காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 4,986,219 மொத்த வருகைகள்

JABIR (B.Com) joined UPFA: An explanation from bro. Sabeel (Naleemi)

Posted by Kattankudi Web Community (KWC) on 05/04/2010

அன்பின் இணையத்தள அன்பர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

தற்போது தேர்தல் காலம்.  ஒருவர் தும்மினால்  கூட அவர் ஏதாவது கட்சி சார்பாகத்தான் தும்மி இருக்க வேண்டும் என்று வியாக்கியானம் கொடுக்கும் காலம்.  உண்மையில் தும்மியவர் நினைத்தும் இருக்கமாட்டார் நமது தும்மல் இவ்வளவு தூரம் செல்வாக்குச் செலுத்தி வெப் தளத்தில் பிரசுரமாகும் என்று. இது தேர்தல் காலங்களில் சகஜமப்பா.  என்னிடம் ஒரு நுஆ கட்சியைச் சார்ந்த  அன்பர்  வந்து பேசிக்கொண்டு இருந்தார். இதனைப் பார்த்த இன்னும் ஒருவர் குட்வின் சந்தியில் வைத்து எனது நண்பரிடம் நான் நுஆவில் சேர்ந்து விட்டதாக சொல்லிச் சென்றிருக்கிறார்.  இப்போது யாரிடம் சொல்லி நான் ஒப்பாரி வைப்பது நுஆ என்ற கட்சி மகிந்தவின் சாக்கடைக்குள் சங்கமித்துக் கொண்டது என்பது கூட அவருக்குத் தெரியாது. இதுபோலதான் சகோ. ஜாபிர் அவர்களின் கட்சி மாறுதல் என நான் நினைக்கின்றேன்.  இதற்கெல்லாம் நாம் கட்டார் துபாய் போன்ற நகரங்களில் இருந்து தொலைபேசி எடுத்து  அவரிடம் வினவி நமது பணத்தை வீணாக்கத் தேவையில்லை.

நாம் அறிந்த வகையில் உண்மையில் ஒருவர் கட்சி மாறுவதற்கு பல காரணங்கள் இருக்கும்.

1.   தான் சார்ந்திருக்கும் கட்சியின் கொள்கை நமது  சமூகத்திற்கு ஒத்துவராது என்றால்

2.   தனது சுயநலத்திற்கு ஏற்ப கட்சித்தலைவர்கள் செயற்படுகிறார்கள் இல்லை என்று கருதினால்

3.   தான் வகிக்கும் பதவியில் ஏதாவது பதவி உயர்வுகள் கிடைக்க வேண்டும் என்றால்

4.   தனக்கு ஏதாவது கொந்துராத்துகள் கிடைக்க வேண்டும் என்றால்

5.   தனது உறவினர்கள் தேர்தலில் கேட்பதால் தனது குடும்பத்தின் வாழ்வு உயரும் என்று

இதில் ஏதாவதொன்றுக்காக ஒருவர் கட்சி மாறுவார்

சகோ. ஜாபிர் அவர்கள் ஹிஸ்புள்ளாஹ் அவர்களோடு இணைந்து கொண்டார்;  என வைத்துக் கொண்டாலும் மேற்கூறிய காரணங்களின் அடிப்படையில் அவர் இணைந்திருப்பார் என என்னால் கற்பனை கூட பன்ன முடியாது.  காரணம் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் கொள்கையை வளர்ப்பதில் சகோ. ஜாபிர் அவர்கள் ஒருபோதும் பின்நிற்கவில்லை அதுமாத்திரமன்றி நாம் நகர சபைத் தேர்தலில் போட்டியிட்ட போது நம்மை யஹூதிகள் என்றும் நஸ்றானிகள் என்றும்  மெழுகுதிரிச் சின்னம் யஹூதிகளின் சின்னம் என்றும் கூறிய நமது ஊர் அறிவாளிகளின் விமர்சனங்களுக்கு மத்தியிலும்  எம்மோடு இணைந்தவர் சகோ. ஜாபிர் அவர்கள். எனவே, கொள்கைகளுக்காக எம்மோடு இணைந்தவர் சுயநலத்திற்காக ஹிஸ்புள்ளாவுடன் இணைந்திருக்கமாட்டார் என நான் உறுதியாக நம்புகின்றேன்.  என்னிடம் ஒருவர் வந்து ஜாபிர் அவர்கள் தற்போது இருக்கின்ற பதவியில் பதவி உயர்வு வேண்டும் என்பதற்காக அவ்வாறு கட்சி மாறியதாக கூறினார். நான் அவரிடம் ஜாபிர் அப்படியானவர் அல்ல. அவ்வாறு இவ்வரசியலினால் பதவி உயர்வு கிடைத்தாலும் அது நமக்கு அநியாயமாக கிடைத்தது என்று அவர் அதனை தூக்கி எறிவார் என்று நான் வாதாடினேன். இதனை ஜாபிர் அவர்களிடம் கேட்டால் 100 வீதம் சரிகாண்பார்.

