பல ஜும்ஆக்கள் நடத்துவதில் மார்க்க ரீதியாக பிரச்சினையில்லை – சமூக அங்கீகாரமே பிரச்சினை கலாநிதி அஷ்ரப் மனந்திறந்த பேட்டி!
Posted by Kattankudi Web Community (KWC) on 19/11/2010
- MSM Noordeen / MACM. Jelees / AM. Sathikeen-
எமது நேர்காணல் தொடரின் இரண்டாம் நேர்காணலான கலாநிதி அஷ்ரப் அவர்களுடனான நேர்காணல் கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்றது.
இந்நேர்காணலின் ஒலிவடிவம் மற்றும் நேர்காணலின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஆகியன வாசகர்களுக்காக வெளியிடப்படுகின்றன.
நேர்காணலின்போது கலாநிதி அஷ்ரப் அவர்கள் தெரிவித்த முக்கியக் கருத்துகள் சில சுருக்கமாக…….
- அல் மனார் அறிவியல் கல்லூரி குறித்த மத்ஹபை கற்பிக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்படவில்லை.
- தாருல் ஹதீஸ் நிலையத்தின் கிளை காத்தான்குடியில் விரைவில் திறந்து வைக்கப்படும்.
- ஜாமியதுல் பலாஹ் அரபிக் கல்லூரியில் தேவைப்படும் மாற்றங்களை அதன் நிர்வாகமே செய்ய வேண்டும்.
- அல் மனார் கல்லூரி மாணவர்கள் மார்க்கக் கல்வியிலும் பாடசாலைக் கல்வியிலும் நல்ல முன்னேற்றங்கள் காணப்படுகின்றன.
- அல் மனார் நிர்வாகத்தினர் அரசியலில் நேரடியாக இயங்கக் கூடாது என்பது கொள்கை – எனினும் சில உறுப்பினர்களின் அத்தகைய செயற்பாடுகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் பொது மத்திய தரப்பின் உதவியுடன் கலந்து பேசப்பட்டன.
- அரசியலில் நேரடியாக ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டோரை நெறிப்படுத்தும் முயற்சிகள் இடம்பெறுகின்றன.
- அல் மனார் தனிநபர் ஆதிக்கத்துக்கு உட்பட்ட நிறுவனம் அல்ல.
- அரசியல்வாதிகளும் அல் மனாருடன் தொடர்பாக இருப்பதோடு அதற்கு உதவியும் வருகின்றனர்.
- எதிர்காலத்தில் இப்தார் நிகழ்வுகள் வறுமையான மக்களை கூடுதலாக உள்ளடக்கி நடைபெறும்.
- அல் மனார் நிர்வாகத்தில் ஒரு சிலரின் ஆதிக்கம் அதிகம் இருக்கிறது என்ற தோற்றப்பாட்டை போக்கும் முகமாக மாற்றங்கள் படிப்படியாக செய்யப்பட்டு வருகின்றன.
- காத்தான்குடி மார்க்க விடயத்தில் சடங்கு ரீதியாக வழி நடத்தப்பட்ட நிலை மாறி மார்க்க அறிவு அதிகரித்து அதனூடான மார்க்க அணுகுமுறை வலுவடைந்து வருகிறது.
- பல்வேறு ஜும்ஆக்கள் ஊரில் நடத்துவதில் மார்க்க ரீதியாக பிரச்சினையில்லை. சமூக அங்கீகாரமே பிரச்சினையாக இருக்கிறது.
- பல்வேறு கருத்துகளுக்கும் இடம் கொடுப்பது சிறப்பானதாக அமையும்.
- கூட்டு துஆ தவிர்ந்த தாருல் அதர் போன்ற உணர்ச்சிக்கு அடிமைப்பட்ட இயக்கங்கள் கூறுவது போல் ஹறாமான பித் அத்கள் ஜும் ஆக்களில் இடம்பெறுவதில்லை.
- தௌஹீத் பிரச்சாரம் பள்ளி கட்டுவதோ ஜும்ஆ நடத்துவதோ அல்ல. வணக்கங்களிச் செய்யும் முறைகளில் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை பூதாகாரமாக்கி பிளவுபடும் அமைப்பு எமதூரிலும் நாட்டிலும் தௌஹீத் அமைப்புகளிடையே காணப்படும் குறைபாடாகும்.
