நேர்காணல் 01: சட்டத்தரணி அப்துல் ஜவாத் அவர்களுடனான நேர்காணல்
Posted by Kattankudi Web Community (KWC) on 04/11/2010
MSM. Noordeen / MACM. Jelees / AM. Sathikeen / Video team
எமது இணையத்தளத்துக்காக எமதூரின் மூத்த சமூக சேவையாளரும், முன்னால் நகரசபைத் தவிசாளரும், பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் உதவித்தலைவருமான சட்டத்தரணி அப்துல் ஜவாத் அவர்கள் வழங்கிய பிரத்தியேக நேர்காணலின் Audio பதிவு இங்கு பதிவேற்றப்படுகின்றன.
Video பதிவுகள் மிக விரைவில் பதிவேற்றப்படும்.
Audio முழுமையாக ஒன்றாகவே பதிவேற்றப்பட்டுள்ளது என்பதுடன், Video பதிவேற்றுவதற்கு தொழிநுட்பரீதியான தாமதங்கள் ஏற்பட்டமைக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்வதோடு, Video ஐந்து பகுதிகளாக பதிவேற்றப்படவுள்ளது. Videoவை முழுமையாக பார்வையிட சற்று நேரம் செல்லக்கூடும் என்பதைக் கவனிக்கவும்.
பேட்டியின் முழுமையான எழுத்து வடிவத்தை வெளியிட நாங்கள் உத்தேசித்திருந்த போதும், அதற்கு நேரம் எடுக்கும் என்பதனால், உடனடியாக வெளியிடப்படவில்லை. முக்கியமான விடயங்கள் சில கீழே தரப்படுகின்றன:
- அரசியலிலிருந்து முழுமையாக ஒதுங்கிவிட்டேன், நகரசபைத் தேர்தல் உட்பட எந்தத் தேர்தலிலும் இனிப் போட்டியிட மாட்டேன்.
- சம்மேளனத்துடன் இணைந்து சமூக சேவையில் என்னால் முடிந்தளவுக்கு ஈடுபடுவேன்
- ஹிஸ்புல்லாஹ் தனது திறமையால் பல அபிவிருத்தித் திட்டங்களை ஊருக்குக் கொண்டுவருகின்றார்
- மாகாண சபை உறுப்பினர் முபீன் ஒரு நல்ல சமூக சேவையாளர்
- நகரசபைத் தேர்தலில் PMGGக்கு ஆதரவளிக்கப்போவதில்லை
- பொறியியலாளர் ரஹ்மான் – பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுடன் அரசியல் ரீதியாக இணைய வேண்டும்
- Kattankudi.info ஒரு நடுநிலையான ஊடகம்
- இளைஞர்கள் சமூக சேவையில் ஆர்வத்துடன் ஈடுபட வேண்டும்
பேட்டியின் முழுமையான ஒலிப்பதிவை கேட்க கீழேயுள்ள சிவப்பு நிற அம்புக்குறியை கிளிக் செய்யவும்.
பேட்டியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வாசகர்களுக்காக் இங்கு பிரசுரிக்கப்படுகின்றன.
This slideshow requires JavaScript.








fancyjabeer said
he is great
Sadique said
இந்நேர்காணலை ஏற்பாடு செய்த Kattankudi.info க்கும் மதிப்பிற்குரிய ஜவாத் சார் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
appavi said
பெரு மதிப்பிற்குரிய ஜவாத் சேர் அவர்களை பேட்டி எடுத்து வெளியிட்டமைக்கு,
முதல் கண் kattankudy info வுக்கு மனமார்ந்த நன்றிகள்.
“மரணத்தை விட கொடிய வலி மறக்கப்படுதல்”.
மிகச்சரியான நேரத்தில் சேர் இற்குரிய மதிப்பினை அளித்து செய்யப்பட்டிருக்கும் இந்த பணி பாராட்டுக்குரியது.
பட்டவர்த்தனமான பேட்டி என்றால் இதுதான் …..
யாருக்கும் முதுகு சொறியாத சேர் இன் கம்பீரம் இன்னும் அப்படியே இருக்கிறது.
இளையவர்கள் பார்த்து பயன் பெறவும், நிறையவே படித்துக் கொள்ளவும்,
இந்த பேட்டி நிச்சயம் உதவி ஆக அமையும்.
HATTS OFF JAWATH SIR…..
THANKS A LOT TO KATTANKUDY INFO.
ramsy l said
good
Samsudeen said
ஆயிரம் பேர் வந்தாளும் சிங்கம் சிங்கம்தான்
Fahmy said
முதல் மகனுக்கு
முதல் மரியாதை,
இணையத்திற்கு நன்றி
நகரசபை அரியாசனம் போனாலும்
இன்னும் எங்கள் மனங்களில்
சரியாசனம்தான்
பதில்கள் பலே………….
Bazeer Hajiyar Ashbiya said
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு நிறைந்த ஜவாத் சேரின் தலைமையில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக ஊரின் பணி செய்து வருவதையிட்டு பெருமையடைகின்றேன் பொருத்தமான நேரத்தில் அவரின் நேர்காணலை உலகறிய வைத்த காத்தான்குடி இன்போ இணையத்தளத்திற்கு எனது பணிவான நன்றிகளும் வாழ்த்துக்களும்.
(பஷீர் ஹாஜியார் அஷாபியா)
ahamedians said
kattankudi.info நடுநிலை தன்மை வாய்ந்ததா?
Mohd said
அதுதான் நீங்களௌளாம் சேர்ந்து ………….பன்னினயோ???
சும்மா போங்க பாய்..
