காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 4,986,219 மொத்த வருகைகள்

மூன்று விருப்பு வாக்குகளையும் அளிப்பதன் மூலம் இரண்டு பிரதிநிதித்துவங்களைப் பெறலாம் – றவூப் ஹாஜியார் வேண்டுகோள்

Posted by Kattankudi Web Community (KWC) on 05/04/2010

http://vaarauraikal.files.wordpress.com/2010/04/rauff-haji-11.gif?w=116&h=166மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாகப் போட்டியிடும் மூன்று முஸ்லிம் வேட்பாளர்களுக்கும் இம்மாவட்டத்தின் சகல முஸ்லிம் பிரதேசங்களிலுமுள்ள முஸ்லிம் வாக்காளர்கள் அவர்களது மூன்று விருப்பு வாக்குகளையும் அளிக்க வேண்டும்.

அவ்வாறு அளிப்பதன் மூலமே இம்மாவட்ட முஸ்லீம்கள் தமக்கான முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்திக் கொள்வதுடன் எமது பிரதேசவாதமற்ற தூய்மையான இந்த எண்ணத்தின் மூலமாக அல்லாஹ் நாடினால் இரண்டு பிரதிநிதித்துவங்களைப் பெற்றுக் கொள்ளக்கூடிய சந்தர்ப்பமும் நமக்கு உள்ளதென்பதையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும், காத்தான்குடி நகரசபை உறுப்பினருமான அல்ஹாஜ் றவூப் ஏ. மஜீத் தெரிவித்தார்.

இம்மாவட்டத்தில் ஆளும் ஐ.ம.சு.கூ. சார்பில் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் அல்ஹாஜ் எம்.எஸ்.எஸ். அமீர்அலி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்ஸெய்யித் அலி ஸாஹிர் மௌலானா, முன்னாள் மாகாண அமைச்சர் அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் முஸ்லிம் வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கு 1, 2, 3 என்ற விருப்பு இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

http://vaarauraikal.files.wordpress.com/2010/04/3-vots-poster.gif?w=194&h=134எனினும் இம்மூன்று வேட்பாளர்களும் விருப்பு வாக்குகளைப் பெறுவதில் ஒற்றுமையாகச் செயற்படாமல் தனித்தனியாகவே தமது பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் காரணமாக இம்மாவட்டத்தில் 80,000 வாக்குகளை மாத்திரம் கொண்டுள்ள முஸ்லிம் களுக்கான சிறுபான்மை நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் கேள்விக்குறியான நிலையில் இருப்பதை ‘வார உரைகல்’ கடந்த வாரம் வெளியிட்ட தனது அரசியல் ஆய்வுக் கண்ணோட்டத்தில் சுட்டிக்காட்டி இருந்ததுடன் இதற்கான மாற்று வழியும், வெற்றிக்கு வழியும் ஸ்ரீ.ல.சு.க. மட். மாவட்ட அமைப்பாளர் றவூப் ஹாஜியார் வேட்புமனுத் தாக்கல் செய்த நாள் தொடக்கம் வலியுறுத்தி வருவதைப் போல் மூன்று வேட்பாளர்களுக்கும் இம்மாவட்ட முஸ்லிம்கள் தமக்குள்ள மூன்று விருப்பு வாக்குகளையும் அளித்தாக வேண்டும். அவ்வாறின்றேல் மூவரின் முடிவும், முஸ்லிம் பிரதிநிதித்துவ எதிர்பார்ப்பும் பூஜ்ஜியமே என்றும் வலியுறுத்தி இருந்தது.

