காத்தான்குடிப் பயங்கரவாதம் ஒழிக்கப்படும் வரை அரசுக்கு ஆதரவளிக்க முடியாது!- புவி றஹ்மதுல்லாஹ்
Posted by Kattankudi Web Community (KWC) on 25/03/2010
பிரபாகரனையும், விடுதலைப் புலிகளையும் ஒழித்ததன் மூலம் இலங்கையில் கடந்த 30 வருடங்களாக நீடித்து வந்த பயங்கரவாதத்தை ஒழித்து விட்டதாக அரசாங்கம் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் பிரச்சாரம் செய்து வருகின்றது. எனினும் காத்தான்குடிப் பிரதேசத்தில் அரச தரப்பு பயங்கரவாதம் இன்னும் நீடித்தே வருகின்றது. அது முற்றாக இப்பிரதேசத்தில் ஒழிக்கப்படும் வரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு ஆதரவளிக்க முடியாது என ‘எல்லோரும் மன்னர்கள் எல்லோரும் பிரஜைகள்’ கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும், ‘வார உரைகல்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான புவி. எம்.ஐ. றஹ்மதுல்லாஹ் தெரிவித்தார்.
கடந்த 11ம் திகதி வியாழக்கிழமை இரவு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்ஸெய்யித் அலிசாஹிர் மௌலானா அவர்கள், ‘வார உரைகல்’ பிரதம ஆசிரியரைச் சந்தித்து தமக்கான அரசியல் ஆதரவைக் கோரியபோது மேற்கண்டவாறு அவரிடம் நேரில் தெரிவித்த வேட்பாளர் புவி. றஹ்மதுல்லாஹ் மேலும் அவரிடம் தெரிவித்ததாவது:
30 வருடங்களாக ஊடகத்துறையில் ஈடுபாடு கொண்டுள்ள நான் கடந்த ஐந்து வருடங்களாக இப்பத்திரிகையை வெளியிட்டு வருகின்றேன்.
இப்பிரதேசத்திலுள்ள பொது நிறுவனங்களான நகரசபை, ப.நோ.கூ.சங்கம், பிரதேச செயலகம், சுகாதாரத் திணைக்களம், கல்வித் திணைக்களம் உட்பட பல்வேறு சமூக நிறுவனங்களிலும் அரசாங்கமும், அரச சார்பற்ற நிறுவனங்களும் மேற்கொள்ளும் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் இடம்பெற்று வரும் ஊழல்கள், மோசடிகள் பற்றி பொதுமக்களுக்கு விழிப்பூட்டி அம்பலப்படுத்தி வருவதால் எனது ஊடகத்திற்கும் எனக்கும் எதிரான அரச தரப்பு ஆதரவாளர்களின் தாக்குதல்களும், அச்சுறுத்தல்களும் தொடர்ந்து வருகின்றன.
கடந்த ஏப்ரல் மாதம் 01ம் திகதி நீங்கள் அமெரிக்காவில் இருந்த வேளையில் எனது பத்திரிகை அலுவலகத்திற்குள் புகுந்த மூன்று முகமூடிக் குண்டர்கள் என்னையும், பத்திரிகை அலுவலகத்தில் இருந்த கணனி உள்ளிட்ட உடமைகளையும் பலமாகத் தாக்கிய சேதப்படுத்தியதுடன் என்னையும் தீயிட்டுக் கொலை செய்ய எத்தனித்தனர். அவர்களிடம் தீப்பெட்டி இல்லாதுபோன காரணத்தால் இறைவனின் உதவியோடு நான் தப்பிக்க முடிந்தது.
இம்மூவரில் ஒருவரை நான் அவரது முகமூடியைப் பிய்த்து நன்றாக அடையாளம் கண்டேன். அவர் முன்னாள் கிழக்கு மானாண சுகாதார அமைச்சரும், தற்போதைய ஆளுந்தரப்பு வேட்பாளருமான அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களின் தீவிர ஆதரவாளரான உசைன் பைலா என்பவராகும்.
இதுபற்றி நான் காத்தான்குடி பொலிஸ் நிலையம் தொடக்கம் பொலிஸ் மா அதிபர் வரைக்கும் முறைப்பாடுகள் செய்துள்ளேன். கடந்த 09ம் திகதி கூட நான் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அதிபருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு இதுவிடயமாக நினைவூட்டி அடையாளம் காணப்பட்டவரைக் கைது செய்யுமாறு கோரியுள்ளேன்.