- கேட்பவர்களுக்கு விளங்கும் மொழியில் குத்பா ஓதுவது பிரச்சினையில்லை. அரபு மொழியை சேர்த்துக் கொள்வது நல்லது என்பது எனது தனிப்பட்ட கருத்து.
- பெருநாள் தொழுகை திடலிலேதான் நடத்தப்பட வேண்டும் என்பதில் அனைவரும் உடன்படுகின்றனர். இரண்டு குத்பா என்பது பலவீனமான ஹதீஸ் என்றும் அனைவரும் ஏற்றுக்கொண்டும் ஏன் அதில் பிடிவாதம் பிடிக்கின்றனர் என்பது புரியவில்லை.
- தௌஹீத் இயக்கங்களில் செல்வாக்குச் செலுத்துவோரின் வேலைத்திட்டங்களே, தௌஹீத் இயக்கங்கள் பிரிவதற்கும், புதிய புதிய இயக்கங்கள் தோன்றுவதற்கும் காரணமாக இருக்கின்றன.
- இஸ்லாமிய வங்கி முறைகள் தொடர்பில் ஜம் இய்யத்துல் உலமாவின் பத்வாக்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
- சரியான இஸ்லாமிய வங்கிகள் இல்லாததால் பணத்தை பாதுகாப்பதற்காக அரச வங்கிகளை பாவிப்பது சிறந்தது எனது கருத்தாகும், ஆனால் வட்டியை எடுக்கக் கூடாது.
- சீதனத்தினால் ஏழை மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கிழக்கில் வீட்டையும் சீதனமாகப் பெறுவதும் பிரச்சினையாக இருக்கிறது. நீண்டகால நடைமுறைச் சாத்தியமான வேலைத்திட்டத்தினூடாக இவை தீர்க்கப்பட வேண்டும். இதில் பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் இணைந்து செயற்பட வேண்டும்.
- சொத்துப்பங்கீடு சீதனப்பிரச்சினைக்கு சரியான தீர்வாக அமைய முடியாது.
- நாம் ஏற்றுக்கொள்ளும் பிறை முறைப்படி துல்ஹஜ் ஒன்பதாம் நாள் அறபா நோன்பு நோற்பதே முறையாகும், அத்தினத்தில் வேறு நாட்டில் பெருநாள் என்பதை வைத்து இதைக் குழப்பிக் கொள்வதில் அர்த்தமில்லை
- அல் குர்ஆனை பொருள் விளங்காமல் ஓதுவதற்கு நன்மையுள்ளது போன்று ஹதீஸ்களை வெறுமனே ஓதுவதற்கு நன்மையில்லை.
- கருத்து வேறுபாடுகள் மார்க்க அடிப்படைகள் இல்லாத விடயங்களில் மட்டுமே ஏற்றுக்கொள்ளத்தக்கது.
- அரசியல்வாதிகள் சமூகம் தொடர்பான தூரநோக்குடனும் உடனடிப் பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும். உரிமைக்காகவும் அபிவிருத்திக்காகவும் வேறு வேறு குழுக்கள் அரசியலில் இயங்க முடியும்.
- நேயர்கள் kattankudi.info ஊடகத்தினைப் பாதுகாத்து அதன் வளர்ச்சிக்கு உதவவும் தவறுகள் ஏற்பட்டால் திருத்தவும் வேண்டும். பக்கச்சார்பின்றி நல்ல விடயங்களையும் விமர்சனங்களையும் இவ்வூடகம் வழங்க வேண்டும்.
நேர்காணல் ஒலிப்பதிவு இரண்டு பாகங்களாக கீழே தரப்பட்டுள்ளது. பேட்டியின் முழுமையான ஒலிப்பதிவை கேட்க கீழேயுள்ள சிவப்பு நிற அம்புக்குறியை கிளிக் செய்யவும்.
பாகம் 01
பாகம் 02
This slideshow requires JavaScript.







saleem said
நேர்காணல் செய்த நூர்தீன்,ஜெலீஸ்,சாதீகீன் ஆகியோருக்கு எனது வாழ்த்துக்கள். புகைப்படங்கள் சூப்பர்.சபாஷ் காத்தான்குடி இன்போ
vedil said
almanril arasiyalil theevirama eeyagiyavarai udanadiyaha vilakkavendum appathan pothumakkal atthuvarkal
அஜ்வத் said
மதிப்பிற்குரிய கலாநிதி அவர்களே!