இதற்கமைய கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று காத்தான்குடி பிரதான வீதியெங்கும் மூன்று வேட்பாளர்களினதும், அவர்களின் மூன்று விருப்பு இலக்கங்களுக்கும் புள்ளடியிட்டுக் காட்டும் போஸ்டர்கள் பரவலாக ஒட்டப்பட்டு இருந்தன. இதைக் கண்ணுற்ற ‘வார உரைகல்’ அல்ஹாஜ் றவூப் ஏ. மஜீத் அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தியபோது அவ்வாறு கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது:

இம்மாவட்டத்தில் முஸ்லிம்களான நாங்கள் சிறுபான்மையினராக இருந்த போதிலும் எமது உள்ளங்கள் விசாலமாக இருந்தால் அல்லாஹ்வின் அருட்கொடைகளைப் பெற்றவர்களாக வாழ முடியும். முஸ்லிம்கள் மற்றவர்களைப் போலல்லாது சற்று வித்தியாசமாக சகோதர வாஞ்சையுடன் சிந்திக்க வேண்டும். குறுகிய ஊர் வாதங்கள், பிரதேச வாதங்கள் எல்லாம் எமது ஒற்றுமையைச் சீர் குலைத்து எம்மை மேலும் பலவீனப்படுத்திவிடும். எனவே பிரதேசவாதக் கண்ணோட்டத்தையெல்லாம் இந்தத் தேர்தலுடன் இம்மாவட்ட முஸ்லிம்கள் தமது இதயங்களில் இருந்து தூக்கியெறிந்துவிட வேண்டுமென மிகவும் தாழ்மையாக நான் கேட்டுக் கொள்கின்றேன்.

இங்கு அரசாங்கத்தின் சார்பில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ள மூவரும் அரசியலில் திறமையும், தகைமையும் உடையவர்கள்தான். அவர்களில் யாரையும் நாம் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை. அவர்கள் தத்தமது வெற்றியைக் கருதிச் செயற்பட்டாலும் வாக்காளர்களுக்கான எமக்கு ஒரு கடமை இருக்கின்றது.

எமது நோக்கம் எமது முஸ்லிம் பிரதிநிதித்துவம் இம்மாவட்டத்தில் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதாக இருக்க வேண்டுமேயன்றி காத்தான்குடிக்கு எம்.பி. வர வேண்டும், ஏறாவூருக்கு எம்.பி. வர வேண்டும் அல்லது ஓட்டமாவடிக்கு எம்.பி. வர வேண்டும் என்றவாறான குறுகிய சுயநலக் கண்ணோட்டத்தில் இருக்கக்கூடாது.

வாக்காளர்கள் தங்களது கடமையை தூய நோக்கத்தோடும், பொறுப்புணர்வோடும் செய்வதற்குத் துணிந்தால் மாத்திரமே இம்மாவட்டத்தின் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை நாம் உறுதிப்படுத்தலாம். அவ்வாறில்லாமல் ஆளுக்கொரு பக்கமும், ஊருக்கு ஒரு திக்கிலுமாக நாம் வேட்பாளர்களுக்குப் பின்னால் இழுபட்டுச் சென்று எமது விருப்பு வாக்குகளை வீணாக்கினால் எமது மாவட்டத்திற்கான முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லாமல் போவதற்கு வாக்காளர்களான நாமும் ஒரு காரணமாக வரலாற்றில் இடம்பெறுவோம்.

அதனால் சகோதரர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் என்ன சொன்னாலம் சரி, அமைச்சர் அமீர்அலி அவர்கள் எவ்வாறு விளக்கம் சொன்னாலும் சரி, மதிப்புக்குரிய எமது மௌலானா அவர்கள் எப்படிக் கூறியிருந்தாலும் சரி வாக்காளர்களான நீங்கள் உங்களது மூன்று விருப்பு வாக்குகளையும் அவர்கள் மூவருக்குமே அளியுங்கள். அல்லாஹ் அவர்களில் யாரை நாடுகின்றானோ அவரை நமது பிரதிநிதியாக ஆக்குவான். யார் பிரதிநிதியாக வந்தாலும் எமது மாவட்ட முஸ்லிம் மக்கள் அவரிடம் உரிமையோடும், முகங்கோணாமலும் சென்று தமது தேவைகளுக்குத் தீர்வு காண வேண்டும்.