ஆனால் நான் அடையாளம் கண்ட அந்த நபரை இன்னமும் பொலீஸாரால் கைது செய்ய முடியவில்லை. என்னைத் தாக்கிய பின்னர் அவருக்கு சகாதார அமைச்சு மட்டக்களப்பு வைத்திய சாலையில் வேலையும் கொடுத்துள்ளது. அவர் ஓட்டமாவடியில் திருமணம் செய்து காத்தான்குடிக்கு அடிக்கடி வந்து செல்கின்றார். அவரால் எனக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தல் இருந்து வருகின்றது.
வன்னிக் காடுகளைத் துவம்சம் செய்து பயங்கரவாதி பிரபாகரனைக் கொன்றொழித்த இலங்கை அரசாங்கத்திற்கு இந்தக் காத்தான்குடியில் ஒரு கீலோ மீட்டர் பரப்பளவுக்குள் நடமாடிவரும் உசைன் பைலா என்ற பயங்கரவாதியையும், அவனது சகாக்களையும் பொலீசாரால் ஒரு வருடமாகியும் பிடிக்க முடியவில்லை என்றால் அது நகைப்புக்குரிய விடயமாகும்.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் முடிந்த மறுநாளே காத்தான்குடி நகரசபை உறுப்பினர் அல்ஹாஜ் எஸ்.எச்.எம். அஸ்பர் என்பவரால் எனக்கு தொலைபேசி மூலமாக கொலை மிரட்டல் அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டது. அதுபற்றி காத்தான்குடிப் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த பின் மண்முனைப்பற்று மத்தியஸ்த சபைக்கு அம்முறைப்பாட்டை விசாரணைக்கு அனுப்பினார்கள். அங்கு இரண்டு தவணைகளுக்கு சமூகமளிக்காமலும், சமூகமளிக்க முடியாமைக்கான காரணம் தெரிவிக்காமலும் இந்நாட்டின் நீதித்துறையை அவமதித்த அவர் மூன்றாவது தவணைக்கான அழைப்பாணை பொலீஸாரால் விடுக்கப்பட்டதும் அச்சபைக்கு சமூகமளித்ததுடன் தான் தொலைபேசி மூலம் கொலை அச்சுறுத்தல் விடுத்ததையும் ஒப்புக் கொண்டார்.
எனினும் அவ்வாறு ஒப்புக்கொண்டதை தீர்ப்பு அறிக்கையில் எழுதக்கூடாது என்று மத்தியஸ்த சபை உறுப்பினர்களை நிர்ப்பந்தித்தார். அதன் காரணமாக அவர்கள் எதிர்வரும் 21ம் திகதிக்கு மீண்டும் தவணையிட்டுள்ளார்கள்.
இவ்வாறு இப்பிரதேசத்தில் ஊடக சுதந்திரத்திற்கு அரச தரப்பினரால் தாக்குதல்களும், அச்சுறுத்தல்களும் மேற்கொள்ளப்படுவதுடன் இத்தகைய அரச தரப்பு ஆதரவாளர்களான தாக்குதல்தாரிகளை பொலீஸாராலும் கைது செய்ய முடியவில்லை என்றால் எவ்வாறு ஊடகவியலாளர்களான எம்மால் அரச தரப்பு வேட்பாளர்களை ஆதரிக்க முடியும்?
இத்தாக்குதல் சம்பவத்தால் எனது இடது கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு இலட்சம் ரூபா வரை எனக்கு பொருள் நஷ்டமும், வைத்தியச் செலவும் ஏற்பட்டது. நான் தகவல் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு ஊடகவியலாளனாக இருந்தும் ஐந்து சதமாயினும் எனக்கு அரசாங்கம் இதுவரை நஷ்டஈடு வழங்க வில்லை.
அமைச்சர் அமீர்அலி அவர்கள் இச்சம்பவத்தைக் கேள்விப்பட்டதும் அதனைக் கண்டித்து பத்திரிகை அறிக்கை விட்டரேயொழிய எந்த விதமான நஷ்டஈடுகளையும் எனக்குப் பெற்றுத்தர ஆவன செய்யவில்லை. எனவேதான் நான் இந்த அரசாங்கத்தின்மீதும், அரச தரப்பு அதிகாரம் பெற்றவர்களின் மீதும் அதிருப்தியடைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலில் ‘எல்லோரும் பிரஜைகள் எல்லோரும் மன்னர்கள்’ என்ற அங்கீகரிக்கப்பட்ட அரசியற் கட்சியின் சார்பில் ஒரு வேட்பாளனாக ‘உண்டியல்’ சின்னத்தில் போட்டியிடுகின்றேன்.
என்னையும், எனது உடமைகளையும் தாக்கியழித்ததுடன் என்னைத் தீவைத்து எரிக்கவும் முனைந்த பயங்கரவாதிகளான உசைன் பைலாவை பொலீஸார் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த நீங்கள் நடவடிக்கை எடுத்தால் உங்களுக்கு ஆதரவு அளிப்பதற்கு ஆயத்தமாக உள்ளேன்.
