒரே தடவையில் மூன்று பாடங்களில் சித்தி, சாதாரண தரப் பரீட்சையில் இரு தடவைகளில் பிரதான பாடங்களான சிங்கள அல்லது தமிழ் மொழி, கணிதம் அடங்கலாக ஐந்து பாடங்களில் திறமைச் சித்தியும், ஆங்கில மொழியில் சாதாரண சித்தி அடங்கலாக ஆறு பாடங்களில் சித்தி பெற்றிருக்க வேண்டும்
மேலதிக விபரங்களுக்கு இணைக்கப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் பக்கங்களைப் பார்க்கவும்.







