காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 4,986,219 மொத்த வருகைகள்

பெரிய இடம் – சின்ன விஷயம்!

Posted by Kattankudi Web Community (KWC) on 29/09/2010

1. கொள்கையளவில் ஒழிக்கப்பட்டு விட்டதாக மார்தட்டப்படும் சீதனம் தொடர்பான விஷயம் அடிக்கடி பூதாகரமாக எழுவதும் பின்னர் சற்றுத் தனிவதுமாக இருப்பது நாம் அறிந்ததே!

அண்மையில் நடந்த பெரிய இடத்துக் கலியாணமொன்றில் இடம்பெற்ற சீதன யாவாரம் பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வழமையில் குறிப்பிட்ட சில பெரிய படிப்புகளைப் படிக்கும் மாப்பிள்ளைமாரை வசதிபடைத்தவர்கள் வளைத்துத் திரிவதும், மாப்பிள்ளையின் குடும்பத்தினரும் வருவதில் நல்ல விலையை தெரிந்து முடிப்பதும் வாடிக்கையான சம்பவங்கள்தானே?

இவ்வாறுதான் தேடல்கள் தெரிதல்கள் முடிந்து (அதிலும் சண்டைகள் நடந்து) ஒருவாறாக பெரிய இடமொன்றில் விலை படிந்தவுடன் மாப்பிள்ளையின் படிப்பு முடியாமலேயே நிச்சயித்து வைக்கப்பட்டிருந்த திருமணம் ஒன்று அண்மையில் நடந்தது.

ஊரிலும் கொழும்பிலும் வீடுகள் போன்ற அசையும் மற்றும் அசையா சொத்துகளைத் தள்ளி ரொக்கமாக ஒரு ஐம்பது லகரங்கள் மாப்பிள்ளைத் தரப்பால் கோரப்பட்டு பெண் தரப்பு இணங்கியிருந்தது ஆனாலும் இறுதி நேரத்தில் விடாப்பிடியாக நின்ற மாப்பிள்ளையின் தந்தை சம்மந்தியின் வாகனத்தில் ஏறிக்கொண்டு இருவருமாக கொழும்பு வந்து குறித்த ரொக்கத்தைக் கையேற்ற பின்னரே திருமணத்துக்கு அனுமதி வழங்கியிருக்கிறார். பணத்தைத் தராவிட்டால் திருமணம் நடக்காது என்ற மிரட்டலின் அடிப்படையிலேயே இந்தக் கொழும்புப் பயணம் நடந்திருக்கிறது.

இதனிடையே மணமக்களுள் ஒருவரின் உறவு முறையான முற்போக்கு அரசியல்வாதியொருவர் திருமணத்தை குடும்பத்தோடு பகிஷ்கரித்து தனது எதிர்ப்பைப் பட்டும் படாமல் வெளிக்காட்டியிருக்கிறார். நல்ல முயற்சிதான் ஆனாலும் …………….சீதனத் திருமணங்களுக்கு தன்னாலான எதிர்ப்புகளை நேரடியான – மறைமுகமாக என அனைத்து வழிகளிலும் வெளிக்காட்டத் தயங்காத இவர், இவ்வாறான சீதனப் பறிப்பு நடந்ததை ஏன் எதிர்க்கவில்லை எனவும் ஒரு கேள்வி எழுகிறது.

அது சரி ஊருக்கு வேறு நியாயம் என்பது அரசியல்வாதிகளின் இயற்கைதானே, நடத்தட்டும்.

2. அண்மையில் பட்டப்பின் படிப்பை பூர்த்தி செய்த ஒருவருக்கு வழமைக்கு மாறாக அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருவது அவதானிக்கப்பட்டுள்ளது.

இதற்கு இவர் ஒரு அரசியல் கட்சியின் அதியுயர் பீட உறுப்பினராக இருப்பது இதற்குக் காரணமாக இருக்கக்கூடும்.

முன்னதாக இக்கட்சியின் உத்தியோகபூர்வ ஊடகம் போன்றே செயற்படும் அச்சு ஊடகமொன்றில் படத்தோடு இவர் பட்டம் பெற்ற செய்தி வெளியாகியிருந்தது.

இப்போது அதே ஊடகத்திலும் அதன் இணையத்தளத்திலும் இக்கட்சியினால் வேறு பெயரில் இயக்கப்படும் நிறுவனமொன்று அவரைப் பாராட்டி கௌரவமளித்ததாக செய்தி வந்திருக்கிறது.

