பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவு செய்யும் குழுவே நகரசபையைக் கைப்பற்றும் – பஷீர் ஹாஜியார் (அஷாபியா)
Posted by Kattankudi Web Community (KWC) on 23/09/2010
எம்ஏ.சீ.எம். ஜெலீஸ் – காத்தான்குடி செய்தியாளர்
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் நகரசபைத் தேர்தலை முன்வைத்து இப்போதே அரசியல்வாதிகள் சிலர் அறிக்கைகள் விட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் எனது கருத்தை தெரிவிக்கின்றேன்.
கடந்த 1989 முதல் காத்தான்குடிக்கென்று ஒரு அரசியல் தலைமைத்துவம் அல்லாஹ்வின் உதவியோடு இந்த மண்ணில் உருவாகி அந்த தலைமைத்துவத்தை காத்தான்குடி மக்களில் பெரும்பான்மையானவர்கள் ஏற்றுக்கொண்டு இன்றுவரை அந்த தலைமைத்துவத்தின் மீது நம்பிக்கைவைத்து இந்த ஊரை அந்த தலைமைத்துவத்திற்கு ஒப்படைத்து தலைநிமிர்ந்து வாழ்ந்து வருகின்றார்கள். அந்த தலைவர்தான் காத்தான்குடி மண்ணின் மைந்தன் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்.
யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், யார் புகழ்ந்தாலும் தூற்றினாலும் இந்த ஊரை இந்த நாட்டிலே ஒரு முன்மாதிரியான நகரமாக்கி இஸ்லாமிய கலாசார சூழலில் அதனோடு கூடிய அபிவிருத்தியடைந்த ஒரு தனித்துவமான நகராக்கத்துடிக்கும் அவருக்கு ஒத்துழைப்பை வழங்கி மேலும் இந்த நகரை சிறந்த நகராக வைத்திருக்கக்கூடிய ஒரு தகுதியான எல்லா மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு நகரசபை வேட்பாளர் குழாமை களமிறக்கி எதிர்வரும் நகரசபைத் தேர்தலில் போட்டியிடவைத்து நகர சபையை கைப்பற்றக்கூடிய வல்லமையும். அறிவும், தெளிவும், சாணக்கியமும் நேர்மையும் அல்லாஹ்வின் உதவியால் அந்த ஹிஸ்புல்லாவினால்தான் முடியும்.
கடந்த கால பிரதேச சபை, நகர சபை தேர்தல்கள் இதற்கு நல்ல உதாரணங்களாகும். வரலாறு தெரிந்தவர்களுக்கு இந்த விடயங்கள் நன்கு புரியும். தற்போது ஆளும் அரசில் ஒரு பிரதியமைச்சராக சகல ஆளுமையோடும் இந்த ஊருக்கு அவர் ஆற்றிவருகின்ற பணியையும் அவருக்கு பெருகும் ஆதரவையும் கண்டு இப்போதே சிலருக்கு உள்ளுர கலக்கமும். அச்சமும் ஏற்பட்டுவிட்டது. அதனால்தான் சில அறிக்கைகளும். பிதற்றல்களும் பிரகடணங்களும் வெளிவர ஆரம்பித்திருக்கின்றன. இந்த அறிக்கைகள் பிரகடணங்கனையெல்லாம் கண்டு காத்தான்குடி மக்கள் யாரும் பெரிதாக அலட்டிக் கொள்ளமாட்டார்கள். தேர்தல் காலத்தில் எப்படியான முடிவுகளை எப்படி எடுக்கவேண்டுமென்பதில் காத்தான்குடி மக்கள் மிகத் தெளிவாக தீர்ப்பளிக்கக்கூடிய வல்லவர்கள் என்பதைக்கூறி முடிக்கின்றேன்.







kkymovlavi said
ஹாஜி பசீர் அவர்களே!அரசியல் சாணக்கியம் ,நேர்மை என்றெல்லாம் கடுமையாக சில அரசியல் வன்னான்களை பற்றி பேசுகிறீர்கள் அழுக்கு படிந்த துணியை மேலும் அழுக்கு நீரில் அல்லவா கலுகிரீர்கள்
உண்மையான தேர்தலை மக்கள் செய்வார்களேயானால் இன்னும் பல வன்னான்கள் வாகரயில்தான் வாழவேண்டும்.பிழைப்புக்காக அரசியல் நடத்தும் அரசியலை விட மக்களின் நலனுக்காக அல்லது உரிமைக்காக செய்யும் அரசியலே மக்களின் உள்ளத்தில் ஆழ பதியும் என்பதை நீங்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.அதற்கு ஒரு உதாரணம்தான் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் மக்களின் உரிமை ,பாதுகாப்பு,கல்வி ,தொழில்வாய்ப்பு என்று வரலாற்று பதிப்பை விட்டு சென்றவர்.இன்றும் அவரால் தொழில் பெற்று பல குடும்பங்கள் நிம்மதியுடனும் மகிழ்ச்ச்யுடனும் வாழ்ந்துகொண்டிரிக்கிறனர்.என்ன இப்படியான ஒரு சேவையை எமது மந்திரி செய்துள்ளாரா?எதனை தொழில்வாய்ப்புக்கள் கிடைத்தும் ………………………………………. ………………சொல்லுங்கள்.என்னோடு படித்த பல நண்பர்கள் எமது மந்திரி கதவை பல தடவைகள் தட்டியும் பலன் கிடைக்கவில்லையே அப்படியானால் அவர்களின் தாய்மார்கள் போட்ட வாகுக்கு இதுதானா மந்திரி மந்திரியின் சேவை?பதவியை கொடுப்பதும் எடுப்பதும் அல்லாஹ்வின் பொறுப்பாகும், இறைவனின் பிடி ரெம்ப பலமானது.