என்னைப் பொறுத்தவரையில் நல்லாட்சிக்;கான மக்கள் இயக்கம் இத்தேர்தலில் போட்டியிடாததன் காரணமாக பல நிபந்தனைளுடன் ஹிஸ்புள்ளாஹ் அவர்களை ஜாபிர் அவர்கள் ஆதரிக்கவிருப்பதாகவும் அப்பகுதியில் வாழ்கின்ற ஒருவர் கூறுகின்றார். சகோ. ஜாபிர் அவர்களுடன் தொலைபேசியில் உரையாடி இவ்விடயத்தை இத்தளத்தில் முன்வைத்தவர்கள் மீண்டும் அவரோடு உரையாடி அவர் முன்வைத்த நிபந்தனைகளை வினவி இத்தளத்தில் முன்வைத்தால் அது சம்பந்தமாக நாம் கலந்துரையாடலாம். அது ஆரோக்கியமாக அமையும் என நான் நினைக்கின்றேன்.

எனவே, யார் யாரோடு சேர்கிறார் என்பது முக்கியமல்ல எந்த நிபந்தனைகளோடு உத்தரவாதத்தோடு வெளிப்படைத்தன்மையோடு சேர்கின்றார் என்பதே முக்கியம்.

மீண்டும் உங்களுடன்

அன்பின்

ஏ.எல்.எம். ஸபீல்

5 Responses to “JABIR (B.Com) joined UPFA: An explanation from bro. Sabeel (Naleemi)”

  1. lady member said

    தல போல வருமா? எங்கள் தல போல வருமா? R……… sir போல வருமா?எங்கள் R……… sir போல வருமா?

  2. Uwais Mohideen said

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    அன்புச் சகோதரர் சபீல் அவர்களுக்கும் மற்றும் குழு அங்கத்தவர்களுக்கும்,

    இவ்விடயம் தொடர்பான கருத்தாடல்களை தொடர்ந்து அவதானித்து வருபவன் என்ற வகையில் சில கருத்துகளை தெரிவிப்பது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். இவை எனது சொந்தக் கருத்துகளாகும். இவை தொடர்பான எவ்விதமான கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன.

    உங்களது மடல் சகோதரர் ஜாபிர் அவர்களின் கட்சி மாறுதல் தொடர்பில் தெளிவான கருத்தைத் தெரிவிக்கவில்லை என்பதை வருத்தத்துடன் சுட்டிக்காட்ட விளைகிறேன். அதாவது,

    > ஆரம்பத்தில் ‘இதுபோலதான் சகோ. ஜாபிர் அவர்களின் கட்சி மாறுதல் என நான் நினைக்கின்றேன்’ என்று குறிப்பிட்டிருக்கின்றீர்கள். எனவே ஜாபிர் கட்சி மாறிவிட்டார் எனக்கருதிக்கொண்டு தொடர்ந்து வாசித்தால்,

    > ‘சகோ. ஜாபிர் அவர்கள் ஹிஸ்புள்ளாஹ் அவர்களோடு இணைந்து கொண்டார்; என வைத்துக் கொண்டாலும்’ எனும் வசனம், இணைந்தாரா இல்லையா எனும் கேள்வியைத் தோற்றுவிக்கின்றது.

    > ‘நல்லாட்சிக்;கான மக்கள் இயக்கம் இத்தேர்தலில் போட்டியிடாததன் காரணமாக பல நிபந்தனைளுடன் ஹிஸ்புள்ளாஹ் அவர்களை ஜாபிர் அவர்கள் ஆதரிக்கவிருப்பதாகவும் அப்பகுதியில் வாழ்கின்ற ஒருவர் கூறுகின்றார்’ என்றும் உங்கள் மடலில் இருக்கிறது.

