நாங்கள் ஒருசதமாவது கொமிஸன் வாங்கினோம் என பொறியியலாளர் அப்துர் றஹ்மானினால் நிரூபிக்க முடியுமா? காத்தான்குடி நகர சபையின் பிரதித்தலைவர் அஸ்பர் சவால் (Audio updated)
Posted by Kattankudi Web Community (KWC) on 02/10/2010
செய்தி: MSM. நூர்தீன் / ஒலிப்பதிவு: MACM. ஜெலீஸ்
பொறியியலாளர் அப்துர்றஹ்மான் மற்றும் அவரது நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் காத்தான்குடி நகர சபையின் ஆட்சி அதிகாரத்தை பெற வேண்டுமென்பதற்காக தற்போதய காத்தான்குடி நகர சபை நிர்வாகத்தின் மீது அபாண்டங்களை சுமத்தி அரசியல் செய்ய வேண்டாமென நகர சபையின் மாதார்ந்த கூட்டத்தில் கேட்டுக்கொன்டதாக காத்தான்குடி நகர சபையின் பிரதித்தலைவர் எஸ்.எச்.எம். அஸ்பர் காத்தான்குடி இன்போவுக்கு தெரிவித்தார்.
அவர் தனது நகர சபை உறைபற்றி காத்தான்குடி இன்போவிற்கு மேலும் விபரிக்கையில்:
“பொறியியலாளர் அப்துர் றஹ்மான் எடுத்ததற்கெல்லாம் கொங்கிறிட்வீதியைப்பற்றியும் நாங்கள் பிழையாக கொங்கிறிட் வீதி போட்டிருப்பதாகவும் கூறித்திரிகின்றார்.
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் வைபவமாக இருந்தாலும் சரிதான் எந்த நிகழ்வாக இருந்தாலும் சரி அல்லது இவர்கள் நடாத்திய இப்தார் நிகழ்விலும் சரி, அவர் கொங்கிறிட் வீதியினைப்பற்றி பேசாத சந்தர்ப்பம் இல்லை.
நாங்கள் ஒப்பந்த காரர்களிடம் கொங்கிறிட் வீதிகளுக்கு கமிஸன் வாங்கியதாக அப்துர் றஹ்மான் கூறிவருகின்றார். முடியுமானால் நாங்கள் ஒருவரிடமாவது கொமிஸன் வாங்கினோம் என அப்துர் றஹ்மானினால் நிரூபிக்கமுடியுமா? ஏன் இவ்வாறான பொய்களை அரசியலுக்காக பேசித்திரிகின்றீர்கள் உங்களது கொள்கையினை பேசி வாக்குத் தேடுங்கள் வெறுமனே எங்களை விமர்சிக்காதீர்கள்.
நான் சின்னவயதிலிருந்து சமூக சேவையில் ஈடுபட்டு சமூகத்தின் இன்பம் துன்பம் அனைத்திலும் பங்கு கொண்டு களத்தில் வேலை செய்துவிட்டே இச்சபைக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்டு வந்தேன்.
அந்த சமூக வேலைத்திட்டத்தையே இச்சபையினூடாகவும் செய்து வருகின்றேன். ஒரு சதம் கூட யாரிடமும் கொமிஸன் வாங்கிக்கொண்டு நான் வேலைசெய்யவில்லை.
அப்துர் றஹ்மானும் அவரது நல்லாட்சிக்கான மக்கள் இயக்கமும் காத்தான்குடி அபிவிருத்திக்கு ஆதரவாக இருந்ததே கிடையாது. அபிவிருத்திக்கு ஆதரவாக இருந்த சரித்திரமே கிடையாது மாறாக அபிவிருத்தி திட்டங்களை விமர்சிக்கும் இவர்கள் அபிவிருத்தியின்முழுப்பயனையும் அடைகின்றனர்.
உதாரனமாக ஹிஸ்புல்லா இஸ்லாமிய கலாசார மண்டபத்தை விமர்சித்த இவர்கள் இன்று அதனைப் பயன் படுத்துகின்றனர். நாங்கள் அர்ப்பனிப்புடனும் தியாகத்துடனும் தான் இச்சபையை நடாத்திவருகின்றோம். மாறாக இங்கு யாரிடமும் கொமிஸன் வாங்கி நாங்கள் வாழவில்லை நாங்கள் இங்கு காத்தான்குடி நகர சபையை பொறுப்பேற்கும் போது இது ஒரு நரக சபையாக இருந்தது. இன்று அதை மாற்றி சிறந்ததொரு நகர சபையாக்கியுள்ளோம்.