அல்லாஹ் நமது கைகளில் மூன்று விருப்பு வாக்குகளை அமானிதமாகத் தந்திருக்கின்றான். அவற்றை வாக்காளர்களான நாம் அல்லாஹ்வைப் பயந்தவர்களாகப் பிரயோகிக்க வேண்டும். நாம் இம்மூவரில் ஒருவரைத்தான் வெல்ல வைக்க வேண்டும் என்ற சுயநல எண்ணத்துடன் ஒருவருக்கு மாத்திரம் ஒரு விருப்பு வாக்கை அளித்து விட்டு ஏனைய இரண்டு விருப்பு வாக்குகளையும் துஷ்பிரயோகம் செய்தால் அல்லாஹ் எமது எண்ணங்களையும் தோற்கடித்து அவனது வல்லமையை எமக்குப் பாடமாகவும், தண்டனையாகவும் அளிப்பான்.

எனவேதான் வாக்காளர்களான நீங்கள் உங்களது உரிமை யான மூன்று வாக்குகளையும் நல்ல எண்ணத்தோடும், கலப்பற்ற நோக்கத்தோடும் 1, 2, 3 என்ற மூன்று இலக்கங்களுக்கும் அளித்து விட்டு நமக்கான பிரதிநிதியைத் தெரிவு செய்யும் பொறுப்பை அந்த ரஹ்மானிடம் விட்டு விட்டு வாருங்கள். அவனது ஏற்பாட்டை, அவனுடைய பிரதிநிதித்துவத் தெரிவை இம்மாவட்ட முஸ்லிம்களான நாமனைவரும் ஏற்றுக் கொள்வோம்.

அமையவுள்ள ஏழாவது நாடாளுமன்றம் பாரிய அபிவிருத்திகளை இந்நாட்டில் முன்னெடுக்கவுள்ளது. இம்மாவட்ட முஸ்லிம்கள் கடந்த 30 வருடகால யுத்த அனர்த்தங்களினால் பல்வேறுபட்ட இழப்புக்களைச் சந்தித்துள்ளார்கள். எமது மாவட்டமும், எமது முஸ்லிம் பிரதேசங்களும் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான வேலைத் திட்டங்களை ஆரம்பித்தும் முன்னோக்கியும் உள்ளன.

இந்த வேளையில் அமையவுள்ள நாடாளுமன்றத்தில் ஆளுந்தரப்பில் எமக்கான பிரதிநிதித்துவம் இல்லாமல் போனால் அதன் விளைவு அடுத்த ஆறாண்டு காலத்திற்கல்ல அறுபதாண்டுகளுக்கும்கூட ஈடு செய்ய முடியாத பேரிழப்பைத் தரும் என்பதை இம்மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு முஸ்லிம் வாக்காளனும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் எமது ஆளும் கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறாது என்றுதான் சொல்லி வருகிறார்களே தவிர, எமது கட்சி இந்தத் தேர்தலில் வெற்றிபெற்று அரசாங்கத்தை அமைக்க முடியாத அளவுக்குத் தோற்றுப் போய்விடும் என்று கூறவில்லை. அவ்வாறு கூறவும் அவர்களால் முடியாது.

எனவே ஏழாவது நாடாளுமன்றத்தில் அரசாங் கத்தை அமைக்கப்போவது எமது ஐ.ம.சு. முன்னணிதான் என்பது தீர்மானமான, திடகாத்திரமான முடிவாகும். அதிலே எமது மாவட்டத்தின் முஸ்லிம் பிரதிநிதித்துவம் கண்டிப்பாக இருந்தாக வேண்டும். இந்தக் கோட்பாட்டிலே எமது மக்கள் வரலாற்றுத் தவறிழைத்தவர்களாகிவிடக் கூடாது என்பதை வலியுறுத்திக் கூறி வைக்க விரும்புகின்றேன்.

கடந்த மாகாண சபைத் தேர்தலிலே இம் மாவட்டத்தில் ஐ.ம.சு. முன்னணி 105,341 வாக்குகளைப் பெற்று 06 ஆசனங்களை வென்றது. இதில் 70,000க்கும் அதிகமான வாக்குகளை அளித்த தமிழ் மக்களுக்கும் 3 ஆசனங்களே கிடைத்தன. அதில் அரைவாசித் தொகையான 35,000 வாக்குகளை அளித்த முஸ்லிம்களுக்கும் 3 ஆசனங்களே கிடைத்தன.

