காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 4,986,219 மொத்த வருகைகள்

எனது தலைவர் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவேதான்: கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் அவர்கள் வழங்கிய விஷேட பேட்டி

Posted by Kattankudi Web Community (KWC) on 25/09/2010

Interview EPCMஎன்னையே காத்தான்குடியின் அடுத்த அரசியல் தலைமைத்துவமாக ஹிஸ்புல்லா வளர்த்து வருகின்றார்.

பேட்டி கண்டவர்:  MSM. நூர்தீன்

வீடியோ ஒளிப்பதிவு: ULM. சபீக்

(இந்த நேர்காணலின் முழு ஒளிப்பதிவை கீழே பார்வையிடலாம்)

கேள்வி: நீங்கள் தற்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள் இனி உங்களது அரசியல் எதிர்கால இலட்சியம் என்ன?

பதில்: நான் இந்தளவுக்கு வருவதற்கு இறைவனுக்கு அடுத்ததாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு நன்றி கூறவேண்டும். என்னை அரசியலுக்குள் உள் வாங்கி கிழக்கு மாகாண சபை உறுப்பினராகவும் நியமித்து அரசியல் அந்தஸ்த்தையும் எனக்கு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா பெற்றுத்தந்துள்ளார்.

எனது தலைவர் ஹிஸ்புல்லாவேதான் அவர் சொற்படியே நான் நடந்து கொள்வேன். பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கடுத்ததாக என்னையே காத்தான்குடியின் அடுத்த அரசியல் தலைமைத்துவமாக ஹிஸ்புல்லா வளர்த்து வருகின்றார்.

கேள்வி: உங்களுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பதவி கிடைக்கு மென எதிர்பார்த்தீர்களா?

பதில்: நான் கனவில் கூட எதிர்பார்க்கவில்லை அல்லாஹ்வுடைய நாட்டத்தினால் இப்பதவியை பிரதிமைச்சர் ஹிஸ்புல்லா வழங்கினார். இப்பதவியை அல்லாஹ்வுக்கு பொருத்தமானதாக வைத்துக்கொள்ளவேண்டுமெனபதில் கவனமாக இருக்கின்றேன்.

கேள்வி: கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பதவி மூலம் நீங்கள் காத்தான்குடிக்கு என்ன செய்ய நினைக்கிறீர்கள்?

பதில்: நான் கூடுதலாக கல்வி அபிவிருத்திக்கு பங்காற்ற விரும்புகின்றேன். எனது இவ்வருட மாகாண சபை நிதியின் மூலம் காத்தான்குடியிலும் காத்தான்குடியைச்சுற்றியுள்ள அயல் கிராமங்களிருமுள்ள பாடசாலைகளுக்கு கணணி மற்றும் ஏனைய கல்வி உபகரணங்களுக்காக நிதியொதுக்கீடு செய்துள்ளளேன். காத்தான்குடியின் கல்வி மேம்பாட்டில் கரிசணையுடன் செயலாற்ற விரும்புகின்றேன். அடுத்த வருட எனது மாகாண சபை நிதியையும் கல்விக்காகவே ஒதுக்கீடு செய்ய நினைத்துள்ளேன்.

கேள்வி: கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டால் நீங்கள் வேட்பாளராக போட்டியிடுவீர்களா?

பதில்: நிச்சயம் போட்டியிடுவேன் இனி நான் அரசியலில் பின் நிற்க முடியாது. எனக்குரிய சந்தர்ப்பத்தை பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா வழங்கியே ஆகுவார். நான் காத்தான்குடி நகர சபைத் தேர்தலில்தான போட்டியிட்டு வெற்றி பெற்று சேவையாற்றவேண்டுமென நினைத்தேன் ஆனால் அல்லாஹ்வின் நாட்டத்தினால் பிரதியமைச்சர் அதைவிட உயர் அரசியல் பதவியை எனக்கு வழங்கி விட்டார். அதனால் நான் அரசியலில் பின் நிற்க முடியாது.

கேள்வி: காத்தான்குடி எல்லைப்பிரச்சினை மற்றும் காணிப்பிரச்சினை போன்றவற்றில் எவ்வாறு நீங்கள் நடந்து கொள்கறீர்கள்?

பதில்: நானும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவும் அதற்குரிய நடவடிக்கைளில் ஈடுபட்டு சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் பேசி உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்க முயற்சி எடுத்துக்கொண்டே இருக்கின்றோம்.

