காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 4,986,219 மொத்த வருகைகள்

வெட்கத்தை விட்டு வேதனையுடன்: காத்தான்குடி மத்திய கல்லூரியின் இன்றைய நிலை

Posted by Kattankudi Web Community (KWC) on 11/05/2010

இன்று காலை 9.30 மணியளவில் காத்தான்குடி மத்திய மகா வித்தியாலயத்தில் கணித விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்கான அனுமதி வழங்குவதற்கான நிகழ்வு ஆரம்பமாகியது.  ஆனால் மேற்குறித்த நிகழ்வு 8.30 என அறிவிக்கப்பட்டிருந்தும் நமது கலாச்சார நேரமான 9.30 மணிக்கே ஆரம்பமானது. மிகவும் கண்டிப்பாக பெற்றோர்களை அழைத்துவர வேண்டும் என பாடசாலை நிருவாகம் கோரியிருந்தபோதும் நமது பெற்றோர்களின் வேலைப்பளு காரணமாக சில மாணவர்கள் பெற்றோர்கள் இன்றியே சமூகம் தந்திருந்தனர். இருப்பினும் அதிபர் பெற்றோருடன் சமூகமளிக்காத மாணவர்களை இந்நிகழ்வில் கலந்து கொள்ள அனுமதிக்கவில்லை. (அரசியல் கூட்டங்களிலும், சலூன்களிலும், வைத்தியசாலைகளிலும், பொலிஸ்நிலையங்களிலும் பல மணித்தியாலயங்களை செலவழிக்கின்ற நமது பெற்றோருக்கு பிள்ளைகளின் விடயத்தில் ஒரு மணித்தியாலத்தை செலவழிப்பது நஷ்டமாக தெரிந்திருக்க வேண்டும்)
அனைவரது கிராஅத் ஓதல்களின் பின் அதிபர் உரையாற்றினார். அவரது உரையில் தேசிய பாடசாலையின் குறைபாடுகளையும் பல அமைச்சர்களிடம் இவ்விடயத்தை எடுத்துக் கூறியும் உரிய நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை என்று மிக மனவேதனையுடன் கூறினார்.
1)       நமது தேசியபாடசாலையில் கடந்த இரண்டு வருடங்களாக இணைந்த கணித பாடம் நடாத்துவதற்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என்றும் மருதமுனையைச் சேர்ந்த ஒரு ஆசிரியர் தற்போது பொறியியாளர் அப்துர் ரஹ்மான் அவர்கள் வழங்கும் நிதியைக் கொண்டு தற்காலிகமாக நியமிக்கப்பட்டிருப்பதாகவும்
2)       மிக மோசமாக தளபாடங்கள் பற்றாக்குறையாக இருப்பதனால் அருகிலுள்ள கிராம பாடசாலையொன்றில் இருந்து இரவலாக அதனைப் பெற்று வந்ததாகவும் குறிப்பிட்டார்.
நமது பாடசாலையில் 350 இற்கு மேற்பட்ட உயர்தரப் பிரிவு மாணவர்கள் தற்போது கல்வி கற்கிறார்கள்.  இவ்வாறான பாரிய குறைபாடுகளுக்கு மத்தியிலும் கடந்த வருடம் 6 மாணவர்கள் மருத்துவத்துறைக்கும் 5 மாணவர்கள் பொறியியல் துறைக்கும் தெரிவு செய்யபட்டார்கள். 60 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் அனைத்து துறைகளிலும் பல்கலைக் கழகம் சென்றுள்ளனர்.
பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் அமைப்பு, செல்வமிக்க பெற்றோர்கள், அரசியல் அதிகாரம், சிறப்பான ஆசிரியர்கள் இவ்வூரில் இருந்து இப்படியான அவலம் நமது தேசிய பாடசாலையில் நிலவுவது வெட்கத்துடன் வேதனைப்படக் கூடிய ஒன்றாகும்.
எனவே, இன்று இந்நிகழ்வில் கலந்து கொண்ட பெற்றோர்கள் மாதம் 500 இற்கு குறையாத பணத்தொகையை மேற்கூறிய பாடத்தை நடாத்தவருகின்ற ஆசிரியருக்கு வழங்குவதற்கு முன்வந்துள்ளனர்.  ஆனால், கலந்து கொண்ட பெற்றோர்களில் 40%  அன்றாட வாழ்க்கையை நடாத்துவதையே கேள்விக் குறியாக கொண்டவர்கள். தனது திறமையான பிள்ளைகளை தனது வருமானத்திற்குள் படிப்பிப்பதற்கு முயற்சிப்பவர்கள்.  இவர்களிடம் எப்படி பணத்தை அறவிடுவது??? இலவசக் கல்வி என்ற பெயரில் பிரபுக்களின் குழந்தைகள் மாத்திரம் பெற்றுக் கொள்ளும் கல்வியாக இத்துறைகள் மாறிவிடுமோ என்ற அச்சம் நமக்கு உள்ளது.
உயர்தரக் கல்வி என்பது பரீட்சாத்தமாக நடாத்திப்பார்க்கின்ற ஒரு துறை கிடையாது. இரண்டு வருடங்களையும் 100% சரியாக பயன்படுத்துவதன் மூலமே வெற்றியடைய முடியும்.
எனவே, அன்பின் பழைய மாணவர்களே, இவ்வருடம் இத்துறையில் கல்வி கற்கின்ற மாணவர்கள் தங்களது கல்வியை சிறப்பாக கற்பதற்கு தங்களால் முடியுமான உதவிகளை செய்வீர்கள் என எதிர்பார்கின்றேன்.
இரண்டு பாடங்களுக்கும் வெளியே இருந்து வருகின்ற ஆசிரியர்களுக்கு மாதாந்தம் 40000.00 செலுத்த வேண்டும். 80 மாணவர்கள் இவ்விரு துறைகளிலும் இணைத்துக் கொள்ளப்படவிருப்பதனால் ஒருவருக்கு மாதம் 500.00 செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். இவ்விடயத்தினை 3 மாத காலங்களுக்கு பரீட்சாத்தமாக நடைமுறைப்படுத்துவதாக தீர்மானிக்கபட்டது.   நான் மேற்கூறிய 40% மாணவர்களுக்கும் தங்களால் முடியுமான நிதியுதவிகளைச் செய்தால் இன்ஷா அல்லாஹ் 2012 இல் இதனது விளைவைக் காணமுடியும் எனக் கருதுகின்றேன்.  தங்களது ஆலோசனைகளையும் பங்களிப்புகளையும் இங்கு எதிர்பாரக்கின்றோம்.
மேலதிக தகவல்கள் தேவைப்படின் என்னுடன் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கின்றேன்.
அல்லாஹ் நம்மனைவரதும் தூய எண்ணங்களை அங்கீகரிப்பானாக.
ஏ.எல்.எம். ஸபீல் நளீமி
காத்தான்குடி
0773864498
(This message posted to our Yahoo Group – WebAdmin)