இதன் சூட்சுமத்தை வாக்காளர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். அவ்வாறு விளங்கிக் கொள்வார்களேயானால் தமது மூன்று விருப்பு வாக்குகளையும், மூன்று வேட்பாளர்களுக்கும் அளிப்பதற்கு இம்மாவட்டத்திலுள்ளஎந்தவொரு முஸ்லிம் வாக்காளனும் யோசிக்கவோ பின் வாங்கவோ மாட்டான் என்பது தெளிவாகும்.

இன்று இம்மாவட்டத்தில் தமிழ் வாக்காளர்கள் அதிகமாக இருந்தாலும் இந்தத் தேர்தலில் அவர்கள் பல கட்சிகளிலுமாகப் பிரிந்து போட்டியிடுவதால் அவர்களது வாக்குப் பலம் கணிசமாகச் சிதறுண்டு போகும் அபாயத்தை அவர்கள் எதிர் நோக்கியுள்ளனர். ஆனால் நமது முஸ்லிமகளின் வாக்குப் பலம் ஆளும் தரப்பிலும் எதிர்த் தரப்பிலுமாகவே இரண்டாகக் கூறுபடும்.

எனவே அரசாங்கத்திற்கு இம்மாவட்ட முஸ்லிம்கள் தமது ஆதரவை வழங்க வேண்டியதன் அவசியுத்தைப் புரிந்து கொண்டு சென்ற மாகாண சபைத் தேர்தலின்போது நாம் வழங்கியவாறு நமது முழுமையான ஆதரவை ஐ.ம.சு.கூட்டமைப்பின் வெற்றிச் சின்னமான ‘வெற்றிலை’ச் சின்னத்திற்கும், நமது மூன்று விருப்பு வாக்குகளையும் 1, 2, 3 என்ற இலக்கங்களுக்கும் வழங்கினால் நமக்கான வெற்றியும், பிரதிநிதித்துவமும் உறுதியாகும்.

முஸ்லீம்களான எமது உள்ளங்கள் விசாலமாக இருக்க வேண்டும். குறுகிய சிந்தனைகளை எண்ணங்களை அதில் நாம் தோற்றுவிக்கலாகாது. எமது உணவுத் தட்டில்கூட நான்கு கைகள் ஒன்றாகக் கலக்கும்போது அதில் தன்னுடைய ரஹ்மத்தையும், பரக்கத்தையும் அல்லாஹ் சொரிகின்ற தத்துவத்தைப் புரிந்து கொண்டு இந்த வாக்களிப்பிலும் அல்லாஹ்வின் ரஹ்மத் என்ற அருளையும், பரக்கத் என்ற விருத்தியையும் நாம் எதிர்பார்க்க வேண்டும்.

அல்லாஹ் நாடி எமது ஐ.ம.சு. கூட்டமைப்புக்கு இரண்டு பிரதிநிதித்துவங்கள் கிடைத்து அதில் எமது முஸ்லிம் வேட்பாளர்களும் விருப்பு வாக்குத் தெரிவில் முன்னணியில் இருந்தால் அந்த இரண்டு பிரதிநிதித்துவமும் எமது பிரதேச வேறுபாடற்ற ஒற்றுமையான வாக்களிப்புக்கு எமது சமூகத்திற்கு அல்லாஹ் வழங்கிய அருட்கொடையாகவும் அமையலாம்.

எனவே, நான் ஸ்ரீ.ல.சு. கட்சியின் இம்மாவட்ட அமைப்பாளன் என்ற வகையில் எமது சமூக வாக்காளர்களிடம் வேண்டுவது என்னவெனில் எமக்கான பிரதிநிதி யார் என்பதை அல்லாஹ் தெரிவு செய்யட்டும். அதை அவனது பொறுப்பில் நாம் விட்டு விடுவோம். நாம் நம்மிடம் இச்சமூகத்தின் அமானிதமாகத் தரப்பட்டுள்ள மூன்று விருப்பு வாக்குகளையும் யாருக்குமே அநியாயம், துரோகம் செய்யாமல் இம்மூவருக்குமே அளித்து எமது கடமையைச் சரியாகச் செய்ய வேண்டும் என்பதுதான்.

