காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 4,986,219 மொத்த வருகைகள்

35000 வாக்குகள் பெறுவது உறுதிப்படுத்தப்படுமானால் தேர்தலில் இருந்து விலகத் தயார்! -சுயேட்சை வேட்பாளர் ஜௌபர்கான் சவால்

Posted by Kattankudi Web Community (KWC) on 25/03/2010

http://vaarauraikal.files.wordpress.com/2010/03/jaw-meet-21.gif?w=324&h=24235,000 விருப்பு வாக்குகளைப் பெறுவதற்கான சாத்தியமான வழியை சகோதரர் ஹிஸ்புல்லாஹ் உறுதிப்படுத்துவாரானால் நான் இத்தேர்தல் களத்திலிருந்து ஒதுங்கிக்கொள்ளத் தயாராக இருக்கின்றேன். எம்மால் நினைத்துப் பார்ப்பதற்குக்கூடச் சாத்தியப்படாத இப்பெருந்தொகை விருப்பு வாக்குகளை அவர் ஒருவர் தனியாகப் பெற்று இம்மாவட்டத்தின் பிரதிநிதியாக வருவதற்கு அவருக்கு எந்தவிதமான முகாந்திரமும் என்னுடைய 30 வருட அரசியல் அனுபவத்தில் தென்படவேயில்லையென சுயேட்சைக்குழு – 16ன் தலைமை வேட்பாளாரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான அல்ஹாஜ் ரி.எல். ஜவ்பர்கான் தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை காத்தான்குடி கடற்கரை முன்றலில் இச்சுயேட்சைக் குழுவினரின் முதலாவது தேர்தல் பரப்புரைக் கூட்டம் அக்கட்சியின் வேட்பாளர் ஏ.எம். சிராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அதன்போது மேற்கண்டவாறு தெரிவித்த தலைமை வேட்பாளர் ஜௌபர்கான் மேலும் தெரிவித்ததாவது:

http://vaarauraikal.files.wordpress.com/2010/03/jaw-meeting-1.gif?w=324&h=242எமது ஊருக்கான பிரதிநிதித்துவம் பற்றி இன்று எல்லோரும் பேசுகின்றார்களே தவிர அது எந்த வழியில் நிச்சயமாக நமக்குக் கிடைக்கும் என்பதைப்பற்றி பெரும்பாலானவர்கள் சிந்திப்பவர்களாக இல்லை. குறிப்பாக இப்பிரதேசத்தின் கல்விமான்கள், புத்திஜீவிகள், சமூகப் பிரக்ஞையுள்ளவர்கள், ஊர்த்தலைவர்கள் போன்றவர்கள் இந்த ஊருக்கான பிரதிநிதித்துவம் என்ற கோஷத்தில் தங்களின் சிந்தனைகளை விரிவுபடுத்தி திறந்த மனதோடு சிந்தித்து சரியான வழிகாட்டலை எமது பிரதேச மக்களுக்கு உறுதிப்படுத்த வேண்டியது அவர்களின் சமூகக் கடமையாகும்.

நான் இம்மண்ணின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டுமென்பதற்கான எனது பங்களிப்புக்களை மிகச்சரியாக ஆய்ந்து தெளிந்து சகோதரர் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் வெற்றிக்காக மூன்று தடவைகள் அர்ப்பணிப்போடு செயற்பட்டிருக்கின்றேன். ஆனால் சகோதரர் ஹிஸ்புல்லாஹ், தான் வகித்து வந்த கிழக்கு மாகாணத்திற்கான பதினொரு அமைச்சுப் பதவிகளையும் தூக்கி வீசிவிட்டு, இந்த மக்கள் அவரை மாகாண சபையின் முதலமைச்சராக ஆக்குவதற்கு வழங்கிய 36,000க்கும் அதிகமான முஸ்லிம் சமூகத்தின் பெறுமதியான வாக்குகளைப் புறந்தள்ளிவிட்டு எந்த வகையிலும் அவர் வெல்வதற்கு வழியே இல்லாத ஒரு பெரும்பான்மைக் கட்சியில் போட்டியிடப் போகின்றார் என்பதை உறுதிப்படுத்தியதன் பின்னரே நான் இம்மண்ணின் பிரதிநிதித்துவம் இம்முறையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நன்னோக்கத்துடன் இந்த சுயேட்சைக்குழுவை அமைத்துப் போட்டியிட முன்வந்தேன்.