கடந்த காலத்தில் இஸ்லாமிக் சென்டர் ஜும்ஆ ஹராம் என்று பத்வா கொடுத்தீர்கள். இப்போது இஸ்லாமிக் சென்டர் மற்றும் தாருல் அதர் ஜும்ஆக்களை சரிகாண்கின்றீர்கள். நீங்கள் ஏற்கனவே “ஹராம்” என்று பத்வா கொடுத்தது எந்த அல்குர்ஆன் ஹதீஸ் ஆதாரத்தின் அடிப்படையில் என்பதையும் இப்போது “ஹலால்” என்று பத்வா கொடுப்பது எந்த அல்குர்ஆன் ஹதீஸ் ஆதாரத்தின் அடிப்படையில் என்பதையும் தெளிவுபடுத்துவீர்களா?
ahmad said
Ivvaaraana prafalyam vaaindha ulamaakkalai nerhaanal edukkintra neenkanl moulavi abdurrauff avarhalayum eduthaal nantraaha irukkum ethirhaalathil naankal athayum ethirparkintroam……..
abu sara said
Thanks info
niyas sharjah said
sahoterar ahmed mr rauf awarhal moulavi kidayathu awar allahwukku ethirana kolhayil ullawar athwaitha kolhayilullawar awar muthalil kalima soollawendum atanpirahu parkalam
ahmad said
appadiyentaal ahila ilankai jummiyathul ulamaa pathuvaavai vaabas petru pathirihayil veliyaanathai neenkak ariya villayaa? mr niyas.
aswin mohammed said
விபச்சாரம் ஹராம் அதட்க்கு துணை போகும் அத்தணை விடயங்கலும், இஸ்லாதில் ஹராமாக்க பட்டிருபது போல்,
வட்டியும் ஹராம் அதட்கு துனை போகும் அத்தணையும் ஹராமாக இருக்க,
………………………………..
அது சரி பணத்தை சேமிது வைகுமாறு அல் குர்ரானில் அல்லது அல் சுன்னாவில் இருந்து ஆதாரம் காட்ட
கலாநிதி அஷ்ரப் இனால் அல்லது அவரது கருத்தை பிரசுரித்த காத்தான்குடி இன்ப்போ இனால் முடியுமா ?
அடியேன் நான்கு அரிவேன் பதில் தர முடியாத என் கேள்வியும் கருத்தும் தங்களின் இணையதில் வரபோவதில்லை என்ரு இருந்தும் தான்கள் குலாம் இந்த உண்மையை புரிந்து இது பற்றிய தேடலில் இறங்கி ஹக்கை அறிந்து வாழ்வர் என்ற நிய்யதில் இதனை தங்கட்கு அனுபுகிறேன் நன்றி
ASWIN MOHAMMED said
பல ஜும்மகள் காதான்குடி நகரதில் நடைபெறுவதை சரி கானும் கலநிதி அஷ்ரப்
இரு பெருநாள் தொழுகைகலும் ஒரே திடலில் ஒட்டு மொத்த காதான்குடி மக்களும் தொழ வேண்டும் என்ற விடயத்தை தனது நிருவனங்கள் ஊடாக பிரசார படுத்தி
காதான்குடி நகர மக்கள் தங்களின் வசதிவாய்புகலுக்கு ஏற்றவாறு என்கே வேண்டுமானாலும் திடலில் தொழமுடியும் என்ற உண்மையை விளங்க படுதாமல் இருகிறார்
இவர் இந்த உண்மையை உரக்க சொல்லி இருந்தால்
உண்மைல் காதான்குடி நகர மக்கள் எள்ளோரும் தங்கள் மஹலாகலில் உல்ல திடல் கலில் ஈத் பெருநாள்களை கொன்டடும் விடயதை ஏற்ரு நடந்திருபார்களே
பெருநளின் பெயராள் நகரம் முலுவதும் ஒரு சுன்னா ஹயத்தாய் இருகுமே
60,000 கும் மேட்பட காதான்குடி நகரமக்கள் ஓறே இடதில் குரித்த நேரதுகு ஒன்ரு கூடி குரித்த நேரதில் தொழுவது சாதியமானதா?
இந்த 60,000 மக்களில் குறைந்தது 21,000 மக்கள் வாகனதில் வறுவது என்ரலும் 7000 ஆடாகள் வேனுமே.
அதொட வருகின்ர மக்களில் 10,000 நபர்கலுகு ஒது முரிந்தால் என்கே போய் ஒது எடுபது ?