இந்தச் செயற்பாட்டின் மூலம் இம்மாவட்டத்தில் புரையோடிப் போயிருக்கின்ற பிரதேசவாதத்தை இம்முறை வாக்காளர்களான நாமனைவரும் குழிதோண்டிப் புதைப்பதுடன் எமக்கான ஆளுந் தரப்புப் பிரதிநிதித்துவத்தையும் உறுதி செய்யத் திடசங்கற்பம் பூணுவோம் – என அல்ஹாஜ் றவூப் ஏ. மஜீத் தெரிவித்தார்.

Courtesy: வார உரைகல் News

இதற்கமைய கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று காத்தான்குடி பிரதான வீதியெங்கும் மூன்று வேட்பாளர்களினதும், அவர்களின் மூன்று விருப்பு இலக்கங்களுக்கும் புள்ளடியிட்டுக் காட்டும் போஸ்டர்கள் பரவலாக ஒட்டப்பட்டு இருந்தன. இதைக் கண்ணுற்ற ‘வார உரைகல்’ அல்ஹாஜ் றவூப் ஏ. மஜீத் அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தியபோது அவ்வாறு கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது:இம்மாவட்டத்தில் முஸ்லிம்களான நாங்கள் சிறுபான்மையினராக இருந்த போதிலும் எமது உள்ளங்கள் விசாலமாக இருந்தால் அல்லாஹ்வின் அருட்கொடைகளைப் பெற்றவர்களாக வாழ முடியும். முஸ்லிம்கள் மற்றவர்களைப் போலல்லாது சற்று வித்தியாசமாக சகோதர வாஞ்சையுடன் சிந்திக்க வேண்டும். குறுகிய ஊர் வாதங்கள், பிரதேச வாதங்கள் எல்லாம் எமது ஒற்றுமையைச் சீர் குலைத்து எம்மை மேலும் பலவீனப்படுத்திவிடும். எனவே பிரதேசவாதக் கண்ணோட்டத்தையெல்லாம் இந்தத் தேர்தலுடன் இம்மாவட்ட முஸ்லிம்கள் தமது இதயங்களில் இருந்து தூக்கியெறிந்துவிட வேண்டுமென மிகவும் தாழ்மையாக நான் கேட்டுக் கொள்கின்றேன்.

இங்கு அரசாங்கத்தின் சார்பில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ள மூவரும் அரசியலில் திறமையும், தகைமையும் உடையவர்கள்தான். அவர்களில் யாரையும் நாம் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை. அவர்கள் தத்தமது வெற்றியைக் கருதிச் செயற்பட்டாலும் வாக்காளர்களுக்கான எமக்கு ஒரு கடமை இருக்கின்றது.

எமது நோக்கம் எமது முஸ்லிம் பிரதிநிதித்துவம் இம்மாவட்டத்தில் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதாக இருக்க வேண்டுமேயன்றி காத்தான்குடிக்கு எம்.பி. வர வேண்டும், ஏறாவூருக்கு எம்.பி. வர வேண்டும் அல்லது ஓட்டமாவடிக்கு எம்.பி. வர வேண்டும் என்றவாறான குறுகிய சுயநலக் கண்ணோட்டத்தில் இருக்கக்கூடாது.

வாக்காளர்கள் தங்களது கடமையை தூய நோக்கத்தோடும், பொறுப்புணர்வோடும் செய்வதற்குத் துணிந்தால் மாத்திரமே இம்மாவட்டத்தின் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை நாம் உறுதிப்படுத்தலாம். அவ்வாறில்லாமல் ஆளுக்கொரு பக்கமும், ஊருக்கு ஒரு திக்கிலுமாக நாம் வேட்பாளர்களுக்குப் பின்னால் இழுபட்டுச் சென்று எமது விருப்பு வாக்குகளை வீணாக்கினால் எமது மாவட்டத்திற்கான முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லாமல் போவதற்கு வாக்காளர்களான நாமும் ஒரு காரணமாக வரலாற்றில் இடம்பெறுவோம்.