கேள்வி: நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தைப்பற்றியும் அதன் முக்கியஸ்த்தர் அப்துர் றஹ்மானைப்பற்றியும் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: அப்துர் றஹ்மான் நல்ல பிள்ளைதான் ஆனால் தொடர்ந்து பிரதிமைச்சர் ஹிஸ்புல்லா செய்யும் அபிவிருத்திப்பணிகளை விமர்சிப்பதும் அவரில் தொடாச்சியாக பிழை கண்டு பிடிப்பதாகவுமே இருந்து வருகின்றனர். காத்தான்குடியைப் பொறுத்தவரையில் இன்று பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா செய்யும் அபிவிருத்திப்பணியானது மிகவும் பெறுமதியானதும் முக்கிய மானதுமாகும். இவ் ஊரை அழகு படுத்த பிரதியமைச்சர் எடுக்கும் நடவடிக்கையினை கொச்சைப்படுத்தி விமர்சிப்பதை நான் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன்.

பிரதியமைச்சர் ஹிஸ்பல்லாவுக்கு இப்பிரதேச மக்கள் வழங்கியுள்ள அதிக பட்ச ஆதரவை நீங்கள் விள்ங்கிக்கொள்வீர்கள். இந்நிலையில் அவருக்கு மக்கள் வழங்கியுள்ள ஆணையை எதிர்த்தரப்பு அரசியலில் ஈடுபடுபவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா செய்யும் பணிகளில் குறை கண்டு பிடித்து அரசியல் நடாத்துவதை விட ந்ல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினால் இப்பிரதேசத்துக்கு முடியுமான வற்றை செய்ய வேண்டும்.

கேள்வி: எதிர் வரும் காத்தான்குடி நகர சபைத்தேர்தல் விவகாரத்தில் நீங்கள்  எப்படி நடந்து கொள்வீர்கள்?

பதில்: எமது தலைவர் ஹிஸ்புல்லா நிறுத்தும் அணியே காத்தான்குடி நகர சபையையும் கைப்பற்றும்,  அதற்குப்பொருத்தமானவர்கள் களத்தில் நிறுத்தப்படுவார்கள்.

கேள்வி: எதிர்வரும் காத்தான்குடி நகர சபைத்தேர்தலில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா அணி மற்றும் சிறலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அணி நல்லாட்சிக்கான மக்கள் இயக்க அணி என பிரிந்து ஒருவரையொருவர் விமர்சிப்பதை விட எல்லோரும் சேர்ந்து காத்தான்குடியின் ஒற்றமையை கருத்திற் கொண்டு ஒரணியில் நின்று காத்தான்குடி நகர சபையின் நிருவாகத்தை ஒப்படைத்தால் எப்படியிருக்கும்? அதற்கான ஒற்றுமைப்படுத்தும் வேலைத்திட்டத்தினை உங்களால் மேற்கொள்ளமுடியுமா?

பதில்: இன்ஷா அல்லாஹ் முயற்சிப்போம் அல்லாஹ் என்ன நாடியுள்ளான் என்பது நமக்குத்தெரியாது. எனினும் நான் அனைவரையும் ஒன்றினைக்க முயற்சிக்கின்றேன.

கேள்வி: கிழக்கு மாகாண சபை உறுப்பினர் முபீனைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: நானும் அவரும் மாகாண சபையிலும் அதற்கு வெளியிலும் நமதூரிலும் ஒற்றுமையுடன் செயற்பட்டு வருகின்றோம். மாகாண சபையில் அவரினால் கொண்டு வரும் பிரேரணைக்கு ஆதரவாக நான் நடந்து கொளகின்றேன். அதே போன்றுதான அவரும் நடந்து கொள்கின்றார். புதவி இன்றிருக்கும் நாளை போய் விடும் மனிதனை மதித்து மனிதப்பண்புடன் நடந்து கொள்ளவேண்டும்.

கேள்வி: காத்தான்குடி இன்போவைப்பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: இப்போது இது சிறந்ததொரு ஊடக மாக செயற்படுகின்றது. பக்கசார்பில்லை நடு நிலையான ஊடகமாக இருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். தொடர்ந்தும் அவ்வாறே இருக்க வேண்டும். உலகெங்கிலுமுள்ள காத்தான்குடி மக்களின் சிறந்த ஊடக மாக காத்தான்குடி இன்போ திகழ்கிறது, அதற்காக எனது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன். ஊடகங்கள் பக்கசார்பில்லாமல் செயற்பட வேண்டும், அதுதான் ஊடகத்தார்மீகம் இதை நான் சொல்லத்தேவையில்லை அது உங்களுக்கு விளங்கும்.