சகோதரர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் மூன்று தடவைகள் இந்த மண்ணில் எம்.பியாக வருவதற்கு நான் பாடுபட்டிருக்கின்றேன். அவர் கட்சித் தலைமையுடனும், இம்மாவட்டத்தின் சக முஸ்லிம் பிரதேச மக்களுடனும் செய்து கொண்ட 2 வருட சுழற்சி எம்.பி. உடன் பாட்டைப் புறக்கணித்து ஆறு வருடங்கள் அவர் மாத்திரம் முழுமையாக எம்.பி. பதவியை வகித்த பின் ஸ்ரீ.ல.மு.கா. தலைமை அவரைத் தோற்கடிப்பதற்காக சட்டத்தரணி அப்துல் ஜவாத் அவர்களையும் இப்பிரதேசத்தில் போட்டிக்கு நிறுத்திய சமயத்திலும் நான் சகோதரர் ஹிஸ்புல்லாஹ்வின் வெற்றிக்காகவும், எமது மண்ணின் பிரதிநிதித்துவத்திற்காகவும் அயராது விசுவாசமாகவே பாடுபட்டேன்.

http://vaarauraikal.files.wordpress.com/2010/03/jaw-meet-3.gif?w=324&h=242நான் தலைவர் மர்ஹும் அஷ்ரப் அவர்களோடு கொழும்பில் கூட இருந்த சமயத்தில், அவர் அப்போதுதான் ஸ்ரீ.ல.மு.காங்கிரஸை ஆரம்பித்து முதலாவது அதியுயர் பீட உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது சகோதரர் ஹிஸ்புல்லாஹ் தன்னையும் அதியுயர் பீடத்தில் ஒருவராக இணைத்துக் கொள்ள கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வந்தார்.

ஆனால் தலைவர் அஷ்ரப் அவர்கள் நமது மண்ணுக்கான முதலாவது அதியுயர்பீட உறுப்பினராக காத்தான்குடியைச் சேர்ந்த சட்டத்தரணி நஜீம் அவர்களையே நியமித்துள்ளதாக அப்போது அறிவித்தார். அந்த அறிவிப்பு வெளியானதும் சகோதரர் ஹிஸ்புல்லாஹ் ஓடித்திரிந்து யார் யாரையெல்லாமோ சந்தித்து தன்னை அதியுயர் பீடத்தில் உள்வாங்குமாறு புலம்பித் திரிந்தார்.

இந்த இக்கட்டான நேரத்திலதான் ஒருநாள் மாபெரும் தலைவர் அவர்கள் உணவருந்திக் கொண்டிருக்கும்போது என்னை அழைத்து காத்தான்குடியில் சட்டத்தரணி நஜீமை வேட்பாளராக நியமித்தால் நிலைமை எவ்வாறு இருக்கும்? என்று கேட்டார்.

அப்போது நான், சட்டத்தரணி நஜீம் அவர்களை வேட்பாளராக நியமித்தால் அவரை அறிமுகப் படுத்தவே மூன்று மாதங்கள் எமக்குத் தேவைப்படும். ஆனால் ஹிஸ்புல்லாஹ்வை நியமித்தால் எமக்கு அந்த வேலை இருக்காது. அவர் ஊரின் பட்டிதொட்டியெங்கும் பிரபல்யமானவர் என்று நான் கூறினேன். அதனை ஏற்ற மாபெரும் தலைவர் அவரையே அதியுயர் பீடத்திலும் இணைத்துக் கொண்டு வேட்பாளராகவும் நியமித்தார்.

அன்று நான் அவ்வாறு மாபெரும் தலைவர் அஸ்ரப் அவர்களிடம் அவரைப்பற்றிக் கூறி அவரது அரசியல் பிரகாச வாழ்வுக்கு எண்ணையூற்றி வளர்த்ததுடன், மூன்று முறை அவரை இம்மாவட்டத்தின் எம்.பியாக ஆக்குவதற்கு எனது பங்களிப்புக்களை முழுமையாகவும் விசுவாசமாகவும் வழங்கியிருக்க கேவலம், நான் பிறந்த இந்த மண்ணில் எனது மக்களிடம் எனது சமூகத்திடம் நான் ஒரு வேட்பாளனாக நிற்பதையே அவர் பெருமனதுடன் அங்கீகரிக்காமல் இருப்பதுடன் எனது கட்அவுட்களையும் அவரது ஆதரவாளர்களைக் கொண்டு களவாடச் செய்திருப்பது எந்த வகையில் மனச்சாட்சிக்குரிய விடயம் எனக் கேட்க விரும்புகின்றேன்.

எனது பத்துக்கும் மேற்பட்ட கட்அவுட்களை அவரது ஆதரவாளர்கள் இதுவரைக்கும் களவாடிச் சென்றுள்ளார்கள். அது ஒவ்வொன்றும் 2500 ரூபா செலவில் அமைக்கப்பட்டது. அதற்கு மாற்றீடாக புதிய கட்அவுட்களை ஏட்டிக்குப் போட்டியாகச் செய்து மக்களின் பார்வைக்கு வைப்பதற்கு நான் எந்த வங்கிகளிலும் கடன் எடுத்து மோசடி செய்து பணத்தைச் சேகரித்து வைத்திருக்கவில்லை.