அதனால் சகோதரர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் என்ன சொன்னாலம் சரி, அமைச்சர் அமீர்அலி அவர்கள் எவ்வாறு விளக்கம் சொன்னாலும் சரி, மதிப்புக்குரிய எமது மௌலானா அவர்கள் எப்படிக் கூறியிருந்தாலும் சரி வாக்காளர்களான நீங்கள் உங்களது மூன்று விருப்பு வாக்குகளையும் அவர்கள் மூவருக்குமே அளியுங்கள். அல்லாஹ் அவர்களில் யாரை நாடுகின்றானோ அவரை நமது பிரதிநிதியாக ஆக்குவான். யார் பிரதிநிதியாக வந்தாலும் எமது மாவட்ட முஸ்லிம் மக்கள் அவரிடம் உரிமையோடும், முகங்கோணாமலும் சென்று தமது தேவைகளுக்குத் தீர்வு காண வேண்டும்.

அல்லாஹ் நமது கைகளில் மூன்று விருப்பு வாக்குகளை அமானிதமாகத் தந்திருக்கின்றான். அவற்றை வாக்காளர்களான நாம் அல்லாஹ்வைப் பயந்தவர்களாகப் பிரயோகிக்க வேண்டும். நாம் இம்மூவரில் ஒருவரைத்தான் வெல்ல வைக்க வேண்டும் என்ற சுயநல எண்ணத்துடன் ஒருவருக்கு மாத்திரம் ஒரு விருப்பு வாக்கை அளித்து விட்டு ஏனைய இரண்டு விருப்பு வாக்குகளையும் துஷ்பிரயோகம் செய்தால் அல்லாஹ் எமது எண்ணங்களையும் தோற்கடித்து அவனது வல்லமையை எமக்குப் பாடமாகவும், தண்டனையாகவும் அளிப்பான்.

எனவேதான் வாக்காளர்களான நீங்கள் உங்களது உரிமை யான மூன்று வாக்குகளையும் நல்ல எண்ணத்தோடும், கலப்பற்ற நோக்கத்தோடும் 1, 2, 3 என்ற மூன்று இலக்கங்களுக்கும் அளித்து விட்டு நமக்கான பிரதிநிதியைத் தெரிவு செய்யும் பொறுப்பை அந்த ரஹ்மானிடம் விட்டு விட்டு வாருங்கள். அவனது ஏற்பாட்டை, அவனுடைய பிரதிநிதித்துவத் தெரிவை இம்மாவட்ட முஸ்லிம்களான நாமனைவரும் ஏற்றுக் கொள்வோம்.

அமையவுள்ள ஏழாவது நாடாளுமன்றம் பாரிய அபிவிருத்திகளை இந்நாட்டில் முன்னெடுக்கவுள்ளது. இம்மாவட்ட முஸ்லிம்கள் கடந்த 30 வருடகால யுத்த அனர்த்தங்களினால் பல்வேறுபட்ட இழப்புக்களைச் சந்தித்துள்ளார்கள். எமது மாவட்டமும், எமது முஸ்லிம் பிரதேசங்களும் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான வேலைத் திட்டங்களை ஆரம்பித்தும் முன்னோக்கியும் உள்ளன.

இந்த வேளையில் அமையவுள்ள நாடாளுமன்றத்தில் ஆளுந்தரப்பில் எமக்கான பிரதிநிதித்துவம் இல்லாமல் போனால் அதன் விளைவு அடுத்த ஆறாண்டு காலத்திற்கல்ல அறுபதாண்டுகளுக்கும்கூட ஈடு செய்ய முடியாத பேரிழப்பைத் தரும் என்பதை இம்மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு முஸ்லிம் வாக்காளனும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் எமது ஆளும் கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறாது என்றுதான் சொல்லி வருகிறார்களே தவிர, எமது கட்சி இந்தத் தேர்தலில் வெற்றிபெற்று அரசாங்கத்தை அமைக்க முடியாத அளவுக்குத் தோற்றுப் போய்விடும் என்று கூறவில்லை. அவ்வாறு கூறவும் அவர்களால் முடியாது.