இது தற்செயலானது என்று விட்டு விடலாம் என்று பார்த்தல், அதே பட்டமளிப்பில் பட்டப்பின் படிப்பைப் பூர்த்தி செய்து பட்டம் பெற்ற அதே ஊரைச் சேர்ந்த இன்னொருவரை இவர்கள் கண்டு கொள்ளாததும், அண்மையில் வெளிநாட்டில் சென்று கலாநிதிப் பட்டம் பெற்று ஊர் திரும்பியிருக்கும் சகோதரர், மற்றும் பல உள்நாட்டுப் பல்கலைக் கழகங்களில் முதுமாணிப் பட்டதை அண்மையில் பெற்றவர்கள் என்று யாரையுமே இவ்வாறு கௌரவப்படுத்தவில்லை என்பதிலிருந்து இதன் உள்நோக்கத்தை விளங்கிக் கொள்ளலாம்.

இது எப்படியிருக்கிறது என்றால்:

அவர்களுடைய ஆளுக்கு

அவர்களே பாராட்டு வைத்து

அவர்களே கௌரவமளித்து

அவர்களே படமும் பிடித்து

அவர்களின் ஊடகங்களிலேயே பிரசுரித்து

அவர்களே மகிழ்ச்சி கொள்வது போல் இருக்கிறது

சுபஹானல்லாஹ்! – இப்படியுமா செய்வாங்க?

(சின்னச் சின்ன விஷயங்கள் தொடரும்)

22 Responses to “பெரிய இடம் – சின்ன விஷயம்!”

  1. Guru said

    க,,,,க,,,,க,,,,போ ,
    ஊர்க்குருவி, ”சென்று வா மகனே வென்று வா”

  2. ஐயோ ஐயோ said

    சீதன ஒழிப்பை செய்தியாக மட்டும் போட்டால் போதாது

    பெயருடன் வெளியாக்க வேண்டும் அப்போதான் மற்றவர்களும் திருந்துவார்கள்

    பாராட்டி கௌரவமளித்ததாக செய்தி………

    சின்னப்பிள்ள தனமா இல்ல இருக்கு

    சீச்சீ……….. …………. போப்போ………

  3. aslim said

    dear moderator,

    first of all this news is unislamic and this is haram. like a …, you are looking for rubbish and mud. why you are publishing news like this? do you think this will change kky society? never. most of doctors, engineers and well educated are getting dowery. in kky, it is not possible to change this.

    rather than publishing news like this, if you are really interest to help to muslims, please try to stop social problems and harams like alcohol and interest in kky.

    please go to kky qadi court and see what is going on. In kky, rich and people who live in abroad have more than one land in kky. actually they don’t required more than one. this has increased land price in kky and effectig poors.

    in kky, everybody tried to stop dowery. mainly made in saudi arabia moulavis and dawa organisatins. what is the result. what result they got?.

    dear moderator, i don’t care you are publishing this news or not. but avoid publishig news like this and keep away from this haram. if you are not bothering about islamic law, please publish news like news. this is somebody’s personal. please understand i am not supporting them. what you have to understand you cannot stop these this by publishing news this.

    our muslim organisations and islamic institutions have to understand one think. this is not a islamic country. this is a non muslim and democratic country. all SL citizens have their rights.

    • basmalah said

      Bro.Aslim,

      My question , finally, IS DOWRY HARAM OR HALAL?

      Please tell us.

    • M.Rafee said

      Dear Aslim,

      I agree with you it is backbiting.

      #1 I do not have any idea about the person.
      #2 I know it is all about …..and ……..

      I think if we have a guts to ask we should ask to their face or otherwise be silence like others.

