காத்தான்குடி அந் நாசர் வித்தியாலயம்: பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் தலையீடு அதிகரிக்கின்றதா?
Posted by Kattankudi Web Community (KWC) on 27/06/2010
காத்தான்குடி முதலாம் குறிச்சி பிரதான வீதியில் அமைந்துள்ள அந் நாசர் வித்தியாலயம் சில காலத்துக்கு முன்னர் தனியான ஆண்கள் பாடசாலையாக மாற்றம் பெற்றது அனைவரும் அறிந்ததே. இவ்விடயம் உட்பட பாடசாலை விடயங்களில் அதிக கவனம் எடுத்து வருவது, காத்தான்குடி 1 மீரா ஜும்மாஹ் பள்ளிவாயலின் நம்பிக்கையாளர்களை அதிகளவில் கொண்ட பாடசாலை அபிவிருத்தி சங்கமாகும்.
கடந்த 23.06.2010 புதன்கிழமை காலையில் திடீரென பாடசாலைக்குள் நுழைந்த அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர் தலைமையிலான குழுவொன்று, வகுப்புகளை அவதானித்ததோடு, அதில் ஒருவர் வகுப்பொன்றுக்குள் நுழைந்து வரவுப்பதிவேடு மற்றும் பாடக் குறிப்புப் புத்தகம் ஆகியவற்றைப் பார்வையிட்டதோடு, அங்கிருந்த ஆசிரியரிடம் பாடங்களின் விபரங்கள், எத்தனை பாடங்கள் நடைபெறுகின்றன போன்ற விபரங்களைக் கோரியுள்ளார்.
வலயக் கல்வி அலுவலகத்தின் அல்லது கல்வி அமைச்சின் பரிசோதனைக் குழு போன்ற நடத்தையைக் காட்டிய இவர்கள், ஆசிரியர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கையில், தாங்கள் தொலைபேசி ஊடாக பாடங்கள் ஒழுங்காக நடைபெறவில்லை என்ற முறைப்பாடு ஒன்றைப் பெற்றதனாலேயே பரிசோதிக்க இங்கு வந்ததாகக் கூறியுள்ளனர்.
பாடசாலை அபிவிருத்தி சங்கம் என்பது பாடசாலையின் அபிவிருத்தி தொடர்பான விடயங்களில் பங்காற்றுவதற்கு அமைக்கப்படும் ஒரு அமைப்பே ஒழிய, பாடசாலை நேரங்களில் வகுப்புகளுக்குள் அத்துமீறி நுழைந்து பரிசீலனை செய்வதற்கோ, பாடசாலை விடயங்களில் தலையீடு செய்வதற்கோ அதிகாரம் பெற்ற ஒன்றல்ல என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. முன்னதாக அந் நாசர் வித்தியாலயம் ஆண்கள் பாடசாலையாக மாற்றம் பெற்ற போதும், அத்துடன் சேர்ந்து ஸாவியா வித்தியாலயம் பெண்கள் பாடசாலையாக மாற்றம் பெற்ற போதும், இதே அபிவிருத்தி சங்க உறுப்பினர்களின் அளவுக்கதிகமான தலையீடுகள் அவதானிக்கப்பட்டிருந்தன.
ஆயினும் திடீரென பிரதான வீதியோரத்தில் உள்ள பாடசாலையான அந் நாசர் வித்தியாலயத்தின் சுவர் வீதி அபிவிருத்தி வேலைகளைக் காரணம் காட்டி உடைக்கப்பட்டு பாடசாலை சூழல் கட்டுப்பாட்டை இழந்த போதும், அதே சுவர் அரைவாசிக்கும் கூடிய பண ஊழலில் மீள் நிர்மாணம் செய்யப்பட போதும் இந்தளவு தலையீட்டை காட்டவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. வீதி அபிவிருத்தியில் அநாவசியமாகத் தலையிட்டு அதை பெரும் இழுத்தடிப்புக்கு உள்ளாக்கியிருக்கும் அரசியலாளரின் முக்கிய ஆதரவாளர்கள் பள்ளிவாயல் நம்பிக்கை பொறுப்பாளர் சபையிலும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்திலும் முக்கிய பொறுப்புகளில் இருப்பது இதற்குக் காரணமாக இருந்திருக்கக் கூடும் என்று எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
kattankudi.info செய்தியாளர்
(அனுமதியற்ற மீள்பிரசுரம், தகவல்களைப் பிரித்தெடுத்து வெளியிடல் ஆகியன தடை செய்யப்பட்டுள்ளன)







lankanmoor said
Dear Meera Jummah Masjid Trustee Board, “Give respect Get respect”
Fayz - Qatar said
பாடசாலையை அவர்களது வீட்டுச்சொத்து என நினைத்திருப்பார்கள் போலும்…. அதிபரும் ஆசிரியர்களும் ஒன்றிணைந்து தங்களது அதிகாரம் என்னவென்று இவர்களுக்கு காட்ட வேண்டும், நல்ல பாடம் புகட்ட முன்வரவேண்டும்.
Nirfan said
Teachers and Principles are always expecting financial assitance to their school from School Development Society (SDS). In return, why an SDS should not expect the proper performance from shool education? So the School staff should be accountable to SDS as well. Here I am not refering to poltical or unfair influence. I am not accepting those influences as well..
But, it should be distinguished fair influence from unfair influence. Teachers (not all the teachers) cannot escape from their commitment by reasoning that unfair influences imposed on them.
sam said
அது ஒன்றுமில்லை. அந்த பள்ளி நிர்வாகத்திலுள்ள ஒரு தலைவர் (ஒரு தலைவரின் மகன்) தன்னை பிரபாகரன் என்று சில வேளைகளில் நினைத்து கொள்கிறார். அதனால்தான் முதலாம் குறிச்சியை பெருநிலப்பரப்பு என்று கருதி ஆட்சி செய்யப்பக்கிறார். இவர் இப்போதைய அவரின் வாழ்.
சாம்புராணி said
பெரு நிலப்பரப்பில் இருந்து நகர சபை உறுப்பினராகி சேர்மன் ஆக இவர் ட்ரை பண்ணுகிறார் போலும்
உசாமா said
மீன்டும் ஒரு போராட்டம் ஆரம்பமா?
Puvi M.I. Rahmathullah said
காத்தான்குடி.இன்போ வலைமனையினருக்கு,
இச்செய்தியை ‘வார உரைகல்’ லில் இவ்வாறே மீள்பிரசுரம் செய்ய தங்களின் அனுமதியைக் கோருகின்றேன்
புவி. எம்.ஐ. றஹ்மதுல்லாஹ்
(பிரதம ஆசிரியன் – வார உரைகல்)
kattankudi said
Dear Vaarauraikal Chief Editor,
Thank you for your request. we welcome you to publish our news at your news paper.
Regards,
Moderator
Kattankudi Web Community
kkymovlavi said
அரங்கேறும் அளிபாபக்களும் அறிவீன சகாக்களும் போடும் நாடகங்களுக்கு செரியான பாடம் ஆசிரியர் சங்கத்தினுடாக படிப்பிக்கவேண்டும் அப்போதுதான் இவர்களுடன் இருக்கும் நரிகளும் ,தவளைகளும் .ஊளை இடாமலும் கத்தாமலும் இருப்பார்கள் .பாடசாலை கல்வி சார்ந்த விடயங்களை
கவனிக்க கல்வி பணிப்பாளர் இருக்கிறார் இவர்கள் யார் ?
ASHAAR.. SAUDI ARABIA said
manverkal than ithku mudiu fannum