கேள்வி: நீங்கள் இறுதியாக என்ன கூறவிரும்புகிறீர்கள்?

என்னை பேட்டி கண்ட உங்களுககும் உங்களுடன் கூட வந்துள்ள ஊடகவியலாளர் சபீக்குக்கும் காத்தான்குடி இன்போ முகாமைத்துவத்திற்கும் நன்றி கூறுகின்றேன்.

குறிப்பு: இந்நேர்காணலானது (வீடியோ ஒளிப்பதிவு) சில தொழிந்நுட்பபிரச்சனை காரணமாக பதிவேற்றம் செய்வத்தில் சில தாமதம் ஏற்பட்டது. இதற்காக எமது வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

16 Responses to “எனது தலைவர் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவேதான்: கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் அவர்கள் வழங்கிய விஷேட பேட்டி”

  1. wish you all the best.

  2. ellam allah da naatam

  3. Hiras said

    சகோதரர் பரீட் அவர்களே! இப்படித்தான்தான ஜவ்பர்காண் அவர்ளையும் தலைவனாக்குவென் என்று சொல்லிவிட்டு பின்னர் ………… ……………. தாங்கள் மறந்து விட்Bர்களா..?

  4. kkymovlavi said

    கிழக்கு மாகாணத்தின் இரு பிரதிநிதிகளை சொந்த்மாகிக்கொண்ட ஊர்தான எமது ஊராகும் அவூரின் மாகாணரீதியிலான
    தேவைகளை நிறைவு செய்வதற்காகவும் கல்வி,காணி ,பாதுகாப்பு ,அபிவருத்திப்பனிகள் போன்ற இன்னும் பலவிடயங்கள் சமுகத்தின் தேவையாக கருத்தில்கொண்டு செயல்படுவதற்காகவே மேற்கூறிய
    இருவரையும் மாகாணசபை அங்கத்தவர்களாக எமது சமுகம் தேர்ந்தெடுத்தள்ளது.சகோதரர் பரீத் அவர்களின்
    கூற்று பிரகாரம் தற்போதைய சூழ்நிலையில் மாகாணசபை தலா இரண்டு மில்லியன் ரூபாய்களை நிதியாக
    வழங்கியுள்ளது அப்படியானால் நமது மக்களுக்காக நான்கு மில்லியன் கிடைத்திரிக்கிறது.இந்த நிதிகளைகொண்டு சகோதரர் முபீனும் என்னசேவைகள் செய்வார் என்பதையும் சற்று தெளிவாக சொல்வதும் சாலச்சிறந்தது .
    கடந்தகாலங்களில் பயங்கர வாத பிரச்சனைகள் காரணமாக நமது முஸ்லிம்களின் பல ஆய்ரகனக்கான விவசாய பூமிகள் கேட்பாரற்று கிடக்கின்றன.இதன்முலம் எமது மக்கள் பல மில்லியன் கணக்கான ரூபாய்களை இழந்து நிற்கின்றன.இவ்வாறான சந்தர்பத்தில் எமது மக்களின் .. பிரதி அமைச்சரும், கூட இரு கண்மணிகளான மாகான சபை உறுப்பினர்களும் என்ன செய்யபோகிறார்கள் என்பதை
    சமுகத்தில் உள்ள புத்திஜீவிகளும் ,சிந்தனையாளர்களும் ,படித்தவர்களும் ,அறிஞ்சர்களும் காத்துநிற்கின்றனர்
    மேலும் எமது தலையான பிரச்சினை காணி ,அடுத்து எமதூரின் எல்லை பிரச்சினையுமாகும்.இவ்விரு பிரச்சனைகளுக்கும் தீர்வு சொல்ல கடமைபட்டவர்கல்தான் எமது பிரதி அமைச்சரும் ,கூட இருமாகான உறுப்பினர்களும்.இதற்குரிய தீர்வு இம்மும்மணிகளின் காலத்திலாவது கிட்டுமோ என காத்தான்குடி சமுகம் காத்துகிடக்கின்றது .காலம் பத்தி சொல்லுமோ அல்லது இக்காவர்லர்கல்தான் பதில் சொல்லுவார்களோ ..பதில் ????????????????????????

