An email from Safeel Naleemi
Posted by Kattankudi Web Community (KWC) on 03/04/2010
அன்பார்ந்த இணையத்தள அங்கத்தவர்களே,
தாருள் அதர் நிறுவனத்தினால் தொடங்கப்போகும் ஜூம்ஆ சம்பந்தமாக தங்களுடன் சில கருத்துக்களை பகிரந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்.
நமது பிரதேசம் அனைத்து விடயத்திலும் பல முன்மாதிரிகளை ஏனைய பிரதேசங்களுக்கு காட்டிக் கொடுக்கின்ற ஒரு ஊர். உண்மையில், ஒவ்வொரு செயற்பாடுகளுக்குப் பின்னாலும் அதனை உருவாக்கியவர்கள் மிகக் கவனமாக அதனைத் திட்டமிட்டு செய்திருக்கிறார்கள் என்பதை நாம் மறுக்க முடியாது.
இவ்வகையில்தான் நமது பிரதேச மக்களின் நன்மை கருதி எவ்வாறு ஜூம்ஆக்கள் அமைய வேண்டும் என்று ஒப்பந்தங்களும் நிபந்தனைகளும் காணப்படுகின்றன. ஆனால், சிலர் இக்கட்டுக் கோப்புகளை மார்க்கத்தின் பெயரால் சிதைக்க முற்படுவது மனவேதனையாகும். ஏனெனில், ஒன்றை மிகச் சிறப்பாக உருவாக்குவதென்பது மிகக் கடினமான விடயம். ஆனால் அதை சிதைத்து விடுவது என்பது மிக இலகுவான காரியம்.
இஸ்லாமிக் சென்டர் தனது ஜூம்ஆவை ஆரம்பிக்கும் போது அவர்கள் கூறிய காரணம் ஏனைய ஜூம்ஆக்களில் 19 பித்அத்துகள் இருப்பதாகவும் அவைகளை நிறுத்தவேண்டும் என்றும் ஜம்இய்யதுல் உலமாவிடம் வேண்டியிருந்தார்கள். ஆனால் ஜம்இய்யதுல் உலமா தற்போது உடனடியாக இவ் பித்அத்துகளை நிற்பாட்ட முடியாது என்றும் மக்களை அறிவூட்டுவதன் மூலமாக இவ்விடயத்தை இலகுவாக கையாளலாம் எனவும் அதற்கான கால அவகாசமாக 3 மாதங்கள் கோரப்பட்டிருந்தன. ஆனால் இதனை செவிமடுக்காமல் உடனடியாக அவர்கள் ஜூம்ஆவினை ஆரம்பித்தார்கள். இவ்விடயத்தினை கையாள்வதில் சம்மேளனம் மற்றும் ஜம்இய்யதுல் உலமா பல சிக்கல்களை சந்திக்க நேர்ந்தது. இன்றும் அது சம்பந்தமாக கேள்விகள் பலரிடம் உள்ளன.
தற்போது தாருள் அதர் மீண்டும் ஒரு ஜூம்ஆவினை தொடங்குகிறார்கள். நான் அறிந்த வகையில் இன்னும் இரண்டு ஜூம்ஆக்கள் மிக விரைவில் காத்தான்குடியில் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சமூகத்தின் ஒற்றுமையை சிதைக்க வேண்டும் என சிலர் தனி நிலைப்பாட்டில் இருக்கும் போது நாம் என்ன செய்ய முடியும்.
இவ்விடயத்தை நாம் பல கலந்துரையாடல் மூலம் தீர்க்க முற்பட்டோம். ஆனால் இறுதியில் இது காவல்துறை வரை செல்லும் அங்கு அந்நிய மதத்தவர்கள் நமது மார்க்கம் சம்பந்தமாக தீர்ப்பு கூறுவார்கள். ஒற்றுமையா இருக்கும் படி அறிவுரை கூறுவார்கள் நாம் கைகட்டி நின்று கேட்டுவிட்டு வரவேண்டிய நிலைதான்.
எனவே, அன்பின் சகோதரர்களே, இஸ்லாத்தின் பெயரால் இவ்வாறான நிலைமையை ஏற்படுத்த வேண்டாம் எனக் கேட்கின்றோம். இன்ஷா அல்லாஹ் மறுமையில் நாம் தூய்மையாக செய்த விடயங்கள் மாத்திரமே நம்மோடு வரும் என்பதை ஞாபகப் படுத்தி தங்களது கருத்துகளுக்கும் இடமளித்து முடிக்கின்றேன்.