இலங்கையில் காத்தான்குடியில் தான் அதிகமான கொங்கிறிட் வீதிகள் போடப்பட்டுள்ளன. அரசாங்கம் சரியாக கொங்கிறிட் வீதிகளைப்போட்டுள்ளனர் என்று கூறும் நிலையில் இவர்கள் மாத்திரம் விமர்சிப்பது இவர்களின் அரசில் இலாபத்தையே காட்டுகின்றது.
ஏற்கனவே இச்சபையில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தைச்சேர்ந்த மூன்று உறுப்பினர்கள் இருந்து விட்டுச்சென்றுள்ளனர். அவர்களிடமாவது விடயத்தை கேட்டு தெரிந்து கொள்ளமுடியும். இதை விடுத்து தேயைற்ற பிரச்சாரங்களை எம்மைப்பற்றி செய்யவேண்டியதில்லை” என மேலும் இங்கு கூறியதாக தெரிவித்தார்.
காத்தான்குடி நகர சபையின் இந்த மாதார்ந்த கூட்டம் நேற்று நகர சபையின் சபா மண்டபத்தில் அதன் தலைவர் மர்சூக் அகமதுலெவ்வை தலைமையில் நடைபெற்றபோது அனைத்து உறுப்பினர்களும் சமூகம அளித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
இவ்விடயம் தொடர்பில் பிரதித் தவிசாளரிடமிருந்து பெறப்பட்ட ஒலிப்பதிவொன்றை எமது செய்தியாளர் ஜெலீஸ் அனுப்பி வைத்திருந்தார். அது வாசகர்களுக்காக இங்கு பிரசுரிக்கப்படுகிறது.
[Audio http://blip.tv/file/get/Kattankudi-AsfarWCOnPMGG696.mp3]







anbu said
elaya thalafathiku payanthu yarum ondum solrrnkala illaya pa.parpam singam ondu munvaramaya pohum
nalamnadi said
நிருபிக்கப்பட்டால் அரசியலிலிருந்து பூரணமாக ஒதுங்க தயாராக உள்ளாரா?
The BOSS said
Class Teacher: உங்கள் ஊரில் “ஒரு சதமேனும்” வாங்கவில்லையென்று சொல்பவர்களின் பட்டப் பெயர்களை பட்டியெலிடுக..
Student:
1. சேர்
2. தலைவர்
3.
4.
5.
6.
இன்னும் இது தொடருமென்பதால் இலக்கங்களை இட்டுள்ளேன் Marks யை போடவும்.
nirfan said
R……………. will definitely prove the commission matter as he is Eng……….
Saraasari Manithan said
சவாலுக்கு PMGG இன் பதிலைக்காணோமே….!!
mr.man said
dear vice chirmen, you are very smart at any time.the people of kattankudy wants y to become next time as a chirmen .I wish y all the best,but since you are a very good social worker from the begning to kattankudy people, we wants you to contnuie. even if you get power you have to think about socities goodness not to the contracters wills.do you accept sincerly the manner the roads have put in kattankudi.you are puting so many roads but these are not going to long last.you can compaire it with other places.so,if you found the roads are not propelly put by the contracters in kattankudy you can stop the payment by your sabaa and ask the contarcters to get the work done properly.then the person like mr.r………..n can not do any things also you dont mind thire comments.be honest to be smart at any time.
nalanvipumpi said
asfar p……… ku ithuthan mahane trade.avarhaluku ini onrum seiya mudiyathu. e… vanthalum konthurathu edupar.appa nanka ketpam asfar.neenka summa work ka kondu ponka.
mohamed said
கமிஸன் எடுக்கவில்லைவை என்ராரு கொந்துராத்து சைய்யவில்லை என்டு சொல்லவில்லயை…….
எங்களுக்கும் தெரியும் எப்படி பேட்டி கொடுப்பது என்று எல்லாம் என்க தலைவர் படிப்பித்து இருகார்.
shiyam said
one of the best example for the very bad planing concrete road is METHTHAIPALLI LANE. this is a important lane to reach meththaipalli mosque. during the rainy days water collects in the half of the lane .several times we have reported to MR.AZFAR and other members about the inconvenience. nobody considered about this.