எனவே ஏழாவது நாடாளுமன்றத்தில் அரசாங் கத்தை அமைக்கப்போவது எமது ஐ.ம.சு. முன்னணிதான் என்பது தீர்மானமான, திடகாத்திரமான முடிவாகும். அதிலே எமது மாவட்டத்தின் முஸ்லிம் பிரதிநிதித்துவம் கண்டிப்பாக இருந்தாக வேண்டும். இந்தக் கோட்பாட்டிலே எமது மக்கள் வரலாற்றுத் தவறிழைத்தவர்களாகிவிடக் கூடாது என்பதை வலியுறுத்திக் கூறி வைக்க விரும்புகின்றேன்.

கடந்த மாகாண சபைத் தேர்தலிலே இம் மாவட்டத்தில் ஐ.ம.சு. முன்னணி 105,341 வாக்குகளைப் பெற்று 06 ஆசனங்களை வென்றது. இதில் 70,000க்கும் அதிகமான வாக்குகளை அளித்த தமிழ் மக்களுக்கும் 3 ஆசனங்களே கிடைத்தன. அதில் அரைவாசித் தொகையான 35,000 வாக்குகளை அளித்த முஸ்லிம்களுக்கும் 3 ஆசனங்களே கிடைத்தன.

இதன் சூட்சுமத்தை வாக்காளர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். அவ்வாறு விளங்கிக் கொள்வார்களேயானால் தமது மூன்று விருப்பு வாக்குகளையும், மூன்று வேட்பாளர்களுக்கும் அளிப்பதற்கு இம்மாவட்டத்திலுள்ளஎந்தவொரு முஸ்லிம் வாக்காளனும் யோசிக்கவோ பின் வாங்கவோ மாட்டான் என்பது தெளிவாகும்.

இன்று இம்மாவட்டத்தில் தமிழ் வாக்காளர்கள் அதிகமாக இருந்தாலும் இந்தத் தேர்தலில் அவர்கள் பல கட்சிகளிலுமாகப் பிரிந்து போட்டியிடுவதால் அவர்களது வாக்குப் பலம் கணிசமாகச் சிதறுண்டு போகும் அபாயத்தை அவர்கள் எதிர் நோக்கியுள்ளனர். ஆனால் நமது முஸ்லிமகளின் வாக்குப் பலம் ஆளும் தரப்பிலும் எதிர்த் தரப்பிலுமாகவே இரண்டாகக் கூறுபடும்.

எனவே அரசாங்கத்திற்கு இம்மாவட்ட முஸ்லிம்கள் தமது ஆதரவை வழங்க வேண்டியதன் அவசியுத்தைப் புரிந்து கொண்டு சென்ற மாகாண சபைத் தேர்தலின்போது நாம் வழங்கியவாறு நமது முழுமையான ஆதரவை ஐ.ம.சு.கூட்டமைப்பின் வெற்றிச் சின்னமான ‘வெற்றிலை’ச் சின்னத்திற்கும், நமது மூன்று விருப்பு வாக்குகளையும் 1, 2, 3 என்ற இலக்கங்களுக்கும் வழங்கினால் நமக்கான வெற்றியும், பிரதிநிதித்துவமும் உறுதியாகும்.

முஸ்லீம்களான எமது உள்ளங்கள் விசாலமாக இருக்க வேண்டும். குறுகிய சிந்தனைகளை எண்ணங்களை அதில் நாம் தோற்றுவிக்கலாகாது. எமது உணவுத் தட்டில்கூட நான்கு கைகள் ஒன்றாகக் கலக்கும்போது அதில் தன்னுடைய ரஹ்மத்தையும், பரக்கத்தையும் அல்லாஹ் சொரிகின்ற தத்துவத்தைப் புரிந்து கொண்டு இந்த வாக்களிப்பிலும் அல்லாஹ்வின் ரஹ்மத் என்ற அருளையும், பரக்கத் என்ற விருத்தியையும் நாம் எதிர்பார்க்க வேண்டும்.

அல்லாஹ் நாடி எமது ஐ.ம.சு. கூட்டமைப்புக்கு இரண்டு பிரதிநிதித்துவங்கள் கிடைத்து அதில் எமது முஸ்லிம் வேட்பாளர்களும் விருப்பு வாக்குத் தெரிவில் முன்னணியில் இருந்தால் அந்த இரண்டு பிரதிநிதித்துவமும் எமது பிரதேச வேறுபாடற்ற ஒற்றுமையான வாக்களிப்புக்கு எமது சமூகத்திற்கு அல்லாஹ் வழங்கிய அருட்கொடையாகவும் அமையலாம்.

