காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 4,986,219 மொத்த வருகைகள்

வாசகர்களின் பெருநாள் வாழ்த்து

Posted by Kattankudi Web Community (KWC) on 17/11/2010

உலகில்  உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் தியாகத் திருநாள்  வாழ்த்துக்களை தெரிவிக்கும் எமது வாசகர்கள்.

This slideshow requires JavaScript.

தந்தை இப்றாகிம்
வழிவந்த திருநாள்
உயிர் தியாகத்தை
உணர்த்தும் நன்நாள்.

ஈதுல் அல்ஹா…ஹஜ்ஜூப் பெருநாள்!

நினைத்துப் பார்க்கையிலே
நனைந்துப் போகும்
விழிகள்;
காலம் கடந்துப் போனாலும்
கனத்துப் போகும்
தியாகம்!

இறைக் கொடுத்த
வஹிக்கு
பலிக் கொடுக்கச் சென்று
வரலாற்றில் பதிக்கப்பட்ட
தியாகம்!

பெற்றெடுத்தப் பிள்ளையை
விட்டுக் கொடுத்த மாண்பு;
துணிந்த போதும்
தணிக்கைச் செய்த
அல்லாஹ்வின் அன்பு!

வெற்றிப்பெற்றச் சோதனைக்கு
இன்னும் ஒரு பெருநாள்;
தியாகத்தை நினைத்துப் பார்க்க
அறுத்து பலியிடும் திருநாள்!

முகம் ஒளிர  அகம் மலர
வாழ்த்துக்கள் பரிமாற்றம்;
புத்தாடைகளும் இனிப்புகளும்
காட்டட்டும் புதுத் தோற்றம்!

கசப்புகளைக் கசக்கிவிட்டு;
வெறுப்புகளை உமிழ்ந்துவிட்டு
முத்தமிட்டு அணைப்போம்
சகோதரனை!
எட்டுத் திக்கும் தெரியட்டும்
நம் தோரணை!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s