இதை எல்லாம் சிந்திதால் யவரவது கடட்கறை தொழுகைகாக ஒட்டு மொத்த காதான்குடி நாகர வாசிகளை அழைபார்களா?
kkymovlavi said
அன்புக்குரிய கலா நிதி அவர்களே !உங்களின் பேட்டியிலிருந்து சில விடயங்களை தெளிவாக விளங்க வேண்டும் என்னும் அமைப்பில் சில வினாக்களை கேட்க விரைகிறேன்.முதலில் நீங்கள் பேட்டியில் குறிப்பிட்டீர்கள் அதாவது மார்க்கவிடயங்களை செயல் படுத்துவதில் (அமுல்படுத்துவதில் )சமுக அங்கீகாரம் வேண்டும் என்று. அப்படி சமுக அங்கீகாரம் பெறவேண்டுமென எங்கேயாவது அல்குரான் சுன்னாஹ்வில் அதாரம் உள்ளதா?மேலும் சீதனம் சம்பந்தமாக சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமென கருதும் நீங்கள் நபியின் நகரமான மதீனாவில் மார்க்க அறிவை கற்றறிந்த மதனிகள் கூட வீட்டை சீதனமாக கருத முடியாது என கூறி பெண்ணின் வீட்டிலே தங்கிவிடுகின்றனர்
நீங்கள் கூறும் சீதன ஒழிப்பு முறைமையை முதலில் மதனிகள் மேலும் உங்களுடன் தஃவாவில் ஈடுபடும் சகோதரர்களிடமிருந்து ஆரம்பம் செய்யுங்கள் அது சாலச்சிறந்தது. மிகவும் கவலையான விடயம் வீடு சீதனம் இல்லை என்று நீங்கள் கொடுத்த பத்வாவின் முலம் எத்தனை ஏழை குமருகள் கஷ்டபட்டன என்பதை நாங்கள் அறிவோம். மார்க்க முன்மாதிரி என்பது முதலில் உலமாக்களிடமிருந்துதான் அரங்கேரவேண்டும்
அப்போதுதான் நீங்கல்கூரும் சமுக அங்கீகாரம் மிகவும் எளிதில் கிடைக்கும் இது சமுக அங்கீகாரம் கிடைக்க ஒரு சிறந்த வழி.
அன்புள்ள கலாநிதி அவர்களே!நீங்கள் கூறும் விடயங்களில் நிறையவே மாற்றங்கள் வர வேண்டுமென அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன்.காத்தமண்ணில் ஹதீது கலையில் கலாநிதி பட்டத்தை படித்து முடித்த பெருமையை ஒரு வரலாறாக சாதித்தவர் நீங்கள்.அது போததைக்கு எவ்வாறு இமாம் இப்னு தைமியா அவர்கள் டமஷ்கசில் ஒரு அல்மாநாரை உருவாக்கி இஸ்லாமிய சுடரை மக்கள் உள்ளங்களில் மலரச்சைதாரோ
அதுபோல் நீங்களும் ஈமானிய சுடரை எமதூரில் இருக்கும் உள்ளங்களிலும் மலரசெய்யுங்கள்.மேலும் பிரிவினை வாத தௌஹீத் இல்லாமல் ஒரு ஒற்றுமையான கட்டுகோப்பு அடங்கிய தௌஹீதாக மாற்ற பாடுபடுங்கள் இதுவே தற்போது உங்கள் முலம் நாங்கள் எதிபார்க்கும் விடயமாகும் .வஸ்ஸலாம்
Abumaazin said
கலாநிதி வீட்டில் ஜும்மா நடாத்துவதை எதிர்த்தார் மஸ்ஜிதில் நடாத்துவதை அல்ல
Abumaazin said
இன்றியமையாத ஐந்து விடயங்களை ஷரீஅத் பாதுகாக்குமாறு வலியுறுத்துகிறது.