ஏ.எல்.எம். ஸபீல் நளீமி
காத்தான்குடி







Son of kky said
“தற்போது தாருள் அதர் மீண்டும் ஒரு ஜூம்ஆவினை தொடங்குகிறார்கள். நான் அறிந்த வகையில் இன்னும் இரண்டு ஜூம்ஆக்கள் மிக விரைவில் காத்தான்குடியில் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன”
அந்த இரன்டில் ஒன்று யாரு படையப்பாவா ஆரம்பிக்கப் போகிறார்? அவர்தான் சமீபத்தில் நளீமியுடன் முறன்பட்டுகொன்டார். இவ்விடயம் யாவரும் அறிந்ததே!!!!
Kundaka Mandaka said
படையப்பாவின் அனுசரணையுடன் இரண்டு ஜும்மாஹ் குத்பாக்கள் ஆரம்பிக்கப்பட உள்ளன.
1 ) பதுரியா தைக்கியா பள்ளிவாயால் பதுரியா ஜும்மாஹ் பள்ளிவாயலாக
உத்தியோகபூர்வமாக மாற்றம் பெற உள்ளது.
(இது அப்துர் ரஊப்க்கு படயப்பாவினால் அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று)
2 ) பயில்வானிய முர்ததுகளால் ஒரு ஜும்மாஹ் குத்பாஹ் ஆரம்பிக்கப்பட் உள்ளது,
பயில்வானிய முர்த்ததுகள் தொழுவது இல்லை என்ற கருத்தை மாற்றி
குறைந்தது ஜும்மாஹ் தொழுகையையாவது தொழ உத்தேசித்துள்ளார்கள்.
இதற்கும் எமது படையப்பா பச்சைக்கொடி காட்டிள்ளதாக பயிவானியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Rismiya Mustafa said
Risala fm eppa varum?hissbulla sir manathu vaithal varum.
mohamed said
Risala fm eppa varum?
imran said
படையப்பா பொமிசன் குடுத்தா ஜும்மாஹ் குத்பாக்கள் ஓதலாம். தாருள் அதர் மட்டும் ஓதுனா ஊர் பிரச்சினை வந்திடும். நலீமி மார் எல்லோரும் இப்படிதான் சொல்றீங்க.
உங்களுக்கு ஜாமியாவில் இதுதான் படித்து தந்தார்களா? பித்ஹத்கல் என்றால் எல்லாத்தயும் நிப்பாட்டுங்க. ஜும்மாஹ் குத்பாக்கள் ஓதும் பொழுது நீங்க சொல்லுங்க ஜும்மாஹ் குத்பாவில் இருக்கின்ற சகல பித்ஹத் கலையும் நிப்பாட்ட சொல்லி. இல்லாட்டி தாருள் அதர் நிப்பாட்டினா சந்தோசப் படுங்க.
அத விட்டுட்டு நீங்க சும்மா எல்லாத்துக்கும் ஊர் பிரச்சினைய இழுக்காதிங்க நலீமி..!! ஓகே.
(((இஸ்லாத்தின் பெயரால் இவ்வாறான நிலைமையை ஏற்படுத்த வேண்டாம் எனக் கேட்கின்றோம். இன்ஷா அல்லாஹ் மறுமையில் நாம் தூய்மையாக செய்த விடயங்கள் மாத்திரமே நம்மோடு வரும் என்பதை ஞாபகப் படுத்தி தங்களது கருத்துகளுக்கும் இடமளித்து முடிக்கின்றேன்)))
இஸ்லாத்தின் பெயரால் மட்டும் தான் இவ்வாறன செயல்கள் நிறைவேற்ற முடியும். பௌத்த மதம்,கிருஸ்தவ மதம், இந்து மதம் போன்றவற்றின் பெயரால் இதனை ஏற்படுத்த முடியாது. பித்ஹத்கல் நிப்பாட்டப்படுவது நன்மையான, தூய்மையான விடயங்கள் இவைகளை செய்வதும் நன்மையான விடயங்கள்தான் மீண்டும் மீண்டும் நினைவு கூர்ந்தமைக்கு மிக்க நன்றி.
Thowfeek said
Mr. Imran, Ennappa neenkalum Athar Aala? Neenka muthal unkala tiruttunka. Bitatukku unkalukku varaivilakkanam teriuma?