    • Aboo Fathima said

      Dear Brother Aslim,
      What are you trying to say now?? As far as I understand, this is not a backbiting. Are you thinking dowry is a personal sin or small sin? Definitely no, It’s a great sin at the sight of Allah. The people who are getting dowry should be afraid to do this. How this can be done?? We have to publish like these stories, then the next one will get afraid because his name also may be published to the society.
      You are saying, Sri Lanka is a democratic country and everyone has right. Ok, if we accept your statement, then why are saying to stop Alcohol and Interests? People have rights to do everything what they want.
      As we are Muslims, we cannot accept your statement. We have to think everything under the shade of Islam and act according to it. Our prophet has given us a way to live in this world for each and everything. He did not say us, that we can live according to our wish if we are living in a Non-Muslim country.
      Also, the doctors and engineers are the pioneers to the society. If a doctor does his marriage according to our Prophet’s way, many people will follow him and he can give “Dhawa” to the people because he has a close relationship with the people and the society. You are saying we cannot stop this from our society. If everyone says like this, then who will stop this?
      So, as I understand, most of the people of kattankudy view this ‘Kattankudi info’. If anyone has idea to get dowry, he will think twice and try to avoid it because his name also may be published to the society.
      Allah knows all and he has to show us a good way of life and grant us Jannathul Firdhows.

    • mate said

      Mr.Aslim,You really do’t know what you are talking about.Thanks.

  4. namathu mahan said

    for 01. …… SALE

    for 02. அவர்களுடைய கொள்கையோ இதுதானே அவங்கட நினப்பு எல்லாம் குறிப்பிட்ட வட்டம் மட்டும்தான் எல்லாம் தெரியும் மற்றவங்களல்லாம் போ……………. இதைத்ததான் சொல்வது …………….என்று

  5. nalamnadi said

    உங்கள் செய்திகள் சிலகாலம் இந்தப்பக்கம் சிலகாலம் அந்தப்பக்கம் சாய்ந்திருக்கிறது. தடுமாற்றம் தெழிவாக தெரிகிறது. செய்தி வெளியிடப்போய் புறம் பேசிய பாவத்துக்குள் ( பல ஆயிரம்பேரிடம்) மாட்டிக் கொள்ளாதீர்கள்.
    You have to know the difference between being neutral and balanced, You can’t’ be neutral always but you have to be balanced my dear brothers. Be mindful of judgment day.

  6. niyas said

    assalamu alaikum
    kky. nanparkal anaivarukum onrai korik kola virumpukireen .yaraha irunthalum sari ( seetanam ) vankamal yaru ( marrige ) panranka neenka solunka . ella deenum pesa kodiya anaivarum ( seetanm vankithan marrige pani irukarkal . ivalu solum ivarkal dairiyam iruntal vankiya seetanatai koduthu viddu ( dava pani saiyadum ) ivanka ellam saivatai saithu vidu inru markam solkrarkal .

  7. kkymahan said

    என்னாத்த ஊர்க்குருவி எல்லாத்தையும் கக்கிட்டம்னு சந்தோஷத்துல கிடக்கிறியோ…தப்பில்ல. …. சீதனம் வாங்கின விஷயத்தை நெ(ஸ்)ட்டுல கக்கினது தப்பில்ல..பாராட்டனும்..

    ஆனா ஆட்டக்கொத்தி மாட்டக்கொத்தி கடைசியில ……….. கொத்தின பாத்தியா…அதுதான் தப்பு..

    ஒரு அரசியல்வாதி..குப்ரையும் ஷிர்க்கையும் அமர்க்களமா நடத்துற பள்ளிக்கு ஆரம்பிப்பாளரா போரார்..அப்போ நீ கூட்ல தூங்கிடுற…அதே அரசியல் வாதி….பள்ளிய உடச்சி பம்பரம் விட்டு விளையார்ரார் …அப்போ நீ மயங்கிக் கிடக்கிற…மத்த எல்லா அரசியல் வாதிகளும் கம்முன்னு கிடக்கார்கள் அப்ப கூட நீ முழிச்சிக்கில..ஆனா கல்யாணத்துக்கு போகாம இருந்தத மடடும் கரெக்டா எட்டிப் பார்த்திருக்கிறியே..யார்தான் உன்ன தட்டி எழுப்பிறையோ…அல்லாஹூ அஃலம்..

    உனக்கென்ன ஊர்குகுறைய சொலறம்னு நினைப்பா ..சத்தியமா இல்ல..இது சிலருடைய தனிப்பட்ட விடயம்..இத சொலறது ஹறாம்..நீங்க சீதனம் வாங்க வேணாம் என்று சொலலலாம்..பட் இவங்க சீதனம் வாங்pகாங்க என்று சொலவது இஸ்லாத்தில் தடுக்கபபட்டது…நான் சகோ.அஸ்லிமுடைய கருத்திற்கு முற்றுமுழுதாக உடன்படுகிறேன்;இத்தகைய செய்திகளை நீ இனிமேல் கொத்தி வந்து நெ(ஸ்)டடை அசிங்மாக்காதே..