1. உயிர்
2. தீன் (மார்க்கம்)
3. மானம்
4. பொருளாதாரம்
5. வம்சம் (பரம்பரை)
தற்காலத்தில் கூடியளவு பணத்தை வீட்டில் வைத்திருப்பதால், பணத்தை வைத்திருப்பவருக்கும், அவரது குடும்பத்துக்கும் உயிர் ஆபத்து ஏற்படுகின்றது. அதனால் பணத்தை வட்டி வங்கியில் வட்டியினைப் பெற்றுக் கொள்ளாமல் வைப்புச் செய்வது அனுமதிக்கப்பட்டுள்ளது. ஒருவர் தனக்கும் தனது குடும்பத்துக்கும் உயிர் ஆபத்து இல்லை என்று கருதினால் அவர் வட்டி வங்கியில் பாதுகாக்க முடியாது
remaamm said
கலநிதி அஷ்ரப் கூட்டு துஆ ஹராமான பித் அத் என்ரு சொல்கிறார்.
இது தொடர்பாக கூட்டு துஆவை ஆதரிகும் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் பதுவா குழுவில் அங்கம் வகிகும் அஷ்ஷைஹ் யஹ்யா பின் ஹனீபா அவர்களிடமோ,
வெளிகம ஹிழ்ரியா மதரஸா அதிபர் அஷ்ஷைஹ் அப்துரஹ்மான் ஹாபிழ் அவர்களிடமோ,
கொம்பனி தெருவை சேர்ந்த அஷ்ஷைஹ் ரம்ழார் அவர்களிடமோ,
கந்தலாய்யை சேர்ந்த அஷ்ஷைஹ் ழரீப் அவர்களிடமோ,
கூட்டு துஆவை அவர்கள் ஆதரிகும் நியாயத்தை கேட்டறிந்து பிரசுரித்து வாசகர்கள் உண்மை நிலமையை அரிந்து சரியான முறையில் அல்லாஹ்வை வழிபட காதான்குடி இன்போ மார்க விடயத்தில் பக்கம் சாராது எல்லா தரபு கருதுகளையும் பிரசுரித்து தானும் உலகலாவிய ஒரு பக்கம் சார ஊடகம் என்பதை நிருபிகுமா???
pothumahan said
கலாநிதி அவர்களின் பேட்டியை வெளியிட்ட இன்போக்கு முதற்கண் நன்றிகள்.
கலாநிதி அவர்களின் பேட்டியில் சில தெளிவில்லாத கருத்துக்களை அவதானிக்க முடிகிறது.
* முதலாவது சமூக அங்கீகாரம் கிடைத்தால் தான் மார்க்கத்தில் அனுமதிக்க பட்ட ஒரு விடயத்தை செய்ய் முடியுமா? சமூக அங்கீகாரம் கிடைக்காவிடில் ஸுன்னாஹ்வை கை விட வேண்டியதுதானா? கலாநிதி கூறும் சமூக அங்கீகாரத்தின் வரையரை என்ன என்பது புரியவில்லை..?
சமூக அங்கீகாரத்தை ஒரு பொருட்டாக நினைத்திருந்தால் நபிமார்களால் இந்த தீனை நிலை நாட்டி இருக்க முடியுமா?
* “கூட்டு துஆ தவிர்ந்த தாருல் அதர் போன்ற உணர்ச்சிக்கு அடிமைப்பட்ட இயக்கங்கள் கூறுவது போல் ஹறாமான பித் அத்கள் ஜும் ஆக்களில் இடம்பெறுவதில்லை.”
மஹ்ஷர் ஓதுவது, ஜும் ஆக்கு முதல் ஸுன்னத் தொழுவது, ஜும் ஆக்கு இரண்டு அதான் சொல்வது, அந்த அதானுக்கு முதல் ஸலவாத் சொல்வது, தொழுகைக்கு பின் கூட்டு திக்ர், இப்படி என் அறிவுக்கு சில விஷயங்கள் பித் அத் என்று தெறிகிறது இவை எல்லாம் ஸுன்னாஹ்தானா???
* “சரியான இஸ்லாமிய வங்கிகள் இல்லாததால் பணத்தை பாதுகாப்பதற்காக அரச வங்கிகளை பாவிப்பது சிறந்தது எனது கருத்தாகும், ஆனால் வட்டியை எடுக்கக் கூடாது.”
