காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 5,016,290 மொத்த வருகைகள்

கிராமிய அபிவிருத்தியில் இஸ்லாமிய வங்கியின் பங்கு

Posted by Kattankudi Web Community (KWC) on 26/07/2010

மூலம்: எம். ஏ. கான்

தமிழில்: அஷ்ஷெய்க் ஏ. எ மிஹ்ழார்

கிராமிய அபிவிருத்தியின் இயல்பு

கிராமிய அபிவிருத்தி என்பது ஒரு சிக்கலான தோற்றப்பாடாகும்.

கிராமப் பகுதிகளில் வாழும் மக்களின் உற்பத்தித் திறன், உழைக்கும் ஆற்றல் என்ப வற்றை நிரந்தரமான அடிப்படையில் மேம் படுத்துவதன் மூலம் அவர்களது வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையுடன் கிராமிய அபிவிருத்தி தொடர்புற் றுள்ளது. 1990 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட உலக அபிவிருத்தி அறிக்கைக்கிணங்க அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் ஒரு பில்லியனுக்கு மேற்பட்ட வறிய மக்கள் உள்ளனர். அவர்களுள் பெரும்பாலா னோர் கிராமப் பகுதிகளில் வாழ்கின்றனர். இக்கிராமிய மக்களின் பிரச்சினை கள் பலதரப்பட்டதாக இருக்கின்றன.

இவர்கள் பிரதானமான மூன்று தொகுதிகளில் அடங்குகின்றனர். இவர்கள் நிலமற்றோர், வாடகைக்கு அல்லது குத்தகைக்கு இருப்பவர்கள், சிறுநிலச் சொந்தக் காரர்கள் ஆகியோராவர். இவர்கள் அனைவரிடமும் சில விடயங் களில் பொதுத்தன்மைகள் உள்ளன. உதாரணத்திற்கு, குறைந்தளவு வாழ்க்கைத் தரத்தைப்பேண உதவுவதற்குக்கூட போதிய வழிமுறைகளற்ற நிலை, சுகாதா ரம், கல்வி, சுத்தமான நீர், மலசலகூட வசதிகள், பாதைகள், மின்சாரம், தொலை பேசிகள் போன்ற சமூக சேவைகளை அடைந்துகொள்ள இவர்களால் முடிய வில்லை. ஊட்டச்சத்தின்மை, பொருத்தமான இருப்பிடமில்லாத குறை பாடு, இயற்கை அனர்த்தங்களின் போது உதவியின்மை போன்ற வற்றால் அவதியு றுகின்றனர்.

மேற்குறிப்பிட்ட மூன்று வகையான மக்களையும் வித்தியாசமான முறையில் அணுகியே அவர்களது அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்கவேண்டியுள்ளது. உதாரணமாக, சிறுவிவசாயிக்கு கடனைப்பெற்றுக்கொள்ள ஆதரவு தேவைப் படலாம். இவ்வாறான கடனுதவித் திட்டத்திலிருந்து நிலமற்றவர் பயனடை யப் போவதில்லை. அவருக்கு சிலவேளை தொழில் தேவையாக இருக்கும். அவ்வாறே வாடகைக்கு இருப்ப வரைப் பொறுத்தவரையில் தொழில் வாய்ப்பை விடவும் வாடகையுடன் தொடர்பான சிறந்த ஒப்பந்த விதிமுறை கள் தேவைப்படும்.

கிராமிய வறியோரின் விபரக்கோவை

வளர்முக நாடுகளிலுள்ள கிராமப் பகுதிகளில் உள்ள வறிய மக்களினை அடையாளப்படுத்தும் விபரக்குறிப்புகள் பின்வருமாறு அமைந்துள்ளன.

* முன்னேற்றகரமான தொழிநுட்பம் நீர்ப்பாசனம், வித்துகள், உரவகைகள், விவசாய உபகர ணங்கள், களைகொல்லிகள் போன்றவற்றை பெற்றுக்கொள்ள இயலாமை. மிகவும் வறியவர்களாக இருப்பதால் விவசாயத்திற்குத் தேவை யான மேற்குறிப்பிடப் பட்ட வளங்களை கொள்வனவு செய்வதற்கோ, வாட கைக்கு பெற்றுக்கொள்ளவோ முடியாத நிலையில் உள்ளனர். மேலும், அவர் கள் கடனைப்பெற்றுக் கொள் வதற்கான அமைப்பும் இல்லை. கடனாகப் பெற் றுக் கொள்ளும் வாய்ப்புகளும் இல்லை.

* ஏழை விவசாயிகளைப் பொறுத்தவரையில் அவர்கள் பொது அமைப்புகளைச் சென்ற டையக்கூடிய நிலையில் இல்லை. அவர்களது விடயங்கள் நகர்ப் புறங்களில் அமையப்பெற்றுள்ள அலுவலகங்களில் தீர்மானிக்கப் படுகின்றன. இவ்வலுவலகங்களை ஏழை விவசாயிகளால் இலகுவில் அடைந்துகொள்ள முடியாதுள்ளது. இதன் விளைவாக அவர்களது அடிப்படை உரிமைகளை அனுபவிக்க முடிய வில்லை. அவர்களது மனதில் எழும் உற்சாகம் புண்படுத் தப் பட்டு ஒடுக்கப்பட்டுள்ளது, அவர் கள் ஓரங்கட்டப்பட்டுள்ளனர்.