    இனி நாம் எமது கருத்தாடலுக்கு வரலாம். இவ்விடயத்தை யாஹூ குழுவில் பிரசுரித்த சகோதரர் கலீலுர் ரஹ்மான் அவர்கள் இதை தான் சகோதரர் ஜாபிர் அவர்களிடம் தொலைபேசியில் உறுதிப்படுத்தி விட்டதாக குறிப்பிட்டிருந்தார். மேலும் தனது ஆதரவாளர்கள் 50 பேருடன் சென்று இணைந்து கொண்டதாக ஒரு தகவலும் அதில் இருந்தது.

    எனக்கு தெரிந்தவரை நீங்கள் PMGG யின் பொதுச் செயலாளராக இருக்கிறீர்கள். உரிய விடயத்தை உரியவர்களிடம் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்வது நல்லது என்பதால், நான் உங்களை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்து முடியாமல் போனதால் உங்களது சூறா சபை உறுப்பினர் சகோதரர் இர்ஷாத் அவர்களைத் தொடர்பு கொண்டு வினவியிருந்தேன். அவர் ஜாபிர் சேர்ந்தாரா இல்லையா என்று தெளிவாகக் கூறவில்லை. மாறாக பதுளையில் இடம்பெற்ற சூறாவின் மூன்று நாள் அமர்வின் போது ஜாபிர் அவர்களை நீக்குவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறினார். சாராம்சமாக ஜாபிர் அவர்கள் PMGG உயர் மட்டத்திலிருந்து நீக்கப்பட்டு விட்டதாலும், பொதுத் தேர்தலிலிருந்து கட்சி ஒதுங்கிக்கொண்டு விட்டதாலும் அவர் சகோதரர் ஹிஸ்புல்லாஹ்வை ஆதரிக்கத் தீர்மாநித்திருக்கக் கூடும் என்று நான் நினைத்திருந்தேன்.

    இவ்விடத்தில் இன்னொன்றைக் குறிப்பிட விரும்புகின்றேன். ‘இதற்கெல்லாம் நாம் கட்டார் துபாய் போன்ற நகரங்களில் இருந்து தொலைபேசி எடுத்து அவரிடம் வினவி நமது பணத்தை வீணாக்கத் தேவையில்லை’ என்று குறிப்பிட்டிருந்தீர்கள். வதந்திகள் அதிகம் பரவும் அரசியல் காலநிலையில் விடயத்தை உரியவரிடமே கேட்டுத் தெளிவுபடுத்திக்கொள்வது சிறப்பான நடைமுறையாக இருக்குமல்லவா? எனக்கு சகோதரர் ஜாபிர் அவர்களுடன் பழக்கமில்லை என்பதாலேயே நான் உங்களையும் சகோதரர் இர்ஷாத்தையும் முயற்சித்தேன். முன்னரும் பல விடயங்களைத் தெளிவு படுத்த நாம் பேசியிருப்பது உங்களுக்கு நினைவிருக்கும்.

    ‘சகோ. ஜாபிர் அவர்களுடன் தொலைபேசியில் உரையாடி இவ்விடயத்தை இத்தளத்தில் முன்வைத்தவர்கள் மீண்டும் அவரோடு உரையாடி அவர் முன்வைத்த நிபந்தனைகளை வினவி இத்தளத்தில் முன்வைத்தால் அது சம்பந்தமாக நாம் கலந்துரையாடலாம். அது ஆரோக்கியமாக அமையும் என நான் நினைக்கின்றேன்’ என்பது இன்னும் எங்களைக் குழப்பத்தில் விட்டிருக்கின்றது. உங்களது சூராஹ் உறுப்பினராக இருந்தவரோடு அல்லது இருப்பவரோடு செயலாளர் என்ற முறையிலோ அல்லது பழக்கமானவர் என்ற வகையிலோ (அவர் உங்கள் நண்பராகக் கூட இருக்கக் கூடும்) ஏன் நீங்கள் இது தொடர்பாக கலந்துரையாடவில்லை? (அவ்வாறு உரையாடியதர்கான எவ்விதக் குறிப்பையும் உங்கள் மடலில் காணவில்லை என்பதால் கேட்கிறேன்).