இஸ்லாமிய வங்கி இருக்கிறதா இல்லையா என்ற விடயத்தை விட்டு விடுவோம் ஆனால் பணத்தை பாதுகாப்பதற்கு அரச (வட்டி)வங்கிகள் சரியான இடம் என்று எதை வைத்து கூறுகிறீர்கள். அண்மைய பொருளாதார வீழ்ச்சியில் உலகில் அரச சார்பில் இயங்கிய எத்தனையோ வங்கிகள் திவாலாகி போகவில்லையா? நமது பனத்தை அவர்கள் வட்டிக்கு கொடுத்து சம்பாதிக்கிறார்கள் என்று தெரிந்தும் “பாதுகாப்பு” என்று சொல்லி அங்கே வைக்கலாம் என்பது சரியான பத்வாதானா? வட்டிக்கு கணக்கு எழுதுபவனுக்கே சாபம் என்று மார்க்கம் சொல்லி இருக்க வட்டி தொழிலுக்கு முதலீடாக நமது பணத்தை கொடுக்கலாம் என்று நீங்கள் சொல்வது வியப்பாக இருக்கிறது..???
* சீதனம் என்ற சமூக சிரழிவில் வீடு வாங்குவதுதான் மிக கொடுமையான விடயம். ஆனால் வீடு வாங்கி கொள்ளலாம் என்று நீங்கள் கொடுத்த பத்வாவினாலும் அதிகமான ஏழை மக்கள் பாதிக்கப் பட்டனர். இன்று ஒட்டு மொத்தமாக சீதனம் தவிர்க்க பட வேண்டும் என்று நீங்கள் சொல்வது மகிழ்ச்சி அளிக்கிறது ஆனால் ஏழைகள் பாதிக்க படுகிறார்கள் என்ற காரணத்திற்காக சீதனம் ஒழிக்கப் பட வேண்டும் என்ற தோரணையில் ஒரு மார்க்க அறிஞர் சொல்வது சரியல்ல. ஒட்டு மொத்த சமூகமுமே சீதனம் கொடுக்க கூடிய வசதியுடன் இருந்தாலும் இஸ்லாத்திற்கு முரணானது என்ற வகையில் இந்த நடைமுறை ஒழிக்க பட வேண்டும். ஸுன்னாஹ்வை உயிர்ப்பிப்போம் என்று பாடுபடும் நாம் எல்லோரும் ஸுன்னாஹ் என்ற பார்வையிலேயே திருமண நடை முறையை நோக்க வேண்டும். திருமண விடயத்தில் பெண் வீட்டார் தங்கள் செல்வங்களை செழவளிக்க வேண்டும் என்று எங்காவது சொல்லி இருக்கிறதா?
குர் ஆனில் தெள்ளதெளிவாக சொல்லப்பட்ட மஹர் பற்றி உரக்க சொல்ல வேண்டிய நீங்கள் “இதில் பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் இணைந்து செயற்பட வேண்டும். ” என்று பூசி மெழுகி கருத்து சொல்கிறீகளே…!!!
சமூக அங்கீகாரத்தின் மீதுள்ள உங்கள் பற்றும் உங்களோடு இருக்கின்ற சீதனம் வாங்கிய (மார்க்க??)அறிஞர்கள் மனம் புண்பட்டு விட கூடாதென்ற எண்ணமும் தான் இவ்வாறு உங்களை பேச வைக்கிறது. அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக!
உங்கள் தனிப்பட்ட கருத்துக்களும் மார்க்க பத்வாக்களாகவே நோக்கப்படும் அளவுக்கு பட்டங்களை பெயருக்கு பின்னால் சுமந்து இருக்கின்ற நீங்கள் எந்த கருத்தையும் நன்கு ஆராய்ந்து சொல்வது சிறந்தது என்பது எனது தாழ்மையான கருத்தாகும்…
Play Boy said
இப்படி எல்லாரும் எடக்கு மடக்கா கேள்வி கேட்டா அவரு என்னன்னு பதில் சொல்வார் அதான் அவருடைய நேர்கானல் ஆல்ரெடி முடிஞ்சு போச்சுதே! இந்த கேள்விக்கனையெல்லாம் கா/குடி இன்போ நேர்கானல் நடாத்தும் முன்பல்லவா நாம் கேட்டிருக்கவேண்டும்! எதற்கும் வாசகர்களின் ஐயப்பாடுகளை தீர்க்கும் நோக்கில் KWC இன்னுமொறு நேர்கானலுக்கு அரேஞ் பன்னுமா? .
kattankudi said
அஸ்ஸலாமு அலைக்கும்,
வாசகர்களின் கவனத்திற்கு:
நேர்காணலுக்கு நாங்கள் கேள்விகளைக் கோரிய போது மௌனித்திருந்த வாசகர்கள் பலர் நேர்காணலைக் கேட்டுவிட்டு வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்கியிருக்கின்றீர்கள்.
