தற்பெருமை – குறுங்கதை
Posted by Kattankudi Web Community (KWC) on 22/10/2010


-எம்.ஜே.அன்வர் அலி-
அந்திமயங்கிய மாலை வேளை வானுயர் மரங்களின் சோலைகளின் மத்தியில் ஒரு சிறிய வறண்டகுளத்திலே மீனும் தவளையும் வாழ்ந்து வந்தன. அதன் அருகிலொரு மரப்பொந்தில் நீண்ட நெடிய கரு நாகமொன்றும் மறைந்திருந்தது.
நீண்ட நாட்களாய் மழை இல்லாததால் வறட்சி அதிகரித்து குளம் வற்றிப்போகும் நிலை ஏற்பட்டது. குளம் வற்றிப்போனால் உயிர் வாழமுடியாமல் இறந்துபோய்விடுவோம் என்ற அச்சத்தால் மீனும் தவளையும் பாம்பும் இறைவனிடத்தில் மழைவேண்டி பிராத்தித்தன.
நீரின் மேற்பகுதிக்கு வந்து பெருமூச்சு விட்டு வானைப்பார்த்தபடி மீனும், கற்பாறையில் கவலையோடு அமைதியாய் அமர்ந்தவாறு தவளையும், காய்ந்த மரக்கொப்பிலே சுற்றிக்கொண்டு கண்ணீர் வடித்தபடி பாம்புமாய் வறட்சி நீங்கி நிலம் குளிர்ந்து மரங்கள் செலித்து குளம் நிறம்பவேண்டும் என்று இறைவனிடம் மன்றாடிக்கொண்டிருந்தன.
சிறிது நேரத்திற்குப்பிறகு காரிருள் சூழ கரு முகில் கூட குளிர் காற்று வீச வானிலே இடி முழங்கி மின் வெட்ட ஆரம்பித்தது. மழைத்துளிகள் மண்ணைத்தொட காயந்து பறந்த சருகுகள் களைப்பாறி மரத்தடியில் மெல்ல அமர்ந்தன.
சிறு துள்ளி பெரு வெள்ளமாகி வறண்ட குளம் நிறம்பி காட்டு மரங்கள் காற்றாடியாய் மாற மழை சற்று ஓய்ந்தது.
மழையைக்கண்ட மகிழ்சியில் மீண் தன் தலையை உயர்த்;தி சத்தமின்றி இறைவனுக்கு நன்றி கூறியது. இதைக்கண்ட தவளை எனக்காகத்தான் மழை பெய்தது இந்த மழை எனக்குத்தான் சொந்தமானது என் பிரார்தனையால்தான் மழை வந்தது என்று கூக்குரல் எழுப்பி குளத்தில் குதிப்பதும் மரத்தில் பாய்வதுமாய் தன்மார்பு தட்டி தம்பட்டமடித்து தலைக்கணம் பிடித்து துள்ளித் துள்ளித் திரிந்தது.
மரப்பொந்திலே பசியால் வாடி மறைந்திருந்த நாகம் தாகம் தீர தண்ணீர் அருந்த வெளியே வந்தது தவளையொன்று தன்னெதிரேநின்று தாறுமாறாய் தப்புத்தப்பெனத் துள்ளுவதைக்கண்டது. தன் பசிக்காக இறைவன் தந்த உணவு என்பதாக நிணைத்த பாம்பு தவளையை பாய்ந்து பிடித்துக்கொண்டது.
தவளை தன் வாயால் கெட்டதைக் கண்ட மீன் தற்பெருமை தமக்கு உதவாது பொறுமையும் அமைதியுமே தன்னைக்காத்தது என எண்ணியவாறு நாகத்தின் நச்சு வாய்க்கு இரையாகிவிடாமல் நன்நீருக்குள் தன்னை நன்றாய் மறைந்து கொண்டது.
கிழக்கொலி
எம்.ஜே.அன்வர் அலி.
காத்தான்குடி.02







MHM said
NALLE KATHAI BUT ENGEYO IDIKKUDEY MR ANWER ALI
AnniyanN said
ம்ம்… பிறகு….?
fancyjabeer said
நிலமைக்கேத்த கதை
Son of kky said
இதைதானா தவளை தன் வாயால் கெட்டது என்று சொல்றது? Thanks Brother nice story.
comfortable shoes said
i like this because u given a lots of information about languages.i like it.