8 Responses to “வெட்கத்தை விட்டு வேதனையுடன்: காத்தான்குடி மத்திய கல்லூரியின் இன்றைய நிலை”

  1. kkymovlavi said

    காத்தான்குடி தேசிய கல்லூரியின் நிலைமையை நன்றாக சிந்தித்து,தூ ற நோக்கோடு பார்க்கும் எனது சக தோழர்களும் நண்பர்களும் இதற்கு மாற்று வழி எது பொருத்தம் என உங்கள் சிந்தனைகளை முன் கொண்டு வாருங்கள்.சில அரசியல் வாதிகளின் முறை கேடான வழிகாட்டலினால் எமது சமுகம் கல்வியில் முன்னேறுவது மிகவும் சிரமமான விடயமாக உள்ளது.கல்வி எம்மை பொறுத்தவரையில்
    முதுகு எலும்புக்கு சமமானது அவ்வாறான வலுவான ஒரு விடயத்தை எவ்வாறு நமது எதிர்கால சந்ததிக்கு திட்டம் மிட்டு கொடுக்க வேண்டும்.எனவே ஊரின் அனைத்து இஸ்லாமிய நிறுவனங்களும் ,நலன்புரிச்சங்ககளும் இணைந்து ஒரு காத்திரமான முடிவை எடுங்கள் இறைவன் அல்லாஹ் நம் அனைவருக்கும் துணைபுரிவானாக

  2. Obama-kky said

    Thanks a lot brother Sabeel Naleemi.
    கல்லூரி அதிபர் அவர்களே! இவ்வாறான வைபவங்களுக்கு அரசியல் வாதிகளுக்கு அழைப்புவிடுக்கமாட்டீங்களோ? அடிக்கல் நாட்டும் விழாவுக்கு மாத்திரம் தான் அவர்களுக்கு அழைப்பு விடுவீங்க அப்படித்தானே?
    ஒரு ஆசிரியருக்கு 40000/- சம்பளமா????? டியூசனுக்கு காசு கொடுத்து படிக்க முடியாத மாணவர்கள் பாடசாலைக்கு வருகிறார்கள் அவர்களின் நிலமை என்னாச்சு??? என்ன கொடுமை சார் இது???
    யாஅல்லாஹ் என்னிடம் கொடுத்து உதவுவதற்கு பணம் இல்லை எனவே எனது துஆவினை ஏற்று அம்மாணவர்களுக்கு நல்வழி காட்டுவாயாக!!!!!

  3. fawmiya said

    dear moderator! where my comment???

  4. kattankudi said

    Hi fawmiya,

    Your comment has been removed according to the new policy, which is currently under second round of review.

    All viewers: Hereafter we won’t reply to such ‘where is my comment’like questions. You are making the comment accepting that the WebAdmin has full control over it. We can edit, reject or even can remove after published based on complaints and policy changes.

    For all of your kind information please

    Wassalam
    WebAdmin

  5. சிக்கந்தர் said

    பூவி ரஹ்மதுல்லாஹ் பரவாயில்லை போலிருக்கு!!!!!
    இப்படி ஒரு கொமன்ட் ஒப்ஸன் அவசியமே இல்ல என தோனுது. தயவு செய்து ஒரெயெடியாக அகற்றிவிட்டால் ஏன் எதற்கு என்ற கேள்வி வராது.

  6. Kalisara said

    Dear Sikkanthar Absolutely right.hai moderator please avoid whole comments facilities of your KWC.ok

  7. Obama-kky said

    வேண்டாமெ அந்த விபரீத முடிவு மேற்படி கலிசர மைந்தனின் தீவிர ஆதரவாளர் என்பது உலகறிந்த விடயம். நீங்கள் இந்த அற்ப சொற்ப சான்ஸயும் அகற்றிவிட்டீர்களானால் உண்மையெல்லாம் உலகுக்கு தெரியாமல் அப்படியே உறங்கிவிடும். எனவே தயவு செய்து விபரீத முடிவு வேண்டாம்.

  8. alameen said

    Dear Admin

    Please remove the Comments facilities with attached news.it will help to avoid unnessary problems.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s