Summa ponkaya sandapidikkama.
tampiyaan said
சும்மா கேட்கிறேன் குத்பா தருள் அத்ரால் ஆரம்பித்தால் என்ன நலீமிகள்மேலும் மதீனா பட்டதாரிகள் இன்னும் சில தவ்ஹீட் ஆஜண்டுகள் எல்லாம் சப்தம் போடுகின்றன ஏன் அதர் வாதிகள் ஷிர்க் வைக்குமாறு
சொல்கிறார்களா? மக்களுக்கு.சொல்லுங்கள் பலி வாங்கும் பனி போர் எமது மார்கத்தில் இல்லை உண்மையாக பார்கிறேன் நலீமிகள் மிகவும் மோசமாகத்தான் இவ்விடயத்தில் நடந்து கொள்கிறார்கள்
imran said
அஸ்ஸலாமு அழைக்கும் சகோதரர் தௌபீக் அவர்களே!…
என்னுடைய கருத்துக்களை வாசித்தமைக்கு மிக்க நன்றி. நான் அதர் ஆளா? என்பது உங்களது முதல் கேள்வி. இல்லை என்பது எனது பதில். இல்லை என்றால் ஏன் அதருக்கு வக்காலத்து வாங்க வேண்டும் என்று நீங்கள் என்ன தோன்றும் அல்லவா??
ஆம் அதர் , இஸ்லாமிக் சென்டர், தப்லீக் ஜம்மாத், தஹ்வா சென்டர் அல்லது DA இவ்வாறான அமைப்புகளில் யாராவது இஸ்லாமிய அடிப்படையில் குத்பா நடத்திருந்தால் அவர்களையும் அரவணைத்து தான் கமெண்ட் பண்ணி இருப்பேன்.
சகோதரர் தௌபீக் அவர்களே உங்களால் முடிந்தால் நீங்கள் கூட இஸ்லாமிய அடிப்படையில் குத்பா நடாத்துங்கள் நானும் நிச்சயம் கலந்து கொள்கிறேன். என்னை பொறுத்தவரை அதர் நடாத்திய ஜும்மாஹ் நல்ல விடயம் என்றுதான் சொல்லுவேன். .
இஸ்லாமிய அடிப்படையில் அதர் நடத்தும் ஜும்மாஹ் போலதான் DA சகோதரர்கள் கூட ஜும்மாஹ் நடத்துவார்கள் இவர்கள் நடத்துவதற்கு கிட்ட தட்ட 200 தொடக்கம் 300 வருடங்கல்லாவது தேவைப்படும். ஆனால் ஒன்று மட்டும் நான் நிச்சயமாகக் கூற முடியும் நீங்களும் நானும் நிச்சயம் அந்த ஜும்மாஹ்இல் கலந்து கொள்ள முடியாது.
என்னை திருத்திகொல்லுமாறு கூறியிருந்தீர்கள். என்னிடம் நீங்கள் என்ன குறை கண்டீர்கள் என்று நான் கேட்பதற்கு தஹுதி உடையவன் இல்லை என்றாலும் நான் யார் என்று உங்களுக்கு தெரியாது என்று மட்டும் என்னால் கூற முடியும். ஏனெனில் என்னுடைய நண்பர்கள் குழாமில் தௌபீக் என்று நான் அறிந்தவரையில் இல்லை. நான் அறியாதவர்களுக்கு என்னை பற்றி தெரியாது என்று மட்டும் எனக்கு நன்றாக தெரியும்.
இருந்தாலும் உங்கள் பதிவுகளை நான் பெரும் மனம் கொண்டு பொருந்தி கொள்கிறேன். இன்னும் நான் எனது செயல்களை திருத்தி கொள்கின்றேன்.
சகோதரார் அவர்கள் பித்ஹத் பற்றி விணாவி இருந்தீர்கள். மன்னிக்க வேண்டும் பித்ஹத் என்றால் இஸ்லாமிய கோட்பாட்டுக்குள் இல்லாத ஒன்றை இஸ்லாத்தின் பெயரால் இஸ்லாமிய கோட்பாட்டினுள் நுழைப்பது. என்பது இதன் அடிமட்ட விளக்கம். இதனை பலவாறு விரிவு படுத்தி விபரிக்க முடியும்.உங்களுக்கு விரிவான விளக்கம் தேவைப்படின் நீங்கள் உங்களது மனது ஒப்புகொள்ளும் ஒரு இஸ்லாமிய மார்க்க விரிவுரயாலரை தொடர்பு கொள்ளுங்கள் என்னை பொறுத்த மட்டில் நான் நல்ல தொரு நிலைபாட்டில் தான் உள்ளேன்.
உங்களுக்கும் இறைவன் நல்ல வழிகளை காட்ட வண்டும் என்றும் பிராத்தனை செய்கின்றேன்.
எல்லாம் வல்ல இறைவன் உங்களையும் என்னையும் தூய இஸ்லாமிய நிலையில் வாழ்ந்து மரணிக்க செய்வானாக ஆமீன்
கூடுதல் தகவல்கள் தேவையெனில் நௌபர் (காஷிபி) விளக்கத்தை பார்வை இடுமாறு வேண்டிகொள்கிறேன்.
அஸ்ஸலாமு அழைக்கும்.
வேலைப் பளுக்கள் அதிகமாக உள்ளதால் சற்று தாமதமாகி விட்டது மன்னிக்கவும்.