Son of kky said
MaashaAllah. Nice comments.
niyas said
come on haji….
SHM.Muneer said
ஆ…ஹா… , பஷீர் ஹாஜியாருக்கும் “நகர பிதா” ஆசை வந்துட்டோ….. காமடி.. கீமடி பண்ணலியே…..
riyas said
ur correct aslam
aslam said
ஐயா பசீர் ஹாஜியார் அவர்களே….
தலைமைத்துவத்தை ஹிஸ்புல்லாஹ்விடம் கொடுத்துவிட்டு ஊர் மக்கள் தலைநிமிர்ந்து வாழ்வதாகக் குறிப்பிடுகிறீர்கள்.. உங்களுக்கு எங்கே விளங்கப் போகிறது.. நீங்களெல்லாம் …………………………… கொஞ்சம் காத்தான்குடியை விட்டு வெளியில் வந்து பாருங்கள்…. முடியுமானால் சில வெளிய+ர்களுக்குச் சென்று வாருங்கள்…. அங்கெல்லாம் ஒரு காத்தான்குடி மகனால் தலைநிமிர்ந்து நடக்க முடிகிறதா எனப் பாருங்கள்…
பள்ளியில் செய்த சத்தியத்தை மீறிய…. அஷ்ரப் இருக்கும்போதே மு.கா.வை உடைத்த….சா….க் கடைக்கு லைசன்ஸ் கொடுத்த…. பல தடவைகள் கட்சி மாறிய…. ……..…. ஹி……..வையே இன்னும் தூக்கிப் பிடிக்கிறீர்களே எனும் அவர்களின் கேள்விகளுக்கு உங்களால் தலைநிமிர்ந்து கொண்டு தக்க பதிலளிக்க முடியுமா பசீர் ஹாஜி.?
riyas said
UR CORRECT ASLAM..
mohamed Karamy said
Mr. Basheer Haji please ask your political Ji to payback the ………………..
Safeer said
நீங்கள் ……..ஊர் அரசில் பற்றி பேசுவது வியப்புக்குரியது. ஹிஸ்புல்லா என்ன சொன்னாலும் செய்தலும் சரி காண்பவர்கள் நீங்கள்.
…………………………………..
dubai.ajwar said
baseer haji neeggal solvadu ok ok ok
mansoor said
ஏற்கெனவே ………………. நகர சபைக்குத் தெரிவு செய்துவிட்டு நமதூர்
மக்கள் தலை குணிந்துகொண்டிருக்கையில் மீண்டும் நீங்களுமா?,,,,,
thadangal said
தரவுகள் அடிப்படையில் ஹாஜி நீங்கள் சொல்லும் காத்தான்குடி அரசியல் தலைமைத்துவம் அம்மண்ணில் வாழும் மனிதர்களை பல தடவைகள் பிறரால் (அயலவர்களால் )கடுமையான விமர்சனத்துக்கும் இலிவிற்கும்
இட்டுச்சென்ற வரலாறுகள் உங்களுக்கு புரியாமலும் இல்லை.கடந்த காலங்களில் ……………
அரசியல் வாதியால் உருவாக்கப்பட்ட நகர சபை உறுப்பினர்கள் எவ்வாறு நகர சபை கஜானாவை காலிசெய்தார்கள் என்பதை நீங்கள் நன்கு புரிந்த அறிந்த விடயமே!!! உங்களை ……….. அறிவுள்ளவகளால் தான் ஊரின் எல்லையும் சுருக்கப்பட்டன …………… காத்தான்குடி எல்லையை அளப்பதற்கு சேவையர் வந்தபோது ஏன் தடுத்தார் என்று தெரியுமோ?
உரிமைக்காக அல்லது மக்களின் நலனுக்காக வாழும் அரசியல் வாதிக்கல்லவா புரியும் ……………………….. .
innocent said
whether we like Mr.Hizbullah or hate him or whether we agree or not agree with Mr.Bazeer Haji’s comment but this is the reality.thanks.
nalanvipumpi said
neenkaluma haji uc ku vara?