காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 4,986,219 மொத்த வருகைகள்

ஆளுந்தரப்பு வேட்பாளரின் ஆதரவாளர்கள் புரியும் தாக்குதல்கள் குறித்து ஐ.தே.மு. வேட்பாளர் முபீன் பொலிஸில் புகார்!

Posted by Kattankudi Web Community (KWC) on 05/04/2010

http://vaarauraikal.files.wordpress.com/2010/04/mubeen-off.gif?w=187&h=139ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வேட்பாளராகப் போட்டியிடும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் குறித்து ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளராகப் போட்டியிடும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அல்ஹாஜ் யூ.எல்.எம்.என். முபீன் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் தொடர்ந்து முறைப்பாடுகளைச் செய்து வருகின்றார்.

கடந்த சனிக்கிழமை கடற்கரை வீதியிலுள்ள அவரது தேர்தல் அலுவலகத்திற்குச் சென்ற ஆளுந்தரப்பு வேட்பாளர் ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்களான சலுசலா பரீட் என்பவரின் தலைமையிலான குழுவினர் அங்கு கடமையில் இருந்த தனது ஆதரவாளர் ஒருவரைக் கடத்திச் செல்ல முற்பட்டதாகவும், இதையடுத்து அவர்களுக்கும், அங்கிருந்தவர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டதாகவும், இதன் பின்னர் இச்சம்பவம் பற்றி தான் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாகவும் வேட்பாளர் முபீன் தெரிவித்தார்.

இம்முறைப்பாடு தொடர்பாக உடனடி விசாரணையை மேற்கொண்ட பொலீஸார் இரு தரப்பினரையும் சமாதானமாகுமாறு ஆலோசனை கூறியதாகவும், அதையடுத்து தேர்தல் காலத்திலும், தேர்தல் முடிவடைந்த பின்னரும் எத்தகைய வன்முறைகளிலும் தானும், தனது சகாக்களும் ஈடுபடுவதில்லையென பொலீஸார் முன்னிலையில் சலுசலா பரீட் என்பவர் உத்தரவாதம் வழங்கியதையடுத்து தாங்கள் சமரசமாகியதாகவும் அவர் மேலும் கூறினார்.

http://vaarauraikal.files.wordpress.com/2010/04/mubeen-off-2.gif?w=292&h=218எனினும் அன்றிரவே கடற்கரை வீதியில் அமைந்திருந்த தனது தேர்தல் அலுவலகம் மீது பெற்ரோல் குண்டு வீசப்பட்டு எல்லை வேலியில் ஒரு பகுதி தீப்பற்றி எரிந்ததாகவும், அதனை அங்கிருந்தவர்கள் உடனடியாகச் செயற்பட்டு அணைத்ததாகவும் இச்சம்பவமானது பொலீஸார் முன்னிலையில் வழங்கிய வன்முறைகளில் ஈடுபடுவதில்லை என்ற உடன்பாட்டை ஆளுந்தரப்பு வேட்பாளர் ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்கள் மீறிய முதலாவது சம்பவமாகும் என்றும் வேட்பாளர் முபீன் சுட்டிக்காட்டினார்.

இதன்பிறகும் தனது ஆதரவாளர்களான சிபான் என்பவர் ஆளுந்தரப்பு வேட்பாளர் ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்களான சோடாக்கடை அறபாத், சஹீட் ஆகியோரால் தாக்கப்பட்டதாகவும், தனது ஆதரவாளரான றிழ்வான் என்பவரின் தாயாரின் வீட்டுக்குச் சென்ற ஆளுந்தரப்பு வேட்பாளர் ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்கள் அங்கிருந்த வீட்டுத் தளர்பாடங்களை உடைத்துச் சேதப்படுத்தியதாகவும் வேட்பாளர் முபீன் மேலும் தெரிவித்தார்.

ஆளுந்தரப்பு வேட்பாளரான ஹிஸ்புல்லாஹ் அவர்களின் தீவிர ஆதரவாளர்களான டெலிகொம் றிஸ்வி,  பரீட், சலுசலா பரீட், ஆட்டோ ஹக்கீம், சஹீட் போன்றவர்களே இவ்வாறு தமது ஆதரவாளர்கள்மீது தொடர்ந்து வன்முறைகளை மேற்கொண்டு வருவதாக தான் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளதாகவும் வேட்பாளர் முபீன் கூறினார்.

Courtesy: வார உரைகல் News

4 Responses to “ஆளுந்தரப்பு வேட்பாளரின் ஆதரவாளர்கள் புரியும் தாக்குதல்கள் குறித்து ஐ.தே.மு. வேட்பாளர் முபீன் பொலிஸில் புகார்!”

  1. sabry said

    satanaikal weldone

  2. lady member said

    இவ்வாறான செயல்கள்தான் தேர்த்தலில் சுவாரஷ்யம்.கொ…………..ல் போட்டி யார் வெல்லுவதென்று?ஹ….ஹ….ஹா…..ஹி….ஹி….ஹீ………ஹு……..ஹு………ஹூ……………[சிரிப்பு தாங்களப்பா]

  3. tampiyaan said

    இன்று கடைசி கந்தோரி நாள் தம்பி செரியாக உடுவார் டுப்பு பணம் பத்தும் செய்வார் என்பார்கள் ஆனால் தும்பி பதினொன்னு செய்வார் கடுமையாக அழுவதற்கு நிறைய சந்தர்பம் உண்டு எனவே வேடிக்கை பார்க்க
    போகும் அன்பர்கள் கை குட்டையை கொண்டு போகவும்.

    • Son of kky said

      இடம்-பழைய தண்ணிதாங்கி முன்பாக [மில்லத் ஸ்கூல் வீதி]
      நேரம்-ஆல்ரெடி ஆரம்பம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s