காத்தான்குடிப் பிரதேசத்தில் நீடித்துவரும் தனி மனித சர்வாதிகாரம் தொலைய வேண்டும். அத்தனி மனிதனின் அடியாட்களின் அராஜகம் ஒழிக்கப்பட வேண்டும். மக்கள் சுதந்திரமாக இம்மண்ணில் வாழவும் தமது கருத்துக்களைப் பகிரவும் வழியேற்பட வேண்டும். பிரதேச மட்டத்திலான எமது அடிப்படை உரிமைகள் பேணப்பட்டு நிலை நிறுத்தப்படாத வரை அரச தரப்புக்கு என்போன்ற சுயமரியாதையுள்ளவர்களால் ஒரு போதும் ஆதரவு வழங்க முடியாது என வேட்பாளரும், பிரதம ஆசிரியருமான புவி றஹ்மதுல்லாஹ் ஆளுந்தரப்பு வேட்பாளரான அஸ்ஸெய்யிது அலிசாஹிர் மௌலானாவிடம் தெரிவித்தார்.
இதனை அக்கறையுடன் செவியேற்ற அவர் அதுதொடர்பாக தான் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.
கடந்த 13ம் திகதி சனிக்கிழமை காத்தான்குடிக்கு வருகை தந்திருந்த அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சரும், அரச தரப்பு வேட்பாளருமான அல்ஹாஜ் எம்.எஸ்.எஸ். அமீர் அலி அவர்களிடமும் புவி றஹ்மதுல்லாஹ் இதே குற்றச்சாட்டுக்களைத் தெரிவித்து ஆளுந்தரப்பு வேட்பாளர்களுக்கு தன்னால் ஆதரவு வழங்க முடியாதென்பதை வலியுறுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Courtesy: வார உரைகல் News







Abdullah said
Welldone Brother Rahmathullah,
I appriciate, i will vote for u, U R THE CORRECT PERSON OF MEMBER OF PARLIMENT INSHAALLAH I WILL PRAY FOR U
Kundaka Mandaka said
“எல்லோரும் முட்டாள்கள் நான் மட்டும் புத்திசாலி” கட்சியில்
எமது “சிலின்கோ ……..” போட்டி இட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்!
kkymovlavi said
காத்தான்குடிப் பிரதேசத்தில் நீடித்துவரும் தனி மனித சர்வாதிகாரம் தொலைய வேண்டும். அத்தனி மனிதனின் அடியாட்களின் அராஜகம் ஒழிக்கப்பட வேண்டும். மக்கள் சுதந்திரமாக இம்மண்ணில் வாழவும் தமது கருத்துக்களைப் பகிரவும் வழியேற்பட வேண்டும். பிரதேச மட்டத்திலான எமது அடிப்படை உரிமைகள் பேணப்பட்டு நிலை நிறுத்தப்படாத வரை அரச தரப்புக்கு என்போன்ற சுயமரியாதையுள்ளவர்களால் ஒரு போதும் ஆதரவு வழங்க முடியாது என வேட்பாளரும், பிரதம ஆசிரியருமான புவி றஹ்மதுல்லாஹ் ஆளுந்தரப்பு வேட்பாளரான அஸ்ஸெய்யிது அலிசாஹிர் மௌலானாவிடம் தெரிவித்தார்.
பூவி ரஹ்மதுல்லா அவர்களே!சதிகார கும்பலின் வெறியாட்டம் வெகு நாளைக்கு இல்லை சதிகார கும்பல்
சபை ஏறாது இது உண்மை
Son of kky said
wish you “All the very best of LUCK”
Kalisara said
ஊண்டியல் சின்னத்தில் பூவி ரஹ்மதுல்லாஹ் போட்டி இடுவது கடைசியில் மின்சும் மிச்ச சொச்ச வாக்குகளை ஊண்டியலுக்குள் எடுக்கத்தான். இவர் 2000 ம் ஆண்டு நமது மகனை தோக்கடிக்க முயற்சி செய்தது போல இம்முறை 10 வோட்டும் எடுக்க மாட்டார். …………………………………………..
Kundaka Mandaka, Kattankudy movlavi உங்களுக்கு சேவைகளின் சிகரம் அவர்களுடைய அறியாத தெரியாத பாவங்களை கலுவுவதால் என்ன பயன்? உங்களின் நன்மைகளை சும்மா அழித்துக் கொள்ள வேண்டாம். நீங்கள் ஒரு மவ்லவி அல்லவா?…..
adanka pidari said
dear kalisara good sariya sonninka moulavikku ean thava illatha vela i….mm..mm.m.m.m.m.mmmmmm…….