    • kkyan said

      என்னடா OPEN க சொல்லிட்டானுகல் என்ரு சூடு ஏருதொ? அதக்காக காக்காவ இலுக்காத. காக்கா ஊருல நின்ட உமது திருமனத்துக்கும் வருவார். உமது திருவிலாக்கும் வருவார்

  8. sabry said

    ஸலாம்
    ஏன் சம்பதப்பட்டவர்களின் பெயர் விபரம்களை கட் பண்ணி பிரசுரிக்கிறீர்கள் . அவர்களின் பெயர்களை போடுவதால் சம்பந்தப்பட்ட விசயம் உண்மையா என்பதை அறியமுடியும் மற்றது , இதற்க்கு பிறகு வாங்குபவர்களும் பயப்பிடலாம் அல்லவா கட் பண்ணி பிரசுரிப்பதால் நீங்களும் அவர்களை ஏதோ ஒருவைகயில் காப்பாற்ற நினைக்கிறீர்கள் என என்னத்தொணுது

  9. thelivaha sollunka …. membera?

  10. காத்தான்குடியான் said

    அன்பின் சகோதரர்களே..
    இதயும் கொஞ்சம் கேளுங்க…

    சீதனம் பத்தி பேச என்டால் விடிய விடிய இருந்து பேசவும் எல்லாரும் ரெடி…ஆனா உருப்படியா ஒன்டும் நடக்கிறது இல்ல….முதல்ல ஒரு விசயம்…இந்த சீதனப்பிரச்சினைக்கு அடிப்படை காரணம் என்ன? இஸ்லாம் சொல்ர மாதிரி சொத்து பங்கீடு நம் ஊரில நடக்கிறது இல்ல..இத பத்தி நம்முட உலமாக்களும் சொல்ரது இல்ல…ஏன் சொல்றாங்க இல்லன்னா..அப்புறம் அவங்க கெதி?….இஸ்லாம் ஒரு முழுமையான வாழ்க்கை திட்டம்னு மட்டும் சொல்றாங்க..ஆனா முக்கியமான விசயமான திருமணத்தில இஸ்லாம் சொல்லி இருக்கிற அழகான வழிமுறயப்பத்தி ஏன் நிறயப்பேர் பாராமுகமா இருக்காங்க?என்னோட அபிப்பிராயம் என்னன்னா…இந்த விசயத்த மட்டும் நடமுறைப்படுத்தினா குறிப்பிட்ட தூரம் இதில வெற்றி கிடைக்கும்….னம்ம ஊரு வாலிபர்கள் படுற கொடுமையான வேதனை எல்லொருக்கும் தெரியும்…வீட்டுல றெண்டு மூனு சகோதரிகள் திருமனத்துக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்கு வந்து நாயா படுற அவஸ்தை….அப்புறம் தல நரச்சத்துக்கு பிறகு அவங்க திருமணம் முடிச்சி……..ஒழுங்கான தொழில் இல்லாம திரும்பவும் வெளினாடு போறாங்க…50 வயசுக்கு புறகு ஊரோட ஒதுங்குறாங்க..இதுக்கு இடையில அவங்கட பிள்ளைகள்ட நிலமைகள பத்தி சொல்லவே வேணாம்…..எவ்வளவோ திறமைகள் நிறைந்த நம்முட ஊர் வாலிபர்களின் வாழ்க்கை ஒன்டுலயும் ஒட்டாம வீணாகுது….யாராவது சொல்லுங்க இப்ப நம்முட ஊரில 20ல இருந்து 30 வயசுக்குள்ல வாலிபர்கள் எத்தன பேர் இங்கேயே இருக்காங்க? எல்லாரும் ஆளுக்கு 2 வீடு 3 வீடு கட்டயென்டு வெளினாட்டுல யாருடயோ BUILDING தானே கட்டிக்கிட்டு இருக்காங்க?…சும்மா கேக்குறன்…யாராவது சிங்கள சகோதரர்கள் வீடு கட்டயென்டு அங்க போய் கஸ்டப்படுறாக்களா..?எப்பிடி வாழனும் என்டு சரியான மார்க்க வழிகாட்டுதல்கள் இல்லாமலே அவங்க சிம்பிளா வாழ்றாங்க….இப்பிடி வாழு எல்லாம் இலகுவா இருக்கும் என்டு சொல்லியும் நாங்க மட்டும் ஏன் இப்பிடி வாழ்றம்?..இது ஒரு நாள் ரெண்டு நாள் இல்ல..முக்கால்வாசிபேர்ட முழுவாழ்க்கை இப்பிடித்தான் போகுது….
    இஸ்லாம் அப்பிடி என்னதாங்க சொல்லுது….?ஆண்கள் அவர்களின் துணைக்கு மகர் தொகைகளை சந்தோஸமாக கொடுத்து திருமணம் செய்து அவர்களை பராமரியுங்கள்….இதுக்குள்ள அவங்களுக்குள்ள வீடு,சொத்து எல்லாம் அடங்கும்….ஒரு ஆணால இத செய்ய முடியா விட்டால் அதை இஸ்லாம் கண்டிக்கிறது..
    இத தெளிவா மக்கள் இன்னும் புரியவில்லயா….இல்லைன்னா இஸ்லாம் சொல்றது பிழை நாங்க இப்பிடிதான் வாழுவம் என்டு வாழ்றாங்களா?
    எங்கட ஊர்ல யாருமே அவங்களுக்காக வாழ்றது இல்ல…அடுத்தவன் என்ன நினைப்பான் என்டு பார்த்து வாழ்றவங்கதான் அதிகம்……
    சுருக்கமா சொல்லனும்னா ஓட்ட வாழியில தண்ணி அள்ளுற மாதிரி…….

