தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உலக சமூகத்திற்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக சர்வகட்சிப் பேரவையின் பரிந்துரைகளை ஆராய்ந்து தீர்வுத் திட்டங்களை வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்த போதிலும், இதுவரையில் குறித்த அறிக்கை தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என முஸ்லிம் காங்கிரஸின் பிரதிப் பொதுச் செயலாளர் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
யுத்தம் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வு காணும் விருப்பம் காணப்படுவதாக உலக நாடுகளுக்கு வெளிக்காட்டும் நோக்கில் ஜனாதிபதி சர்வகட்சிப் பேரவையை உருவாக்கியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், பேரவையின் நடவடிக்கைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை என நிசாம் காரியப்பர் குற்றம் சுமத்தியுள்ளார். சர்வகட்சிப் பேரவை தொடர்பில் ஆளும் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டிய காலம் மலர்ந்துள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார். (GTN)
Filed under: News