இப்போதுகூட நான் பேசுவது மக்களின் செவிகளைச் சென்றடைந்து விடக்கூடாது என்பதற்காக இங்கு பொருத்தப்பட்டுள்ள ஒலிபெருக்கிகளையும் அவர்கள் சேதப்படுத்தி அநியாயம் செய்துள்ளார்கள். இந்த ஜௌபர்கானிடம் தான் தோற்றுப்போய் விடக்கூடாது என்பதற்காகத்தான் சகோதரர் ஹிஸ்புல்லாஹ் இத்தனை அநியாங்களையும், அடாவடித்தனங்களையும் எம்மீது கட்டவிழ்த்து விட்டுள்ளார்.

அநியாயங்களும், அக்கிரமங்களும் சொற்ப காலத்திற்கு தலையெடுத்து ஆட்டம் போட்டாலும் அது நிரந்தரமாக இவ்வுலகில் எங்குமே நீடித்ததில்லை என்பது உலக வரலாறும்,  இஸ்லாமிய வரலாறுமாகும். எனவே எதிர்வரும் ஏப்ரல் 08ம் திகதியுடன் இந்த மண்ணில் நடைபெற்றுவரும் அராஜக அரசியல் கலாசாரம் நிச்சயம் தோற்றுப் போகும் என்பதை இந்த அல்லாஹ்வின் சன்னிதானச் சதுக்கத்திலிருந்து அல்லாஹ்வை முன்னிறுத்தி நான் பிரகடனம் செய்கின்றேன்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்த ஜெபர்கான்தான் இந்த மண்ணின் பிரதிநிதியாகத் தெரிவாக வேண்டுமென அல்லாஹ் நாடியிருந்தால் அதனை எந்த சக்தியாலும், எந்த அதிகாரப் பலத்தாலும் தடுத்து நிறுத்திவிட முடியாது என்பதையும் இத்தருணத்தில் நான் சத்திய வசனமாகக் கூறிக்கொள்கின்றேன்.

சகோதரர்களே! நான் சந்தர்ப்பவாத அரசியல் பேசவில்லை. செலிங்கோ வங்கியில் வைப்புச் செய்த எமது மக்களின் முதலீடுகள், சேமிப்புக்கள் இன்று முடக்கப்பட்ட நிலையில் உள்ளன. இதில் நானும் சிறிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளேன். என்றாலும் இந்த விடயமாக இது நாள் வரைக்கும் திரும்பியும் பார்க்காமலிருந்த ஸ்ரீ.ல.மு.கா.வேட்பாளர் சகோதரர் முபீன் அவர்கள் கடந்த வாரம் இதே இடத்தில் நடைபெற்ற அவரது பிரச்சாரக் கூட்டத்தில் சகோதரர் ஹிஸ்புல்லாஹ் அவரது மனைவிக்குச் சிபார்சு செய்து பெற்றுக் கொடுத்த கடன் தொகையைத் திருப்பிச் செலுத்தினால் தான் அவருக்கு எதிரான அரசியலில் இருந்தும், இத்தேர்தலில் இருந்தும் ஒதுங்கிக் கொள்வதாக சவால் விடுத்திருந்தார்.

செலிங்கோ முதலீட்டில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் வாக்கு வங்கியைக் குறி வைத்தே அவர் இவ்வாறு சவால் விடுத்துள்ளார். நான் அவரிடம் கேட்க விரும்புகின்றேன். முபீன் அவர்களே!  நீங்கள் கிழக்கு மாகாண சபையில் பதவியேற்று எத்தனை மாதாந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டீர்கள்? ஒரு கூட்டத்திலாவது அங்கே கிழக்கு மாகாண அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு முன்னால் நின்று இந்த செலிங்கோ முதலீட்டாளர்களின் பாதிப்பைப் பற்றியும், ஹிஸ்புல்லாஹ்வின் மனைவிக்கு அவர் கடன் பெற்றுக் கொடுத்து பற்றியும் ஐந்து நிமிடமாவது பேசியுள்ளீர்களா? உங்களால் அவ்வாறு பேசியதாக நிரூபிக்க முடியுமா? பேச வேண்டிய இடத்தில் நீங்கள் பேசாமடந்தையாக இருந்துவிட்டு இங்கே காத்தான்குடிக் கடற்கரையில் நின்று வீரவசனம் பேசுவதால் செலிங்கோ வடிக்கையாளர்களின் ஒட்டு மொத்தக் குடும்பத்தினர் வாக்குகளையும் பெற்றுவிடலாமென்று மனப்பால் குடிக்காதீகள்.