Nattup Pattralan said
Dear Asfer,
Are you talking about the road has put with improper manner which you can see the evidence in front of Muhsin Moulana? It is one road, but two different levels. one side is one feet higher than other side. what are you going to say. I think nobody is telling the name that “he is getting commission this much paticularly”. but the road is being an example. Can any body gove proper reason for different levels in a road.
Dear Asfer,
You have so much concern about commission roads. As per your discussion which was held yesterday Abdur Rahman also mentioned about 9 roads which is not constructed, but payments have gone. Current auditors found these frauds. Chairman Marsook Ahamed Lebbe also agreed the fraud. You was there at the time. Were you?
What is your answer dear……………
Nattup Pattralan said
Ellorum commission roadaye pattri pesureenga………………
Ana roade podama 9 roduku kaseduthirikanngale……………..
Athe UC ila audit pandra auditorsum Pudichittangalee……….
Ithuku enna bathil???????????????????????????????????????????
shukri said
Hi…mr asfar… nenga comsn edutaya illaya enpatha rahman eng sollitan nanga theriyanum endu illa. oru tharam kkya sutri round adichale pothum. unga sayamelam velutidum.
Mymza said
சவாலுக்கு PMGG இன் பதிலைக்காணோமே….!!
waka waka said
சரியான நேரத்தை எதிபார்த்துக்கொண்டும் இருக்கலாம் அல்லவா.
kkyan said
சரியான நேரம்
வருகின்ர தேர்தல தோத்த பிரகு
rifafatima said
I wish y all the best,but since you are a very good social worker from the begning to kattankudy people, we wants you to contnuie.
Class Teacher: உங்கள் ஊரில் “ஒரு சதமேனும்” வாங்கவில்லையென்று சொல்பவர்களின் பட்டப் பெயர்களை பட்டியெலிடுக…………..?
நிருபிக்கப்பட்டால் அரசியலிலிருந்து பூரணமாக ஒதுங்க தயாராக உள்ளாரா?
உங்களது கொள்கையினை பேசி வாக்குத் தேடுங்கள் வெறுமனே எங்களை விமர்சிக்காதீர்கள்.!
அப்துர் றஹ்மானும் அவரது நல்லாட்சிக்கான மக்கள் இயக்கமும் காத்தான்குடி அபிவிருத்திக்கு ஆதரவாக இருந்ததே கிடையாது?
so, what happen their what is truth?
Baazir said
“உங்களது கொள்கையினை பேசி வாக்குத் தேடுங்கள் வெறுமனே எங்களை விமர்சிக்காதீர்கள்.!” அஸ்பர் நானா! இந்தக் கருத்தை தனக்குத்தானே சொல்லிகொள்ளுங்கள்
waka waka said
அப்பிடிச்சொல்லுங்க பாசிர்…
powerkky said
மிக அருமையான முடிவு அஸ்பர். நீங்கள் உத்தமர்கள் என்பதனை எதனை அடிப்படையாக வைத்து முன்வைப்பதற்கு முனைகின்றீர்கள். எமதூருக்கான அபிவிருத்திகள் அனைத்தும் நகர சயையினூடாக முன்வைக்கப்படும் போது ரோட்டு போடுகின்ற கொண்ரெக்களை அனைத்தையும் எடுத்தவர்கள் உங்களைப் போன்ற நகரசபை உறுப்பினர்கள் தானே அல்லவா? நகர சபையால் அங்கீகரிக்கப்பட்டு உங்கள் போடப்படாத பல கிறவெல் வீதிகளை இன்ஸா அல்லாஹ் மிக விரைவில் பட்டியலிடுகிறேன். மேலதிகமாக நகர சபையின் முழுநேர உறுப்பினராக பணிபுரியும் உறுப்பினரான நீங்கள் நகர சபையின் ஊதியத்தில் இருந்து எவ்வாறு …………………………………………………………………… அல்லாஹ்வை முன்னிலைப்படுத்தி சொல்லுங்கள். இல்லையேல் இந்த காத்தான்குடி ஏழைகளின் கண்ணீரும் அவர்களின் பிரார்த்தனையும் என்றாவது ஒரு நாள் உங்களைத் தண்டிக்கும என்பதனையும் தயவுசெய்து மறந்து விட வேண்டாம்
sodukku - KKY said
நல்லா கேக்ராங்க்ய டீடைலு….
