Comment துஸ்பிரயோகம் தொடர்பான வாசகரின் கருத்து
Posted by Kattankudi Web Community (KWC) on 05/07/2010
kattankudi.info இணையத்தளம் கடந்த இரண்டு வருட காலங்களாக தமது இணையத்தள சேவையை மிகச் சிறப்பாக செய்துவருவதை நாம் அனைவரும் நன்கறிவோம் அந்த வகையில் அதன் வாசகன் என்ற வகையில் அதன் செயற்பாட்டை நன்றியுடன் இந்த இடத்தில் மிகவும் நினைவு கூறுகின்றேன்.
பல சிரமங்களுக்கு மத்தியில் எமது சகோதரர்கள் தியாகத்தோடு இப்பணியைச் செய்து வருகின்றார்கள். இச்சேவை எவ்வளவு பெறுமதிமிக்கது என்பதை ஒரு வெளிநாட்டில் வசிக்கும் இக்குழும வாசகனிடம் கேட்டால் தெரிந்து கொள்ளலாம் அந்தளவு மிகப் பெரிய பிரயோசனமான பணிதான் இது. இதற்கான கூலியை அல்லாஹ்வை தவிர வேறு யாராலும் அவர்களுக்கு அளித்துவிடமுடியாது. இருந்தாலும் சிலர் இதனை அதன் பெறுமதி விளங்காது கேலிக் கூத்தாக நினைக்கின்றனர். தரக் குறைவான கருத்துக்களை தெரிவிக்கின்றனர். தனிநபர்களின் உள்ளங்கள் புண்படும்படியான கருத்துக்களை முன்வைக்கின்றனர். இதனையும் மீறி சிலர் மோசடி வேலைகளையும் செய்கின்றனர்.
அந்த வகையில் கடந்த 2010.07.03ம் திகதி “முறை கேடுகளுடன் கூடிய நகரசபை கணக்கறிக்கையை நல்லாட்சி உறுப்பினர் நிராகரித்தார்” என்ற தலைப்பில் வெளியான ஒரு செய்திக்கு Comments கொடுக்கப்பட்டுள்ள பகுதியில் SM Shathuly என்ற எனது பெயரை பயன்படுத்தி ஒரு Comment கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உடனடியாக எடுக்கப்பட்ட நடவடிக்கையைத் தொடர்ந்து அந்த Comment அப்பகுதியிலிருந்து அகற்றப்பட்டது.
இப்படிப்பட்ட மட்டமான கீழ்த்தரமான உணர்வு கொண்டவர்களின் போலியான கருத்துக்களை பார்த்த வாசகர்கள் சிலர் இது உண்மையானது என நினைத்து அதற்கு பதிலும் அனுப்பியிருந்தனர். எங்கோ இருந்து தவறான சிந்தனையுள்ள ஒரு வம்பன் செய்யும் தவறுக்கு எத்தனையோ பேர் வீணாக சிரமப்பட வேண்டியுள்ளது. சொந்தப் பெயரில் கருத்துச் சொல்ல திராணியற்ற விசமிகள் வேண்டுமென்று குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக இவ்வாறான போலியான பெயர்களை பயன்படுத்துகின்றனர். இது மிகப் பாவமான விடயம். இஸ்லாத்தின் பார்வையில் சம்பந்தப்பட்டவர் மன்னிக்காத வரை அல்லாஹ்வும் மன்னிக்க மாட்டான். எனவே இத்தகையவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும்.
அத்துடன் இப் பெறுமதியான இணைய தளத்தை நிருவகிப்போர் தாங்களும் இவ்விடயத்தில் முடியுமான கவனத்தை செலுத்துவதன் மூலம் எதிர்காலத்திலும் இவ்வாறான வீண் சிரமங்கள் ஏற்படுவதை தவிர்த்துக் கொள்ளலாம் என்பதையும் எனது பணிவான வேண்டுகோளாக முன்வைத்து தங்களது இப்பணி மேலும் சிறப்பாக வளர இறைவனை பிரார்த்தித்து வாழ்த்தி விடைபெறுகிறேன்.
நன்றி
S.M. சாதுலி
ஜெம் ஜுவலர்ஸ்
காத்தான்குடி.







ashar saudi arabia said
effade oru inya thalm valindil erukm agklai pola varklauk unmail itu oru mukiyama inya thalam anru than solavndum uril nadkum atthni visyankali udanukudan tahruvati nangal fayan adikram allhmdulilah marru name kali koondu comment fanna vandam kattakudyk avmanm
salamshamil said
அன்புள்ள இஸ்லாமியா சகோதரர்களே,
தயவு செய்து உங்களது கருத்துக்களை உங்களது சொந்தப் பெயரில் கூறுங்கள்,
“அடுத்தவரது இரத்தம், மானம், பணம் இன்னொரு முஸ்லிமுக்கு ஹறாமாகும்.”
எமது நிர்வாக சகோதரர்களுக்கு பணிவான வேண்டுகோள்,
நமதூர் செய்திகளை இன்னும் கொஞ்சம் அதிகப் படுத்தினால் நன்றக இருக்கும்
உங்களது பணியை எல்லாம் வல்ல அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக.
Son of kky said
அன்புள்ள மொடரேட்டர்,
ஜெம் ஜுவலர்ஸ் உரிமையாளரின் கருத்து வரவேற்கத்தக்கது. என்னினும் அவருடைய பெயரிலும் அதே இனிஷலிலும் இன்னுமொறு சகோதரர் இருக்கலாம் இல்லயா? அவர் ஏற்கனவே சொன்ன அந்த ஒரு வரிக் கமன்ட் அவருடையதாகவும் இருக்கலாம்……!!!!!
Anyway congratulation for your precious service.
Haleem Aswar said
அன்பின் இணைய இயக்குனர்களுக்கு
எமது பிரதேசத்தின் சிறந்த ஊடகத்துக்கான தேவையை
ஓரளவு நிவர்த்தி செய்வது பாராட்டுக்குரியது .எனினும்
ஏனைய பிரதேசங்களிலும் விட காத்தான்குடியில் காணப்படும்
விஷேட சிறப்பம்சங்களை உலகரியச்செய்வது தற்போதைய தேவையாக
உள்ளது .சமூக சேவையாளர்கள் மனச்சோர்வடைந்து சமூக களத்தை விட்டு
ஒதுங்கிவிடாமல் இருப்பதுக்கு அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வண்ணம்
ஆக்கங்கள் அமைய வேண்டும் .சமூக சேவையாளர்களின் நேர்காணல்கள்
இடம்பெறவேண்டும் .மேலும் தொடரும் …………