    இது கிடக்கட்டும்….எங்கட வாப்பமாரு படுர கொடும…..குமர் பிள்ளைகள கரையேத்துறது எப்படி என்டு யோசிச்சு யொசிச்சு..”பிறசரும் சீனியும்” கூடிப்பொய் படுத்து கிடக்காங்க…
    இதெல்லாத்தயும் பார்த்து குமருப்பிள்ளைகளும் காலத்த கழிக்கிறாங்க…………………………
    இப்பிடி ஒரு சமூகசீரழிவு இந்த ஊர்ல நடக்குது .
    PARATOE’S 80-20 THEORY என்டு ஒன்டு இருக்கு..அதாவது 20 percent of something always are responsible for 80 percent of the results,
    இப்ப என்ட கேள்வி அந்த 20% பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதட்கு முன்வாறவங்க யாரு?…முதல்ல நான் கைய்ய தூக்கிடேனுங்க……தயவு செஞ்சு எங்கட ஊரு மக்கள் வாழுற இந்த கேவலமானவாழ்க்கைய அடுத்த பரம்பரைக்கும் கொண்டு போக விடாம தடுக்கிறதுக்கு உருப்படியான வழி சொல்லுங்க…

  11. Alameen said

    Kodukkaravan irukkum varai vankupavan vankikonde iruppan summa vampalakkamal panakkararkal olunka sakath kodukkirarkala?ooril ethanai elaikumarkal valavali intri ullanar?ethai elai students kalviyai thodara panam muttukkattayaki mudankipokirarkal enpathai ellam parthu seer seiunkal.Allah nam ellorukkum nal arul purivanakaha..

  12. ulahila miha kevalam seethanam vankuvathu than.seethanam=pichai.

  13. ifham said

    உண்மையைத் தெளிவாகச் சொல்லுங்கள். பெயரை தைரியமாகக் குறிப்பிடுங்கள்

  14. waka waka said

    “kattankudi info ” சிலரை சிலருக்கு எதிராக மூட்டிவிடும் வேலையையும்
    அண்மைக்காலமாக திட்டமிட்டு செய்வது அவதானிக்கப்படுகிறது. ஏன் சார் உங்களுக்கு இந்த வேலை? காத்தான்குடி செய்திகளை உடனுக்குடன் வாசகர்களுக்கு வழங்கினோமா திருப்திப்பட்டோமா என இல்லாமல் வேண்டுமென இரு குழுக்களை ஏவி விட சில ஊர் குருவிகளை நியமித்துள்ளீர்கள்?

  15. roots said

    Dear Modarator,
    don’t add all the news and waste the time, please publish valuable news and information, then only this site will be quality

    • kattankudi said

      Dear Roots,

      We wonder why your comment is too late. We feel that these items have some points to ponder for the betterment of the society, if you feel it is a waste of time, you can avoid such topics and read the ones you feel valuable.

      WebAdmin

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s