    மேலும் சகோதரர் ஜாபிர் இக்குழுவில் அங்கத்தவராக இருக்கிறாரா என்பது எனக்கு தெரியவில்லை. இருந்தால் அவர் பதிலளிப்பது மிகவும் பொருத்தமாக அமையும். இல்லாவிட்டால், விடயத்தை ஆரம்பித்தவர் என்ற வகையில் சகோதரர் கலீலுர் ரஹ்மான் சகோதரர் ஜாபிரைத் தொடர்பு கொண்டு அவர் ஹிஸ்புல்லாஹ்வோடு என்ன நிபந்தனைகளின் அடிப்படையில் சேர்ந்து கொண்ட்டார் என்பதைத் தெளிவு படுத்த வேண்டும். அங்கத்தவர்களை தெளிவு படுத்த இது உதவும்.

    விடயம் ஆரம்பிக்கப்பட்டு விட்டதால், தெளிவான முறையில் அதை முடித்துக் கொள்வதே முறையாகும்.

    எனது கருத்துகள் யாரையும் புண்படுத்துபவையாக அமைந்தால், அது தற்செயலானது என்பதைக் கூறிக்கொண்டு, அவ்வாறான எத்தவறுக்கும் முன்கூட்டியே மன்னிப்பையும் கோரிக்கொண்டு எனது பதிவை முடிக்கிறேன்.

    மேற்கொண்டு கருத்துகள் வருமிடத்து தொடர்ந்து கலந்துரையாடலாம்.

    மாஸலாமா
    உவைஸ் முகைதீன்

  3. Kalisara said

    சகோதரர் ஜாபிர் B.Com அவர்கள் நமது மகனுடன் இணைந்தது மட்டுமல்ல அவரின் வெற்றிக்காக வீடு வீடாகச் சென்று காத்தான்குடி 01ம் குறிச்சியில் பிரச்சாரப் பணிகளில் 04.04.2010 அன்று ஞாயிற்றுக் கிழமை ஈடுபட்டார். இதனை நான் நேரில் கண்டேன். அவரிடம் பேசிய போது அவர் முற்று முழுதாக தாஜுல் மில்லத் அவர்களுடன் எதுவித நிபந்தனைகளோ ஒப்பந்தங்களோ இன்றி இணைந்து ஊருக்காகவும் சமூகத்துக்காகவும் உழைப்பதாக தெரிவித்தார். PMGG தொடர்பாக கருத்து தெரிவித்த அவர் ” தற்போது ஹீரோ ஹிஸ்புல்லாஹ்தான் மற்றவர்கள் தற்போது ஸீரோதான். இந்த சமூகத்தில் தற்போது எடுபட வேண்டும் என்றால் தாஜுல் மில்லத் MLAM. ஹிஸ்புல்லாஹ் MA அவர்களுடந்தான் இருக்க வேண்டும். ஏனெனில் சமூக அமைப்பு இன்று ஹிஸ்புல்லாஹ் அவர்களைச் சார்ந்ததாகும். இன்னும் 10 ஆண்டுகளின் பின்னர் சமூக அமைப்பு நிட்சயம் மாறலாம் அவ்வாறு மாறும்போது புதிய சிந்தனைகளும் கருத்துக்களும் அச்சமூகத்தில் எடுபடலாம் அல்லது உயிர்ப்பெறலாம். அப்போது PMGG யோ அல்லது மாற்றுக் கட்சியோ வரலாம். அப்போது PMGG யை ஆதரிப்பதைப் பற்றி யோசிக்கலாம். தற்போது நாம் மாறி வேலை செய்து பிரிந்து நின்று நமது பிரதி நிதியை இழந்தால் நாளை நமது கொள்கை உயிர் பெறும் போது ஒரு சமூகம் எம்மை எதிர்த்துக் கொண்டு கடந்த 2000ம் ஆண்டிலிருந்து MP நமது ஊருக்குக் கிடைக்க விடாதவர்கள் என்று நமக்கெதிராக போர்கொடி தூக்கும். அப்போது அந்த சமூகத்தில் பெரிய எதிர்ப்பலை நிரந்தரமாகவே இருக்கும்” என்று கூறினார். Warmly Well come Mr. Jaabir B.com and Other Graduates.

  4. lady member said

    சகோதரர் கூறியது போல் எனக்கும் இந்த விடயத்தில் சில சந்தேகங்கள் இருக்கிறது.எந்தவொரு விசயத்தையும் விளக்கமாக கூறும் இவ்வியக்கம் ஏன் இந்த விடயத்தை மட்டும் மழுப்புகிறது.

  5. Nirfan said

    hello Zabeel Naleemi,

    Are you taking this much time to reply? come on. for you, poyaday principle will not apply as you are in kky. we expect explanation in relation to comments made by brother UM.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s