காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 5,016,290 மொத்த வருகைகள்

விமல் வீரவன்சவுக்கு ஒரு கடிதம்

Posted by Kattankudi Web Community (KWC) on 26/07/2010

ஐ.நா. நிபுணர் குழுவைக் கலைக்கும்வரை சாகும்வரையிலான உண்ணாவிர தத்தைத் தொடரப் போவதாக நீங்கள் அறிவித்தபோது உண்மையிலேயே ஆச் சரியமாக இருந்தது.

அதன்போது உயிர் பிரிந்தால் போராட்டத்தைத் தொடரு மாறு உங்களது ஆதரவாளர்களைக் கோரியிருந்தீர்களே -அதுதான் அதைவிட வும் ஆச்சரியமானது.

அரசியல்வாதிகள் உண்ணாவிரதம் இருப்பதில் அப்படி ஆச்சரியப்பட என்ன இருக்கிறது என நீங்கள் எண்ணக் கூடும். இதுவொன்றும் சாதாரண உண்ணா விரதம் இல்லை. உயிரையே கொடையாகக் கொடுக்கும் உண்ணாவிரதம் இது.

நீங்கள் உண்ணாவிரதத்தைத் தொடங்கியபோது இது ஒரு அரசியல் விளை யாட்டு என்ற குரல்கள் எங்கும் கேட்கத் தொடங்கின. ஆரம்பத்தில் அவை வெறும் சலசலப்புகளே என்று தோன்றியது. ஆனால், பின்னர் போதிய நியா யங்கள் இல்லாமல் நீங்கள் உண்ணாவிரதத்தைக் கைவிட்டீர்கள். அப்போது தான் மனம் உசாராகியது.

உங்களது உண்ணாவிரதம் கருணாநிதியின் உண்ணாவிரதத்தை விடவும் சிறந் தது என ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்திருப்பது உங்களுக்கு ஆறுதலாய் இருக்கக் கூடும். ஆனாலும், உண்ணாவிரதம் இருக்க நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும், மனம் வைத்து ஹிந்திப் படங்களைப் பார்த்தால் பொய்யான உண்ணாவிரதங்களை எப்படி செய்வது எனக் கற்றுக் கொள்ளலாம் என்றும் அப்பத்திரிகை உங்களுக்கு ஆலோசனை வேறு சொல் லியிருக்கிறது.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, வரவு-செலவுத்திட்டத்தில் மக்களுக்கு போதிய ளவு நன்மை கிடைக்காமை போன்ற விடயங்களிலிருந்து எல்லோரது கவனத் தையும் திருப்புவதற்கு உங்களது உண்ணாவிரதம் நன்கு கைகொடுத்திருக்கி றது என்ற குற்றச்சாட்டில் நியாயம் இருப்பதுபோல்தான் தோன்றுகிறது.

போராட்டத்தின் இறுதி வடிவமாகிய சாகும்வரையான உண்ணாவிரதத்தை எடுத்த எடுப்பிலேயே தொடங்கி எதிர்ப்பு நடவடிக்கைகளை தலைகீழாக மாற்றியிருக்கிறீர்கள் என உங்களது முன்னாள் தோழர்கள் உங்களைப் பார்த்து நகைக்கும்போது உங்களைப் பார்க்க பாவமாய் இருக்கிறது.

நீங்கள் உண்ணாவிரதம் இருந்தபோது அமைச்சர்களுக்கு ஜனாதிபதி அலரி மாளிகையில் விருந்துபசாரம் அளித்து மகிழ்ந்திருக்கிறார் என்ற செய்தி எங்கோ இடறுகிறது.

காட்போர்ட் வீரனாக நீங்கள் நடித்த நடிப்பு குறித்துத்தான் இப்போது எல் லோரும் பேசுகின்றனர். அப்போதெல்லாம் சற்று வருத்தமாகத்தான் இருக்கின் றது.

அப்படியென்ன நீங்கள் சாதாரணமான ஆளா?

ஜே.வி.பி.யில் இருக்கும்போது நீங்கள்தான் தானைத் தலைவரோ என்று எண் ணுமளவுக்கு கூட்டங்களில் அடித்தொண்டையால் கத்துவீர்கள். அந்தத் தொண்டை இப்போது வரண்டு தண்ணீருக்குத் தவித்தபோது, ஆபத்பாந்தவா னாக வந்துதித்து தாகம் தீர்த்தார் ஜனாதிபதி. இதுவல்லவோ நட்புக்கு இலக்கணம்.

இதைப் புரியாமல் பொய்கார நடிகருக்கான முதல் விருதை உங்களுக்கு வழங்க வேண்டும் என ஆங்கிலப் பத்திரிகையொன்று எழுதியிருக்கிறது. ஆனால், நீங்களோ மகத்தான காரியமொன்றை செய்த நினைப்பில் இருக்கி றீர்கள்.

நாட்டிலுள்ள பாடசாலை மாணவன் ஒருவனுக்குக் கூட ஐ.நா. நிபுணர் குழு என்றால் என்ன, அது ஏன் எதிர்க்கப்பட வேண்டும் என்பதை உங்களது உண் ணாவிரதம் தெரியப்படுத்தியிருக்கிறது. அதுதான் நீங்கள் பெற்ற வெற்றி என்று இன்னொரு ஆங்கிலப் பத்திரிகையில் நீங்கள் எழுதியிருக்கிறீர்கள்.

ஆனால், எல்லோரும் உங்களை ஒரு கோமாளியாகத்தான் பார்க்கிறார்கள். ஜனாதிபதி இயக்க, கோத்தபாய கதை வசனம் எழுத, நீங்கள் சிறப்பாக நடித்தி ருப்பதாகக் கூட ஊடங்கள் எழுதித் தள்ளின.

எல்லாம் சரிதான். இந்தக் கோமாளி வேடத்தை மட்டும் இனிப் போடாதீர் கள். அது உங்களுக்கு அவ்வளவு சரிப்பட்டு வரவில்லை. அடுத்த முறை நல்ல வேடங்களாய், உங்களுக்கு நன்கு பொருந்துவதைத் தேடி நடியுங்கள். அப் போது இப்படியெல்லாம் உங்களைக் கிண்டல் செய்ய முடியாதுதானே.

Courtesy: மீள்பார்வை

2 Responses to “விமல் வீரவன்சவுக்கு ஒரு கடிதம்”

  1. Thailam said

    Solli veela illa

    Thailam-UAE

  2. Mr.kky said

    நீண்ட நாட்களுக்குப்பின்
    ஆழமானதும் ஆரோக்கியமானதுமான
    ஒரு கட்டுரையை படித்திருக்கிறேன்.
    நன்றி: மீள்பார்வை, KWC

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s