  5. Boss-KKY said

    எட்டாக் கனிக்குக் .!!!!!!!!!!!!!!!

  6. Obama-kky said

    [எனது தலைவர் ஹிஸ்புல்லாவேதான் அவர் சொற்படியே நான் நடந்து கொள்வேன். பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கடுத்ததாக "என்னையே" காத்தான்குடியின் அடுத்த அரசியல் தலைமைத்துவமாக ஹிஸ்புல்லா வளர்த்து வருகின்றார்] இதத்தானா …………. என்று சொல்ற?

  7. Sodukku said

    நம்மிட ஊர அந்த இறைவன்தான் காப்பாற்ற வேணும்

    • sam said

      Hi Sodukku, Allah has already told that he WILL NOT. It will not never happen unless your people begin to think beyond selfishness and give less value to money.

  8. sam said

    ………….. கொஞ்சம் பொறுத்திருங்கள். நாம் இது பற்றி நேரடியாக வெகு விரைவில் பேசுவோம். இப்போது நடக்கின்ற சில விடயங்களை மாத்திரம் வைத்து எந்த முடிவும் நீங்கள் எடுக்க தேவையில்லை என்பது எனது கருத்து!

    • sam said

      ஆஹா நான் சொன்ன உண்மைய அழிச்சிப் போட்டான்கையா அழிச்சிப் போட்டாங்க ……

  9. Haneefa said

    இப்பிடித்தான் சொல்லிக்கிட்டு இருங்க.. நகர சபையை ஊரான் கைப்பத்தப்போறான்

  10. waka waka said

    மாகாண சபை உறுப்பினர் அவர்களே, நமது பிரதியமைச்சர் நமதூருக்கு கொண்டுவந்த “நல்ல திட்டங்களை” pmgg தடுத்த, விமர்சித்த ஒரு ஐந்து விடயங்களை கூறினால் மிகவும் பொருத்தமாக இருக்கும்..!

    • sam said

      உங்கட PMGG ஆல அத தடுக்க ஏலாதைய்யா…ஆகவே சொல்ல ஏலாதைய்யா..வக்க.. வக்க…

      • waka waka said

        தடுப்பதாக மாகாண சபை உறுப்பினர்தானே கூறுகிறார், வீடியோவ நல்லா பாருங்க sam ….

  11. Baazir said

    வட போச்சே

  12. abumujahith said

    1994 பொதுத்தேர்தலின்போது முதலாம் குறிச்சி மேடையில் ‘யார் விரும்பியோ விரும்பாமலோ எனக்குப்பின்னால் இந்த மண்ணின் தலைமைத்துவத்தை எடுத்துச்செல்லக்கூடிய ஒருவர் தம்பி ஜவ்பர்கான் என்பதை பிரகடனப்பதுகிறேன்’ இப்படி முழங்கியவர் உங்கள் தலைவர் ஹிஸ்புல்லாஹ்
    ஆனால் நடந்தது என்ன எந்தப்பாவமுமே செய்யாது ஹிஸ்புல்லாஹ்விற்காகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்காகவும் தனது வாழ்நாளின் முக்கால் பகுதியை அழித்த ஜவ்பர்கானை ஓதுக்கித்தள்ளிவிட்டு உங்களையா தலைவராக்கப்போகிறார்.அதுவும் ஜவ்பர்கானையாவது அடுத்த தலைவர் என ஆயிரக்கணக்கான மக்கள் முன்னால் பிரகட்னப்டுத்தினார். உங்களை இன்னும் அவ்வாறு பிரகடனப்பபடுத்தியதாக தகவல்கள் வரவேயில்லை அதற்குள் அவசரப்பட்டு விட்டீர்கள் போல்தெரிகிறது.எதற்கும் பிரகடனப்படுத்’தும் விடயத்தில் கவனமாக இருங்கள். புpன்னால் ………………………….இபபடி பலபிரதிநிதிகளும் உள்ளனர் உணர்ச்சி வசப்பட்டு அவர்களில் யாரையாவது பிரகடனப்படுத்திவிடப்போகிறார்.
    ஆனால் ஜவ்பர்கான் ; என்ற சமுக ஆழமைக்கு உங்கள் தலைர் செய்த ……………………………..அபுமுஜாஹித்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s