மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட லேடி மெனிங் ட்றைவ் வீதியில் பாலமொன்று இடிந்து விழுந்து ஒரு வாரத்தைக்கடந்தும் இன்னும் திருத்தியமைக்காமையினால் இப்பாதையால் பயணிக்கும் ஆயிரக்கணக்கான பயணிகள் பல்வேறு கஷ்டங்களுடன் வேறு பாதைகளைப் பயன்படுத்த வேன்டியுள்ளது.
கிழக்கு மாகாண சபையின் மட்டக்களப்பு மாவட்ட உப அலுவலகமும் இப்பாதையில் அமைந்துள்ளது. உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம்,அந்தோனியார் தேவாலயம்,உட்டபட பல பொதுநிறுவனங்களும் இப்பாதையில் அமைந்துள்ளது.
கல்லடி பாலத்தின் அருகிலுள்ள இப்பாலம் கடந்த வாரம் கனரக வாகனமொன்று சென்றபோது உடைந்து விழுந்தமை குறிப்பிடத்தக்கது.
(வீரகேசரி இணையம்)
Advertisement
Filed under: News