நேர்காணலின் பின்னர் வரும் கேள்விகளுக்கு விடை பெற்றுத் தர முயற்சிக்கப்படும் என்றோ அல்லது பின்னர் வரும் கேள்விகளுக்காக தனி நேர்காணல் ஏற்பாடு செய்யப்படும் என்றோ நாங்கள் உறுதியளிக்கப்படவில்லை என்பதை கவனிக்கவும். இது நடைமுறைச் சாத்தியமற்றதாகும்.
மிகுந்த முயற்சி செய்யப்பட்டு நேரம் ஒதுக்கப்பட்டு பல்வேறு வேலைகளுக்கு மத்தியில் பிரபலமானவர்களை சந்தித்து நேர்காணல்கள் இடம்பெறுகின்றன என்பதை வாசகர்கள் கவனிக்க வேண்டும்.
WebAdmin
ஜிப்ரி said
வஅலைக்குமுஸ்ஸலாம்
kattankudi.info நீங்கள் கூறுவதிலும் நியாயங்கள் இருக்கிறது. ஆனால் கலாநிதி அவர்கள் கூறிய விடயங்களிலிருந்துதானே கேள்விகள் கேட்க முடியும். இப் பேட்டியில் பல புதிய கருத்துக்களை அவர் கூறியிருக்கிறார். அதற்கான ஐயங்களை முன்னரே கேட்கமுடியாதல்லவா?. (இக் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை கலாநிதி அவர்களுக்கு இருக்கிறது.)
kattankudi said
அஸ்ஸலாமு அலைக்கும்.
சகோதரர் ஜிப்ரி அவர்களுக்கு,
உங்களுக்கு வரும் புதிய ஐயங்களுக்கு பதில் பெற்றுத் தருவதற்கான எந்தவொரு உத்தரவாதத்தையும் நாங்கள் வழங்கியிருக்கவில்லை என்பதைக் கவனிக்கவும்.
எந்தவொரு ஊடகமும் நேர்காணல் முடிந்த பின்னர் வரும் கேள்விகள் தொடர்பில் நீங்கள் கோருவது போன்ற நடைமுறைகளைக் கையாள்வதில்லை.
இவ்விடயம் தொடர்பான எமது நிலைப்பாடு தொடர்பான இறுதியான பதில் இதுவாகும்.
WebAdmin
sanasamana said
அன்பின் காதான்குடி இன்போ முகமைதுவதுக்கு
அஸலாமு அலைகும் வரஹ்மதுலாஹி வபரகாதுஹு
தாங்கள் யாரையும் பேட்டி கண்டு உங்கள் இணையதில் பிரசுரிகமுடியும்
ஆனால் இஸ்லமிய ஷரிஅர்த் பற்றிய விடயங்களை ஒரு துறை சார் நிபுனர் தெரிவிகும் பொழுது அவரது கருதுகள் புதுமையானதாய் இருகும் பொழுது இது தொடர்பாக இலங்கையில் உள்ள ஏனைய துறை சார் நிபுனர்களின் கருதுகளை கேட்டறிந்து நேயர்கலுகு தெளிவை உண்டாகுவது பொருப்புள்ள ஊடகம் என்ற வகையில் தங்களின் கடமை.
ஏனெனில் தாங்கள் செவ்வி கண்டவரை விட இஸ்லாமிய துறை சார் நிபுனர்கள் பல நபர்கள் இருகின்றனர்.
எனக்கு தெறிந்தவரை 10 கலாநிதிகலும், 30 மேட்பட்ட முப்திகளும்,மேலும் முபஸிரிங்கள்,முதரிஸிங்கள்,என ஏறாள மானோர் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவில் அங்கம் வகிபதுடன் முலு உலகிலும் சென்று வருகை பேராசிரியர்களாக விரிவுரையாளர்களாக பணி புரிஉம் ஏரழமானோர் இருகின்றனர்
எனவே மர்க விடயதில் தெளிவை ஏட்படுதுங்கள்
இல்லை எனில் கலாநிதி அஷ்ரப் அவர்களின் கொல்கைகளை நீர் ஊற்றி உரம் விட்டு வளர்கும் ஊடகம் தான் காதான்குடி இன்போ என்பதை நேயர்கலுகு பிரகடன படுத்தி இந்த விடயதுகு முற்று புள்ளி வையுங்கள் என தாள்மையுடனும் பணிவுடனும் கேட்டு கொள்கிறேன்
நன்றி