சொல்ல வந்தத முழுசா சொல்லுங்க தம்பி. நீங்க என்ன கேக்குறீங்கன்னு கொஞ்சம் கொஞ்சம் விளங்குது. அதாவது ஒரு கமிசனும் வாங்காம இவ்வளவு ……… எப்படி சேத்த என்டு கேக்குறீக..
நான் கேக்கன் எங்கட தல இந்த நகர சப சேமனா வந்து நகர சப உறுப்பினரா வந்து என்ன கொள்ளக் காலம் போயிச்சோ….?? அதுக்கு முதல் இவரு என்ன செஞ்சாரு எங்கறது தம்பி உனக்கு தெரியாம இரிக்கலாம். ஆனா காத்தான்குடி ஒரிஜினல் சிட்டிசனுக்கு இது ரொம்ப நல்லாத் தெரியும்.
தம்பி அஸ்பர் இரிக்காக… மார்க்கத்தையும் மதிச்சி செயப்படுற அவரு கமிசன் வாங்கினதப்பத்தி ஊருல ஒரு மேடையும் உடாம பேசுறவக 100க்கு 100 நியாயமான மனுசன்க எங்கறத்த உறுதிப்படுத்துவாகலா? அடுத்தவன்னட ……….. கழுவறத்துக்கு மதல் உங்கட க…..டு வாங்க…
இஞ்ச க……….. வந்திரிக்கிற எவ்வளவு பெரு அவக செய்யிற தில்லுமுல்லுகள சொல்லுறாக? இதையெல்லாம் Nடைக்கு மேட சொன்னா கிழிஞ்சிறாது……..?
ஒவ்வொரு மனுசனாப் பிறந்தவனும் மவுத்தாகப் போறம் எங்கறது தெரிஞ்சிதான் இந்த உலகத்துல சீவிக்காக… ஒரு பூச்சிக்கு கேடு செஞ்சவனும் அல்லாஹ்ட தண்டனையில இருந்து கழற ஏலாது எங்கறது எங்கட தலக்கும் தெரியும், அதப்போல மத்தவகளுக்கும் தெரிஞ்சிருக்கும்.
அல்லாஹ்க்கு செய்யிற பாவத்த அவன்ட மண்டியிட்டு மன்னிப்பு கேட்டா அவன் நாடினா மன்னிப்பான் என்டு உலமாக்கள் சொல்லித்தந்திரிக்காக. ஆனா மனுசனுக்கு செய்யிற ஒரு சிறு பாவமென்டாலும் அவன் மன்னிக்காட்டி அல்லாஹ் மன்னிக்கமாட்டான். இந்த விசயம் மட்டும் தெரிஞ்சாப்போதும் நாம திருந்துரத்துக்கு………..
அறபாத் said
நல்லாப் பேசுறீக அஸ்பர் நானா. நல்ல முன்னேற்றம் தெரியுது. எத இலக்கு வெக்கிரீங்க எண்டும் விளங்குது. ஆனா பெரியவர் வேறொருவர லுவா விரும்புறாப்போல கிடக்கு, அத விடுவம் அது உங்குட உள்வீட்டு சமாசாரம்.
என்ஜினீயர விடுங்க அவருக்கு இதே வேலையாப் பெய்த்து, ஆனாலும், மெத்தப்பள்ளி ஒழுங்கயப் பத்தி தம்பி சியாம் ஒரு விஷயம் கொமெண்டா போட்டிருக்காரே? பாதீன்களோ தெரியாது. மெத்தப்பள்ளி எரியாவப் பத்தி நான் உங்களுக்கு சொல்லத் தேவல்ல, அது நீங்க ஓடி விளையாடின பூமி. திடீரெண்டு ஒரு நாள் அதில அரைவாசிக்கு கொங்ரீட் வீதியப் போட்டுட்டு நீங்க போயிட்டீங்க. அடுத்த நாளே மல வந்திச்சி. நடந்தது என்ன எண்டு உங்களுக்கு தெரியாதா? நெஞ்சுல கைய வெச்சி சொல்லுங்க?