* வறிய விவசாயிகளுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பின்மை. பணக்காரர்களும் பலசாலிகளும் இவர்களுக்குப் புரியும் தவறுக ளுக்கு நீதி தேடுவதில் நீண்ட நேரத்தை வறிய விவசாயிகள் செலவிடுகின்றனர்.

* நகர்ப்புற நிர்வாக அலுவல கங்களும் கிராமப் பகுதிகளிலுள்ள தனவந்தர்க ளும் கூட்டாகப் புரிகின்ற பரந்தளவிலுள்ள ஊழல், கிராமிய வறியவர்களை மன நெருக்கீடுகளுக்கு ஆளாக்கியுள் ளது.

வறுமைக்கான காரணங்கள்

வறுமைக்கான காரணிகள் சிக்கலானவையாகவும் வரலாற்று ரீதியானவையா கவும் அமைந்துள்ளன. சொத்துரிமை, அதிகார பலத்தின் கட்டமைப்பு என்ப வற்றை நிர்ணயிக்கின்ற சமூக, கலாசார சக்திகள் கிராமிய வறுமைக்கு பிர தானமாக பங்களிக்கின்றன. வறுமைப் பிரச்சினையை உக்கிரப் படுத்துவதில் அரச கொள்கைகள் பெரும்பாலான விடயங்களில் பங்களித்துள்ளன. உதாரண மாக : நகர்ப்புற கைத்தொழில் மயமாக்கலுக்கு ஆதரவு வழங்குவதன் காரண மாக கிராமப் பகுதியிலுள்ள வளங்கள் நகர் புறங்களுக்கு நகர்த் தப்பட அதிக மாக வழிவகுக்கின்றன.

அவ்வாறே, கிராமங்களிலுள்ள பெரும்பான்மையான வறியவர்களை முன்னேற் றும் நோக்கில் வகுக்கப்பட்ட கொள்கைகளை நோக்கி சிறியளவு தொகையின ரும் பணக்காரர்களும் மாத்திரமே பயனடையும் விதத்தில் அவை நடை முறைப் படுத்தப்படுகின்றன. வளர்ச்சிய டையாத நிதிக்கட்டமைப்பும் கிராமிய வறுமையை அவ்வாறே நிலைத்திருக்கச் செய்கிறது. ஒரு சில வறிய கிராம மக்கள் சேமிப்பதற்குரிய ஆற்றலிருந்தும் உற்பத்திப் பயன்பாடுகளை நோக்கித் தமது சேமிப்பை வழிப்படுத்த முடியவில்லை. மேலும், கிராமப் பகுதிகளில் அபிவிருத்தியடைந்த நிதிச்சந்தைகள் இல்லாமையால் நிதித்தேவையுடையோ ரால் அதனைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை.

மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான பரந்தளவிலான திட்டம்

கிராமிய அபிவிருத்தி என்பது பொருளாதார மாறிகளில் மாத்திரம் மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டமல்ல. இதற்காக பல்வேறு கோணங்களிலிருந்தும் வறுமை ஒழிப்பிற்கான பலமுனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளன. இது குறித்து பொருளியலாளர்கள், சமூக விஞ்ஞானிகள், சமூகப் பணியாளர் கள், நன்கொடை முகவர்கள், கிராமிய கடன்வழங்கும் நிறுவனங்கள், அரசாங் கங்கள் பரவலாக கலந்து ரையாடியுள்ளன. குறைந்தது இரு விடயங்களில் அவர்களிடையே கருத்தொற்றுமை நிலவுகிறது.

1. கிராமப் பகுதிகளில் சந்தையை ஆதாரமாகக் கொண்ட, ஊக்குவிப் புகளை வழங்குகின்ற, சமூக உட்கட்டமைப்பை கட்டியெழுப்பும் கொள்கைகள் ஊடாக ஏழைகளின் உற்பத்தித்திறன் மேம்படுத்தப் படவேண்டும். கிராமப்பகுதிக ளுக்கு பாதைகள், கல்வி நிறுவனங்கள், சுகாதாரப் பராமரிப்பு நிறுவனங்கள், குடிநீர், ஆரோக்கியமான சூழ்நிலை, சாக்கடைக் கழிவகற்றும் வடிகாலமைப்பு, போதிய சந்தை முறை ஆகிய வசதிகள் வழங்கப்படவேண்டும்.

2. விவசாயப் பண்ணைத் தொழிலை முன்னேற்றும் நிகழ்ச் சித் திட்டமொன்று இருக்கவேண்டும். பண்ணைக் கைத்தொழிலுக் குரிய முன்னேற்றகரமான உள் ளீடுகள் கைவசம் இருப்பதுடன் விஞ்ஞான, தொழில்நுட்ப ஆய்வு முடிவுகள் விவசாயிகளுக்கு கிடைக்கக்கூடியதாக தயார் நிலை யில் இருக்கவேண்டும்.

Courtesy: மீள்பார்வை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s