நான் இம்முறை அல்லாஹ்வின் அருளால் நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டால் நாடாளுமன்றத்தின் அங்குரார்ப்பணக் கூட்டத் தொடருக்கு முன்னதாக நாடாளுமன்றத்தின் முன்னால் உண்ணாவிரதமிருந்து செலிங்கோ முதலீட்டாளர்களின் பாதிப்பை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வருவதுடன் சர்வதேச ரீதியாவும் இப்பாதிப்பை அம்பலப்படுத்துவேன். என்னால் அது முடியும். என்னை எந்தவொரு அரசியல் கட்சியாலோ அல்லது எந்தவொரு அரசியல் கட்சிச் செயலாளராலோ கட்டுப்படுத்த முடியாது. நான் ஒரு சுயேட்சைப் பிரதிநிதி என்பதை எமது மக்கள் நம்பிக்கையோடு நினை வில் வைத்துக் கொள்ள வேண்டும்.

நாங்கள் இம்முறை எமது மண்ணின் பிரதி நிதித்துவத்தை உறுப்படுத்திக் கொள்வதற்கான வழிகளை மிக தீட்சண்யமாக வகுத்துள்ளோம். அதுதொடர்பிலான விரிவான பிரசுரம் ஒன்று இப்போது உங்களுக்கு வழங்கப்படுகின்றது. இந்த ஊரிலிந்து 10,000 விருப்பு வாக்குகளை மாத்திரம் எனக்கு வழங்குவதன் மூலம் அந்தப் பிரதிநிதித்துவத்தை நாம் அடைந்து கொள்ள முடியும் – என அவர் தெரிவித்தார்.

Courtesy: வார உரைகல் News

2 Responses to “35000 வாக்குகள் பெறுவது உறுதிப்படுத்தப்படுமானால் தேர்தலில் இருந்து விலகத் தயார்! -சுயேட்சை வேட்பாளர் ஜௌபர்கான் சவால்”

  1. Son of kky said

    நீங்களும் தேர்தல் வின்ஞானம் [என்னமோ!!!] வெளியிடலயா சகோதரரே!!!!

    “செலிங்கோ முதலீட்டில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் வாக்கு வங்கியைக் குறி வைத்தே அவர் இவ்வாறு சவால் விடுத்துள்ளார். நான் அவரிடம் கேட்க விரும்புகின்றேன். முபீன் அவர்களே! நீங்கள் கிழக்கு மாகாண சபையில் பதவியேற்று எத்தனை மாதாந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டீர்கள்? ஒரு கூட்டத்திலாவது அங்கே கிழக்கு மாகாண அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு முன்னால் நின்று இந்த செலிங்கோ முதலீட்டாளர்களின் பாதிப்பைப் பற்றியும், ஹிஸ்புல்லாஹ்வின் மனைவிக்கு அவர் கடன் பெற்றுக் கொடுத்து பற்றியும் ஐந்து நிமிடமாவது பேசியுள்ளீர்களா? உங்களால் அவ்வாறு பேசியதாக நிரூபிக்க முடியுமா? பேச வேண்டிய இடத்தில் நீங்கள் பேசாமடந்தையாக இருந்துவிட்டு இங்கே காத்தான்குடிக் கடற்கரையில் நின்று வீரவசனம் பேசுவதால் செலிங்கோ வடிக்கையாளர்களின் ஒட்டு மொத்தக் குடும்பத்தினர் வாக்குகளையும் பெற்றுவிடலாமென்று மனப்பால் குடிக்காதீகள்.”

    குரைகிற நாய் கடிக்காது!!!எங்கள் காசு கைக்கு கிடைக்கும் வரை நாங்க யாருக்கும் வாக்கு போடமாட்டோம்!!!! சகோதரரே கவலை படவேண்டாம் இவங்க பேச்சு,நாடகம்,நடிப்பு எல்லாம் பார்து ஏமாந்து போன கதை மலை ஏறிப்போயாச்சு!!!

  2. rauf said

    assalamu alaikum
    inru hizbullah sari illatavar enru koorum arasiyal vathikal kattankudy makkal atanai suti olla muslim kirama makkalluku etanaiyavathu saithu irukinrarkala? elec varum pothu nanka ippa nalla achi saiya pookinroom enru kori kirama pora makkalai yamata parkirarkal appadi yamaruvatarku yarum mudal kal alla ? palamunai & kakenodai & sikaram & poonra kirama makkala etanai teevai udaiya varkalaka irukirarkal enpatai ariya maddarkala ? keevalam sikaram (makbara) sovar kadduvatarku 500000 = kodda ivarkalal onru sathu koduka mudiyathu ? elec vantu vidal vakku kedu vantu vidukirarkl ivarkaluku makkal sinthuthu vakkalika veendum in sha allah allah nalla oru talamai thovatai taruvan
    wassalam

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s