வழமையாவே அது பள்ளமான பகுதி அதுவுமில்லாம குட்வின் சந்தியிலிருந்து வாற வெள்ளம் அந்த ரோட்டாலதான் ஓடி மெத்தப்பள்ளி ஸ்கூல் சந்தியால மேக்குப்பக்கம் திரும்பி ஆத்தங்கரைக்கு ஓடுற. நீங்க மேதப்பள்ளி ஸ்கூல் சந்தியிலிருந்து சாலி GS வீட்டு சந்தி வரை இருந்த ரோட்ட ஒன்னரை அடிக்கு மேல உயத்தி கொங்க்றேவேட்டப் போட்டுட்டு போனா, இப்படிப்பிரச்சினை வரும் எண்டு உங்களுக்கு விளங்கலையா? இல்லாட்டி யாரும் சொல்லலியா? சின்னப்புள்ளைக்கும் விளங்குற விஷயம் விளங்காம அவசரமா வீதியப் போட்டதுக்கு என்ன காக்கா காரணம்?
அதுக்குப்பிறகு சாலி GS வீட்டு சந்தியிலிருந்து மதிய வீதி சந்தி வரை வாழும் மக்கள் உங்ககிட்ட வந்து பலமுற முறையிட்டும் நடந்தது ஒண்டுமில்ல. மிச்சப் பகுதியையும் கொங்க்ரீட்டாக்குவம் எண்டு குடுத்த வாக்குறுதி அப்புடியே கிடக்கு. அடுத்த மாசம் மழ எப்பிடியும் வந்திடும், திரும்பவும் வெள்ளம் வரத்தான் போகுது – வீட்டுக்க எல்லாம் ஏறத்தான் போகுது. மிச்ச ரோட்ட போட்டாலும் ஓடி வடிய இடமில்லாம தண்ணி தேங்கத்தான் போகுது.
கொமிசன் ஒரு பக்கம் கிடக்கட்டும், மக்களை வருத்துற இந்த அபிவிருத்தியின் நோக்கம் என்ன? போதாக்குறைக்கு, அந்த ஏரியாவுல உள்ள சின்னச் சின்ன ஒழுங்கைகள் ஒண்டையும் விடாம கொங்ரீட் பண்ணியாச்சி. ஒரு வழியாலையும் தண்ணி ஓட வழியில்ல நானா. உங்களுக்கு எதிராப் பேசணுமெண்டு சொல்லல்ல உண்மையான நிலைமையச் சொல்லுறன்.
ஒழுங்கா வடிகாலக் கட்ட முடியாட்டியும் இயற்கையா வெள்ளம் ஓடுற வழிகளயாவது விட்டு வெச்சிருக்கலாம்லுவா?
நாம செல்றத்த யாரு கேக்கப்பேறா? நியாயத்தப் பேசினா நாம கெட்டவன். இதான இண்டைய ஊரு நிலம
waka waka said
தோத்தாலும் வெண்டாலும் உண்மை ஒரு நாள் வெளிவரும் ராசா….இது காத்தான்குடி மண்….!
powerkky said
hi MR. SODUKKU.உங்குட தலைவர் அதைசெய்தார் இதை செய்தார் என்றேல்லாம் கொக்கறிக்கின்றீரே. அதை செய்யதான் அவர் சரி. க……….ப……….. க………. தான் அவர்களின் வழி. அதையே அவர்கள் தொடர்ந்தும் செய்ய வேண்டும். அதைவிட்டிட்டு சேவை செய்யுறம் சேனை நெய்யிறம் என்ற பேச்செல்லாம் வீன். முடியுமானால் அவர்கள் செய்த அபிவிருத்தியில் 25 வருடத்திற்கு தீர்வான ஒரு அபிவிருத்தியையாவது அடையாளம் காட்டுங்கள். எல்லாம் பச்ச மோசடி தான் தன் பக்கட்டுகள நிறப்புவதற்கான சதிதான். தலைவர் நகர சபையில் எடுக்கின்ற சம்பலம் அவர் அடிக்கின்ற சி……………., க……………. கானது பின்னர் எப்படி முழு நேர சேவகனான இவர் தன் ……………………………………. இவைகள் அனைத்தும் உங்களுடைய பணம்தான் .. மறக்க வேண்டாம்.மறக்க வேண்டாம். MR. SODUKKU
sodukku - KKY said
யாரங்கே …………. யாரடா அங்கே ?????
