காத்தான்குடி விளையாட்டுக் கழகம் மாவட்ட மட்ட இறுதிப் போட்டிக்கு தெரிவு
Posted by Kattankudi Web Community (KWC) on 28/07/2010
கடின பந்து கிறிக்கட் போட்டியில் மாவட்ட மட்டத்தில் காத்தான்குடி விளையாட்டுக் கழகம் தொடர்ச்சியாக திறமைகளை வெளிக்காட்டி வருகின்றது. மாவட்டத்தின் சிறந்த அணிகள் பங்கு பற்றிய 20-20 கல்லாறு வெற்றிக்கிண்ணத்திற்கான போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இச்சுற்றுப்போட்டியில் அரை இறுதி ஆட்டத்தில் மாவட்ட கிறிக்கட் சபையின் சம்பியனாகிய மட்டக்களப்பு டிஸ்கோ அணியினை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
மாவட்ட சுற்றுப்போட்டிகளில் காத்தான்குடி அணி ஒன்று இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளமை இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விறுதிப் போட்டி எதிர்வரும் 01.08.2010 ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு சென்றலைட் அணியினை எதிர்த்து காத்தான்குடி விளையாட்டுக்கழகம் பெரிய கல்லாறு பொது மைதானத்தில் விளையாடவுள்ளது.
இப்போட்டியில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் திரு. பொன் செல்வராசா அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
(தகவல்: சகோதரர் சுபியான்)







Mohamed Hafeez( NightRiders Sports Club,Kattan Kudy) said
Congratulation To KSC. Wish you all the best to win the FINAL. You guys can do it.
Ashad said
masha allah
muzaffir ismai said
happy to hear this news.
covey to regards
jemlee (ksc) said
thanks mr.hafees. I really feel sad we couldn’t meet you teem in the final. let’s see another tournament.
ziyathfasmy said
insha allah we r win the cup thx for all of