எனவே, நான் ஸ்ரீ.ல.சு. கட்சியின் இம்மாவட்ட அமைப்பாளன் என்ற வகையில் எமது சமூக வாக்காளர்களிடம் வேண்டுவது என்னவெனில் எமக்கான பிரதிநிதி யார் என்பதை அல்லாஹ் தெரிவு செய்யட்டும். அதை அவனது பொறுப்பில் நாம் விட்டு விடுவோம். நாம் நம்மிடம் இச்சமூகத்தின் அமானிதமாகத் தரப்பட்டுள்ள மூன்று விருப்பு வாக்குகளையும் யாருக்குமே அநியாயம், துரோகம் செய்யாமல் இம்மூவருக்குமே அளித்து எமது கடமையைச் சரியாகச் செய்ய வேண்டும் என்பதுதான்.
இந்தச் செயற்பாட்டின் மூலம் இம்மாவட்டத்தில் புரையோடிப் போயிருக்கின்ற பிரதேசவாதத்தை இம்முறை வாக்காளர்களான நாமனைவரும் குழிதோண்டிப் புதைப்பதுடன் எமக்கான ஆளுந் தரப்புப் பிரதிநிதித்துவத்தையும் உறுதி செய்யத் திடசங்கற்பம் பூணுவோம் – என அல்ஹாஜ் றவூப் ஏ. மஜீத் தெரிவித்தார்.

5 Responses to “மூன்று விருப்பு வாக்குகளையும் அளிப்பதன் மூலம் இரண்டு பிரதிநிதித்துவங்களைப் பெறலாம் – றவூப் ஹாஜியார் வேண்டுகோள்”

  1. lady member said

    3 க……….ம் போடச்சொல்லி 4வது க……… சொல்லுகிறார்.கூட்டாக கொள்ளையடிப்பதற்கோ?

  2. tampiyaan said

    றவூப் ஹாஜியார் !என்ன முன்று பேரயும் எம் பி ஆகுவதற்கு உங்களிடம் நல்ல ஐடியா இருக்கு போல்
    தெரிகிறது அப்போ தம்பி எம்பி………

  3. KKY SIR. said

    assa-kum hajiyar.ippa sonna allathaium poitu oddamavadila solla mutiyuma haji.iyalathu

  4. Kalisara said

    123 ஆகிய மூன்று இலக்கத்துக்கும் போட சொல்வது என்பது ரஊப் ஹாஜியாருக்கு அமீரலி கொடுத்த காசிக்கு ஏதோ பண்ண வேண்டும் என்பதனால்தான். வேறு இயல்பாக அல்ல. முதலில் ரஊப் ஹாஜியார் 123 க்கு போடுவாரா? அவர் தனியே 1க்கு மட்டுமேதான் உள்ளாலே உல்டா போட்டு வோட் போட சொல்லியுள்ளார். இதே பிரச்சாரத்தை ஓட்டமாவடியிலும் ஏறாவூரிலும் போய் பன்னினால் இன்னும் நல்லா இருக்குமே. இன்ஸா அல்லஹ் நமது மகன் வென்றாலும் ரஊப் ஹாஜியாரின் அமைப்பாளர் பதவி பாதுகாக்கப் படுமே! இல்லாவிடால் 09ம் திகதி புதிய வீடு………..? எந்தக் கலிசறயாலயுமே தடுக்க முடியாது.

  5. abdullah said

    DEAR BROTHER RAUF,

    I AM APPRICIATED BECOUSE IF YOUR INTENSION AS SAME, IF YOUR WORD OUT OF MOUTH ?????, BROTHER KALISARA SAY, ஓட்டமாவடியிலும் ஏறாவூரிலும் போய் பன்னினால்????????????? GO ON TRY WILL SEE WHAT HAPPRNINIG OK?????? 99% BROTHER ALI SHAHIR IS A MP FROM MAHINTHA BECOUSE THE ARE DECIDID TO TAKE WE WILL SEE ON 9TH APRIL

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s