யாரங்கே …………. யாரடா அங்கே ?????
எங்கட தாணத் தலைவரப்பாத்து கேள்விக் கணய தொடுக்குற? இன்டைக்கு கொங்கிறீட்டு ரோட்டுல கெமிசன் அடிச்சயென்டு பேசுறானுவள். பழைய ஆண்டுவள திருப்பி பாருங்க மக்காள்.
நமமுட காத்தான்குடி போடர்ல உளள பிரச்சனயெல்லாம் ……. நின்டு தீத்து வச்சது நம்மட …………. ஹாஜி தானே. நீங்க ஊட்ட படுக்குறத்துக்கு எங்கட இளைய தளபதி எத்தன நாள்??? கண்ண முழிச்சி இருந்திருப்பாக!!
இதெல்லாம் உங்களுக்கு எப்ப தெரியப்போது??
அதுமட்டுமா?
காத்தாங்குடில பயி………..ன் பிரச்சன வந்தபோது எல்லாத்தையும் அடிச்சி துரத்தின போது முன்னுக்கு நின்டது யாரு? நம்முட தல.
அ…ர………….ட கொட்டத்த அடக்கின யாரு? நம்முட தல.
கொந்தராத்துல கொமிசன் …….. என்னப்பா? நாலு பேருக்கு தின்ன வழியில்லாம இரிக்கிறவனுகளுக்கு தின்னக் கொடுத்திருப்பாரு. இது தப்பா?
நம்மட படிச்ச மட்டம இப்படியெல்லாம் செய்யுமா? ஊருக்குதான் உபதேசம் உனக்கில்லடி கண்ணே என்டு சொல்லுவாக… இவகெல்லாம் சூராவளிலே …சுண்டல் சாபுடுரவங்க !
இதுக்கு மேலயும் தலையப்பத்திச் சொன்னா……………….!! மணலெல்லாம் ………. சி……..கும்.!!! குட்பாய்!!
innocent said
தீய செயல்களை செய்பவனுக்கு எதிரிகள் என யாரும் தனியாக இருப்பதில்லை. அவன் செய்த செயல்களே அவனுக்கு எதிரியாகும். அதுவே அவனை அழித்து விடும்.
sodukku - KKY said
நிச்சயமாக!!!
ajwar/dubai said
kattankudy makkalai yaralom eamarra mudiyadu
Noor Mohamed said
எமதூரில் எமது இளைஞர்கள் எல்லோருமே ஏதோ ஒரு வகையில் சமூகத்துக்காக போராடியவர்கள்தான், இவர் எப்போதும் அதிகாரம் உள்ளவர்களுடன் ஒட்டிக்கொண்டிருப்பதால் ஏதோ இவர் மட்டும்தான் களத்தில் நின்றதாக தம்பட்டம் அடிக்கிறார். “களம்” “களம்” என அடிக்கடி கூறுகிறாரே….. அது என்ன “களம்”? ……………………………. இதையெல்லாம் கூறுகிறாரா அல்லது?.. இவர் உண்மையாக ஊருக்காக களத்தில் நின்றவராக இருந்தால் பயில்வானிய முர்ததுகள் விடயத்தில், அப்துர் றஊப் முர்தத்கள் விடயத்தில் சகோதரர் ஹி…………வின் செயற்பாட்டோடு மோதியிருப்பார். அப்துர் ரஹ்மான் போன்றவர்கள் இதையெல்லாம் கேட்காமல் வேறு யார் கேட்க வேண்டுமென சகோதரர் அஸ்பர் எதிர்பார்க்கிறார்? இவர் தனது சொந்தப்பணத்தில் சுயநலமில்லாமல் எதையாவது இந்த ஊருக்கு கொடுத்திருப்பாரா? ஒரு பிரதி முதல்வர் பேசுவது போன்றா இவர் பேசுகிறார்!? பொறுப்பற்ற முறையில் பேசும் இவரையெல்லாம் தேர்ந்தெடுத்த நாம்தான் குற்றவாளிகள். அல்லாஹ்வை பயந்துகொள்ளுங்கள் சகோதரர்களே..!