Ahamed Rizvi said
எத்தனையோ பழிச்சொற்கள், விமர்சனங்கள் வந்தபோதும் அத்தனையையும் ஜீரணித்துக்கொண்டு இன்றுவரை சமூகத்திற்காக உழைத்துக் கொண்டிருக்கும்
ஜவாத் சேர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
அல்லாஹ் தங்களின் சேவைகளைப் பொருந்திக் கொள்வானாக..!
Thanks to kkyinfo.
mj,anwar ali said
god is great
Haleem Aswar said
அன்பின் இஸ்லாமிய சகோதரர்களுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும்
ஒரு கண்ணியமான ஒரு மனிதரை நேர்காணல் கண்டத்தின் மூலம்
மேற்படி ஊடகமும் கண்ணியம் அடைந்துள்ளது .பாராட்டுக்கள் .
சமூக சேவை செய்பவர்களை வாழும்போதே வாழ்த்துவது
பெரும் நன்மையான விடயமாகும் .மனிதர்கள் தனது சமூகத்துக்காக
செய்யும் நட்காரியங்களுக்கு அந்த சமூகமும் அந்த தனி மனிதர்களுக்கு
நன்றியுடன் நடந்து கொள்ளும்போது அங்கே அல்லாஹ்வின் உதவி
உறுதியாகி விடும் என்பதை இஸ்லாம் எமக்கு கற்றுத்தருகின்றது .
BADURDUJA (THUJA) said
THANKS FOR JAWATH SIR INTERVIEW and THANKS FOR KATTANKUDI INFO.COM TEAM.
JAZZAKALLAH KHIR
A.A.MOHAMED BADURDUJA(THUJA
DUBAI UNITED ARAB EMIRATES.
Mohammed Jalees said
1992 நடந்த சம்பவங்ஙளுள் ஒன்று:
ஊரிலிருந்து காலையில் கல்முனை நோக்கிச் சென்றுகொண்டிருந்த VAN விடுதலைப்புலிகளால் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டு ஜனாஸாக்கள் வீதிகளில் சிதறப்பட்டுக்கொண்டிருந்த நேரம் அது. ஜனாஸாக்களையும் காயப்பட்டவர்களையும் எடுத்துவருவதற்கு ICRC யைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் மெத்தைப்பள்ளிவாயலுக்குள் (வறாந்தாவில்) காத்திருந்தனர். அப்போது அங்கு குழுமியிருந்தவர்கள் மத்தியில் அவர்கள் நடந்தது பற்றி விசாரிக்க எத்தணித்துக்கொண்டிருந்தனர். குழுமியிருந்தவர்கள் எவருக்கும் நடந்ததை ஆங்கிலத்தில் விளங்கப்படுத்த முடியாத நிலையில் தவித்துக்கொண்டிருந்த அத்தருணத்தில் எல்லோரும் சொன்ன ஒரே வார்த்தை ‘ஜவாத் சேரைக் கூட்டிவாருங்கள்’. சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவசர அவசரமாக பள்ளிவாயலுக்குள் நுழைந்த அவர்கள் சம்பவத்தை ஆங்கிலத்தில் விளக்கி ஜனாஸாக்களையும் காயப்பட்டவர்களையும் அவசரமாக ஊருக்கு எடுத்துவரச் செய்த இந்தச் சம்பவம் இன்றும் என் மனதில் உள்ளது. அதேபோல் 1994 தேர்தலின் போது அவர் நோவினைப்படுத்தப்பட்டதும் சமூகத்தின் உள்ளங்களில் இன்றும் உள்ளது.
Uwais Mohideen said
ஜவாத் சேரின் சமூகப் பணிகளை வார்த்தைகளால் வெளிப்படுத்துவது முடியாத விடயம். அரை நூற்றாண்டுக்கும் மேலாக சமூகத்துக்காக உழைப்பது என்பது சிறிய விடயமல்ல, எவ்வித சுய லாபமும் கருதாத இவரது சேவைகளை அல்லாஹ் பொருந்திக்கொண்டு நிரப்பமான கூலியை அளிக்க வேண்டும்.
பல சம்பவங்களைக் குறிப்பிடலாம், சுனாமியின் போது சொந்த மகனைப் பறிகொடுத்துவிட்டு (மகன் ஜிப்ரி கூட காயமடைந்த மற்றும் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டவர்களை காப்பாற்றும் நோக்குடனேயே கரையோரம் சென்றிருந்தார்), யாரும் கலக்கமடையும் வேளையிலும் முழுமூச்சாக நிவாரணப்பணிகளில் அவர் ஈடுபட்டது எனக்கு இன்றும் நினைவிருக்கின்றது.
அவரது அனுபவம், சமூக நோக்கு ஆகியன அவருக்கு இடையறாத சமூகப்பணிகளுக்கான திடத்தைக் கொடுக்கின்றன என்பதே எனது கருத்தாகும்.
nirfan said
MasaaAllah…. good job done by Kattankudi.info and Mr. Noordeen.
Eventhough I was not a supporter to Jawath Sir in 1994 election, Currently Jawath Sir is a Living Legend to me. Actually our society has to ustilize him well in each and every aspect. Those who are in active social works can consider him as a Role Model to them.
I did not heard in any event Jawath Sir had been congratulated for the services are being redered by him to the society. (If any one can remind any such event held in past?)When our socity is going to congratulate Jawath Sir?
The important decision (only for the society’s interest but not for the your own benifits) you had made was working together with Mr. Hizbullah once after the 1994 election. This kind of attitude cannot be displayed by none other you. That is how you are now in the heart of kky people. I too admired about your decision when comparing with the current time …. politicians.
I proud about you the way you are acting in kky. Well done Jawath Sir, Wishes for your future commitment.
Nirfan
Mohamed jemzeeth said
Thanks for JAWATH sir.
Baazir said
A Good Man
Ruzwin said
He is a great man
Tx to Kz info