காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 4,986,219 மொத்த வருகைகள்

இப்படியும் நடக்கிறது!

Posted by Kattankudi Web Community (KWC) on 23/09/2010

- ஊர்க்குருவி

அண்மையில் காத்தான்குடியில் வைத்து தலைக்கவசம் (helmet) அணியாமல் மோட்டார் சைக்கிள் செலுத்தியமைக்காக போக்குவரத்துப் பொலிசாரால் பிடிக்கப்பட்ட சகோதரர் ஒருவருக்கு வினோதமான அனுபவம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

அவரது அனுமதிப்பத்திரத்தை பறிமுதல் செய்த பொலீசார் அவருக்கு தற்காலிக அனுமதிப்பத்திரத்தை வழங்கிவிட்டு சென்றுள்ளனர். தண்டப்பணம் கட்டுவதற்கான படிவத்தைப் பெற இரண்டு வாரங்களாக பொலிஸ் நிலையத்துக்கு இவர் அலைந்துளார். அதற்குரிய படிவம் முடிந்து விட்டதாகவும் பின்னர் வந்து பெற்றுக்கொள்ளுமாறும் இவர் அலைக்கழிக்கப்பட்டுள்ளார். இரண்டு வாரம் சென்றும் படிவம் வராததால் இவரை நீதிமன்றத்துக்குக் கூட்டிச் சென்ற பொலிசார், தண்டப்பனத்தைக் கட்டச் சொல்லி அதற்குரிய பற்றுச்சீட்டைப் பார்வையிட்டு அனுமதிப்பத்திரத்தை வழங்கியுள்ளனர்.

ஒருவாறாக பிரச்சினை முடிந்தது என்றிருந்த சகோதரரை அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதமாக அதே வழக்கு இலக்கமிடப்பட்டு நீதிமன்றத்தால் அழைப்பாணை (Summons) ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

உடனடியாக பொலிஸ் நிலையம் விரைந்து தனது அனுமதிப்பத்திரம் மற்றும் தண்டப்பணம் செலுத்தியமைக்கான பற்றுசீட்டு ஆகியவற்றைக் காட்டியிருக்கிறார். அதிசயித்துப்போன போக்குவரத்துப் பொலிசார் உரிய ஆவணங்கள் அனைத்தினதும் பிரதிகளைப் பெற்றுக்கொண்டு, இதை வெளியே சொல்ல வேண்டாம் என்று அன்பாக (?) கேட்டுக்கொண்டு சகோதரரை அனுப்பி விட்டார்களாம்.

சம்பந்தப்பட்ட ஆவணங்களை எப்படியோ கண்டுபிடித்த ஊர்க்குருவியார் வாசகர்களுக்காக இங்கு அனுப்பியிருந்தார். குறித்த சகோதரரின் பாதுகாப்புக் கருதி ஆவணங்களிலிருந்த சில விடயங்கள் நீக்கப்பட்டு பிரசுரிக்கப்படுகின்றன.

மக்கள் தவறு செய்தால் பொலீசார் கேட்பார்கள் – பொலீசார் தவறு செய்தால் யார் கேட்பார்கள்? என்றும் ஊர்க்குருவியார் கவலைப்பட்டிருந்தார்.

எனவே ஒரு சமூக நலச் செய்தியாக, இவ்வாறான விடயங்கள் தொடர்பான ஆவணங்களைக் கவனமாக வைத்திருக்கும்படியும், உரிய இடங்களில் நடைமுறைகளைச் செய்த பின்னர் உங்களுக்குரிய ஆவணங்களை (உதாரணம்: அனுமதிப்பத்திரம்) மறக்காமல் வாங்கிக்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

பற்றுச்சீட்டு:

அழைப்பாணை

2 Responses to “இப்படியும் நடக்கிறது!”

  1. jabeer said

    இன்னும் எத்தனையோ விஷயங்கள் இப்படி நடந்ததுள்ளது

  2. mohamed rasool said

    he he he he…ennapa thamasu panrangela??

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s